January 25, 2009

அவ்வை சங்கத்து தமிழ்நாடு கலைவிழா


நேற்று வெகுநாட்களுக்குப் பின் வருகை தந்த நண்பர்கள் குடும்பத்தோடு பிக்னிக் செய்தோம். மெல்லிய குளிர் காற்று அன்றைய பொழுதை இனிமையாக்கியது. குழந்தைகள் ஓடியாடி விளையாண்டு களைத்தார்கள். கையோடு கொண்டு சென்ற உணவை பசித்து ருசித்தார்கள்.

நொய்டா அவ்வை தமிழ்ச்சங்கம், நொய்டா க்ரேட் இண்டியாப்ளேஸ் மால் பகுதியில் ஒரு தமிழ்நாடு கலைவிழா நடத்துகிறார்கள் என்பதால் அங்கேயே போய் வர திட்டமிட்டிருந்தோம். நாங்கள் சென்ற நேரம் மதுரை டாக்டர் சோமசுந்தரம் குழிவினரின் மயிலாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பின்னோடு கரகாட்டம் ஆரம்பித்தது. கரகம் ஆடியவர் கண்ணைக்கட்டிக்கொண்டு எதுவோ செய்து காட்டப்போகிறார் என்று ஆர்வமானோம். உண்மையிலேயே மிக வித்தியாசம் தான் கையில் ஒரு கத்தியை வைத்துக்கொண்டு ஆடியபடி வந்தார்.. கீழே அமர்ந்து வாயில் பெரிய முள்ளங்கியை ஒருவர் பிடித்திருக்க.. இவர் கண் கட்டியபடியே இருக்க சரக் சரக் என்று முள்ளங்கியை வட்டவட்டமாக வெட்டி வீழ்த்தினார். பின்பு தலை மேல் தேங்காய் உடைத்தார்.

தொடர்ந்த காவடி ஆட்டத்தின் நடுவே மால் உள்புற அலங்காரங்களைக்காணச் சென்றோம். மாலின் ஒரு பகுதி தமிழ்நாடு தீம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாக்கோலங்கள் காவியுடன் வரவேற்க உள்ளே நுழைந்ததும் கோயில் அமைப்பு இருந்தது. எங்கெங்கும் குருத்தோலை அலங்காரங்களும் ஸ்டிக்கர் கோலங்களும் கலர் கோலங்களும் என்று உள்தோற்றமும் கலையாக இருந்தது.

கோலங்களுக்கு சுற்றிலும் காவலும் போடப்பட்டிருந்தது. மூன்று நாள் திருவிழா ஆயிற்றே! ... சின்னக்கிணறு , சின்ன மாட்டுவண்டி , சின்ன வயல்வெளி என்று பார்வைக்கும் வைக்கப்பட்டிருந்தது. ஒரு பக்கம் பொம்மைக்கொலுவும் கூட இருந்தது.

வேக வைத்த சோளம் வாங்கிக்கொண்டு திரும்ப வரும்போது , ஒரு நிமிடம் ஆச்சரியப்பட்டுப் போனோம். வண்ணமயமான , பலகரங்களுடன் , கோயிலில் இருக்கும் சிமெண்ட் கலவை கடவுள்கள் கண் முன் எழுந்து ஆடிக்கொண்டிருந்தார்கள். புகைப்பட எடுக்க மறந்து கவனித்துக் கொண்டிருந்துவிட்டேன். மகிஷாசுர வதத்தை ஆடிக்கொண்டிருந்தார்கள். மகிஷனும் தேவியும் போரிட்டக் காட்சி நிஜமெனத் தோன்ற வைத்தது.

அதனைத்தொடர்ந்து , நொய்டா கலா சாகர் குழந்தைகளின் நடனம், நொய்டா தியாகாராஜா செண்டர் குழந்தைகளின் பரதநாட்டியம் என்று கலை நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு கிளம்பினோம். மீண்டும் இன்றும் மதிய நிகழ்ச்சிக்கு செல்ல விரும்புகிறோம். ராஜேஸ்வரி நாட்டியாலயா பரதநிகழ்ச்சியையும் மீண்டும் ஒரு முறை சோமசுந்தரம் குழுவினரின் கிராமப்புற நடனத்தைப் பார்க்க ஆவலாயிருக்கிறோம்.

