January 20, 2009

இரயில் பயணங்களில்.....

இரயில் பயணங்கள் எப்பொழுதுமே ஒரு வித்தியாசமான அனுபவங்களைத்தருவது தான். அதுவும் தனித்துப் பயணிக்கும் பொழுது கவனித்துப்பார்ப்பது என்கிற வகைக்கு இருப்பதால் .. அதுதான் பேச்சுத்துணைக்கு ஆளில்லையே கவனித்துத்தான் ஆகவேண்டிய கட்டாயமாகிவிட்டதே... இன்னும் சுவாரசியமாகிவிடுகிறது.

புது அலைபேசியில் நண்பரைக்கொண்டு பாடல்களை ஏற்றிக்கொண்டு குடும்பத்தைக்காண ஆவலோடு செல்கிறார் ஒரு ஆர்மிக்காரர். சத்தத்தை குறைப்பதிலிருந்து பாடலைத் தேர்ந்தெடுப்பது வரை எல்லாமே அவர் அங்கே தான் முயன்று பார்க்கிறார். காலையில் ரயிலேறியதும் கேட்ட முதல் பாடல்.. அய்யய்யோ ...என் உசுருக்குள்ள உசுர வைச்சுத் தச்சானே... சரிதான் என்று, அன்று சகித்தாலும் அடுத்த நாளும் காலை 6.30 மணிக்கே சுப்ரபாதமாக ஒலித்தது அய்யய்யோ............ சிரிப்பை அடக்கி புன்னகைத்து அமர்ந்திருந்தேன்.

நடுநடுவே இல்லத்துக்கு அலைபேசியால் தொடர்பு கொண்டு .. அம்மா என்னம்மா செய்யற தோசை சுடறயா.. அதான் சத்தம் கேக்குது சரி பெரியது சாப்பிட்டுச்சா.. ம்.. சின்னவ மார்க் சொல்லலையே .. அவளைக்கூப்பிடு என்னம்மா அப்பா கஷ்டப்படறது தெரியாதா.. என்ன 200 க்கா ...இவ்வளவு தானா.. அப்ப இரு .. ம்.. 75% வாங்கினா எப்படி.. போனவாட்டி 95 % எடுத்தியே கணக்குல.. ம் சரி அம்மாட்ட குடு.. என்று குடும்பத்தில் ஒருவராய் ஒவ்வொரு நிகழ்விலும் இருக்க முயன்ற கள்ளமில்லா தந்தையின் அன்பு கண்டு கனிந்திருந்தேன்.

இன்னொரு ஆர்மிக்காரர் ..அடுத்த கேபினில் இருந்தாலும் சத்தமென்னவோ இங்கும் வருகிறது. என்னப்பா கராத்தே மாஸ்டரா அழைச்சுட்டுப் போறாரு போயிட்டுவாப்பா அம்மாட்ட நான் சொல்றேன்ப்பா.. இங்கபாருங்க அவங்களும் உன் நல்லதுக்குத்தான் சொல்றாங்க.. பணம் எல்லாம் கொண்டுபோய் தனியா தங்கின்னு பயம்தானங்க.. சரி நீ போயிட்டுவா பணம் தர சொல்றேன்.. இது ஒரு வாய்ப்பா இருக்கட்டுமே பழகிக்குங்க.. உங்க நண்பர் யாருங்க க்ளோஸ் ? சரிங்க அவருகிட்ட நீங்க விளையாடையில சாவி குடுத்துவைங்க.. அவங்க விளையாடையில் நீங்க கவனிச்சுக்குங்க.. அப்பறம் பாருங்க மாஸ்ட்ர் சொன்னாருன்னு ரொம்ப ரிஸ்கான வேலையெல்லாம் செய்து உடம்பை படுத்திக்கவேணாம்.. சும்மா பிக்னிக் மாதிரி போயிட்டுவாங்க சரிங்களா..
இது வேறு வகையான தந்தையின் பாசம்.

