September 13, 2007

கோபால்சாமி பெட்டா மைசூர்

மைசூருக்கு பிறகு நஞ்சன்கோடு கோயிலுக்கு போனோம்... அங்கிருந்து பாந்திப்பூர் பாதையில்NH212 hangala village ஹங்காலா கிராமத்தில் ஒரு பெயர்பலகை வலது பக்கம் திரும்ப ஹிமாடா கோபால் சாமி பெட்டா என்று இருக்கும் பாதையில் சென்றால் வனத்துறை சேர்ந்த சின்ன குன்று. பாதை சிறிது கடினமானதாக இருந்ததாக நினைவு. 45 டிகிரி ஏற்றமாகவும் சில கொண்டை ஊசி வளைவுகளையும் கொண்டதாக இருந்தது. ஆனால் அழகான குளிர்ச்சியான இடம். அடிவாரத்தில் வனத்துறையினருக்கு பணம் கட்டிவிட்டு தொடர்ந்தோம் .



பாந்திப்பூர் வனச்சரணாலயத்தின் முழுமையையும் இங்கிருந்து கண்காணிக்கமுடியுமாம்.1454 மீ உயரம் கொண்டது. எப்போதும் பனி(மிஸ்ட்) படர்ந்த் மாதிரியான குளிரிச்சி யுடன் இருப்பதால் தான் ஹிமாடா என்று அழைக்கப்படுவதாக தோன்றுகிறது.
மேலே சின்னதாக கிருஷ்ணர் கோயில். நாங்கள் போன நேரத்திற்கு எங்களுக்கு முன்னர் இரு குடும்பங்கள் இருந்தார்கள். அமைதியான இடம் .சன்னதில் போட்டு இருந்த திரையில் நெல்லை லாலா மிட்டாய் கடை என்று தமிழில் எழுத்து. உள்ளே அழைத்து கன்னடத்தில் எல்லாருக்கும் கதை சொன்ன குருக்கள் எல்லாருக்கும் துளசி தீர்த்தம் குடுத்து பூசை காண்பித்தார்.




கிருஷ்ணன் புடைவை அணிந்த மாத்ரி தோற்றம். அழகான மரம் கல்லால் இலைகளும் கிளைகளும் இடைவெளியோட ரொம்ப அருமையான சிற்பம். அவர் கதை சொன்னபடியே அந்த கிருஷ்ணனின் மேலிருந்த மரத்தின் மேல் கைவைத்தார் அங்கே ஒரு சிறு பள்ளம் . அதில் இருந்த தண்ணீரை எல்லார் மேலும் தெளித்தார். வெளியே வந்து உட்கார்ந்து இருந்த போது அவர் யாரிடமோ தமிழில் பேசினார் அப்போ அவரிடம் தமிழில் அந்த கதையை கேட்கலாமே என்று காத்திருந்தேன்.ஆனால் இப்போது கேட்ட கதை முழுதுமாக நினைவில் இல்லை மறந்து விட்டது.


மீதி வந்திருந்த குடும்பங்கள் கும்பிட்டு முடித்து அவர் அமரும் போது போய் கேட்டேன் . கிருஷ்ணனின் மேலே அந்த மரத்தில் இருந்த அந்த தண்ணீர்
எப்படி அங்கே வருகிறது என்பது தெரியாது எப்போதும் பனி நீர் அங்கே இருக்கும் என்றார். நானும் சும்மா இருக்காமல் மேலே கோபுரத்தில் எதாவ்து துளை இருக்கிறதோ என்றேன் கோபப்படாமல் இல்லையம்மா என்றார்... பனி நீர் என்றதும் ஒரு வேளை பனி தான் சேர்ந்து இருக்கிறதோ என்று நினைத்தேன்.