26 ம் தேதி லாலு வருகிறார் .... குடியரசு தின விழாவன்றும் நிகழ்ச்சிகள் தொடரும். இன்றும் நாளையும் மதியம் 12.30 மணியிலிருந்து இரவு ஏழு மணிவரை தொடர்கின்றபடியான நிகழ்ச்சிகள் இருக்கின்றது.

January 23, 2009

ஃபிடில்லர் ஆன் தி ரூஃப் (1971)

காதல் நுழையமுடியாத கிராமத்துல காதலிச்சுட்டாங்கன்னு ஊரே திரண்டு தீப்பந்தத்தைத் தூக்கிப்பிடிச்சு ஓடும் படங்களை எல்லாம் நூறு நாள் ஓடவிட்ட நமக்கு இது புதிய விசயமே இல்லை. நம்ம கிராமங்களைப் போல கட்டுக்கோப்பான ஒரு ஜூவிஸ் குடும்பத்தைச் சுற்றியே நகர்கிற ஒரு கதை.Fiddler on the Roof . ஒரு ஏழை தகப்பன். ஐந்து மகள்கள். நம்ம ஊரு தரகரைப்போல மேட்ச் மேக்கர் தான் கல்யாணம் செய்து வைக்கனும். தானாகவே ஒரு பெண் கணவனைத்தேர்ந்தெடுக்கக்கூடாது என்று கட்டுப்பாடுள்ள ஒரு இடத்தில் தானும் அந்த கட்டுப்பாடுக்குள் அடங்கியும் சில நேரம் மீறியும் சஞ்சலப்படுகிறார். நான் பணக்காரனா இருந்தான்னு ஒரு பாட்டுல ஆடறார் பாருங்க ஆட்டம் மனுசன்( chaim topol )அவார்ட் வாங்கி இருக்காரு இந்த படத்துக்கு.


உண்மையில் இப்போது அதிக காதல் திருமணங்கள் அரேஞ்ச்டு மேரேஜாக நடக்கிறது. சம்மதத்துடன். அரேஞ்சுடு மேரேஜ் கள் காதல் திருமணங்களாக நிச்சயதார்த்ததிற்கு பிறகு மாற்றப்படுகிறது. தினம் நான்கு முறை போன். ஒவ்வொன்றும் 1 மணி நேரம் என்று அட்டகாசக்காதல்களும் , பரிசுகள் பரிமாறுதலும் என்று நடக்கிறது. நேற்று ஒரு தோழி சொன்னார் அவர் கட்டிக்கபோறவருக்கு கண்டபடி திட்டிக்கொஞ்சலையேன்னு வருத்தமாம்.. அட காசா பணமா திட்டுங்களேன்னு சொன்னேன். :-)

படத்தைப்பற்றி எக்கச்சக்கமா எழுத ஆசை.. அவர் கடினமான உழைப்பும், பாசமும் , அதை காட்டற விதமும் சொல்லிக்கிட்டே போகலாம். முதல் மகளுக்கு வயதான ஒருவரை கல்யாணம் செய்துவைக்க முடிவு செய்யும் போது அவள் பட்டினி இன்றி வாழ்வாள் என்று மட்டுமே அவர் பார்க்கிறார். மகளின் முடிவு தெரிந்தபின் மனைவியிடம் அவர் ஆடும் நாடகம்னக்கு மிகவும் பிடித்தது. கள்ளம்கபடமில்லா மனிதனாக அழகாக நடித்திருக்கிறார். அந்த ஊருலயும் பேத்திக்கு பாட்டி பேரை நினைவா வச்சிருக்காங்கப்பா..

படம் நம்ம ஊரு அந்த காலப்படம் போலவே தான் நின்னா பாட்டு உக்காந்தா பாட்டு ... கோவம் வந்தாக்கூட பாட்டு தான்.. லிரிக்ஸ் தேடிப்பிடிச்சுப் படிச்சேன் ஆகா.. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..
[TEVYE]
Tradition, tradition! Tradition!
Tradition, tradition! Tradition!

