நாங்க பெரிய ஐட்டங்களா சைக்கிள், டீவி இப்படி எதாச்சும் கேட்டாக்கூட அப்பா சீரியசா முகத்தை வச்சிட்டு " அந்த மஞ்சப்பைய எடு' ன்னு வாங்க.. மஞ்சப்பையில் அதெல்லாம் வாங்கமுடியாதுல்ல.. உடனே சிரிச்சிடுவோம். அப்ப எல்லாம் கடைக்குப் போனும்ன்னா ஒரு மஞ்சப்பை தான்.. அது விதவிதமா ஒரு பெரிய கூடையில் கிடக்கும்.. பெரிசு சின்னது, சாமிபடம் போட்டது, சீமாட்டிபை, சங்கம் பை ன்னு... ஹபீப் கடை பை மட்டும் ஒரு மாதிரி டார்க் ஆலிவ் க்ரீன் ல இருக்கும்.. சிலசமயம் ப்ரவுனாவும் வரும்.
மஞ்சள் பை புகைப்படம் பதிவுக்கு வேண்டுமென தேடினேன். அட ஏற்றி விட்ட ஏணிய மறந்துட்டாங்களே.. :( எனக்கும் மேற்கொண்டு தேட பொறுமை இல்லை. வீட்டில் வெண்டைக்காய் போட்டு வச்சிருந்த மஞ்சைப்பையை ப்ரிட்ஜிலிருந்து எடுத்து சுடச்சுட( ஆனா அது ஜில்ன்னு இருந்தது ) எடுத்த போட்டோ..
சீமாட்டியில் துணி எடுத்தா 4 துணி எடுத்தோ நாலு பை தாங்கன்னு கேட்டு வாங்குவது அப்போது. கடைக்குப்போனா பேப்பரில் மளிகை சாமான் கட்டித்தருவாங்க நாம நம்ம பையில் வாங்கிக் கொண்டுவருவோம்..இப்ப நாம கைவீசிப்போகிறோம் .. பெரிய பெரிய பாலிதீன் தராங்க.. ரொம்ப கொடுமை. பெரிய பெரிய கடைகளில் கையில் கொண்டுபோகிற பையை வெளியே வச்சிடனும்.
தில்லியில் எல்லா பழக்கடை காய்கறி கடையில் .. எடையில் நிறுத்துக்கொண்டிருக்கும் போதே இன்னொரு கை தன்னிச்சையாக பாலிதீன் பைகளை பிரித்து வைத்திருக்கும் உடனே பொருள் உள்ளே கொட்டி ஒரு முடிச்சிட்டு கொடுத்துவிடுவார்கள். இது மின்னல் வேகத்தில் நடக்கும். நான் பத்துவருடத்துக்கு முன் இங்கே வரும் போது அது எனக்கு புதிய விசயம் தான். அப்பொழுது வரைக்கும் கூட எங்க ஊரில் இந்த அளவு புழக்கத்தில் வரவில்லை.ஆனால் இப்பொழுது ஊரிலும் இதே கதை தான்.
நான் சிறிது காலமாகவே காய்கறி சந்தைக்குப் போனால் (கட்டைபை எனும் ஆர் எம் கேவி பையோடு).. எடைபோடும்போதே பையா (அண்ணா) அந்த பை வேணாம் வேணாம்ன்னு கத்துவேன். சரியாக காதில் வாங்காத அவர்கள் என்ன எடை சரியாத்தானே இருக்கு.. என்ன வேண்டாமா என்றெல்லாம் அதிர்ந்து விட்டு பின் புரிந்து கொள்வார்கள். ஒரே கடையில் வெண்டைக்காயும் பீன்சும் வாங்கினால் இரண்டையும் ஒன்றாகவே வா என்று ஒரு கேள்வி கேட்பார்கள். ஆமாய்யா ஆமாம் என்று வாங்கிவருவேன். இதில் பல நன்மை இருக்கிறது.
