December 11, 2011

உள்வெளி


கோணங்களை மாற்றிவைத்தாலும்
அக எதிரொளிப்பில்
ஒளியிழைகளைப் பற்றி
மேலேறி நிற்கிறது
குறுக்குவெட்டிலும் நோக்கி
பிழைகளைப் பட்டியலாக்கி
முடிவுகளை மேலேற்றி
வடிவம் செய்கிறது

சத்தமின்றி சில உயிர்களை
அச்சட்டகத்திலாக்கி
பார்வைக்கு மறைவாய்
அலையத்தொடங்குகிறேன்.

வின்மீண் தொலைவில்
வேறொரு உலகம் சமைத்தும்
பருவங்களில்
நீர் வற்றாத ஓவிய ஆறாக
உள்ளே தான் உறைந்திருக்கிறதது

உள்ளோடும் ஈர்ப்பில்
சுருங்கி சுருங்கி
அளவில்லாததும்
உருவில்லாததும் ஆனபின்னும்
நிரம்பாத வெற்றிடமும் கொண்டு..

இம்மாத வடக்குவாசலில் வெளிவந்திருக்கும் என் கவிதை

9 comments:

ADHI VENKAT said...

நல்லாயிருக்குங்க. வாழ்த்துகள் வடக்கு வாசலில் வந்ததற்கு.

Rathnavel Natarajan said...

அழகு கவிதை.
மனப்பூர்வ வாழ்த்துகள்.

பாச மலர் / Paasa Malar said...

அழகாய் வந்து விழுந்த வார்த்தைகள்..எனக்கு மிகவும்பிடித்த வரிகள்..

//நீர் வற்றாத ஓவிய ஆறாக
உள்ளே தான் உறைந்திருக்கிறதது//

வாழ்த்துகள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ஆதி :)

நன்றிங்க ரத்னவேல்:)

நன்றி பாசமலர் :)

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் அக்கா ;-)

rishvan said...

nice kavithai...

ennoda kavithaiyai padichi epdi irukkunnu sollungalen....www.rishvan.com

Unknown said...

//குறுக்குவெட்டிலும் நோக்கி
பிழைகளைப் பட்டியலாக்கி//
//நீர் வற்றாத ஓவிய ஆறாக//
அழகாய் விழுந்த வரிகள் , நல்லா இருக்கு. வடக்கு வாசலில் வந்ததற்கு வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

/பிழைகளைப் பட்டியலாக்கி
முடிவுகளை மேலேற்றி/

ஆம், இதற்கு மனித மனம் அசருவதே இல்லை. நல்ல கவிதை. பத்திரிகையில் வாசித்தேன். வாழ்த்துகள் முத்துலெட்சுமி!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கோபி :)
நன்றி ரிஷ்வன்:)
நன்றி கெக்கே:)
நன்றி ராமலக்‌ஷ்மி....அதேதான்... ஈகோங்க ஈகோ..:)