[TEVYE & PAPAS]
Who, day and night, must scramble for a living,
Feed a wife and children, say his daily prayers?
And who has the right, as master of the house,
To have the final word at home?

The Papa, the Papa! Tradition.
The Papa, the Papa! Tradition.

[GOLDE & MAMAS]
Who must know the way to make a proper home,
A quiet home, a kosher home?
Who must raise the family and run the home,
So Papa's free to read the holy books?

The Mama, the Mama! Tradition!
The Mama, the Mama! Tradition!

[SONS]
At three, I started Hebrew school. At ten, I learned a trade.
I hear they've picked a bride for me. I hope she's pretty.

The son, the son! Tradition!
The son, the son! Tradition!

[DAUGHTERS]
And who does Mama teach to mend and tend and fix,
Preparing me to marry whoever Papa picks?

The daughter, the daughter! Tradition!
The daughter, the daughter! Tradition!

எல்லாப்பாட்டுமே நல்லாவே இருந்தது.. எல்லாத்தையும் இங்கே காப்பி பேஸ்ட் செய்தா பதிவு நான் பேசுவதை விட பெரிசாகிவிடும் .. உண்மைத்தமிழனுக்குப் போட்டியா போட்ட போஸ்டாக் கூட ஆகிடும். ஆனால் இந்தப் பாட்டை மட்டும் போட்டுக்கிறேனே.. மகளின் காதலுக்கப்பறமாக, அப்பா மெதுவாக அம்மாவிடம் நீ என்னைக்காதலிக்கிறாயா என்று கேட்டு வெக்கப்படுவார் பாருங்க.. ஆகா..உடனே அம்மாக்கு ஒரு பொய் கோபம் சும்மாப்போய்யான்னு ஒரு திட்டு.. பின்னாடி அப்படியே பேசிப்பேசி சேர்ந்து உக்காந்து ஒரு முடிவுக்கும் வந்திடறாங்க.. காட்சியைக் கண்டிப்பா பாருங்க..



(Tevye)
"Golde, I have decided to give Perchik permission to become engaged to our daughter, Hodel."

(Golde)
"What??? He's poor! He has nothing, absolutely nothing!"

(Tevye)
"He's a good man, Golde.
I like him. And what's more important, Hodel likes him. Hodel loves him.
So what can we do?
It's a new world... A new world. Love. Golde..."

Do you love me?

(Golde)
Do I what?

(Tevye)
Do you love me?

(Golde)
Do I love you?
With our daughters getting married
And this trouble in the town
You're upset, you're worn out
Go inside, go lie down!
Maybe it's indigestion

(Tevye)
"Golde I'm asking you a question..."

Do you love me?

(Golde)
You're a fool

(Tevye)
"I know..."

But do you love me?

(Golde)
Do I love you?
For twenty-five years I've washed your clothes
Cooked your meals, cleaned your house
Given you children, milked the cow
After twenty-five years, why talk about love right now?

(Tevye)
Golde, The first time I met you
Was on our wedding day
I was scared

(Golde)
I was shy

(Tevye)
I was nervous

(Golde)
So was I

(Tevye)
But my father and my mother
Said we'd learn to love each other
And now I'm asking, Golde
Do you love me?

(Golde)
I'm your wife

(Tevye)
"I know..."
But do you love me?

(Golde)
Do I love him?
For twenty-five years I've lived with him
Fought him, starved with him
Twenty-five years my bed is his
If that's not love, what is?

(Tevye)
Then you love me?

(Golde)
I suppose I do

(Tevye)
And I suppose I love you too

(Both)
It change a thing
But even so
After twenty-five years
It's nice to know
-----------------------------------------
அப்படியே இன்னும் நிறைய பாட்டு இருக்கு நேரமிருந்தால் படிச்சுப்பாருங்க அங்கேயே...

January 20, 2009

இரயில் பயணங்களில்.....

இரயில் பயணங்கள் எப்பொழுதுமே ஒரு வித்தியாசமான அனுபவங்களைத்தருவது தான். அதுவும் தனித்துப் பயணிக்கும் பொழுது கவனித்துப்பார்ப்பது என்கிற வகைக்கு இருப்பதால் .. அதுதான் பேச்சுத்துணைக்கு ஆளில்லையே கவனித்துத்தான் ஆகவேண்டிய கட்டாயமாகிவிட்டதே... இன்னும் சுவாரசியமாகிவிடுகிறது.

