July 13, 2008

ஒரு ஊடகத்தின் வெற்றி எதில் இருக்கிறது?

நாம் தினம் காலையில் நாளிதழ் படிக்கிறோம். முதல் பக்கத்தில் அரசியல் செய்தி கூடவே நாலு கொலை செய்தி .. அடுத்தபக்கத்தில் சில களவு செய்திகள்.. ஒழுங்கீனங்கள் பற்றிய செய்திகள்.. கடைசியில் விளையாட்டு செய்திகள்.. நடுவே எங்கேயாவது நீங்கள் தேடினால் சில நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவையான நல்ல செய்திகள்.. நாட்டின் மூலையில் எங்கோ நடைபெற்றதாக சொல்லப்பட்டு இருக்கும்.. நீங்கள் அவசரக்காரராக இருந்தால் அது உங்கள் கண்ணில் படுவது மிக்க சிரமம்.

மக்களின் ரசனைக்கு தேவை ஒரு சுவையான கொலைக்கதை. நேற்றுவரை ஏறக்குறைய ஒன்றரை மாதமாக தில்லி நாளிதழ்கள் மற்றும் செய்தி வழங்கும் தொலைகாட்சிகளுக்குத் தீனி போட்டுவந்த அப்படியான ஒரு கொலைக்கதை ஆருஷி ஹேம்ராஜ் இரட்டைக்கொலை.
ஆருஷி - 13 வயது பெண். ஹேம்ராஜ் - 45 வயது நேபாளி வேலைக்காரர்.
ஆருஷியை கொலை யானதும் அவரை கொலை செய்தது நேபாளி வேலைக்காராரகத்தான் இருக்கவேண்டும் என்று போலீஸ் தேடுதல் வேட்டை நடத்தத்தொடங்க அடுத்த நாள் காலை ஹேம்ராஜின் சடலம் அதே வீட்டின் மாடியில் இருந்து எடுக்கப்படுகிறது.
உடனே கேஸின் கதை மாறியது.. இங்கே உத்திரப்ரதேச போலிஸின் கேவலமான அணுகுமுறையை ஊடகங்கள் அப்படியே ஒலிஒளி பரப்பி கதைகளை உண்டாக்கி ஒரு அசிங்கமான நாடகங்கள் அரங்கேறின.

போலிஸுக்கு எந்த ஆதாரமும் இல்லை.. ஆனால் ப்ரஸ் கான்பரண்ஸ் கூட்டி வைத்து ஊருக்கு முன் ஆருஷி ஒரு கெட்டபெண் என்றும் அவர் நேபாளி வேலைக்காரருடன் அதிகம் ஒட்டுதல் கொண்டிருந்தார் என்றும். அதனால் கோபமடைந்த அப்பா கொலை செய்தாதகவும்.. உச்சக்கட்டமாக அப்பாவுக்கும் கூட வேலை செய்யும் பெண்டாக்டருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதனை எதிர்த்துவந்த ஆருஷிக்கும் வேலைக்காரனுக்கு ஒத்தக்கருத்தின் காரணமாக ஒட்டுதல் நேர்ந்திருக்கலாம் என்றும்.. தடுக்க வருவான் என்று ஹேம்ராஜை கொன்று விட்டு அவர் மகளை கொன்றதாகவும். .. இது அத்தனையும் தெரிந்தும் அம்மா உண்மைகளை மறைப்பதாகவும் கதை உண்டாக்கினார்கள்.

ஊடகத்தார் ஒன்றல்ல இரண்டல்ல பல கதைகள் உண்டாக்கினார்கள்.. அந்த பெண்ணுடய மொபைல் போன் கிடைக்கவில்லை எனவே அதனுள் எதாவது எம் எம் எஸ் இருந்திருக்க்லாம்.. கூட படிக்கும் பையன் பெண்கள் விசாரிக்கப்பட்டார்கள். அவர்களில் அடிக்கடி தொலைபேசிய பையனுடன் அவளுக்கு நெருக்கம் இருந்திருக்கலாம் என்று கதை இன்றைய சமுகத்தில் ஒரு பெண் கூட படிக்கு பெண் பையன் இருவரிடமும் வேறுபாடு இன்றி பழக முடியாது என்று தான் இன்னமும் இருக்கிறது போல.. சினிமா செல்ல அனுமதிக்காத பெற்றோருக்கு அவள் மெயில் செய்திருந்தாள் அதனை .. பையனுக்கு அனுப்பிய எம் எம் எஸ் களை வெளிப்படையாக ஊடகங்களில் உலவவிட்டு அவள் கேரக்டர் சரி இல்லை எனவே அவள் கொல்லப்பட வேண்டியவள் என்ற கருத்தை ஆணித்தரமாக சொல்ல விரும்பிய போலீஸுக்கு அரசியல் தலையீட்டால் முதல் அடி.

