February 3, 2009

200 பதிவுகள் கடந்த சிறுமுயற்சி - திகில்காட்சிகள் நிறைந்தது

வழக்கம் போல என் டேஷ்போர்டில் கடைசியாக போட்ட போஸ்ட் 198 என்று காட்டிக்கொண்டிருக்க .. பதிவின் பக்கங்களில் 201 கூட்டுத்தொகை காட்டிக்கொண்டிருக்க எடிட் போஸ்ட் பக்கத்தில் சென்று ஷோ 300 போஸ்ட் என்றுப் போட்டுப்பார்த்தேன்.... 1-201 ஆஃப் 201 என்று காட்டியதால் குழம்பித் தெளிந்து நான் 200 பதிவுகள் கடந்துவிட்டதை தாமதமாகத் தெரிந்துகொண்டேன்.

இந்த குழப்பத்துக்கெல்லாம் காரணம் சிபியின் ஆவி நண்பர்களோ என்னவோ? முன்பு எப்போதோ டேஷ்போர்டிலிருந்த பின்னூட்டங்களை தின்ற ஆவிகள் இப்போது பதிவின் கணக்கையும் தின்றுருச்சு போல.. :) அவை இங்கேயே குடியிருக்கிறதோ..? ப்ளாக்கரின் கோஸ்டு வேலையும் இதில் இருக்கிறது.
இன்னமும் எனக்கு டேஷ்போர்டில் மாடரேட் செய்யவேண்டிய பின்னூட்டங்கள் காட்டப்படுவதில்ல்லையே...

பதிவர் மரவளம் வின்சென்ட் உடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு நிகழ்வைச் சொன்னார் அது எனக்குப் பெரிய திகிலாக இருந்தது. முன்பெல்லாம் பிக்னிக் அல்லது சுற்றுலா குடும்பங்களாக செல்வது குறைவு தான். இப்போது பல இடங்களுக்கு மக்கள் சென்று வர பிரியமாக இருக்கிறார்கள். அவர்கள் அந்த இடங்களை சுற்றிப்பார்ப்பதை விட ... அதிகமாக குப்பைப் போட்டுவருவது தான் நடக்கிறது. அதிலும் பெரும் கொடுமை இந்த ஆண்கள் கும்பலாக செல்வது. இளைஞர்களுக்குள் பாட்டில் எடுத்து செல்லும் பழக்கம் இருக்கிறது. அதனை அந்த அழகான இயற்கை பகுதிகளில் குடித்துவிட்டு போடுவது மட்டுமில்லாமல் அவர்கள் செய்யும் ஒரு காரியம் உடைத்து எறிவது.

வெறும் புல்வெளியில் போடுவதை விட திகிலான காரியம் அதனை ஆற்றுக்குள் போடுவது. இவ்வாறான ஒரு கண்ணாடிச்சில் ஆற்றில் கால் வைத்து ஆனந்தித்து இருந்த ஒரு நபரைப்பற்றிக் கூறினார் வின்சென்ட். பொதுவாக தண்ணீருக்குள் இருக்கும் போது இரத்தம் கசிவதோ அல்லது வலியோ நமக்குத் தெரிவது குறைவு. அந்த நபருக்கு கண்ணாடி கீறி ரத்தம் வெளியேறியபடி இருந்திருக்கிறது. மணல் நெருடிய உணர்வில் காலை வெளியே எடுத்தவர்க்கு பகீரென்றிருக்கிறது.
எக்கசக்கமாக இரத்தம் வெளியேறிக்கொண்டிருந்திருக்கிறது.

கொடுமையில் கொடுமை அவர் தன் மோட்டர்பைக்கில் வந்திருக்கிறார். இந்நிலையில் அவர் எவ்வாறு செல்வார். முதலுதவிகள் செய்து எப்படியோ பாதுகாப்பாக மருத்துவமனை கொண்டு சென்று காப்பாற்றி இருக்கிறார்கள்.. ஒரு வேளை அவர் தன்னையறியால் இன்னும் கொஞ்சம் நேரம் அந்த நீரில் இரத்தம் கசிய நின்றிருந்தால் அவர் நிலை நினைத்துப்பார்க்கவே திகிலாக இருக்கிறது.