புது அலைபேசியில் நண்பரைக்கொண்டு பாடல்களை ஏற்றிக்கொண்டு குடும்பத்தைக்காண ஆவலோடு செல்கிறார் ஒரு ஆர்மிக்காரர். சத்தத்தை குறைப்பதிலிருந்து பாடலைத் தேர்ந்தெடுப்பது வரை எல்லாமே அவர் அங்கே தான் முயன்று பார்க்கிறார். காலையில் ரயிலேறியதும் கேட்ட முதல் பாடல்.. அய்யய்யோ ...என் உசுருக்குள்ள உசுர வைச்சுத் தச்சானே... சரிதான் என்று, அன்று சகித்தாலும் அடுத்த நாளும் காலை 6.30 மணிக்கே சுப்ரபாதமாக ஒலித்தது அய்யய்யோ............ சிரிப்பை அடக்கி புன்னகைத்து அமர்ந்திருந்தேன்.

நடுநடுவே இல்லத்துக்கு அலைபேசியால் தொடர்பு கொண்டு .. அம்மா என்னம்மா செய்யற தோசை சுடறயா.. அதான் சத்தம் கேக்குது சரி பெரியது சாப்பிட்டுச்சா.. ம்.. சின்னவ மார்க் சொல்லலையே .. அவளைக்கூப்பிடு என்னம்மா அப்பா கஷ்டப்படறது தெரியாதா.. என்ன 200 க்கா ...இவ்வளவு தானா.. அப்ப இரு .. ம்.. 75% வாங்கினா எப்படி.. போனவாட்டி 95 % எடுத்தியே கணக்குல.. ம் சரி அம்மாட்ட குடு.. என்று குடும்பத்தில் ஒருவராய் ஒவ்வொரு நிகழ்விலும் இருக்க முயன்ற கள்ளமில்லா தந்தையின் அன்பு கண்டு கனிந்திருந்தேன்.

இன்னொரு ஆர்மிக்காரர் ..அடுத்த கேபினில் இருந்தாலும் சத்தமென்னவோ இங்கும் வருகிறது. என்னப்பா கராத்தே மாஸ்டரா அழைச்சுட்டுப் போறாரு போயிட்டுவாப்பா அம்மாட்ட நான் சொல்றேன்ப்பா.. இங்கபாருங்க அவங்களும் உன் நல்லதுக்குத்தான் சொல்றாங்க.. பணம் எல்லாம் கொண்டுபோய் தனியா தங்கின்னு பயம்தானங்க.. சரி நீ போயிட்டுவா பணம் தர சொல்றேன்.. இது ஒரு வாய்ப்பா இருக்கட்டுமே பழகிக்குங்க.. உங்க நண்பர் யாருங்க க்ளோஸ் ? சரிங்க அவருகிட்ட நீங்க விளையாடையில சாவி குடுத்துவைங்க.. அவங்க விளையாடையில் நீங்க கவனிச்சுக்குங்க.. அப்பறம் பாருங்க மாஸ்ட்ர் சொன்னாருன்னு ரொம்ப ரிஸ்கான வேலையெல்லாம் செய்து உடம்பை படுத்திக்கவேணாம்.. சும்மா பிக்னிக் மாதிரி போயிட்டுவாங்க சரிங்களா..
இது வேறு வகையான தந்தையின் பாசம்.