ரேணுகா சவுதிரி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இந்த கருத்தை மாயவதி வரை கொண்டு சென்றார். ஊடகத்தில் இத்தனை பேசாமல் இருந்தால் ஒருவேளை அப்பாதான் கொலைசெய்தார் என்று ஒரேடியாக அவரை உள்ளே தள்ளி இருப்பார்கள்.. ஒருவகையில் ஊடகம் செய்தது சரி என்றாலும்.. ஆருஷி ஒரு நாள் தான் செத்தார். அவர் குடும்பத்தினர் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறார்கள் .

கேமிரா சகிதமாக கூட வேலை செய்த டாக்டரின் கணவரிடமே உங்கள் மனைவி பற்றீ வரும் செய்தியைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டார்கள். அவர் அமைதியாக மறுத்தார்.

சிபிஐ விசாரணையில் பக்கத்துவீட்டுவேலைக்காரன் .. அப்பா வின் கீழ் வேலை செய்யும் கம்பவுண்டர் , மற்றும் கூட வேலை செய்த டாக்டரின் வீட்டு வேலைக்காரன் மூவரும் சேர்ந்து ஹேம்ராஜுடன் இரவு மதுஅருந்திவிட்டு இக்கொலைகளை நிகழ்த்தி இருக்க்கலாம் என்று இப்போதைய முடிவு. ஆதாரங்கள் இன்னமும் சிக்கவில்லை.. கன்பெஷன்களை கோர் ட் ஏற்றுக்கொள்வதில்லை .ஒரு மாதமாக சிறைவைக்கப்பட்ட தந்தை பெயிலில் வெளியே வந்திருக்கிறார்.

இதற்கிடையில் வெக்கம் மானம் இன்றி இந்த நாடகங்களை ஒளிபரப்பிய அதே தொலைகாட்சிகள் கேமிராவுடன் அந்த டாக்டரின் கணவரிடம் சென்றனர். முன்பு எழுதிய கதைகள் போல் நீங்களே எழுதிக்கொள்ளலாமே என்று மறுத்தது மட்டுமல்லாம் .. என் டி.டிவி மட்டும் என்னிடம் கேள்வி கேட்க தகுதி இருக்கிறது மற்ற தொலைகாட்சிகள் ஏதோ தாங்களே ஒரு இன்வெஷ்டிகேஷன் ரிப்போர்டராக மாறி நாடகங்களை நடத்தியே காட்டிய கேவலத்திற்கு திட்டி அனுப்பிவிட்டார்.

இத்தனை நடந்த பிறகும் ஊடகத்தார் மீண்டும் ஒரு பெண் மற்றும் நான்கு நண்பர்களை வைத்து மீண்டும் கொலை நடந்தது எப்படி யாக இருக்கலாம் என்று இன்றும் நாடகம் நடத்துகிறார்கள்.

48 comments:

மங்களூர் சிவா said...

/
இத்தனை நடந்த பிறகும் ஊடகத்தார் மீண்டும் ஒரு பெண் மற்றும் நான்கு நண்பர்களை வைத்து மீண்டும் கொலை நடந்தது எப்படி யாக இருக்கலாம் என்று இன்றும் நாடகம் நடத்துகிறார்கள்.
/

:(((
வெட்கப்பட வேண்டிய விஷயம்

கயல்விழி முத்துலெட்சுமி said...

ஒரு சினிமா எடுப்பதை விட அதிக கேர் எடுத்து செய்யராங்க சிவா அதான் தாங்கவே முடியல எனக்கு..
கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் பேரு மட்டும் தான் போடல.. அதுக்கு காலையில் இருந்து விளம்பரம் வேற..
இதுனால் பாதிக்கப்பட்ட எங்க ஊரு குழந்தைகள் பத்தி அடுத்த பாகமும் எழுதறேன்..

யட்சன்... said...

நானும் இந்த வழக்கினை தொடர்ந்து கவனித்து வருகிறேன். கொல்லப்பட்ட பெண்ணின் தாயார் NDTV யில் பேட்டியளித்ததில் இருந்துதான் பிற தொலைகாட்சிகள் இத்தகைய அசிங்கமான, அருவெறுப்பான ஏன் மலிவான வாதவிவாதங்களை முன்வைத்து அந்த குடும்பத்தார் மனோரீதியாக எந்த அளவிற்கு கேவலப்படுத்தமுடியுமோ அந்த அளவிற்கு கேவலப்படுத்தினர்.

கடந்த வெள்ளியன்று டாக்டர்.ராஜேஷ் தல்வாருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கிய செய்தியினை சொல்லும் போது கூட, டாக்டருக்கு ஏன் நார்க்கோ அனலிஸிஸ் செய்யவில்லை என்பதாய் கேள்வி எழுப்பி தங்கள் அரிப்பினை வெளிப்படையாகவே காட்டிக்கொண்டனர்.