மகனுக்கு இந்த வயசில் காய்கறி பெயர் சொல்லித்தரனும்.. ஒரே மாதிரியான பொருட்களை தேடி பிரிக்கக் கத்துக்குடுக்கனும் இதெல்லாம் கூடப் பாடத்திட்டத்தில் வருவது தான். அவன் எனக்கு உதவியும் செய்யனும்.அழகா உட்கார்ந்து ஒவ்வொன்னா பிரிச்சு தனி தனி காய்கறிப்பைகளில் போடுவான். பெயர் சொல்லிக்கொண்டே.. அம்மா உனக்கு ஹெல்ப் செய்தேனேனு அவனுக்கும் குஷி.. இத்தனைக்கும் மேலே சுற்றுப்புற சூழலுக்கு கேடு குறைவு .
ஆனால் மஞ்சப்பை கூட இப்பொழுது முன்பு போல் வருவதில்லை. எங்க தாத்தா எப்பவும் ஒரு மஞ்சள் பை வைத்திருப்பாங்க.. அது இல்லாம நீங்க அவங்களைப்பார்ப்பது அபூர்வம்.. அதுல பர்ஸ் அப்பறம் ஒரு விபூதிப்பை இருக்கும். அது அழகா மடிச்சு மடிச்சு இருக்கும். தன்னோட தலைகாணி பக்கத்துலயே தூங்கும் போதும் வைத்திருப்பாங்க. இப்ப பழைய பை வேணாம் புதுசா ஒரு மஞ்சப்பை கொடுன்னு கேட்டா ஒரு துணிக்கடை பை கூட முழு காட்டனில் வருவது இல்லை. எதோ கலந்து செய்யறாங்க அது அப்படியே மொடமொடன்னு நிக்குதே தவிர மடங்குவது இல்லை..:( தாத்தா கேட்ட மஞ்சப்பைய குடுக்கமுடியலயேன்னு எனக்கு ரொம்ப வருத்தம்.
தில்லியில் இப்போது சட்டம்( அட அடிக்கடி போடுவாங்க எடுப்பாங்க) வந்திருக்கு பாலிதீன் பயன்படுத்தக்கூடாது என்று ,.. ஆனாலும் இன்னமும் நடக்கிறது . உங்கள் உங்கள் பிள்ளை பேரன் பேத்திக்கு சொத்து சேர்த்து வைக்கும் நேரத்தில் கொஞ்சம் நல்ல சுற்று சூழலையும் தந்துவிட்டு போவோம் என்று நினையுங்கள்.
52 comments:
மீ த பர்ஸ்ட்டு!
நல்ல பதிவு! எங்கள் வீட்டிலும் இன்னும் மஞ்சப்பை பழக்கம் இருக்கு! எனக்கும் பிடிக்கும்ன்னுன் வச்சுக்கலாம். தங்கமணிக்கு மஞ்சப்பையே பிடிக்காது. அதனால் மார்க்கெட் போகும் போது கட்டைப் பை எடுத்துக் கொண்டு போவேன்... இதுவும் பெரிதாக அகலமாக இருப்பதால் நிறைய பொருட்கள் வாங்க வசதியா இருக்கு..:)
முத்து! உங்க பதிவிலேயே எனக்கு பிடிச்ச போஸ்ட் இது தான்ப்பா! இது ஒரு மாஸ்டர் பீஸ் போஸ்ட் உங்களுக்கு! என் நூலகத்தில் வைக்க போகும் பதிவு இது!
எனக்கு இன்னமும் ஞாபகமிருக்கு புத்தங்களை அப்படி இப்படி முறைப்படுத்தி அந்த மஞ்சப் பைக்குள் வைத்து பள்ளிக்கு முதுகில் தொங்கப் போட்டுக்கொண்டு சென்ற நாட்கள். இப்பவெல்லாம் பார்க்க முடிவதில்லை.
பையனுக்கு நல்ல கோச்சிங்தான் கொடுக்குறீங்க.
ஏன் நீங்க துணிப்பைகளை தயார் செய்து நிறந்தரமாக கடைகளுக்கு எடுத்துட்டுப் போகக் கூடாது...?