தொண்டை வலியால் சென்னை பயணியர் தங்கும் விடுதியிலும் சற்றே செவிசாய்த்திருந்தேன். என்னைவிட பெரிய ப்ரசங்கியான பணி போலிஸ் அம்மணி தன் சோகத்தை எல்லாம் என்னிடம் இறக்கி வைத்தார். பெண்கள் அந்த துறையில் படும் அவஸ்தையும் , மேலிடத்தின் அதட்டல்களும், குடும்பத்தில் கணவரும் மனைவியும் வேறு வேறு இடத்தில் பணி அமர்த்தப்படுதலும் அதனால் குழந்தையின்மையும் ... சாலைப்பாதுக்காப்புக்கு போட்டால் மூச்சுகோளாறுகளும்.. ரயில்வே அதிகாரிகள் அங்கேயே காவலுக்கு இருப்பவர்களை பொருட்டின்றி நடத்துவதாகவும் ... மக்களின் கேள்விக்கு பதில் பேசியே சில நாள் தொண்டை உலருவதையும்.. ஆகா வாழ்நாளில் நான் அதிகம் என் வகுப்பறைக்கு பி ன் அங்கே தான் வாய் மூடி கவனித்திருப்பேன். கடினம் தான் அவங்க வாழ்க்கை.

எந்த ரயில் எந்த தடத்தில் வரும் என்பதையெல்லாம் காவலதிகாரியிடம் கேட்டுவிட்டு இது தெரியாமயா தொப்பிப்போட்டுக்கிட்டு நிக்கிறன்னு சிலர் திட்டுவார்களாம்.. கேட்டப்போ எனக்கு சிரிப்பா வந்தது .. சிரிக்கமுடியுமா ஆனா... :) செக்கிங்க் நடக்கையில் வெளியே பாதை வழியாக உள்ளே செல்பவர்களை தடுப்பது போன்ற கொடுமை வேறதும் இல்லையாம். மக்கள் எப்படி எல்லாம் நடந்துக்கிறாங்க பாருங்க....

"சும்மா இரு" என்று சுலபமாக சொல்லியிருக்கிறார்கள். சும்மா இருப்பதைப்போல பெரிய கஷ்டம் வேறெதுவும் இல்லை. இந்த பயணத்தில் பெரும்பகுதியை சும்மாவே இருந்து பார்த்து இதை தெரிந்து கொண்டேன்.

January 16, 2009

மூன்று பதிவர் சந்திப்புக்கள்

தில்லியிலிருந்து 8 ம் தேதி காலை சென்னைக்கு ரயிலேறினேன்.. நானும் சபரியும் தான். வெளியில் 20 டிகிரி என்றால் தானாகவே அந்த ஏசி ஹீட்டராகி விடுமாம். ஹீட்டர் சூடும் எக்கச்சக்கமாக , அட்டெண்டரை கூப்பிட்டு எல்லாரும் குறைஞ்சபட்சம் ப்ளோயராவது இருக்கட்டும் ஹீட்டர் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம்.. சென்னையில் எக்மோர் ஸ்டேஷ்ஸனில் இறங்கியது சூடோ சூடு.. அதும் உயர்வகுப்பு பயணியர் காத்திருக்கும் அறை அடுப்பு சூடு.. இறங்கியதுமே கவிதாவுக்கும் முல்லைக்கும் ஒரு போன் போட்டு எங்க இருக்கீங்க என்று கேட்டுக்கொண்டேன். கவிதா வந்துகிட்டே இருக்கேன் என்றார்கள். முல்லை யாரு நீங்க என்று கேட்டுவிட்டு ..ஓ உங்களைத்தானே பாக்கவரேன் .. வழியில் தான் இருக்கோம் என்றார்கள். :)


முல்லை வந்து சேர்ந்ததும் போலீஸ் அக்கா என்னை அவங்களுக்கு அடையாளம் காட்ட ...முல்லை பேரைச்சொல்லி, வாங்கிய டோக்கனை போலிஸ் அக்காக்கிட்ட குடுத்துட்டு வெளியேவே போயிக்கிறேங்க என்று அந்த அறை சூட்டிலிருந்து தப்பித்து , ஹாட் சிப்ஸ் ரெஸ்ட்ரண்டுக்கு சென்றோம்.ஒருத்தங்க கூட ஃபேன் போடசொல்லலைங்க.. நாங்க கூட சாப்பிட்டு முடித்து அரட்டையை தொடர்ந்த போது தான் சபரி ஃபேனைப் போடச்சொல்லி பேரரை அழைத்தான். குட்டிப்பொண்ணு பப்புவுக்கு கீரிடமும் பொட்டுக்களும் குடுத்தான் சபரி. அவள் கிரீடத்தையே தொட்டு தொட்டுப்பார்த்துக்கொண்டிருந்தாள் அதை அணிந்து ஒரு படம் எடுத்துக்கொண்டோம். மதிய தூக்கமில்லாததால் அவள் கொஞ்சம் மூடியாக இருந்தாள்.