மனித உரிமை இயக்கங்கள் எல்லாம் இந்த மாதிரியான தனிமனித தாக்குதல்கள் மீது என்ன செய்யப் போகின்றனர் என்பதுதான் இப்போதைய கேள்வி.

கயல்விழி முத்துலெட்சுமி said...

மனித உரிமை இயக்கங்கள்..எதாவது செய்யத்தான் வேண்டும்..
இத்தோடு.. உத்திரப்ரதேசப்போலிஸ் போன்றவர்களுக்கு மீடியாவிடம் என்ன சொல்லலாம் என்ன சொல்லக்கூடாது .. என்று ஒரு வகுப்பு நடத்தவேண்டும்..
சிபிஐ அதிகாரியின் ப்ரஸ் கான்ப்ரன்ஸ்க்கும்
போலிஸ் நடத்தியதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்..

rapp said...

//அவள் கேரக்டர் சரி இல்லை எனவே அவள் கொல்லப்பட வேண்டியவள் என்ற கருத்தை ஆணித்தரமாக சொல்ல விரும்பிய போலீஸுக்கு அரசியல் தலையீட்டால் முதல் அடி.//
இதுதான் மேடம் சரியான வாதம். மேலும் தொடர்ந்து பற்பல வழக்குகளை சந்தித்து வரும் காவல்துறை அதிகாரிகள் ஒரு குற்றத்தை பார்க்கும் போது அது இப்படி நடந்திருக்குமோ என்ற முன்யோசனையுடன் நடக்க ஆரம்பித்து முன் முடிவுக்கே சில சமயம் வந்துவிடுகின்றனர். அவர்களின் துறையும், அவர்களின் வாழ்க்கையும், அனுபவமும், போதிய சுதந்திரமின்மையும் காரணம் எனலாம். காவல்துறையை நாம் குறை சொல்ல முடியும், நக்கலடிக்க முடியும், இதோ இப்பொழுது தவறு செய்த பொழுது கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து தண்டனை வாங்கித்தர முடியும்.

ஆனால் எதனாலும் கரப்ட் ஆகக்கூடாத மீடியா செய்திகளை யார் முந்தித் தருவது என்ற போட்டியில் ஆரம்பித்து, கடைசியில் தாங்களே மாரல் போலீசிங் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். சில வழக்குகளில் அவர்கள் வெற்றியும் பெற்றமையால் தாங்கள் செய்வது தவறென்றே அவர்களுக்கு மறந்துவிடுகின்றது.
எனக்கு ஒரு விஷயம் புரிய மாட்டேன் என்கிறது, ஏன் இன்றைய சமூகமும், பயங்கர மாரல் போலீசிங் செய்யும் மீடியாக்களும் கூட 'சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்' என எதிர்பார்க்கிறது(இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் திருமணமானவரா என்பதிலேயே இரு வேறு கருத்துக்கள் உண்டு என்பதுதான்). அவ்வளவு ஏன், ஒரு பெண் செய்த தவறை வெச்சு சும்மா ஒரு விவாதம் நடக்குதுன்னு வெச்சுக்கங்களேன், அங்கிருக்கும் சமூக பிரதிநிதிகளில் முக்காவாசிப்பேர் ஆண்கள் அந்த தப்பை செய்தால் ஒத்துக்கொள்வீர்களா, அடா புடா என குதிக்கின்றனர், இதென்ன முட்டாள்தனமான வாதம் என்றால், நெருப்பென்றால் வாய் சுட்டு விடுமா என்கின்றனர். அடுத்து ஒரு ஆண் செய்யும் தவறின் வீரியத்தை உணர்த்தும் பொருட்டு பெண்களை வைத்து இதே ஒப்பீடு செய்தால், 'இதென்ன மட்டமான ஒப்பீடு, நல்லவைகளை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும், வாதத்திற்காக இப்படியா மட்டமாக பேசுவது' என்று குதறிஎடுத்து விடுகின்றனர். சரி மீடியா கூறியபடியே ஒரு பெண் இருக்கிராளென்று வைத்துக் கொள்வோம், அந்தப் பெண்ணை உடனே கொன்று விட வேண்டுமா? இவர்களுக்கும் தாலிபான்களுக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் தாங்களே செய்கிறார்கள், இவர்கள் சட்டத்தையே இவர்களின் தீர்ப்பின்படி செயல்பட வேண்டுமென்று எதிர்பார்த்து காய் நகுத்துகிறார்கள்.

இவர்களின் மேல் வழக்குத் தொடர்ந்தாலும், இவர்களுக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அரசியல்வாதிகளை விட புத்திசாலித்தனமாக தப்பித்து விடுகின்றனர்

ராமலக்ஷ்மி said...