ஒரு நல்ல பழக்கத்தை ஒழித்து விட்டோம். மங்களகரமான எந்த ஒருசெயலுக்கும் 'மஞ்சப்பை'இருக்கும். 80 களில் வங்கிக்கு பணம் டெபாசிட் செய்ய வருபவர்கள் அந்த கிராமத்தில் மஞ்சப்பையில் தான் கொண்டு வருவார்கள். உருவத்தையோ அல்லது உடையையோ வைத்து அவர்களை எடை போட்டால் நீங்கள் தான் ஏமாந்து போவீர்கள். காரணம் 5 இலக்க எண்ணிக்கையில் மஞ்சப்பையில் பணம் இருக்கும்.
Enjoyed reading the post on my travel and it brought many old memories... :-I)
இந்த மாதிரி மஞ்சப் பையை வெச்சுக்கிட்டுத் தான் பள்ளிக்கூடத்தில் படித்தேன்..
எங்க அம்மா அடுக்கடுக்கா எவ்வளவு பை வெச்சிருந்தாங்க..
நீங்க சொல்ற் ஹபீப் & கோ எங்க வீட்டுப் பக்கத்திலே தான்..
அந்தக் கடைக்குள்ள போயிருக்கீங்களா? ஒரு மிட்டாய வாசனை அடிக்குமே.. அதை அனுபவித்திருக்கீங்களா?
மஞ்சப்பைல சிலேட்ட வச்சு பள்ளிடோம் போன கடைசி தலைமுறை நானு. சென்னை வந்த புதிதில் இங்குள்ள சில பெரிய(மேல்தட்டு)மனிதர்கள் சொல்லக் கேட்டு இருக்கேன்,”நானெல்லாம் மெட்ராசுக்கு வந்தப்ப வெறும் மஞ்சப்பையோடு வந்தேன்”.
அருமையான பதிவு, உங்களின் மாஸ்டர் ஃபீஸ் பதிவு :)
துபாயில் மும்தாஜ் பாசுமதி அரிசி , இதே மஞ்ச கலரில் நல்ல கெட்டி துணியில் ரெண்டு, அஞ்சு,
பத்து, இருபது கிலோவில் கிடைக்கும். ரெண்டும், அஞ்சும் நம் ஊர் அதே மஞ்ச பை, பிடியுடன்.
இணைப்பாய் மேலே ஜீப். இதைப் பார்த்துவிட்டு அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம், கேட்டு வாங்கிப் போனவருக்கு நம் ஊரில் பல பெருசுகள் கேட்க, ஞாபகமாய் கொண்டுப் போவேன்.
இப்போதும் நாலு இங்க வீட்டில் இருக்கு.
தமிழ்பிரியன் ... ஃபார்ம்க்கு வந்துட்டீங்க..மீத பர்ஸ்ட் வந்துருச்சு.. :)
நீங்க சொன்னப்பறம் தான் நான் கட்டைப்பை கொண்டுபோற விசயத்தை பதிவில் சேத்திருக்கேன்.. :)
---------------------------------
அபி அப்பா ரொம்ப நன்றி.. இதையே கூட இன்னும் நல்லா எழுதிருக்கலாமேன்னு தான் இருக்கு.. இருந்தாலும் உங்களுக்கு பிடிச்சதுன்னா மகிழ்ச்சி தான்..
தெகா.. பிக் ஷாப்பர்ன்னு சொல்ற கட்டைப்பைகளையோ இல்லாட்டி சணலாலான கலர் பைகளோ எடுத்துப்போகிறேன்.. இந்த ஊரில் துணியால் அவர்களே தைத்த பைகளை கொண்டுபோவதை சந்தையில் பாத்திருக்கேன்.. ஆனா என்ன பயன்? அவங்க முடிச்சுப்போட்ட பாலிதீன் பைகளை எல்லாம் வாங்கிப்போடத்தான் அந்த பை.. :(
----------------
வின்சென்ட் உண்மை தான் பழய பழக்கங்களை கிண்டலடிச்சே ஒழித்துவிட்டோமே..
பழமைபேசி பயணத்திலயும் படிச்சு பின்னூட்டமிட்டிருக்கீங்க நன்றி..