என் குரல் அப்போதே குளிர், சூடு என்ற மாற்றங்களினால் த்ன் வேலையை காட்டத்தொடங்கியது . தொண்டைக்கட்டு வரப்போகிறது என்று உணர்ந்தேன். அளவாக பேசியதற்கே அணில்க்குட்டி கவிதா காதில் ரத்தம் வருவதாக போஸ்ட் போட்டிருக்கிறார்கள். இருந்தாலும் கவிதாவுக்கும் நல்ல திறமை . நான் கேப் விட்டபோதெல்லாம் பிடிச்சு அவங்களைப்பத்தி புலம்பி தள்ளிவிட்டார்கள். முல்லை தான் பாவம் .

பரோட்டா, சாம்பார் இட்லி ,தோசை பதிவர் சந்திப்பில் உணவருந்தினால் பதிவில் லிஸ்ட் தருவது சம்பிரதாய வழக்கமாம்.. :)

நண்பர்கள் மனமின்றி இரவினைக்காரணம் காட்டி விடைபெற்று சென்றனர். நான் கோவைக்கு அடுத்த ரயிலை பிடித்தேன். அடுத்த நாள் என் தாத்தாவின் நூற்றாண்டு விழா . நண்பர்களை அழைக்காலாமா என்று தெரியாததால் முன்பே அழைக்கவில்லை. பிறகு எத்தனை பேருக்கு ஏற்பாடுகள் என்று கேட்டு தெரிந்து கொண்டபின் நண்பர்களை அழைக்க நினைத்து , மெயிலில் பரிசல், வடகரைவேலன், சஞ்சய் ,வெயிலான், வின்செண்ட்,மங்களூர் சிவா ஆகியோரையும் , கவிதாயினி காயத்ரியை தொலைபேசியிலும் அழைத்தேன். வடகரை வேலனும் சஞ்சயும் சேர்ந்து வந்திருந்தார்கள். சரியாக கவனிக்க இயலவில்லையோ என்று நினைத்திருந்தேன்.சஞ்சயின் பதிவு படித்து மனம் நிம்மதி அடைந்தது. மரவளம் வின்சென்ட் விழா முடிவில் கலந்து கொண்டு ஆசி பெற்றுச்சென்றார். எனக்கும் சில பரிசுகள் கொண்டு வந்திருந்தார். சில செடிகள். அது பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.


மீண்டும் கோவையிலிருந்து வரும் வழியில் சென்னையில் இம்முறை செண்ட்ரலில் சந்திப்பு.
இரண்டாம் தளத்தில் இருக்கும் பயணியர் தங்கும் இடத்தில் இருந்தேன். ஆடுமாடு அவர்கள் வந்து சந்தித்தார்கள். பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டேன் இருந்தும் போன் ஒலிக்க காத்திருந்தேன் . ஒலித்ததும் உறுதிப்படுத்திக்கொண்டு வணக்கம் சொல்லி பேசினேன். அவர் சின்னமகனின் குறும்புகளை சொல்லிக்கொண்டிருந்துவிட்டு அருகில் நடக்கும் புத்தககண்காட்சிக்கு செல்லவேண்டுமென்று வயிற்றெரிச்சலைக் கிளப்பிவிட்டுச் சென்றார். அவருடைய நண்பர் தேநீர் வாங்கிவர சென்றார். நல்லவேளையாக தேநீர் இல்லையென பால் கிடைத்தது என்று வாங்கிவந்தார் சரியாக அந்நேரம் கண்விழித்த சபரி அருந்த வசதியாக அமைந்தது.