நடப்பதை நாட்டுக்குத் தெரியப் படுத்த வேண்டிய ஊடகங்கள் கடும் போட்டி நிலவும் இத்துறையில் தம் வெற்றிக்காகத் தார்மீகப் பொறுப்பை மறந்து செயல் படுவது வேதனைக்குரியது. கண்டிக்கத் தக்கது.

கயல்விழி முத்துலெட்சுமி said...

\\rapp said... எனக்கு ஒரு விஷயம் புரிய மாட்டேன் என்கிறது,//
உங்களுக்கு மட்டுமில்ல இங்க நிறையபேருக்கு இது புரியாமதான் இருக்கோம்..
என்ன சொன்னாலும் அத பூமாராங் மாதிரி நமக்கே திருப்பிவிட்டு கேள்வி கேக்காதேன்னு சொல்லுவாங்க..

கயல்விழி முத்துலெட்சுமி said...

ராமலக்ஷ்மி ஆமாங்க..நானா நீயா போட்டியில் வேகமா செய்திய குடுக்கலாம் ஆனா செய்தி யின் ஒரு பொறியவச்சு இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம்ன்னு சொல்றது எந்த விதத்தில் நியாயம்.. நாம் போய் பார்க்கமுடியாத விசயத்துக்குத்தான் மீடியாவை நம்பறோம் ஆனா அவங்களும் ஊகங்களை செய்தியாக்கினா எதுக்கு பாக்கனும் அதை.. :(

அபி அப்பா said...

நல்லா இருக்கு பதிவு, ஆனாலும் நம்ம ஊரிலே டெல்லி பெண் தேவி செத்து போனதும், போன விதமும் கூட கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் இல்லியா??

கயல்விழி முத்துலெட்சுமி said...

ஆமாங்க அபி அப்பா.. அந்த் பொன்ணு தேவிய அவங்கப்பா படிக்கவெ வச்சிருக்கக்கூடாது அப்படியே படிச்சாலும் நாலு பசங்க படிக்கற நம்ம காலேஜில் படிக்கவைச்சிருக்கக்கூடாது..அப்படியே படிச்சாலும் அந்த பிள்ளை ஒரு பையனை நம்பி நட்பு வச்சிருந்திருக்ககூடாது .. அப்படியே நட்புவச்சிருந்தாலும் அவன் அறை வரைக்கும் போய் பேசி இருக்கவே கூடாது.. ஆம்பளைங்கன்னா அப்படித்தான் அடிச்சுக்கொல்வாங்க.. தெரியவேண்டாம் இந்த புள்ளைக்கு..

rapp said...

முத்து, எனக்கு அந்த தேவி கொலை செய்தி பத்தி தெரியல, என்டிடிவிலையும், ஐபிஎன் லைவ்லையும் பார்த்தேன், அதிலையும் காணோம், கொஞ்சம் அது பத்தின ஆர்ட்டிகல இல்ல என்ன நடந்ததுன்னு சொல்ல முடியுமா

கயல்விழி முத்துலெட்சுமி said...

ராப் அது வேண்டாம் இதுக்கு சம்பந்தமில்லாதது.. உங்களுக்கு தனியா சொல்றேன்.. மேலே அண்ட்ர்லைன் செய்யப்பட்ட வரிகள் தான்.. இப்படி இருந்தா இப்படித்தான் வகைதான் ..

கோபிநாத் said...

\\"ஒரு ஊடகத்தின் வெற்றி எதில் இருக்கிறது?"\\

பணம்...புகழ்...நம்பர்களில் ;(

Thekkikattan|தெகா said...

இந்த மீடியாக்களுக்கு வேண்டியது பார்வையாளர்கள்
அதுக்காக எந்த எக்ஸ்ட்ரீம் வேணாலும் போவாய்ங்க. எவன் குடும்பம் எதத் தூக்கி சுமந்தா அவனுக்கென்னா, அவனுக்கு வேண்டியது அவன் பொழப்பு.

இது எல்லா ஊரிலும் நடக்குற கதைதானுங்க. அதிலும் குறிப்ப இப்ப தனியார் தொலைகாட்சிகள் பெருகிப் போனதாலே போட்டிப் போட்டுக்கிட்டு அவன்னவன் கற்பனைத் திறனை கதை ஜோடிக்கிறதில காமிச்சு இறங்கிடுறாங்க.

கேவலமான நடைமுறை :-(.

கயல்விழி முத்துலெட்சுமி said...

கோபி சரியாச்சொன்னீங்க.. இன்னைக்கு ரேட்டுக்கு எது முன்னிலை என்று ரேட்டிங்க் க்காக நடக்கும் வேலை ..

கயல்விழி முத்துலெட்சுமி said...

