(photo thanks to http://greentechi.files.wordpress.com/)
தில்லியில் மெட்ரோ வந்ததன்பின் பலமுறை சுற்றுலா வழிகாட்டி போல உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் காட்டுவதற்காக இங்கே ஏறி அங்கே இறங்கும் பயணங்கள் சின்ன பயங்களோடு செய்திருக்கிறேன். ஒன்னுமில்லை நுழைவுச்சீட்டான சின்ன வட்டவடிவக் காயினை (coin தமிழில் என்ன?) தானியங்கி தடைகளிடம் காண்பிக்கனும். அது திறந்ததும் நாம் உள்ளே நுழையலாம். இறங்கும் இடத்தில் அந்த காயினை உண்டியலில் போடுவது போல தானியங்கி தடைகளிடமே கொடுத்துடனும்.
சிலநாட்களுக்கு முன்பு ஒரு தோழி தயானந்த சரஸ்வதியின் ’வேல்யூஸ் அண்ட் ஆட்டிட்யூட்ஸ்’ பற்றிய சொற்பொழிவுக்கு அழைத்துச் சென்றார். போகும்போதும் வரும்போது அவர்களுடனே வழக்கம்போல அரட்டை அடித்தபடி மெட்ரோவில் பயணப்பட்டேன்.திடீரென “ நாளைக்கு வரும்போது நீங்கள் தனியாக வந்துவிடுங்கள்..நான் அலுவலகத்திலிருந்து வருவேன்’ என்று சொல்லிவிட்டார்கள். முதல் நாள் நடந்தது எல்லாம் ஒருமுறை மனதில் ஓட்டிப்பார்த்து வழியெல்லாம் நினைவுப்படுத்திக்கொண்டேன்.
முதல் நாளே ’எப்படியும் தொடர்ந்து நான்கு நாட்கள் சொற்பொழிவு கேட்க வரத்தானே போகிறீர்கள்? ஸ்மார்கார்ட் செய்துகொள்ளுங்கள். வரிசையில் நிற்கும் நேரம் மிச்சமாகும்’ என்று தோழி சொன்னதால் ஸ்மார்ட்கார்ட் செய்துகொண்டேன்.( நான் ஸ்மார்ட்டாகிட்டேன்ல) முதலில் 50 ரூ முன்பணம். அதற்குபிறகு 50 , 100, 150 என போன் கார்ட் போல மேலே போட்டுக்கொள்ளலாம்.
மெட்ரோவில் பயணிப்பது தன்னம்பிக்கையளிப்பதாக இருந்தது. என்னுடைய தனியான மெட்ரோ பயண தினத்தில் இரண்டு பெண்கள் என்னிடமே வழி கேட்கவும் , தகவல்கள் விசாரிக்கவும் வந்தார்கள் . டிஜிட்டல் போர்ட்களில் அடுத்த ரயிலின் கடைசி நிறுத்தம், காத்திருக்க வேண்டிய நேரம் ( 3 அல்லது 5 நிமிடங்கள் ) காண்பிக்கிறார்கள். ஒலிபரப்பும் செய்கிறார்கள். அதை காண்பித்ததும் அவர்களும் கலக்கம் குறைந்தவர்களாக ஆனது உணர்ந்ததேன்.
எந்த நிறுத்தம் என்பது எழுத்துக்களாகவும் ஒலியாகவும் மேலும் வண்டியின் உள்பக்கத்தில் இருக்கும் வரைபடத்தில் அணைந்து அணைந்து எரியும் விளக்காலும் அறிவுறுத்துகிறார்கள். வழித்தடம் மாற்ற வேண்டியவர்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் பற்றியும் அறிவிப்பு வருகிறது.
இரவு நேரத்தில் மட்டும் (முக்கியமாக ஞாயிற்றுக்கிழமையில்) கொஞ்சம் கூட்டமில்லாப் பொழுதுகள் பயமா இருக்குமென்று தோன்றுகிறது. இருந்தாலும் கொஞ்சம் பயமில்லாதமாதிரி காட்டிக்கிட்டாப் போச்சு.. :)இருக்கைகள் சன்னலோரமாக நீளவாக்கில் இருக்கிறது.
என்னைப்போன்ற குள்ளமானவர்களும் பிடிக்கும்படி வசதியாக கைப்பிடிகள் இருக்கிறது. அதிக குலுக்கல் இல்லை . ஆனால் விரைகிறது வண்டி. கர்ப்பிணி ,கைக்குழந்தைப் பெண்களுக்கும், வயதானவர்களுக்கும், நிற்கமுடியாதவர்களுக்கும் இடம் தருமாறு அறிவிப்பு வருகிறது. ஆனால் நல்லா இருக்கிறப் பெண்களும் இடம் தாங்கன்னு கேட்டு வாங்குவது பார்க்க வருத்தமா இருக்கு.