தொண்டை வலியால் சென்னை பயணியர் தங்கும் விடுதியிலும் சற்றே செவிசாய்த்திருந்தேன். என்னைவிட பெரிய ப்ரசங்கியான பணி போலிஸ் அம்மணி தன் சோகத்தை எல்லாம் என்னிடம் இறக்கி வைத்தார். பெண்கள் அந்த துறையில் படும் அவஸ்தையும் , மேலிடத்தின் அதட்டல்களும், குடும்பத்தில் கணவரும் மனைவியும் வேறு வேறு இடத்தில் பணி அமர்த்தப்படுதலும் அதனால் குழந்தையின்மையும் ... சாலைப்பாதுக்காப்புக்கு போட்டால் மூச்சுகோளாறுகளும்.. ரயில்வே அதிகாரிகள் அங்கேயே காவலுக்கு இருப்பவர்களை பொருட்டின்றி நடத்துவதாகவும் ... மக்களின் கேள்விக்கு பதில் பேசியே சில நாள் தொண்டை உலருவதையும்.. ஆகா வாழ்நாளில் நான் அதிகம் என் வகுப்பறைக்கு பி ன் அங்கே தான் வாய் மூடி கவனித்திருப்பேன். கடினம் தான் அவங்க வாழ்க்கை.

எந்த ரயில் எந்த தடத்தில் வரும் என்பதையெல்லாம் காவலதிகாரியிடம் கேட்டுவிட்டு இது தெரியாமயா தொப்பிப்போட்டுக்கிட்டு நிக்கிறன்னு சிலர் திட்டுவார்களாம்.. கேட்டப்போ எனக்கு சிரிப்பா வந்தது .. சிரிக்கமுடியுமா ஆனா... :) செக்கிங்க் நடக்கையில் வெளியே பாதை வழியாக உள்ளே செல்பவர்களை தடுப்பது போன்ற கொடுமை வேறதும் இல்லையாம். மக்கள் எப்படி எல்லாம் நடந்துக்கிறாங்க பாருங்க....

"சும்மா இரு" என்று சுலபமாக சொல்லியிருக்கிறார்கள். சும்மா இருப்பதைப்போல பெரிய கஷ்டம் வேறெதுவும் இல்லை. இந்த பயணத்தில் பெரும்பகுதியை சும்மாவே இருந்து பார்த்து இதை தெரிந்து கொண்டேன்.

19 comments:

அபி அப்பா said...

1

ஆயில்யன் said...

//இன்னொரு ஆர்மிக்காரர் ..அடுத்த கேபினில் இருந்தாலும் சத்தமென்னவோ இங்கும் வருகிறது. என்னப்பா கராத்தே மாஸ்டரா அழைச்சுட்டுப் போறாரு போயிட்டுவாப்பா அம்மாட்ட நான் சொல்றேன்ப்பா.. இங்கபாருங்க அவங்களும் உன் நல்லதுக்குத்தான் சொல்றாங்க.. பணம் எல்லாம் கொண்டுபோய் தனியா தங்கின்னு பயம்தானங்க.. சரி நீ போயிட்டுவா பணம் தர சொல்றேன்.. இது ஒரு வாய்ப்பா இருக்கட்டுமே பழகிக்குங்க.. உங்க நண்பர் யாருங்க க்ளோஸ் ? சரிங்க அவருகிட்ட நீங்க விளையாடையில சாவி குடுத்துவைங்க.. அவங்க விளையாடையில் நீங்க கவனிச்சுக்குங்க.. அப்பறம் பாருங்க மாஸ்ட்ர் சொன்னாருன்னு ரொம்ப ரிஸ்கான வேலையெல்லாம் செய்து உடம்பை படுத்திக்கவேணாம்.. சும்மா பிக்னிக் மாதிரி போயிட்டுவாங்க சரிங்களா..
இது வேறு வகையான தந்தையின் பாசம்.
//

பயணத்தில் இது போன்ற அனுபவங்கள் பார்த்ததுண்டு ஆனால்

அதை அப்படியே திரும்ப ரிப்பிட்டேய்ய்ய்ய் பண்ணி இப்பத்தான் அக்கா பாக்குறேன்!

சூப்பரூ!

அபி அப்பா said...

appaadaa "me the first"nnu pootankaatilum yaravathu vanthudurangka, athaan 1 potteen:-))

ஆயில்யன் said...

//தொண்டை வலியால் சென்னை பயணியர் தங்கும் விடுதியிலும் சற்றே செவிசாய்த்திருந்தேன்.//

நம்பிட்டோம் !

நம்பிட்டோம்!
(இதை வேற அப்பப்ப சொல்றீங்க அக்கா இப்ப தேவலாமா?!)