தெக்கிக்காட்டான் சிறிது நேரம் முன்பு நடந்த வீ த பீப்பிள் நடத்திய நிகழ்ச்சியில் பர்காதத் மீடியாக்கள் சமீபகாலமாக சிலபல கேஸ்களில் சரியான பாதையை அடைய பெரியமனிதர்களுக்கு எதிராக எளியவர்கள் போராட உதவியாக இருந்ததை எடுத்துக்காட்டினார்கள்.. அப்படியாக அவர்கள் செய்தது அவர்களை தாங்களே ஹீரோக்களாக நினைத்துக்கொண்டு தங்கள் பவரை தவறாக உபயோகிக்க வைத்துவிட்டது என்று எதிர்தரப்புவாதம். பட் ரீ கன்ஸ்ட்ரக்ஷன் என்ற பேரில் நடத்தும் கேவலநாடகங்கள் தான் தவறு என்று ஒத்துக்கொள்ள சில சேனல்கள் மறுக்கின்றன.

சென்ஷி said...

மிகக்கேவலமான செயல் :(

ஊடகத்தின் வெற்றி என்பது அது வெளிச்சமிடும் உண்மைகளில் மட்டுமே இருக்க முடியும்.

இப்படிக்கூட நடந்திருக்கலாமோ என்ற கருத்துக்கணிப்புகள் தடை நீங்கிப்போய் இப்படித்தான் இருக்கும் என்று நாடகம் நடத்திக்காண்பிப்பது கொடூரம் :(

டயானா மரணத்தின் சமயம் குமுதம் கேள்விபதில் பகுதியில் வந்த ஒரு விபரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கேள்வி: டயானா மரணத்திற்கு உங்கள் ஜாதி (பத்திரிகையாளர்கள்) தானே காரணம்?

பதில்: அரசு தன் விரலை பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். அவரிடம் திருமதி. அரசு.

திருமதி அரசு: "என்னாச்சு.."

திரு அரசு: "விரல் நகத்துல டயானாவோட ரத்தம்"

திரு அரசு: இவங்க மட்டும் காரணமில்லையா?

திருமதி அரசு: யாரு.?

திரு. அரசு: செய்தியை உடனுக்குடனே தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுற ஜனங்களுக்கு..
===
உண்மை நிலவரம் இதுதான். நல்ல விசயங்கள் எவ்வளவோ இருக்க இன்னும் தமிழ்முரசும், தினகரனும் மற்றும் இதர எல்லா பத்திரிகைகளும் பரபரப்பு செய்திகளை கூறி பத்திரிகையை விற்பது மக்கள் மேல் இருக்கும் நம்பிக்கையால் மட்டுமே :(

தமிழன்... said...

ஊடகங்களின் பொறுப்பற்ற செயல்கள் எல்லா இடங்களிலுமே இருக்கிறது

தமிழன்... said...

மாற்றப்பட வேண்டிய விடயம்...!

கயல்விழி முத்துலெட்சுமி said...

சென்ஷி ரொம்ப நல்ல உதாரணம்..
இன்னைகு ஒருத்தர் சொன்னார்..நான் தப்பு செய்தேன்னு ஒத்துக்கிறது உங்க பலவீனம் இல்ல பலம்ன்னு ..இதுல இருந்து இனி தப்பு செய்யாம இருக்க ஒரு முடிவு எடுக்கறது உங்க மீடியாக்குதானே பலம்ன்னு..

கயல்விழி முத்துலெட்சுமி said...

ஆமாம் தமிழன் உலகமெங்கும் நடக்கிறது தான்.. ஆனால் மனிதனின் கொடூரமனான் வியாபர உத்திகளின் போக்கு மாறாது இன்னும் இன்னும் மோசமாகிக்கிட்டே தான் போய்க்கொண்டிருக்கிறது.

தமிழ் பிரியன் said...

அருவருக்கத்தக்க செயல்களை சில பரபரப்பு சேனல்கள் செய்கின்றன. இதன் மூலம் பாதிக்கப்படுபவர்களைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. அவர்களுக்கு பணமும், பரபரப்பும் தான் முக்கியம்... :((

நிஜமா நல்லவன் said...

உண்மையோ பொய்யோ பரபரப்பான செய்திகளில் தான் இருக்கிறது!

பிரேம்குமார் said...

ஊடகங்கள் செய்தியை செய்தியாய் பார்க்காமல் உணர்ச்சிப்பூர்வமான விசயங்களாக பார்க்க ஆரம்பித்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. அது தான் மொத்த பிரச்சனைக்கும் காரணம்.

They just want to give sensational news, rather than the actual news

கயல்விழி முத்துலெட்சுமி said...