கொஞ்சமே கொஞ்ச நேரம் ஒரு நிறுத்தத்தில் தாமதிக்கிறது என்றாலும் மன்னிப்பெல்லாம் கேட்கிறார்கள்.. நல்லாவே இருக்கு. ப்திய தாழ்தள பேருந்துகளும் மெட்ரோவும் என காமன்வெல்த் கேம்ஸ் காரணமாக காமன் மேன் களுக்கு மிக வசதி தான். தூய்மையாய் வைத்திருக்கவும் மக்கள் இதனால் பழகிவருவதாகத் தெரிகிறது. வீட்டிலிருந்து அப்படியே காருக்கு தாவும் மக்களுக்கு கொஞ்சம் தூரம் மெட்ரோவரை செல்வதற்கும் யோசனையாக இருக்கிறதாம்.மெட்ரோ ஃபீடர் வேன்களை டவுன் பஸ்ஸாக பயன்படுத்தத் தொடங்கி அது நிரம்பி வழிகிறது. கார் எண்ணிக்கை இன்னும் ரோட்டில் குறையவில்லை. ஆனால் கார் வாங்கலாம் என யோசித்துக்கொண்டிருந்தவர்களை கொஞ்சம் மனம் மாற்றி இருக்கிறது எனலாம்.
--------------------------
சபரி துணுக்ஸ்
----------
சொன்னப்பேச்சே கேக்காம நீ சும்மா சும்மா கேமிராவைக் கேட்டு அடம்பிடிச்சேன்னா பாரு , கெட்டுப்போச்சுன்னா அதைக் குப்பையில் தான் போடனும்.
அம்ம்ம்ம்மா ( கோபமா முறைக்கிறார்)
கோபப்பட்டேன்னா பாரு இருக்கு உனக்கு ..
அம்ம்மா நான் கோபப்பட்டா நீ சிரிக்கல்ல செய்வே இன்னைக்கு என் கோபப்படறே ? (ஸ்மார்ட்??)
அது என்னடா டீல் ? நீ கோபப்பட்டா நான் சிரிக்கிறது..
நேத்து சிரிச்சியே..
( அன்னிக்கு அவன் கோச்சிக்கிட்டு இடுப்பில் கைவச்சிக்கிட்டு டான் டாண்னு நடந்து போன அழகில் சிரிச்சிட்டேன் போல )
39 comments:
அட சொற்பொழிவு அதுவும் தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் - மீ த வெயிட்டீங்க பார் அந்த பதிவுக்கு :))))
அடேங்கப்பா தனியா மெட்ரோ டிரெயின்ல போறதும் இல்லாம மத்தவங்களுக்கு ரூட்டும் சொல்லித்தர்றீங்களா சிறுமுயற்சிக்கு வாழ்த்துக்கள்! :)))
//அம்ம்மா நான் கோபப்பட்டா நீ சிரிக்கல்ல செய்வே இன்னைக்கு என் கோபப்படறே ?/
அதானே டீல்ன்னா டீல்தான் சபரி கோவப்பட்டா நீங்க சிரிக்கணும் நீங்க கோவப்பட்டா அவுரு சிரிப்பாரு - ஆனா அவுரு சிரிச்சா நீங்க கோவப்படப்பிடாது :)))
மெட்ரோவால் டெல்லி மெட்ரோபாலிடனாக மாறினால் கூட நல்லதுதான்..!!
சொல்லப்போனா அவன் கேட்டது சரிதான்..
இப்ப மட்டும் ஏன் கோச்சிக்கறீங்க..நீங்க சிரிச்சு இருக்கலாமே..!!
//கொஞ்சமே கொஞ்ச நேரம் ஒரு நிறுத்தத்தில் தாமதிக்கிறது என்றாலும் மன்னிப்பெல்லாம் கேட்கிறார்கள்.//
நல்ல செயல்தான்...
பகிர்ந்தமை சிறப்பு.
வரப் போகும் பெங்களூரின் மெட்ரோ எப்படி இருக்கும் என்கிற ஆவலை ஏற்படுத்துகிறது உங்கள் பதிவு:)!
Coin= நாணயம்? சரிதானா?
சபரி! ஸ்மார்ட் டீல்:))!
/ஆயில்யன் said...