சில நாட்களுக்கு முன் நம் பதிவர் குழுவினர்கள் மலைப்பகுதிகள் சென்று வந்ததை பரிசல் வடகரை வேலன் போன்றோர் எழுதி இருந்தார்கள்.. அப்போது வேலன் அவர்களும் செல்வேந்திரன் அவர்களும் கொண்டு சென்ற பொருள்களை மலையில் சேர்க்காமல் கீழே கொண்டுவர கோணி கொண்டு செல்ல இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள். அது மிக நல்ல விசயம்.

நாங்கள் மணாலி சென்றிருந்த போது இப்படி மலையடிவாரத்திலேயே ஒரு பெரிய குப்பை போடும் பையைக் கொடுத்து குப்பைகளை கீழேயே கொண்டுவருமாறு சொன்னார்கள்.. அதனை திரும்ப கொண்டுவந்து அவர்களிடமே கொடுக்கும் படியும் கேட்டுக்கொள்கிறார்கள்.. முதலில் அந்த பைக்கு பணம் வாங்கிக்கொண்டு பின்னர் திரும்பிக்கொடுக்கும்போது அந்த பணத்தை திரும்ப தந்துவிடுவார்கள். பணம் என்றால் தானே மக்கள் எதையும் கவனமாகச் செய்வார்கள். :( ( இதை முன்பே எழுதி இருப்பதாக ஞாபக்ம் ஆனால் நல்ல விசயத்தை திரும்ப சொல்வதில் தவறில்லையே)

சுற்றுலா செல்வதில் இருக்கும் விருப்பம் அந்த பகுதியை அதே அழகோடும் பாதுகாப்பானதாவும் வைத்துக்கொள்வதிலும் இருக்கவேண்டும்.

45 comments:

கப்பி | Kappi said...

வாழ்த்துகள்! :)

pudugaithendral said...

வாழ்த்துக்கள்

G3 said...

வாழ்த்துகள்! :)

pudugaithendral said...

சுற்றுலா செல்வதில் இருக்கும் விருப்பம் அந்த பகுதியை அதே அழகோடும் பாதுகாப்பானதாவும் வைத்துக்கொள்வதிலும் இருக்கவேண்டும்.//

பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டிய வாக்கியம்.

அமுதா said...

200 கடந்ததற்கு வாழ்த்துகள். சொன்ன விஷயம் திகிலா இருந்தது.

/* சுற்றுலா செல்வதில் இருக்கும் விருப்பம் அந்த பகுதியை அதே அழகோடும் பாதுகாப்பானதாவும் வைத்துக்கொள்வதிலும் இருக்கவேண்டும்.*/
நிறைய பேர் செய்வதில்லை. மக்கள் பொறுப்புடன் நடக்க வேண்டும்.

நட்புடன் ஜமால் said...

ஆஹா வாழ்த்துக்கள்

அபி அப்பா said...

குறிப்பா "பிலாஸ்டிக்" அறவே கூடாது. இப்ப கொஞ்ச நாள் முன்ன வன இலாக்கா போகும் வண்டிகளை தடுத்து பிளாஸ்டிக் பைகளை வாங்கி கொண்டு காகித பைகளை கொடுத்தது நல்ல விஷயமாக பட்டது. இந்த செய்தியை டிவி யில் பார்த்தேன்!

அபி அப்பா said...

சொல்ல மறந்துட்டனே! 200 க்கு வாழ்த்துக்கள்! நானும் வந்துகிட்டே இருக்கேன்!

துளசி கோபால் said...

இரு நூறு கண்ட கயலுக்கு இனிய வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்.

இது இன்னும் பலநூறு ஆகணும்.

கண்மணி/kanmani said...

200 கண்ட அக்கா முத்தக்கா வாழ்க
அட எங்கே நம் கும்மிப் படைகள் வாங்கப்பூ வந்து கும்முங்கப்பூ
இன்று முதல் நம் சிறு முயற்சி அக்கா 'சுற்றுலா சுந்தரி' எனப் பாடப் படுவார் [நிறைய சுற்றலா பதிவிட்டதால்]

துளசியக்கா உஷார் [ஆனாலும் அவங்களை அடிச்சிக்க முடியாது ]

எம்.எம்.அப்துல்லா said...

யக்கா...200 க்கு வாழ்த்துகள்.
அட்வைசுக்கு நன்றி :)

பரிசல்காரன் said...

வாழ்த்துக்களோ வாழ்த்துக்கள்!

மங்கை said...

//200 பதிவுகள் கடந்த சிறுமுயற்சி//

சீச்சீ சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்...:-)

வாழ்த்துக்கள் லக்ஷ்மி..