தமிழ்பிரியன் , நிஜம்மா நல்லவன்.. ப்ரேம்குமார்.. நீங்க சொல்வது ரொம்ப சரி. உண்மை செய்திய தரத விட்டு கிசுகிசுக்களை ஊகங்களை செய்தியா தராங்க..

babu said...

investigative journalism என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்திற்கு அளவே இல்லை
இவர்கள் எல்லோரும் ஏதோ உலக மகா புத்திசாலிகள் போலவும் மற்றவர்கள் எல்லோரையும் மடையர்கள் என்றும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.
இதில் ndtv,ibn,timesnow எந்த வேறுபாடும் இல்லை

babu said...

சமீபமாக ஒரு பத்திரிக்கையில் படித்தேன்,இது நாள் வரை சகஜமாக இருந்த ஒரு பெண் குழந்தை இப்போது தன் தந்தையிடமிருந்து விலகி செல்கிறது. எல்லாம் ,இந்த ஆருஷி கொலை சம்பந்தமாக தினம் T.V பார்த்தால் வந்த வினை
தற்போது மனோதத்துவ மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறாளாம்

குசும்பன் said...

மீடியா என்றால் நம்மை கேள்வி கேட்க ஆளே இல்லை என்று திமிரை சிலருக்கு ஏற்படுத்திவிடுகிறது அதன் விளைவுதான் இது.

பரிசல்காரன் said...

அருமைங்கக்கா!

ஏற்கனவே இந்த கேஸ்ல மீடியாகாரங்க பண்ற கூத்தைப் பார்த்து கடுப்பயிருந்தேன்.. சாட்டையடியா அடப் பதிஞ்சிருக்கீங்க!

இப்போதான் வெட்டியாபீசரோட பதிவைப் பார்த்தேன்.. என்ன எல்லாரும் இன்னைக்கு இவ்ளோ சீரியஸா எழுத ஆரம்பிச்சுட்டீங்க? ஒருவேளை கோவைப் பதிவுல நடந்ததோட விளைவோ?

{கயலக்கா, முன்னாடி வெட்டியாபீசர்கிட்ட ஒரு வரிதானா'ன்னு கேட்டிருந்தீங்கள்ல.. பாருங்க.. போட்டுத் தாக்கீட்டாங்க!)

கயல்விழி முத்துலெட்சுமி said...

பரிசல்காரரரே நேத்தே எழுதிப்போட்டுட்டனே.. அப்ப நாங்க செய்யப்பொறதை பத்தி எப்படியோ தெரிஞ்சுக்கிட்டு நீங்க தான் பேசி இருக்கீங்க.. :))

VIKNESHWARAN said...

வருத்தமான விடயம்தான்.. :(

துளசி கோபால் said...

எல்லா நாட்டுலேயும் ஊடகங்கள் இப்படித்தான் அலையுது. ஆனா நம்ம நாட்டுலே மசாலாவைக் கொஞ்சம் கூடவே போட்டுருவாங்க.
நமக்குத்தான் ஸ்பைஸஸ் இல்லாம வாழவே முடியாதே.

தில்லிக்கூத்தை கோபாலும் சொல்லி வருத்தப்பட்டார். இப்ப அங்கேதான் இருக்கார்.

உங்களையெல்லாம் சந்திச்ச பிறகு இது நாலாவது விஸிட்.

மோகன் கந்தசாமி said...

சி.என்.என் - ஐ.பி.என். மாதிரி அல்பம் இந்திய ஊடகத்துறைக்கு ஒரு சாபக்கேடு. ராஜ்தீப் தலைமையில் இப்படித்தான் இருக்கும்.

கயல்விழி முத்துலெட்சுமி said...

விக்னேஷ்வரன் .. இந்த வருத்தமான விசயம் தொடர்ந்து கொண்டே இருப்பது தான் கவலை
-------------------
துளசி அவருக்கென்னா உலகம் சுற்றும் வாலிபர்.. :)
ஆமாம் நம்ம ஊருக்காரங்களுக்கு மசாலா அதுவும் அடுத்த வீட்டு மசாலான்னா ரொம்ப பிடிக்கும்..

--------------
மோகன்.. ராஜ்தீப்புன்னு இல்ல சி என் என் ஐபின் ன்னு இல்லங்க.. எல்லாரும் செய்யராங்க..இந்த கேஸை பொறுத்தவரை இண்டியா டிவி அடித்த கொட்டம் அதிகம்..

மோகன் கந்தசாமி said...

இந்த விஷயத்தில ஊடகம் முழுமையும் மோசமாக நடந்து கொண்டு தான் வந்திருக்கின்றன. ஆனால் சி.என்.என்-ஐ.பி.என் -ல தான் தலையிலருந்து வால் வரைக்கும் எல்லாம் பரபரப்புக்காக வேண்டி கூத்தடிக்கறாங்க. யாரையும் மதிக்கறது கெடையாது. இருட்டடிப்புன்னா சன் டிவி பல மடங்கு தேவலாம். அதிலும் சென்னை ரிப்போர்டர் ஒரு பத்தாம் பசலி. இவனுங்கல்லாம் சேனல் ஆரம்பிக்கலைன்னு எவன் அழுதான்?