அடேங்கப்பா தனியா மெட்ரோ டிரெயின்ல போறதும் இல்லாம மத்தவங்களுக்கு ரூட்டும் சொல்லித்தர்றீங்களா சிறுமுயற்சிக்கு வாழ்த்துக்கள்! :)))
/
ரிப்பீட்டு!
சபரி - அம்மா எட்டடின்னா...:-)
சபரியும் ஸ்மார்ட்டு, ஸ்மார்ட் கார்டு வாங்கிய அக்காவும் ஸ்மார்ட்டு. ;-)
ரொம்ப ரொம்ப ஸ்மார்ட்தான்
சென்னை மெட்ரொ இது போல் அழகாக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்கணுமோ.
மெட்ரோ அழகு அப்படியே ,லண்டன் ட்யூப் மாதிரியே இருக்குங்கோ..
அதென்ன ட்யூப்?கால்கேட் ட்யூபா...என்று எல்லோரும் கேட்டார்கள்...
குகை வழியாகப் போக்கு வரத்து இருந்ததால் ட்யூப் என்பார்கள்
காயின் சரியான அர்த்தம் இன்னும் புரிபடவில்லை...நாணயம் என்றால் பணமதிப்போடு இருக்க வேண்டும்
தற்பொழுது
அடையாள் வில்லை[டோக்கன்] சரியாக இருக்குமா பாருங்கள்
ஹைய்யா..... டெல்லி மெட்ரோ அட்டகாசமா இருக்கே!
நானும் ஒரு தடவை இந்தப் பறக்கும் ரயிலில் (சென்னை)போகணுமுன்னு பார்த்தா வாய்க்கவே மாட்டேங்குது. யாரும் கூட வரமாட்டேங்கறாங்கப்பா(-:
பேசாம பதிவர் சந்திப்பு வச்சாத்தான் நடக்கும்போல!
//மெட்ரோவில் பயணிப்பது தன்னம்பிக்கையளிப்பாதாக உள்ளது//
தன்னம்பிக்கை மிகவும் அவசியம்.
//அன்னிக்கு அவன் கோச்சிக்கிட்டு இடுப்பில் கை வைச்சிக்கிட்டு டாண் டாண்டு நடந்து போன அழகில் சிரிச்சிட்டேன் போல//
சபரியிடம் கோபபட முடியுமா,முடியாது.
அதான் அடிக்கடி சில தத்துவங்களை ஸ்டேட்ட்ஸில் வைக்கிறேனே பாக்கலயா ஆயில்யன் :)
விசுத்தனமா இருக்கே இந்த டீல் ஆயில்யன் முடியல.. :)
-----------------------
ரங்கன், அவன் இப்படி சொன்னதுக்கு அப்பற்ம் எனக்கு சிரிப்பு வந்தது..நாம சிரிக்கிறோம்ஙறதுக்காக அடிக்கடி கோவபடுவானோன்னு சிரிக்கல நான்.. :)
-----------------------
பாலாஜி நன்றி.
ராமலக்ஷ்மி .. அவன் டீலுக்கு ஒத்துகிட்டுத்தான் ஆகனும்ன்னு ஒத்தக்காலில் நிக்கறான். :)
காயின் , காசு இல்லையே ப்ளாஸ்டிக் ஆச்சே... கோமா சொன்னமாதிரி
அடையாள வில்லை மாதிரி அர்த்தமானா தான் கரெக்ட்..
-------------------------------
முல்லை நன்றி..
என்னது எட்டடியா .. அடின்னதும் எனக்கு நினைவுக்கு வரது என்னன்னா அவன் எக்கச்சக்க அடி குடுக்கறான் எனக்கு :)
ஹப்பாடா பதிவின் சாராம்சம் புரிஞ்சா சரி தமிழ்பிரியன்..:)
---------------
கோமா இங்க மெட்ரோ பாதி தூரம் மேலே பறக்குது பாதி தூரம் தரைக்கடியில் போகுது :)
------------------------
துளசி நான் சென்னை பறக்கும் ரயிலில் போனேன்..நல்ல வசதி . பகல் நேரங்களில் காத்தாட சூப்பரா ட்ராபிக் புழுக்கமில்லாம பறக்கமுடியுது.. மெட்ரோ குளிருக்கு குளிரும் தெரியல , வெயிலுக்கு வெயிலும் தெரியாத பயணமா இருக்கு ..:)
-------------------------
சபரி தான் டாப்பு...;))) மத்தெல்லாம்............!! ;)))
ரொம்ப நல்லா இருக்கு, ஆனா தமிளிஷ் ஓட்டு போட முடியவில்லை.