அந்த மலையை சுற்றியும் எத்தனையோ தீர்த்தம் இருப்பதாக சொன்னார் சரியாக இப்போது நினைவு இல்லை 31 இல்லனா 71 இப்படி..திருப்பதியில் இருக்கும் பாபம் தீர்க்க்கும் தீர்த்தத்தின் ஆரம்பம் இங்கு தான் என்றும் இங்கிருந்து ஒரு மைல் தொலைவில் கீழே ஒரு பாறை இருப்பதாகவும் அதில் ஒரு பூஜை செய்தால் குழந்தை பிறக்காதவர்களுக்கு பிறக்கும் என்றும் அதற்கு முன்பதிவு செய்து கொள்ளவேண்டும் என்றும் கூறினார். லாலா மிட்டாய்காரர் குடும்பத்துடன் அடிக்கடி அங்கு வருவாராம்.


காகமே அந்த மலைப்பகுதியில் வராதாம். அந்த கதையும் மறந்துடுச்சு அப்பறமா கேட்டு பின்னூட்டத்தில் இடுகிறேன். வெளியே வந்ததும் உண்மைதானா என்று சுற்றி முற்றி தேடினோம் தன்னிச்சையாக என்ன தான் இருந்தாலும் படித்தால் நாமெல்லாம் கடவுளை நம்புவது குறைந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டோம். பஸ் நிறைய ஆட்களும் சாப்பாட்டு டிரம் களும் வந்து இறங்கியது.


அங்கிருந்து மலையின் அழகு ரொம்பவும் அருமை.. இடத்தைவிட்டு வரவே மனமில்லை நாமும் சாப்பாடு கட்டி வந்திருக்கலாமோ என்று யோசித்தோம். ஆனா மக்களே சாப்பிட்டுட்டு அழகான இடத்தைக் குப்பையாக்கிடாதீங்கப்பா !!!


சற்று தொலைவில் வனத்துறையினர் கட்டும் கட்டிடம். பாதி எழும்பி இருந்தது . கீழ் பகுதியில் வெறும் தாங்கும் தூண்களும் மேலே இரு காட்டேஜ் போல இருந்தது. டூரிஸ்ட் இடமாக மாற்றவேண்டும் என்பதற்காக இருக்குமோ என்னவோ அதை விசாரிக்கவில்லை.. பைக்கிலேயே கூட ஒரு குடும்பம் வந்திருந்தது. .

18 comments:

TBCD said...

நல்ல இடம்...நாங்கள் போயிருந்த போது...மலையின் மேலே இருந்து பார்த்த போது...யானைகள்..போவது அழகாக தெரிந்தது..

Unknown said...

oபடத்தப் பாக்கும்போது இடமெல்லாம் நல்லா இருக்குற மாதிரி இருக்குதே.
காக்கா கதை சொல்லும்போது, அந்த பனிநீர்க்கு என்ன காரணம்னும் சொல்லிடுங்கக்கா :-)
நாங்க மைசூர்ல இருக்கும்போது மைசூர் – சாம்ராஜ்நகர் - மலையேறி ஆசனூர் வழியா சத்தியமங்கலம் வரைக்கும் பைக்கிலே போயிருக்கோம். அதுவும் அருமையான மலைப்பாதை. வாழ்க்கைல ஒரு முறையாவது கண்டிப்பா அந்தப் பாதைல பயணிக்கனும்!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி டிபிசிடி...நாங்கள் யானையெல்லாம் பார்க்கலை... மலை பிரதேசம்ன்னாலே ஒரு மயக்கம் தான் அங்கே ஒன்னுமே இல்லைன்னாலும் போவோம். புல்லையும் செடியையும் பாக்க இப்படி கொண்டை ஊசியில் பயந்துக்கிட்டே போனுமான்னு சிலர் கேட்பாங்க .

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கதை வேணா சொல்லலாம் அருள் ஆனா பனி நீருக்கு காரணம் எப்படி கண்டுபிடிக்கறது...? :)கஷ்டம் தான்.

TBCD said...

நாங்க பந்திப்பூர் போயிட்டு வர வழியிலே இந்த இடத்துக்கு வந்தோம்..

அது மே மாதம் வேறு...யானைகள் அப்படியே மலையின் மேலே பாக்க சுவையான காட்சி..நல்லதொரு கருவி இருந்திருந்தால்..நல்ல படம் எடுத்திருப்பேன்.