சாரி, பதிவுக்கு சம்பந்தம் இல்லாத பின்னூட்டமிட்டதற்கு.

ஆரிஷி மேட்டர்ல சி.என்.என் போட்ட ஆட்டம் அவர்கள் சென்ஷேஷனலிசம் இன் ஜர்ணலிசத்துக்கு மற்றொரு எடுத்துக்காட்டு.

கண்மணி said...

முத்து நீங்கள் சொல்வது 200%சரி.முன்பு செய்திகளை முந்தித் தருவதில் போட்டி இருந்தது.இப்போது அதை சுவாரஸ்மாக யார் தருகிறார்கள் என்பதில் போட்டி நிலவுகிறது.இப்பெல்லாம் மக்களும் வெறுமனே நியூஸ் தந்தால் படிப்பதில்லை.அதன் பின்னணியை 'வேட்டையபுரம்' எபக்ட்டோடு தரும் பத்திரிக்கையை விரும்பிப் படிப்பதும் ஒரு காரணம்.பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளும் அதற்குத் தகுந்தாற் போல திரித்து சர்க்குலேஷனையும் டி.ஆர்.பி ரேட்டிங்கையும் ஏற்றிக் கொள்ள முனைகின்றனர்.
நாளிதழ் என்றால் நம்பிக்கை என்பதெல்லாம் மலையேறிவிட்டது.
வார மாத அரசியல் இதழ்கள் அடிக்கும் கூத்து சொல்லவே வேண்டாம்.
இதில் கொஞ்சமேனும் எங்களுடைய அனுபவமும் உண்டு என்பதாலேயே மிக உணர்ந்து சொல்கிறேன்.
எங்கள் சம்மந்தப்பட்ட சில செய்திகள் திரிக்கப் பட்டு மிகைப் படுத்தப் பட்டு தவறாக வந்த போது அப்படியொரு கோபம் வந்தது.சரி இவங்க பொழப்பு இதுதான் பொழைச்சிப் போகட்டும் னு விட்டுட்டோம்.கொடுமை என்னன்னா பாரம்பரியம் மிக்க பத்திரிகைகளே இப்படி எழுதுகின்றன.இதில் [உண்மைக்குப் புறம்பான செய்திகளிலும்/ஊகங்களிலும்]தனிப்பட்டி நிருபர்களின் பங்கும் உண்டு.

துளசி கோபால் said...

well said Kanmani.

ARIVAKAM said...

பத்திரிக்கை என்பது ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பார்கள். பத்திரிக்கைகள் பல கோணங்களில் செய்திகளை அலசும்போதுதான் உண்மை முமுமையாக வெளிகொணரப்படும். அதில் இடையில் வரும் சருக்கல்களை ஒதுக்கிவிட்டு இறுதி உண்மையை ஏற்பது தான் நல்ல வாசகரின் இலக்கணம். இன்றைய செய்திதாள் நாளைய செத்த தாள். அதே போல தான் செய்திகளும். உங்களுடனான அறிமுகத்தில் மிகுந்த மகிழ்ச்சி.

ambi said...

CNN, ND TV இத ரெண்டையும் நான் பாக்கறதே இல்லை.

நம்மூர் காரங்க எல்லாம் டான்ஸ்ல மும்மரமா இருக்காக. :))

rapp said...

//சி.என்.என் - ஐ.பி.என். மாதிரி அல்பம் இந்திய ஊடகத்துறைக்கு ஒரு சாபக்கேடு. ராஜ்தீப் தலைமையில் இப்படித்தான் இருக்கும்//
இதுல அவங்களையே தூக்கி சில ஹிந்தி சானல்கள் சாப்பிட்டதா என் பிரண்டு ஸ்வேதா சொன்னாள். ஒரு டிவியில், 'ஒரு படிச்ச பல் டாக்டர் பொண்ணு இறந்து போனா இப்படியா அநாகரீகமா நெஞ்சுல அடிச்சிகிட்டு அழுவாரு, அவர் பயத்துல ஓவர் ஆக்டிங் பண்றாரு, அதே அவங்கம்மா சரியா அழல, ஏன்னா அவங்களுக்கு குற்ற உணர்ச்சி', இப்படியெல்லாம் அவ்வளவு கேவலமா விமர்சனம் பண்ணி செய்தி பிரிவிலயே(அதாவது நியூஸ்லயே) சொன்னாங்களாம் தெரியுமா மோகன். சிஎன்என் ஐபிஎன் லைவ், என்டிடிவியோட போட்டி போடறத என்னைக்கோ நிறுத்திக்கிட்டாங்கன்னு நினைக்கறேன். இப்போ அவங்களோட போட்டி மற்ற அனைத்து சேனல்களுடன் தான்னு நினைக்கிறேன்.

rapp said...

