September 8, 2007

அன்பிருந்தால் இப்படி கேட்பாயா?


அன்பைப்போன்றதொரு
கெடுதியான விசயமில்லை இவ்வுலகில்
என்கிறேன்.
புருவம் நெறித்து ஏனென்கிறாய்?
அன்போடே சேர்ந்து வருகிறது ஆசை.
ஆசையோடே சேர்ந்து வருகிறது பேராசை.
பேராசை கொண்டு வருகிறது ஏமாற்றம்.
ஏமாற்றம் கொண்டு வருகிறது சோகம்.
'ம்'என்கிறாய் மறுபேச்சின்றி.
அன்பைப்போன்றதொரு
அற்புத விசயமில்லை இவ்வுலகில்
என்கிறேன்.
அப்படியா வியந்தபடி வினவுகிறாய்?
அடக்கமுடியாத கோபத்துடன் நான் -
சரிதான் உனக்கு என் மேல் அன்பே இல்லை.
உண்மையில்
அன்பிருந்தால் இப்படி கேட்பாயா?

11 comments:

கோபிநாத் said...

எல்லாம் அவள் செய்ல்....நாங்க என்னிக்கு பதில் பேசியிருக்கோம் :)

கண்மணி/kanmani said...

நல்லாருக்கு கவிதை

அபி அப்பா said...

அருமையான கவிதை! :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கோபி... நல்ல தெளிவா இருக்கீங்கப்பா இந்த காலத்து பசங்க... :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கண்மணி , அபி அப்பா ரொம்ப நன்றி ரெண்டு பேருக்கும்...

மங்களூர் சிவா said...

அன்பிருந்தா இப்டி எங்களை கவிதை எழுதி வதைப்பீங்களா?? LOL

மங்களூர் சிவா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மங்களூர்சிவா ரொம்ப நன்றிங்க ..வதைக்கும் கவிதைன்னாலும் கவிதை தான்ன்னு குறிப்பிட்டு பின்னூட்டம் போட்டீங்களே அங்கதான் நிக்கறீங்க
( பாவம் உக்காருங்க )

காட்டாறு said...

படங்கள் சூப்பர். அதுவும் அந்த கோபித்து முகம் சுளித்து உட்கார்ந்திருந்த சுட்டி... சூப்பரோ சுப்பர்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காட்டாறு இது நியாயமா படம் சுட்டு போட்டது அதை பத்தி மட்டும் சொன்னா என்ன அர்த்தம்...நானும் கோபிச்சிக்கிறேன் அந்த பாப்பா மாதிரியே.... :(

Venkata Ramanan S said...

மிக அழகு....:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ரமணன்..

கவிதை எழுதியும் நாளாச்சு இதை படிச்சும் நாளாச்சு.உங்க பின்னூட்டத்தால் நானும் இன்னொருமுறை ரசித்து சிரித்தேன்.. :)