:)))

ஆயில்யன் said...

//எந்த ரயில் எந்த தடத்தில் வரும் என்பதையெல்லாம் காவலதிகாரியிடம் கேட்டுவிட்டு இது தெரியாமயா தொப்பிப்போட்டுக்கிட்டு நிக்கிறன்னு சிலர் திட்டுவார்களாம்.. ///


:(((((

ஆயில்யன் said...

//சும்மா இரு" என்று சுலபமாக சொல்லியிருக்கிறார்கள். சும்மா இருப்பதைப்போல பெரிய கஷ்டம் வேறெதுவும் இல்லை. இந்த பயணத்தில் பெரும்பகுதியை சும்மாவே இருந்து பார்த்து இதை தெரிந்து கொண்டேன்.//


சூப்பரேய்ய்ய்ய்ய்ய்! :)

எதாச்சும் ஒரு லைன் இருக்குமேன்னு நினைச்சேன் இருக்கு!

:)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ராமலக்ஷ்மி has left a new comment on your post "இரயில் பயணங்களில்....":

//கடினம் தான் அவங்க வாழ்க்கை.//

உண்மைதான். பக்கத்தில் போய் பார்க்கையில்தான் ஒவ்வொருவர் வாழ்விலும் உள்ள துக்கங்கள் புரிய வருகின்றன.

//..என்று குடும்பத்தில் ஒருவராய் ஒவ்வொரு நிகழ்விலும் இருக்க முயன்ற கள்ளமில்லா தந்தையின் அன்பு கண்டு கனிந்திருந்தேன்.//

நீங்க சும்மா இருந்தாலும் உங்க மனம் சும்மா இல்லாமல் உன்னிப்பாக எல்லாவற்றையும் கவனித்திருப்பது புரிகிறது. பதிவு அருமை. சும்மா பேச்சுக்கு சொல்லலை, நம்புங்கப்பா!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அபி அப்பா ... இந்த பதிவை இரண்டு த்டவை போட்டேன்.. முதல்ல விழுந்த பதிவில் ராமலக்ஷ்மி பின்னூட்டம் போட்டிருந்தாங்க.. நீங்க இது ல :))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

இப்ப ஓகே ஆகிடுச்சு ஆயில்யன்... :)
இன்னும் பல பல கேரக்டர் ஒவ்வொன்னும் ஒரு ரகங்கள்.. பெர்த் மடிச்சுப்போடு நான் உக்காந்து தான் வருவேன்னு ... செகண்ட் ஏசியில் ...அடம்பிடிச்சு பகலில் தூங்கினாகேடுன்னு லெக்சர் அடிச்ச ஒரு கேரக்டர் கூட உண்டு.. நல்லவேளை அவர் எனக்கு எதிர்த்த பெர்த்.. நான் நல்லா வேணும்ன்னே சாய்ந்து இழுத்து மூடி தூங்கினேன் அவருக்காகவே.. அவரு சொன்னதை சபரி தான் அடிக்கடி ரிப்பீட்டே போட்டிட்டிருந்தான் .. நல்லவேளை அவரு ப்ரஷ் செய்யபோனப்ப.. அதுக்குள்ள அவனை ப்ரயின் வாஷ் செய்துட்டேன்..

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ராமலக்ஷ்மி அதாங்க சொல்றேன் சும்மா இருக்கமுடியலயேன்னு.. கவனம் சிதறி ..அடுத்தவங்க பேச்சையெல்லாம் கேட்டுட்டு இருக்கேனே தவிர சும்மா இருக்க இயலலையே.. :(

புதுகைத் தென்றல் said...

பதிவை படிச்சு பின்னூட்டம் போடலாம்னு உங்க பிளாக்குக்குல்ல நுழைஞ்ச்சேன் அயித்தான் வந்திட்டாக

டீ போடணும்.

அப்பாலிக்கா வந்து படிக்கறேன்.

இப்ப அட்டெண்டென்ஸ் போட்டுக்கோங்க.

கபீஷ் said...

//"சும்மா இரு" என்று சுலபமாக சொல்லியிருக்கிறார்கள். சும்மா இருப்பதைப்போல பெரிய கஷ்டம் வேறெதுவும் இல்லை.//


ஆமாங்க. மனசை சும்மா வைக்கத் தெரியறது பெரிய கலை:-)

சென்ஷி said...