முத்து நானும் இந்த பதிவிற்கு சம்பந்தம் இல்லாமப் போட்ட பின்னூட்டத்துக்கு வருத்தம் தெரிவிச்சிக்கறேன்

கயல்விழி முத்துலெட்சுமி said...

அறிவகம் என்னங்க சொல்றீங்க? நாலு கோணத்தில் அலசும் போது நல்லது எது கெட்டது எதுன்னு கடைசியில் அறிஞ்சுக்கமுடியும்ன்னா..இப்ப மேலே சொன்ன கேஸை எடுத்துங்க. . அலசும் போது ஏற்பட்ட அந்த குடும்பத்தின் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள் மேலே காட்டப்பட்ட அநீதி க்கு பதில் எங்கே? இறந்து போன அந்த பெண்ணின் மேல் சுமத்தப்பட்ட குணக்கேடானவள் என்ற பழியை எப்படி அழிப்பீங்க? அதனால் தினமும் ஒவ்வொரு வீட்டு குழந்தைகளும் தூங்காமல் இருந்த நிலைக்கு என்ன பதில்?

உண்மையை வெளிப்படுத்ததான் ஊடகமே தவிர தாங்களே ஒரு துப்பரிவாளர்களாக மாறுவதும்.. அதனை உண்மையைப்போல காட்டுவதுமான போக்கைத்தான் கண்டிக்கிறோம்..

கயல்விழி முத்துலெட்சுமி said...

அம்பி ... பெண்கள் ஆடுவது பற்றியதான இங்க உள்ளவர்களின் விமர்சனம் கூட ஒருதலைபட்சமானதுன்னு தான் சொல்வேன்..நார்த்ல நடனம் வாழ்வில் ஒரு அங்கம் மாதிரி.. நம்ம ஊருல ஆண்களுக்குமட்டுமான நடனப்போட்டிகள் நடந்த போது அது பெரியவிசயாமாத் தெரியல.. இப்ப குய்யோ முறையோன்னு கத்தறாங்க.நடிகைகள் வந்து நடுவர்களா இருப்பதால கொஞ்சம் இப்படி இருக்கு.. நல்லதா அதே நிகழ்ச்சிகளை இந்தி தொலைக்காட்சிகளின் பூகி வூகி மாதிரி நடத்தினால் நலம்.

விஜய் said...

தலைநகர் டெல்லியில் நடந்த கொலையும் அது தொடர்பான செய்திகளை மர்மக் கதை மன்னர்கள் போல் கற்பனைசெய்து விளம்பரம் தேடி கொண்ட ஊடகங்களின் போக்கு கண்டிக்கதக்கது.

தங்களின் பதிவும் பின்னுட்டங்களும் அவ்ர்கள் கண்ணய் திறந்தால் வரும் தலைமுறையாவது நிம்மதி அடையும்.

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

கயல்விழி said...

ஊடக விபசாரம் என்பது இது தான் போலிருக்கிறது.

இப்படிப்பட்ட ஊடக விபசாரிகள் தொடர்ந்து பெண்களையே டார்கெட் பண்ணி வருகிறார்கள். உதாரணமாக செரீனா, ஜெயலஷ்மி, ஜீவஜோதி, பத்மலக்ஷ்மி போன்ற பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை மீடியாக்களால் குதறியெடுக்கப்பட்டது. ஆண்களின் வாழ்க்கை இந்த அளவுக்கு விமர்சனம் செய்யப்படுவதில்லை.

uma kumar said...

இப்போது எல்லாத்துலேயும் செக்ஸ் ,த்ரில் இருக்கணும்.ஆனாலும் ,இப்படி குடும்பங்களை நார் நாராக பிரித்து எடுப்பது கொடுமை.
இதுல லேட்டஸ்ட் நேபால் அரசு ,குற்றவாளிக்கு ஆதரவாப்பேசறது?

ஆண்களின் கற்பு என்றும் சர்ச்சைக்கு அப்பாற்பட்டது.அப்படி ஒன்றும் இல்லை.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

விஜய் என் பதிவில் எழுதி எல்லாம் அவர்கள் மாறப்போகிறார்களா.. ?
---------------------
கயல்விழி உண்மைதான்.. அந்த பெயர்களை வைத்து காமெடி டிராக்குகள் கூட வைத்து காலத்துக்கு அழியாமல் செய்துவிடுவது தானே பழக்கம்.
------------------
உமா குமார்.. கதைகளை வாசிப்பது போல வாசிக்க செய்திகள் என்றால். இப்படித்தான்..

இசக்கிமுத்து said...

// ஆருஷி ஒரு நாள் தான் செத்தார். அவர் குடும்பத்தினர் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறார்கள் //

நிதர்சணமான உண்மை!!