March 13, 2012

நேரிட்டே சொல்லித் தீர்




உண்டி சுருக்கி
உணர்வு சுருக்கியும்
போதாமல்
பேயுரு பெற
அம்மையில்லை
அழுந்திய மனத்தால்
ஆடித்தீர்க்க 
இன்று பேயுமில்லை
நேரிட்டே சொல்லித் தீர்
------------------------------   






காற்றை கிழித்து
சரியான நோக்கில்
வீச வீச 
திசைகள் பழக்கப்பட்டு 
மீண்டும் வாகாக
திரும்பிக்கொண்டிருந்தவரை
விளையாட்டு

திரும்பாமல் தாக்கிய
தினத்தில்
தொடங்குகிறது போர்

--------------------------




நிறுவிக்கொள்ளவென்று
முகமூடியிட்டபின்
முயன்றாலும் 
முடியப்போவதில்லை
இளைப்பாறுதல்
-----------------------------------

17 comments:

ராமலக்ஷ்மி said...

மூன்றும் அருமை.

இரண்டாவது மிகப் பிடித்தது.

ஆயில்யன் said...

இரண்டாவது மிகப் பிடித்தது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ராமலக்‌ஷ்மி :)
நன்றி ஆயில்யன்..:)

சாந்தி மாரியப்பன் said...

எல்லாமே பிடிச்சுருக்குங்க..

வல்லிசிம்ஹன் said...

எனக்கு முதலும் பிடித்தது. தினந்தோறும் சில நேரமாவது நான் பேயாடுகிறேன்:)
ஆடியும் பயனில்லை.

கோபிநாத் said...

மூன்றும் நல்லாயிருக்கு ;-)

பாச மலர் / Paasa Malar said...

இரண்டாவது மிகவும் அருமை..வாகாய் வளைந்து கொடுக்கிறது உங்களுக்கு எழுத்து...இன்னும் இன்னும் மேலும் மேலும் எழுத வாழ்த்துகள்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சாரல் :)

நன்றி வல்லி..:))
நன்றி கோபி :)
நன்றி பாசமலர் :)

sathya said...

mudal kavithai super (azunthiya manadal aadi theerka inru peyumillai, neritte solli theer). pinniteenga muthu
sathya asokan

Marc said...

அருமைக்கவிதைகள்.

Easwaran said...

//அழுந்திய மனத்தால்
ஆடித்தீர்க்க
இன்று பேயுமில்லை//

பல இளம்பெண்களை திருநீறு அடித்து, வேப்பிலை அடித்து, மேளமடித்து ஆடித்தீர்க்க வைத்து இளைப்பாற்றும் எங்கள் ஊர் கோமரத்தாடி(சாமியாடி)தானே, எங்கள் ஊர் மனநல மருத்துவர்.

நல்ல பளீர் கவிதைகள்.

ADHI VENKAT said...

மூன்றுமே நல்லா இருந்துச்சுங்க....

Asiya Omar said...

மூன்றுமே மிக அருமை.வார்த்தைகள் உணர்வுகளை அழகாய் சித்தரித்துள்ளன.

கோமதி அரசு said...

மூன்றும் நன்றாக இருக்கிறது முத்துலெட்சுமி.

வெங்கட் நாகராஜ் said...

மூன்றுமே அருமை....

இரண்டாவது - யதார்த்தம்.... நமக்குப் பிடித்தவரை தானே அது விளையாட்டு... பிடிக்காத போது “இந்த பழம் புளிக்கும்” கதைதான்...

Anonymous said...

விளையாட்டு, போர் பற்றிய இரண்டாவது ஸ்டான்சா - நல்ல சிந்தனை.....

கீதமஞ்சரி said...

தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_15.html