November 15, 2006

யாருக்கு போர் வேண்டும்?

வேதாத்திரி மகரிஷி எழுதிய கருத்துக்கள் இங்கே.
மனிதகுலத்தில் வாழ்க்கை வளம் காக்கும் முயற்சியில் ஏற்பட்ட ஆட்சி முறைகள் பலப்பல. தடியாட்சி,முடியாட்சி சர்வாதிகார ஆட்சி கடைசியாக குடியாட்சி அன்று ஆட்சி முறைகள் வந்தன.ஆட்சியாளர்கள் எடுத்த பாதுகாப்பு முயற்சியே போர்களாக உருவானது. இப்பொழுது மனித குல வாழ்க்கை வசதிகளும் விஞ்ஞானமும் கல்வியின் மூலம் உயர்ந்துள்ளன.இன்னுமா போர் மனிதனுக்கு வேண்டும்? யாருக்கு போர் வேண்டும்?யுத்தத் தளவாடங்கள் செய்து விற்பனை செய்பவர்களுக்கு மாத்திரம் போர் வேண்டும்.ஐக்கிய நாடுகள் சபையில் ஐந்து நாடுகளுக்கு ரத்துரிமை [VETO power] என்ற அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.எனவே அந்தச் சபை உலகக் குடியாட்சி முறையாகச் செயல்பட முடியவில்லை. சில நாடுகளுக்கே உள்ல இந்த உரிமையை ரத்து செய்ய வேண்டும்.
ஒவ்வொரு நாடும் எல்லை பாதுகாப்பு ராணுவம் வைக்காமல் ஐநா சபை எல்லா நாடுகளுக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு செய்யவேண்டும்.
போரில்லா நல்லுலகம் வேண்டும்.வளம் பெற்று வாழ்வோம்.
மேலும் மகரிஷியின் எழுத்துகளை படிக்க அறிய
http://www.vethathiri.org/

5 comments:

Anonymous said...

தமிழ்மணத்தில் இணைந்ததற்கு வாழ்த்துக்கள்.

"நன்றி" என்ற உங்கள் கவிதைக்குப் பின்னூட்டமிட முயற்சித்தேன், பின்னூட்டத்துக்கான லின்க்கைக் காணவில்லை.

சேதுக்கரசி said...

புது வலைப்பதிவரான நீங்கள் செய்யவேண்டியவை இரண்டு:

1. மறுமொழி மட்டுறுத்தல்
2. தமிழ்மணத்தில் "அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" பகுதியில் உங்கள் வலைப்பூ தென்படவேண்டும்

தமிழ்மணம் வலைத்தளம் அல்லது தமிழ்மணம் பயனர் கையேடு பார்க்கவும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்கள் வாழ்த்துக்கு நன்றி.சேதுக்கரசி.
ஆனால் இன்று வரை எனக்கு நன்றி என்ற என் பதிவுக்கு பின்னூட்ட லிங்க் அமைக்கத் தெரியவில்லை.

//புது வலைப்பதிவரான நீங்கள் செய்யவேண்டியவை இரண்டு:

1. மறுமொழி மட்டுறுத்தல்
2. தமிழ்மணத்தில் "அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" பகுதியில் உங்கள் வலைப்பூ தென்படவேண்டும்//இவ்விரண்டையும் ஒருவழியாய் செய்துவிட்டேன்.நன்றி.

ரவி said...

சுட்டிக்கு (link) நன்றி !!!!

சித்திரவீதிக்காரன் said...

வேதாந்த மகிரிஷியின் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி. நான் வேதாந்த மகிரிஷி ஏற்படுத்திய அறிவுத் திருக்கோயிலில் அடிப்படை பயிற்சி எடுத்தேன். எளிய உடற்பயிற்சி மற்றும் தியான முறைகளை கற்றுத்தந்தார்கள். தற்சமயம் சோம்பேறித்தனத்தால் அவற்றை செய்வதில்லை.