நீ சிரித்தால் நான் கோவிப்பேன் சிங்காரப் பையான்னு ஏதாவது பாடினீங்கள முத்து.:)
அவன் கோபப்பட நீங்க சிரிக்க, னீங்க கோவிக்க அவன் சிரிக்க எங்களுக்கு நல்ல விருந்து.
துளசி நான் வரேன்பா. இந்தக் கோடிலிருந்து அந்தக் கோடி போய்வரலாம்
கோமதிம்மா நன்றி.. தன்னம்பிக்கை வளர்க்கத்தான் முயற்சி செய்யறேன்.. :)
------------------------
தியாவின் பேனா... நன்றிங்க.. இத்தனை சுருக்கம் ஏன்ங்க..:)
--------------------
தில்லி ஸ்மார்ட்டாகுது இல்லையா அதான் தில்லிக்காரர் சபரியும் ஸ்மார்ட்டாகறார்.. நன்றி கோபி..
---------------
சிங்ககுட்டி நன்றிங்க..தமிழீஷ் ல ஜாயின் பண்ரதே இல்லை..அதுக்கு ஒரு சோம்பேறித்தனம்..அதில ரெண்டுமூணு ஸ்டெப் இருக்குல்ல அதனால் தான் :))
--------------------------
ஆமா வல்லி ரெண்டு பேரும் போயிட்டுவந்தீங்கன்னா.. நாலு பதிவு தயார் செய்துடலாம் அந்த அனுபவத்தை வச்சு.. :)
------------------
நன்றி நசரேயன்.. :)
டெல்லிங்கிறீங்க.. கூட்டமே இல்லையே?
சபரி எப்படி கோவிச்சுட்டு போயிருப்பான்னு நினைச்சு பார்த்தேன்...
க்யூட்.. சிரிப்பு தான் வருது :)
மெட்ரோ ரயில் பயணம் செய்து தன்னம்பிக்கையை (மேலும்)வளர்த்து கொண்ட அக்காவிற்கு வாழ்த்துகள் :)
:)
அடையாள வில்லைதான் சரியா இருக்கும்ன்னு தோணுது. சபரியோட டைமிங்க் சென்ஸ் பிடிச்ச விசயம்தான்.
Coin - நாணயம், தானியங்கி தடைகளுக்கு ஆங்கிலத்தில் Automatic stopper?
ஸ்மார்ட்டா ஆவணும்னா மெட்ரோவில பயணம் செஞ்சா போதும்கிற தகவலை தெரிந்து கொண்டேன்!!
// நேத்து சிரிச்சியே..
( அன்னிக்கு அவன் கோச்சிக்கிட்டு இடுப்பில் கைவச்சிக்கிட்டு டான் டாண்னு நடந்து போன அழகில் சிரிச்சிட்டேன் போல )//
சமத்துக் குழந்தை.. அம்மாவை எப்படி மடக்கணும் அப்படின்னு தெரிஞ்சு வச்சு இருக்கார்.
// தில்லியில் மெட்ரோ வந்ததன்பின் //
தில்லிக்கு மெட்ரோ வந்திடுச்சா ஆஆஆஆஆஆஆ
யாருமே எனக்குச் சொல்லவில்லை...
எப்படா நான் நோய்டா விட்டு போவேன்னு காத்துட்டு இருந்தாங்களா..:((..
போயிட்டு வந்துட்டீங்க..சாதனை தான்
neenga smart thaan aanal sabari smarto smart
:))
சபரி.. :))
அப்பாத்துரை, பதிவில் போடறது படம் தேடினப்ப.. கூட்டமா இருந்த படங்கள் நிறையகிடைச்சது. ஆனா இருக்கைக்கள் மற்றும் உள் அமைப்பை தெரியப்படுத்தனும்ன்னா இதைப்போல படம் தான் சரி என்று தேடிப்போட்டது. இப்பொழுதெல்லாம் நல்ல கூட்டம் தான்..
----------------------------
நன்றி ஆதவன் .:)
=======================
நன்றி சென்ஷி :)
-----------------------------
ஷஃபிக்ஸ் ஸ்மார்ட் கார்ட் பயன்படுத்தறவங்க தான் ஸ்மார்ட் வரிசையில் நின்னு டிக்கெட் வாங்கறவங்க இல்லை.. ஒரு விசயம் கூட பதிவில் சொல்ல மறந்துட்டேன்.. 10% தள்ளுபடியும் உண்டு ஸ்மார்ட் கார்ட் க்கு.. :)
-----------------------------
இராகவன் நைஜீரியா.. சரியாச்சொன்னீங்க :)) அவன் பொழைச்சிப்பான்ல..