சுற்றுலா தளங்களை சுத்தமா வச்சுறுக்குறது இன்னும் நம் மக்கள் உணரப்படாத ஒரு விஷயமாகத்தான் இருக்கு

Anonymous said...

200க்கு வாழ்த்துக்கள்.

நீங்க சொன்னது உண்மைதான் நம்ம இருக்கிற இடம்தான் குப்பையா இருக்குன்னு இயற்கையைத் தேடிப் போகிறேஒம் அங்கேயும் போய்க் குப்பை போட்டால் அது சரியல்ல.

மற்றபடி கண்ணாடிச்சில் விஷயம் கண்டிக்கத் தக்கது.

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
திகிலடித்தாலும் தில்லுடன்:)
இருநூறு தாண்டியதற்கும்..
தாண்டிய கையோடு
தந்த நல் அறிவுரைகளுக்கும்..!

pudugaithendral said...

சுற்றுலா சுந்தரி வாழ்க வாழ்க!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ...கப்பி, புதுகைத்தென்றல், ஜி3, அமுதா, ஜமா, அபி அப்பா... :)
--------------------
துளசி ஆசிக்கு நன்றி.. :)
------------------
கண்மணி சரியா சொன்னீங்க .... துளசி அவங்க வீடு, தெரு முதற்கொண்டு.. நாட்டையே சுற்றிக்காமிச்சிருக்காங்க அவங்களை மிஞ்ச முடியுமா.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எம்.எம்.அப்துல்லா, பரிசல் வாழ்த்துக்களுக்கு நன்றிகள். :)

-----------------------------
மங்கை சீ சீ புளிக்கும்ன்னா எட்டி எட்டி ட்ரை செய்தப்பறம் தானே சொல்லனும்.. நீங்க க்ரேப்ஸை பாத்துட்டு ... ஓ க்ரேப்ஸா சரின்னுட்டு தாண்டிப்போயிட்டே இல்ல இருக்கீங்க..:)
----------------------
வடகரை வேலன் .. நன்றி..
இதே போல பாண்டிச்சேரி பீச் பகுதியிலும் மணலுக்குள் கண்ணாடிச்சில்கள் கிடந்திருக்கிறது. :(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராமலக்ஷ்மி நன்றி நன்றி.. :)
-----------------------
நல்லா கூவுறீங்க தென்றல்..
:)
நன்றி

நாகை சிவா said...

வாழ்த்துக்கள் :)

சுற்றுலா தளங்களில் மட்டும் இல்லை எல்லா இடத்திலும் இதை கடைப்பிடிக்கனும்

Iyappan Krishnan said...

siRu muyarchilayE 200 postnaa neenga perum muyarchi eduththa ithu varaikkum kurainjathu 20 puththagamaavathu pottirukkalaam.


vaazththukkal. koodiya seekkiram naanum 50aavathu pathivu pottuduvennu ninaikkirEn. innum 5 pathivu bakki irukku

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நாகை சிவா நல்ல கருத்து ..:)
---------------------
ஜீவ்ஸ் நீங்க வேற பேருல பல இடங்களில் எழுதிக்குவித்துவிட்டுத் தானே இப்ப 50 ஐ தொடப்போறீங்க.. :)

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துக்கள் மேடம். சூப்பர் சீனியர் ஆகிடீங்க.

இதுக்கு தான் தனியா "குப்பத்தொட்டி" ஆரம்பிச்சிருக்கேன். எதுவாயிருந்தாலும் அங்க தான் கொட்டுவேன் :)

சென்ஷி said...

வாழ்த்துகள்! :)

கானா பிரபா said...

வாழ்த்த வயதில்லை, கடன் வாங்கி வாழ்த்துறேன் ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நான் ஆதவன் .. சிறுமுயற்சி போலவே குப்பத்தொட்டியும் அடக்கமான ஒரு பெயர்.. நாட்டுக்கு குப்பைத்தொட்டியும் அவசியமே.. நீங்களும் அதுபோல பல நல்லவற்றை பதிவுலகில் செய்ய வாழ்த்துகிறேன்..
:)
--------------------
நன்றி சென்ஷி...
---------------
கானா உங்களுக்கு வயசு மேல பயங்கர கவனம்..
நன்றி.. :)

நாமக்கல் சிபி said...

2 வது செஞ்சுரியா வாழ்த்துக்கள்!