சற்றே பொறுத்து குசும்பன், ஜி3, சிபி மூவர் குழு வந்தது. அவர்கள் அனைவரையும் நான் புகைப்படத்தில் பார்த்திருப்பதால் நானாகவே அடையாளம் கண்டு ஹாய் சொல்லிக்கொண்டேன். அவர்கள் சபரிக்கு ஒரு பெரிய டெடிபேர் வாங்கிவந்தார்கள் அவனும் அதை உடனே பிரித்துப்பார்த்து மகிழ்ந்தான். குசும்பனின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதால் அவர் உணவு வாங்கிச்செல்ல வேண்டிய கடமை அழைத்தது .. ஜி3 க்கு ஊரின் மறுகோடிக்கு செல்லவேண்டுமாம்.. சிபிக்கு எங்கே காதில் ரத்தம் வந்துவிடுமோ என்ற பயம் காரணம் போலும் சற்று நேரத்திலேயே கிளம்பி ஓடிவிட்டார்கள். இத்தனைக்கும் அவர்கள் செய்த புண்ணியம் போலும் என் தொண்டை அதுவரையில் சரியாகாமல் இன்னும் கிணற்றுக்குள்ளிருந்தே ஒலித்தது..

இத்தனைக்கும் அவர்கள் மூவர் குழு என்னை விட்டுவிட்டு ஒருவரை ஒருவர் சகட்டுமேனிக்கு கலாய்த்துக்கொண்டிருந்தார்கள்..நல்லவேளை என்னைவிட்டார்களே என்று நான் நிம்மதியாக இருந்தேன். இன்னும் பலரை சென்னையில் சந்திக்க ஆவலிருந்தாலும் எல்லாரையும் நான் செண்ட்ரலுக்கும் எக்மோருக்கும் அழைத்து சிரமப்படுத்துவது சரியாக இருக்காது என்பதாலே அழைக்கவில்லை . யாரும் தவறாக நினைக்கவேண்டாம்.

தில்லி வந்து சேர்ந்துவிட்டேன். இருந்தும் உடல்நிலை காரணமாக அதிகம் இணையப்பக்கம் வர இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்

January 6, 2009

நியூ இயர் ஒரே பிசி.. பிசி

போன வருட கடைசியில் இருந்தே கொஞ்சம் பிசியாகத்தான் மாறிவிட்டது.. இந்த வருடம் இதுபோலவே தொடரும் என்று நினைக்கிறேன். குடும்ப நண்பர்களுடன் நியூ இயர் ஊர் சுற்றலாக ஆரம்பித்தது. பதிவெழுத நிறைய விசயங்கள் இல்லையே என்று இருந்த காலம் போய்...விசயங்கள் வரிசைக்கட்டி நின்றாலும் எழுத நேரமின்மை என்று நிலைமை தலைகீழாகி விட்டது. ஒரு வாரம் தென்னிந்தியா பயணம் வேறு காத்திருக்கிறது.

நியூ இயர் மலைமந்திர் முருகன் , ஆர் கே புரம் ஐயப்பன் என்று தரிசனத்துடன் துவங்கியது, ஒரு கெட் டு கெதர் லஞ்ச், ஈட்டோப்பியாவில் டின்னர்...

தில்லிக் குளிரோ ஆளைக் கொல்கிறது. பலமுறை செய்தித்தாளில் படித்த குளிர்மூட்டமான அதிகாலை, இரவு நிலைமைகளை நேரிலேயே இந்த வருடம் காண நேரிட்டது. டின்னர் முடித்து வருகையில் முன்னால் போகும் காரின் ப்ளிங்க்கர் லைட் மட்டும் தான் தெரிந்தது. ரோட்டின் மஞ்சள் கோட்டை வழியாக நம்பி வீடு வந்து சேர்ந்தோம்..பகவானே காப்பாத்து என்று மகளின் டென்சனும் .. இந்த புகை ஏன் வருது என்ற மகனின் அச்சமும் அன்று ஒரு திரில்லிங்க் அனுபவம் தான்.

தொடர்ந்து மகனின் பிறந்த நாள் கொண்டாட்டம் ....

பரிசல் சொன்னது போல நேரமின்மையால் பலரது பதிவுகளை படிக்க இயலாமல் போயிருக்கிறது என்பதை இங்கே சொல்லிக்கொள்கிறேன். படித்தாலும் பின்னூட்டமிடவும் நேரமில்லாமல் இருக்கின்றேன். :)