May 1, 2012

ஒற்றைக் கூழாங்கல்


கவனமாய் கோத்த
முத்தாரத்தில்
எல்லாமுமாய் கூடி
கவனம் ஈர்த்தபடி
இருக்க
ஒற்றைக் கூழாங்கல்
அமைதியாய் அங்கே
பொருந்திவிட்டிருந்தது

-----------------------------------------------------

நிலா பார்த்து
நட்சத்திரங்கள் எண்ணிமுடித்து
என்றொருநாள் பாலைக்கனவு

மலையேறி முகடெட்டி
பள்ளத்தாக்கில் கரைந்து
என்றொருநாள் பனிமலைக்கனவு

எங்கேயும் போகப்போவதில்லை
என்பதைத்தான்
கனவில் வந்த கனவு
சொல்லிக்கொண்டிருக்கிறது




11 comments:

வெங்கட் நாகராஜ் said...

இரண்டாவது கவிதை....

கனவிலாவது அங்கே போக முடிகிறதே...

இரண்டு கவிதைகளும் நன்று பாராட்டுகள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

சிறுமுயற்சி நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் முத்துலட்சுமி.

சாந்தி மாரியப்பன் said...

ரெண்டுமே அருமைன்னாலும்,.. முதலாவது க்ளாஸ் :-)

வல்லிசிம்ஹன் said...

சிறு முயற்சி எடுத்தால் கனவெல்லாம் நிஜமாகுமே.
மே தின வாழ்த்துகள்.
சில கனவுகளில் வழிதெரியாமல் தொலைவேன். அதைவிட உங்கள் கவிதை அழகு.

பாச மலர் / Paasa Malar said...

கூழாங்கல் கவிதையில் உண்மைகள் பல விரிகின்றன...

கனவுகளின் வெளிப்பாடும் அழகு...

கோமதி அரசு said...

இரண்டு கவிதைகளும் நன்றாக இருக்கிறது.

கோபிநாத் said...

2ம் சூப்பரு ;-)

ADHI VENKAT said...

இரண்டுமே அருமை. வாழ்த்துகள்.

pudugaithendral said...

நல்லா இருக்குப்பா

ராமலக்ஷ்மி said...

/எங்கேயும் போகப்போவதில்லை என்பதைத்தான் கனவில் வந்த கனவு சொல்லிக்கொண்டிருக்கிறது/

அற்புதம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி வெங்கட்.. :)

நன்றி புவனேஸ்வரி :)

நன்றி சாரல்:)

நன்றி வல்லி :)

பாசமலர் நன்றி :)

கோமதிம்மா நன்றி :)

கோபி நன்றிப்பா..:)

ஆதி நன்றிப்பா :)