நானும் நிறைய்ய தடவை டிரெய்ன்ல வரும்போது கவனிச்ச சில விசயங்களை எழுதணும்னு ஆசைப்படுவதுண்டு.. எப்பவுமே நடந்ததில்லை.. ரொம்ப நல்லா கவனிச்சு எழுதியிருக்கீங்க..

அதுவும் அந்த அய்யய்யோ... சூப்பர் :))

ஆயில்யன் said...

//புதுகைத் தென்றல் said...
பதிவை படிச்சு பின்னூட்டம் போடலாம்னு உங்க பிளாக்குக்குல்ல நுழைஞ்ச்சேன் அயித்தான் வந்திட்டாக

டீ போடணும்.
//

நான் நம்பிட்டேன் பாஸ்!

ஆயில்யன் said...

//சென்ஷி said...
நானும் நிறைய்ய தடவை டிரெய்ன்ல வரும்போது கவனிச்ச சில விசயங்களை எழுதணும்னு ஆசைப்படுவதுண்டு.. எப்பவுமே நடந்ததில்லை.. ரொம்ப நல்லா கவனிச்சு எழுதியிருக்கீங்க..

அதுவும் அந்த அய்யய்யோ... சூப்பர் :))
//

மறுக்கா சொல்லேய்ய்ய்ய்ய்ய்!

கோபிநாத் said...

\\சென்ஷி said...
நானும் நிறைய்ய தடவை டிரெய்ன்ல வரும்போது கவனிச்ச சில விசயங்களை எழுதணும்னு ஆசைப்படுவதுண்டு.. எப்பவுமே நடந்ததில்லை.. ரொம்ப நல்லா கவனிச்சு எழுதியிருக்கீங்க..

அதுவும் அந்த அய்யய்யோ... சூப்பர் :))
\\

வேற வழி தெரியல...ரீப்பிட்டேய் ;))

அமுதா said...

/*இரயில் பயணங்கள் எப்பொழுதுமே ஒரு வித்தியாசமான அனுபவங்களைத்தருவது தான். அதுவும் தனித்துப் பயணிக்கும் பொழுது கவனித்துப்பார்ப்பது என்கிற வகைக்கு இருப்பதால் .. அதுதான் பேச்சுத்துணைக்கு ஆளில்லையே கவனித்துத்தான் ஆகவேண்டிய கட்டாயமாகிவிட்டதே... இன்னும் சுவாரசியமாகிவிடுகிறது.*/
சுவாரசியம் தான். சுவாரசியமாகவும் சொல்லி உள்ளீர்கள்

குடுகுடுப்பை said...

தொண்டை வலியால் சென்னை பயணியர் தங்கும் விடுதியிலும் சற்றே செவிசாய்த்திருந்தேன். என்னைவிட பெரிய ப்ரசங்கியான பணி போலிஸ் அம்மணி தன் சோகத்தை எல்லாம் என்னிடம் இறக்கி வைத்தார். பெண்கள் அந்த துறையில் படும் அவஸ்தையும் , மேலிடத்தின் அதட்டல்களும், குடும்பத்தில் கணவரும் மனைவியும் வேறு வேறு இடத்தில் பணி அமர்த்தப்படுதலும் அதனால் குழந்தையின்மையும் ... சாலைப்பாதுக்காப்புக்கு போட்டால் மூச்சுகோளாறுகளும்.. ரயில்வே அதிகாரிகள் அங்கேயே காவலுக்கு இருப்பவர்களை பொருட்டின்றி நடத்துவதாகவும் ... மக்களின் கேள்விக்கு பதில் பேசியே சில நாள் தொண்டை உலருவதையும்.. ஆகா வாழ்நாளில் நான் அதிகம் என் வகுப்பறைக்கு பி ன் அங்கே தான் வாய் மூடி கவனித்திருப்பேன். கடினம் தான் அவங்க வாழ்க்கை.//

கடினமான வாழ்க்கைதான்,நானும் சும்மா மேயாம படிச்சேன்.

புதுகைத் தென்றல் said...

இப்பொழுதுதான் படிச்சேன்.

இரயில் பயணங்களில் கிடைக்கும் அனுபவம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.

தங்களின் அனுபவத்தை ரசிக்கும்படி அழகாகச்ச் சொல்லியிருக்கிறீங்க.

பாராட்டுக்கள்.