Showing posts with label தில்லித் தமிழ்ச்சங்கம். Show all posts
Showing posts with label தில்லித் தமிழ்ச்சங்கம். Show all posts

May 6, 2011

செம்மொழி விருதுகள்



செம்மொழி தமிழுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் பெறுகிறவர்களை தில்லித் தமிழ்ச்சங்கம் இன்று சிறப்பு செய்கிறார்கள். மேலே அழைப்பிதழில் விருது பெறுபவர்களின் பெயர்களைக் காணலாம். மாலை 6.30 மணிக்கு தமிழ்சங்கத்தில் இந்நிகழ்வு நடைபெறும்.

நேற்று தமிழ்ச்சங்கத்தில் முனைவர் மு. இளங்கோவன் அவர்களுடன் ஒரு (இணையத்தில் தமிழ் )கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தனர். வடக்குவாசல் ஆசிரியர் கி.பென்னேஸ்வரன் அறிமுகம் செய்து வைக்க , முனைவர் இணையத்தில் தமிழின் அவசியம் பற்றிப்பேசினார். இன்னும் பரவலாக அனைவரும் இணையத்தில் தமிழை உலவச்செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார். தமிழறிஞர்கள் பலரைப்பற்றியும் இணையத்தில் இதுவரை பதியப்படாமல் இருப்பது பற்றி வருந்தினார். அனைவரும் பங்குபெற்றால் அக்குறைகள் களையப்படும்.