எடுத்த வரை..இங்கே பாக்கலாம்..
http://www.flickr.com/photos/12478941@N07/1372250886/
http://www.flickr.com/photos/12478941@N07/1372250922/
http://www.flickr.com/photos/12478941@N07/1372251114/

ஒரு காட்டு எருமையின் எலும்புக்கூடு இருந்தது..அதையும் சுட்டோம்...

மங்கை said...

ஹ்ம்ம்ம்ம்..வேற என்ன சொல்ல...
:-))...நல்லா இருக்குப்பா...படங்கள் க்ளியரா இருக்கு

கண்மணி/kanmani said...

நினைச்சேன்.விருந்தாளிகள் வருகைன்னாலே அடுத்து ஊர் சுற்றிய பதிவுகள் தான்னு;)

கோபிநாத் said...

சீக்கிரம் அந்த கதையை சொல்லிடுங்க... :)

துளசி கோபால் said...

அந்தக்கோயில் கோபுரம் ரொம்ப அழகா இருக்கு.

'கோபால்' கோயிலில் 'துளசி' தீர்த்தம் இருக்கு. அதை பயபக்தியோட ஏத்துக்கணும்.
ஏன் எப்படி என்ற கேள்வியெல்லாம் கேக்கப்படாது. சாமி கண்ணைக் குத்திரு(மா)ம்:-))))

அபி அப்பா said...

நல்லா இருக்கு கட்டுரை! அடுத்த வருஷம் நானும் வர்ரேன் அந்த இடத்தூக்கு!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி டிபிசிடி படங்களைபார்க்கிறேன் ..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மங்கை என்ன பெருமூச்சா ... கவலைப்படாதீங்க லீவு போட்டுட்டு அடுத்த முறை வாங்கன்னு சொல்லி இருக்கேனுல்ல...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

விருந்தாளி வருகையின் பின்னால் வரும் ஊர் சுற்றல் இனிமேல் தான் ஆரம்பமே ஆகும் கண்மணி...இது லீவுக்கு போனபோது சுற்றியது பாருங்க உடனே எழுதாம எல்லாம் மற்ந்து போச்சு...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபி கதை கேக்க இத்தனை ஆர்வமா ? முயற்சிக்கிறேன் .

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபால் ன்ன உடனே வந்துட்டீங்களா டான்ன்னு...துளசி சாமி கண்ணைக்குத்தும் என்பதையெல்லாம் நம்பின காலம் போயாச்சுப்பா...சின்ன சந்தேகத்தோடையே சம்பிரதாயங்களையும் சாமி கும்பிடலும் ஆக ...கஷ்டம் வந்தா சாமி கிட்ட ஓடறது ரொம்ப சந்தோஷம் வந்தா நன்றின்னு சொல்றதுன்னு ஆகிப்போச்சு
:(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

டெல்பின் இப்ப போனது இல்லங்க இது மே மாசம் போனது...இனிமே போற இடம் பத்தி அப்பப்ப போட்டுடனும் இல்லன்னா குறிப்பாவது எழுதி வச்சுக்கணும் போல..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கண்டிப்பா அபி அப்பா நடராஜையும் கூட்டிட்டு போங்க குட்டீஸ் நல்லா எஞ்சாய் பண்ண்ட்டும்...

Deepa said...

சூப்பர் பதிவு

///ஆனா மக்களே சாப்பிட்டுட்டு அழகான
இடத்தைக் குப்பையாக்கிடாதீங்கப்பா ///

என்ன வேணா சொல்லுங்க.. ந்மம மக்களுக்கு (என்னையும் சேர்த்துத்தான்).. civic sense சுத்தமா இல்லை... கார்லே வரவங்க கூட குப்பையை ஜன்னல் வழியா வீசுராங்களே தவிர... ஒரு பிளாஸ்டிக் பாக்லே போட்டு ரோட்டோரம் இருக்கும் குப்பைத்தொட்டியிலே போடணும்ன்னு நினைக்கிரதே இல்லை !!!