Anonymous said...

//வாழ்த்த வயதில்லை, கடன் வாங்கி வாழ்த்துறேன் ;)//

ஆமாம்! கானா பிரபாவிற்கு நாங்கள்தான் கடன் கொடுத்திருக்கிறோம்!

அவர் வருஷத்திற்கு இரண்டு வயதை ஈஸி இன்ஸ்டால்மெண்டில் கட்டி விடுவார்!

வின்சென்ட். said...

இரட்டை சதம் அடித்ததிற்கு வாழ்த்துகள். விஷயத்தை தெளிவாக எடுத்து பதிவிட்டதற்கு நன்றி. We are not inheriting the property from our Ancestors, But We are borrowing it from our Children. So let us develop and return it.

கோபிநாத் said...

'சுற்றுலா சுந்தரி' எங்க பாசக்கார அக்காவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

நசரேயன் said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

ஆஹா வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சிபி.. வரும்போது நீங்க தனியாவே வரதில்ல.. :)

-----------------------
க்ரெடிட்ஸ்..அய்யோ பாவம் கானா ஒரு வருசத்துக்கு அவருக்கு மட்டும் 2 வயசா.. :)
--------------------------
வின்சென்ட்,கோபிநாத், நசரேயன், கவின் நன்றிகள் .. :)
----------------------------

Sanjai Gandhi said...

200 க்கு வாழ்த்துக்கள் ‘சின்ன’ முத்தக்கா.. :)

வின்செண்ட் சார் சொல்லி இருக்கிறது ரொம்பவே கவலை அளிக்கும் தகவல் தான். நம்ம ‘குடி’மகன்கள் திருந்துவார்களா? :(

sindhusubash said...

200 க்கு வாழ்த்துக்கள்.கர்னாடகாவில் மிருக காட்சி சாலையில் பிளாஸ்டிக் அறவே கூடாது..டிக்கெட் வாங்கும் போதே செக் பண்ணிட்டு காகித கவர்கள் தான் தராங்க.நல்ல பயனுள்ள தகவலை சொல்லி இருக்கிங்க..எல்லாரும் கடைபிடிச்சா நல்லாருக்கும்.

ராமலக்ஷ்மி said...

ஆமாங்க, நானும் பாத்துட்டேன் கானப்பிரபா ஒண்ணு வயதைக் கடன் வாங்கி வாழ்த்துவாரு இல்ல குப்புறவே விழுந்து கும்பிட்டு பதிவர்கள் எல்லோரையும் குடுகுடு தாத்தா பாட்டியாக்கியாடுவாரு:))!

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சஞ்சய் .. நான் சின்ன முத்துக்காவா..ம்.. நான் குடுத்த புத்தகத்தை நல்லாப் படிச்சிட்டீங்க போல..
---------------------
சிந்து குழந்தைகளை புலவெளியில் , கடற்கரை மணலில், பளிங்கு ஆற்றில்ன்னு எங்கயும் வெறுங்காலோடு அனுபவிக்க விடமாட்டாங்க போலயே..

கடைபிடிக்கலைன்னா அவங்க அடுத்த ஜெனரேசனுக்கு எமனாகிடுவாங்க..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராமலக்ஷ்மி சரியா நீங்களும் கவனிச்சிருக்கீங்க.. கானா கவனம்.. கவனம்... :)
----------
பாசமலர் நன்றிப்பா..:)

PNA Prasanna said...

வாழ்த்துக்கள்

http://pnaptamil.blogspot.com
http://pnapenglish.blogspot.com
http://pnappix.blogspot.com
http://pnaplinux.blogspot.com

rapp said...

வாழ்த்துக்கள்:):):)

rapp said...

என்னைய திட்டறதுன்னா தனியா திட்டனும், எதுக்கு இப்டி சக பதிவரை எல்லாம் சப்போர்டுக்குக் கூப்டு திட்டறீங்க :):):)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ப்ரசன்னா..
நன்றி ராப்

அது என்ன திட்டறனா ...?
ஏன் நீ எங்க போனாலும் பாட்டில் உடைப்பயா...? :)( சோடாப்பாட்டிலான்னு கேட்டேன்)

அமிர்தவர்ஷினி அம்மா said...

இரு சதம் அடித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

பதிவினூடே மனதில் பதிய வைக்கும் விஷயத்தையும் சொல்லியிருக்கிறீர்கள்

நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா..:)