May 9, 2008

தமிழ்மணத்திற்கு ஒரு வேண்டுகோள்

பழைய தமிழ்மண வடிவம் தான் எனக்கு பிடித்தது.. ஒரு மாற்றம் வந்தா ஏத்துக்க மாட்டேங்கறீங்களேன்னு நினைக்காதீங்க..ஒருவேளைபார்க்கப் பார்க்க பழகுமோ என்னவோ..

எதுவும் எளிமையா இருப்பது வசதியும் கூட .. முன்பிருந்த பக்கம் ரொம்ப எளிமையா இருந்தது.. இப்ப எதை க்ளிக் செய்தாலும் நேரமெடுக்குது.. அதுவும் இன்றைய இடுகைகள் பக்கம் மற்றும் பின்னூட்டம் வந்த பதிவுகள் பக்கம் இவை தான் நான் அடிக்கடி பார்ப்பது வழக்கம்.. அந்த பக்கம் இப்போ ரொம்ப ஸ்க்ரோல் செய்யவேண்டியதாகிவிட்டது... புதிதாக இணைந்த பதிவர்கள் என்ற பகுதி நான் எப்போதும் பார்ப்பது வழக்கம் அதுவும் இந்த புதுவடிவத்தில் இல்லையே...

சரி பதிவு போட்டது எதற்காகவோ அதை சொல்லவே இல்லையே.. இன்றைய பதிவர் என்ற பகுதியில் போய் என் பெயரை க்ளிக் செய்தால்.. நான் கூட்டாக இயங்கும் கும்மி பதிவுகள் தான் திரட்டப்படுகிறது... என் சிறுமுயற்சி தளம் திரட்டப்படவில்லை.. :( இன்னும் மாற்றங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதால் இதையும் வேண்டுகோளாக வைக்கிறேன்.. தமிழ்மணம் பதிவிலும் இதனை பின்னூட்டமாக இடுகிறேன்..

14 comments:

ஆயில்யன் said...

//நான் கூட்டாக இயங்கும் கும்மி பதிவுகள் தான் திரட்டப்படுகிறது//

ஆமாங்க இவங்க அங்க அடிக்கடி ஆப்செண்ட் ஆகறவங்க என்பதனையும் இச்சமயத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் தமிழ்மணத்துக்கு :))))!

TBCD said...

தொன்மையான தமிழ்மணம் (Classic) இங்கே படிக்கலாம்.

http://www.thamizmanam.com/index_classic.php

இதை பயணர்களுக்காக தொடர வேண்டும்.

யாருக்கு எதுப் பிடிக்குதோ, அதை பயண்படுத்தலாம்..முகப்பிலே இதற்கு சுட்டிக் கொடுக்கலாம்.

தமிழ்மணம் பதிவுல இதையும் சேர்த்துச் சொல்லுங்க முத்தக்கா...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

http://www.thamizmanam.com/index_classic.php

இங்க போனா பழய வடிவம் படிக்கலாமாமே.. இதை தொடர்ந்து வழங்கினாகூட நல்லாருக்கேமே..

ஆயில்யன்.. சந்தடி சாக்கில் என் மேல் கம்ப்ளெய்ண்டா... :)

Anonymous said...

வலது பக்க மேல் மூலையில் switch to classic என உள்ளதே அதில் பழைய தமிழ்மணம் கிடைக்கும். அந்த முகவரியை சேமித்து விடுங்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி டிபிசிடி.. நன்றி சயந்தன்..
என்னமோ அந்த வடிவத்தில் தினமும் தமிழ்மணத்தை படிக்கலன்னா படிச்ச மாதிரி யே இல்ல இப்பலாம்.. தினபேப்பரை முதல் முதலா பிரிச்சி படிக்கறமாதிரி ...:)

Thamiz Priyan said...

ஏனோ எனக்கு புதிய தமிழ்மண வடிவம் உறுத்தலாக இருந்ததால் பழையதையே உபயோகம் செய்கிறேன்....
http://209.85.175.104/search?q=cache:wHdyY-0S06YJ:www.thamizmanam.com/+tamizmanam&hl=en&ct=clnk&cd=1&gl=in

MyFriend said...

////நான் கூட்டாக இயங்கும் கும்மி பதிவுகள் தான் திரட்டப்படுகிறது////

இதுக்கு ஒரு ரிப்பீட்டேய்..

MyFriend said...

//ஆயில்யன். said...

//நான் கூட்டாக இயங்கும் கும்மி பதிவுகள் தான் திரட்டப்படுகிறது//

ஆமாங்க இவங்க அங்க அடிக்கடி ஆப்செண்ட் ஆகறவங்க என்பதனையும் இச்சமயத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் தமிழ்மணத்துக்கு :))))!//

இதுக்கு டபல் ரிப்பீட்டேய்... :-))) (எனக்கும் சேர்த்துதான்) :-P

Unknown said...

பழைய வடிவத்தில் என்னமோ பதிவேற்றம் செய்யும்போது என்னைப்போல சொதப்பிக் கொண்டு இருந்த மாதிரி தோன்றியது. இந்தப் புதிய வடிவத்தில் அதை விட சொதப்பல்கள் குறைவாக இருக்க வேண்டும். இருந்தால் நன்று.

ராகவன் தம்பி

MyFriend said...

எனக்கு புதுசுதான் பிட்ச்சிருக்கு. :-)

Sanjai Gandhi said...

ஹிஹி.. தினமும் தமிழ்மணத்துல குடி இருக்கிறவங்களுக்கு தான் இந்த ப்ரச்சனை. நான் இடுகையை அளிக்க மட்ட்டுமே தமிழ்மணத்தை பயன்படுத்துவதால் இந்த மாற்றம் எனக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. நான் நேற்று தான் பார்த்தேன். எப்போ மாத்தினாங்க? :)
இந்த வடிவமைப்பு கூட நல்லா இருக்கிற மாதிரி இருக்கே. ஆனா அக்கா சொல்ற மாதிரி அதிக நேரம் எடுத்துக் கொள்வதை சரி தமிழ்மணம் செய்யவேண்டும்.

கோபிநாத் said...

எனக்கு பழசு தான் பிடிச்சிருக்கு..

வல்லிசிம்ஹன் said...

எனக்கு பழசு தான் பிடிச்சிருக்கு..//
ரிபீட்டே.:0)

பழைய ஃப்ரண்ட்
பார்க்க ஆசை.

NewBee said...

புது வடிவம் பார்க்க நன்றாக உள்ளது.

ஆனால் page download மிக மிக அதிக நேரம் ஆகிறது.குறிப்பா கயல்விழி அவர்கள் சொன்ன மாதிரி, இன்றைய இடுகைகள் கிளிக் செஞ்சுட்டு ஒரு நடை மாடிக்குப் போயிட்டு வந்துரலாம்.

இன்னும் வேலைகள் நடக்கும் பட்சத்தில், performance tune பண்ணலாம் தான்.மற்றபடி வாழ்த்துகள் புதிய முயற்சிக்கு.:)