\இராகவன் நைஜிரியா said...
// தில்லியில் மெட்ரோ வந்ததன்பின் //
தில்லிக்கு மெட்ரோ வந்திடுச்சா ஆஆஆஆஆஆஆ
யாருமே எனக்குச் சொல்லவில்லை//
அதான் இப்ப நான் சொல்லிட்டேன்.. :)
--------------------------
மங்கை ... உங்களால் தான் அப்ப லேட்டாச்சா மெட்ரோ .. :)))
-------------------------------
தென்றல் .. இதைக்கேட்டு இன்னமும் மகிழ்ச்சியா இருக்குப்பா.. :)
-------------------------
நன்றி காயத்ரி :)
சொற்பொழிவு பற்றி ஒரு பதிவு தனியா போடுங்கோ!
கொஞ்சமே கொஞ்ச நேரம் ஒரு நிறுத்தத்தில் தாமதிக்கிறது என்றாலும் மன்னிப்பெல்லாம் கேட்கிறார்கள்.. நல்லாவே இருக்கு. ப்திய தாழ்தள பேருந்துகளும் மெட்ரோவும் என காமன்வெல்த் கேம்ஸ் காரணமாக காமன் மேன் களுக்கு மிக வசதி தான். தூய்மையாய் வைத்திருக்கவும் மக்கள் இதனால் பழகிவருவதாகத் தெரிகிறது. வீட்டிலிருந்து அப்படியே காருக்கு தாவும் மக்களுக்கு கொஞ்சம் தூரம் மெட்ரோவரை செல்வதற்கும் யோசனையாக இருக்கிறதாம்.மெட்ரோ ஃபீடர் வேன்களை டவுன் பஸ்ஸாக பயன்படுத்தத் தொடங்கி அது நிரம்பி வழிகிறது. கார் எண்ணிக்கை இன்னும் ரோட்டில் குறையவில்லை. ஆனால் கார் வாங்கலாம் என யோசித்துக்கொண்டிருந்தவர்களை கொஞ்சம் மனம் மாற்றி இருக்கிறது எனலாம். ..................நச் நச்னு எழுதுறீங்க. உங்க Smart ஸ்டைல் நல்லா இருக்குங்க.
சொற்பொழிவு பத்தி எழுதமுயற்சி செய்யறேன் குசும்பன்..
--------------------------
சித்ரா நன்றி நன்றி :D
ஓ.. மெட்ரோல இவ்வளவு வசதி இருக்கா.. சூப்பர்
அந்த ஸ்மார்ட் காயினையும் போட்டோ எடுத்து போட்டிருக்கலாம்..
குழந்தைக கிட்ட நாம ஜெயிக்கமுடியுமா? அவங்க தான் எப்பவும் வின்னர்ஸ்.
ஆமா உழவன் இன்னும் பல இடங்களுக்கு வேலை நடக்கிறது.. ரயில் நிலையம், ஏர்போர்ட் எல்லாமே தொடர்புபடுத்தப்படுகிறது.
--------------------
சிந்து அந்த வில்லையை போட்டோ எடுக்கல , மறந்து போச்சுப்பா.. கூகிளிலும் கிடைக்கல.. :)
வில்லையே சரி. கூகுளில் தேடியதில்..
http://upload.wikimedia.org/wikipedia/commons/4/45/Delhi_metro_token.jpg
இதுவா பாருங்க.
மெட்ரோ அழகாக இருக்கிறது. நான் தில்லியில் வாழ்ந்த நாட்களில் பிரயாணம் செய்ய நிறைய அவஸ்தை பட்டிருக்கிறேன். சொத்தை எழுதி வாங்கும் ஆட்டோக்கள், வரவே வராத டிடிஎஸ், வந்தாலும் நிரம்பி வழியும் பஸ்கள்.... நீலப்புகை படர்ந்த எய்ம்ஸ் கிராஸிங்...
பதிவுக்கு நன்றி.
ராமலக்ஷ்மி இப்படித்தான் இருந்ததுப்பா வில்லை. நீலம்மற்றும் கருப்பு வண்ணத்தில் இருக்கிறது. படத்தில் கொஞ்சம் ப்ளைய்னா தெரியுது.. உண்மையில் அதில் ரயில் போன்ற இலச்சிணை இருந்ததா நினைவு..
நன்றிப்பா.. :)
-------------------------
நாகு இன்னமும் அந்த நீலநிற பஸ்கள் அதே போல உடைஞ்ச வண்டிகளா ஓடிக்கிட்டிருக்கு எப்ப மாத்துவாங்கன்னு தெரியல..
Post a Comment