November 27, 2006

அம்மாவும் பண்டிகையும்

பண்டிகை நாட்களில் அம்மா மேலும் அழகாகத் தோன்றுவார்கள்.புத்துணர்ச்சியோடு வேலைகளை செய்யும் போது மற்ற நாட்களை போல அல்லாமல் நாமும் சேர்ந்து உதவி செய்ய வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விடுவார்கள். கார்த்திகை மாதம் வந்ததும் தினமும் வாசலில் இரு விளக்கு வைப்போம். திருநாள் அன்று பழைய விளக்கு எல்லாம் தேய்த்து வைத்து பின் ஈரம் போக துடைத்து வைப்போம்.
50 விளக்கு என்றால் 100 திரி திரிக்கச் சொல்வார்கள் அம்மா.இரண்டு இரண்டாக இடவேண்டுமாம் .அப்போதெல்லாம்..இன்று கிடைப்பது போல் திரி கடைகளில் வாங்கும் பழக்கம் இல்லை.பஞ்சை திரியாக்கி எண்ணி வைப்போம்....விபூதி குழைத்து விளக்கின் பக்கங்களில் வைத்து அவை காயும் முன் குங்குமம் அதன் மேல் வைத்து அழகு செய்து என்று தம்பியும் நானும் உதவி செய்யும் போதே அம்மா எங்களுக்கு சில விசயங்கள் சொல்வார்கள்.
அரிசி மாவினால் கோலங்கள் இடும் போது சிறு எறும்புக்கும் நாம் உதவியாக இருக்கவே அரிசி மாவுக் கோலம் இடுகிறோம். மஞ்சளில் கதவில்
பட்டைகள் இடும் போது மஞ்சள் கிருமி நாசினி அது தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் நம் வீட்டில் நுழைவதிலிருந்து காக்கும்
என்று சொல்வார்கள்.


சில கதைகளும் கிடைக்கும் பண்டிகை தினத்தில். அம்மா அரிசி மாவினை குழைத்து கை அச்சினை கதவின் மேல் பதிப்பார்கள். ஏனென்று கேட்டால் அதற்கு ஒரு கதை.

மகாபலி வருடம் ஒரு முறை ஓணத்தன்று வருவதாய் கேரளத்தில் சொல்வது போல் கார்த்திகை அன்று வருவார் என்றும் அதற்காக கை பதிப்பது நம் பக்கத்து ஒரு நம்பிக்கை...என்பார்கள்.
கார்த்திகை மாதம் காற்று நிறைய இருக்கும் . தீய சக்தி இந்த அச்சினால் ஏதும் வீட்டில் வர அஞ்சும் என்றும் அவர்கள் பாட்டி காலத்து நம்பிக்கை ப் பற்றியும் சொல்வார்கள்.

செவிக்கும் உணவளித்து பின் வகைவகையாய் ... திண்பண்டங்களும் கிடைக்குமே பண்டிகை வந்தால் .




5 comments:

பொன்ஸ்~~Poorna said...

//பண்டிகை நாட்களில் அம்மா மேலும் அழகாகத் தோன்றுவார்கள்.புத்துணர்ச்சியோடு வேலைகளை செய்யும் போது மற்ற நாட்களை போல அல்லாமல் நாமும் சேர்ந்து உதவி செய்ய வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விடுவார்கள். //
அனுபவிச்சு எழுதியிருக்கீங்க..

//வகைவகையாய் ... திண்பண்டங்களும் கிடைக்குமே பண்டிகை வந்தால் //
அதச் சொல்லுங்க.. கார்த்திகைக்கு என்ன பலகாரம் செய்தீங்க நீங்க? :)

பிகு: இந்த word verificationஐ நீக்கினால் பின்னூட்டமிடுபவர்களுக்கு வசதியாக இருக்குமே..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வருகைக்கு நன்றி.பொன்ஸ்.

//கார்த்திகைக்கு என்ன பலகாரம் செய்தீங்க நீங்க? :)//

இந்த முறை சின்ன பையன் தொந்தரவால் பலகாரம் செய்வதில் இருந்து ஜூட் விட்டாச்சு.

நீங்கள் சொன்னது போல் word verification ஐ நீக்கிவிட்டேன்.நிறைய சந்தேகம் இருக்கு இது போல யாரைக் கேட்கரது ன்னு தெரியாம இருக்கேன்.ஏதோ புதுசா பதியரவங்களுக்குன்னு பதிவு போடறீங்களே அதைத் தான் எதிர்பார்த்து இருக்கிறேன்.

பொன்ஸ்~~Poorna said...

இங்க பாருங்க...

வேற எதுனா உதவி வேணும்னா மடல் இடுங்க :)

வல்லிசிம்ஹன் said...

லக்ஷ்மி,
அழகான கார்த்திகை பதிவு.
உங்க ஊரில கிராண்ட் ஸ்னாக்ஸ் இல்லியா:-)
சென்னையிலே ரொம்ப ஆசாரக்காரர்களைத் தவிர பொரி உருண்டை பிடிப்பது குறைந்துவிட்டது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

// வல்லிசிம்ஹன் said...
லக்ஷ்மி,
அழகான கார்த்திகை பதிவு.
உங்க ஊரில கிராண்ட் ஸ்னாக்ஸ் இல்லியா:-)
சென்னையிலே ரொம்ப ஆசாரக்காரர்களைத் தவிர பொரி உருண்டை பிடிப்பது குறைந்துவிட்டது.//

இல்லைங்க.சரவணபவனும், புதுசா அடையார் ஆனந்தபவனும் தான் வந்திருக்கு.மத்தபடி பொரியெல்லாம் ராமகிருஷ்ணா ஸ்டோர்ஸ் ன்னு மளிகை கடையில் நல்லா விற்பனை ஆகும்.இங்க இன்னும் ஆசாரக்காரர்கள் நிறைய இருகாங்க போல.வாங்கி செய்யறது தான். ஊரை விட்டு வந்த பிறகு இந்த பழக்கததை எல்லாம் கடைபிடிக்க பெரியவங்க துணை கொஞ்சம் தேவையா இருக்கு.