பழசை நினைச்சுப்பார்க்கறதுன்னா தான் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமே..:)
-------------------------
சீமாச்சு .. ஆமாங்க அந்த ஹபீப்ல போனா நிறைய மிட்டாய் , பிஸ்கட் வாங்கித்தருவாங்க.. முக்கியமா தம்பிக்கு லாலிபப்.. சின்னப்பிள்ளையா இருந்தப்ப மற்ற கடைகளிலிருந்து அது வித்தியாசப்பட்டு தெரியும். இப்பத்தைய சூப்பர்மார்க்கெட்மாதிரி..:)
அப்துல்லா , நன்றி..
அந்த மனிதர்கள் மஞ்சப்பையோட வந்து உழைப்பால் உயர்ந்திருந்தாங்கன்னா பாராட்டப்படவேண்டியவங்க தான்..
----------------
உஷா என்ன ஜிப் வச்ச மஞ்சப்பையா நல்லா இருக்கே..நிச்சயமா எல்லாரும் கேக்கத்தானே செய்வாங்க.. :)
naa enimel mangel pai use panna poran thank you,
அவுட் லைனா படிச்சேன். இப்போதைக்கு ப்ரசண்ட் போட்டுக்கோங்க.
வந்து படிக்கிறேன்.
புதிய பள்ளிச் சீருடை கிடைக்கும் போது மட்டும் தான் புது மஞ்சப்பை கிடைக்கும் பள்ளியூடம் கொண்டு போறதுக்கு.
மஞ்சப்பையும் சிறு முயற்சி தான் :)
நல்ல பதிவு. ரெண்டு மூணு மஞ்சப்பைய நானும் நினைவா வச்சிருக்கேன்.
/*அந்த பை வேணாம் வேணாம்ன்னு கத்துவேன்..*/
நாங்களும்... ஆனாலும் சும்மா வச்சுக்கங்க என்று கொடுக்கும்பொழுது இல்லை, ஒண்ணு போதும்னு சொல்லணும்...இன்னும் கொஞ்சம் விழிப்புணர்வு தேவை...
/*உங்கள் பிள்ளை பேரன் பேத்திக்கு சொத்து சேர்த்து வைக்கும் நேரத்தில் கொஞ்சம் நல்ல சுற்று சூழலையும் தந்துவிட்டு போவோம் என்று நினையுங்கள்.*/
உண்மை.
மிக மிக மனதை தொட்ட பதிவு.. மிக ரசித்து, உணர்ந்து படித்தேன்.
முத்து,
உங்க தாத்தா நூற்றாண்டு விழாவுக்கு கொடுத்த மஞ்சப் பை இன்னும் எங்கிட்டதான் இருக்கு.
இது போல நாலஞ்சு இருக்கும் எங்க கிட்ட.
கடைக்குப் போக கட்டைப்பைதான் (பிக் ஷாப்பர்)
நல்ல பதிவு. நாங்க காக்கி டிரவுசருக்கு துணி எடுக்கும்போதே பைக்கும் சேர்த்து எடுத்துடுவோம். அந்தக் காக்கிப் பைதான் ஒரு வருடம் பூராவும்.
sendha நன்றி...மஞ்சப்பைன்னு கிண்டல் செய்வாங்கன்னா.. அட்லீஸ்ட் வேற துணிப்பைகள் எதுன்னாலும் பயன்படுத்துங்க..
--------------------------
வாங்க தென்றல் மெதுவா படிங்க.. :)
வெயிலான்..நன்றி..
அப்ப எங்கப்பா விதவிதமான மஞ்சப்பை வீட்டுல வச்சிருந்ததே வசதின்னு சொல்றீங்க.. அப்ப இதெல்லாம் தெரியலயே எனக்கு..
------------------------------
அமுதா ..நன்றி.. சிலகடைக்காரங்க பாலிதீன் கவர் வேணான்னா நல்லதுங்கன்னு மகிழ்ச்சியா சொல்வாங்க :)
நர்சிம் ..மிக்க நன்றி..
எத்தனை மிக மிக.. :))
----------------------------
வடகரை வேலன்.. நன்றி..
இப்ப எங்கவீட்டுல கொஞ்சமா வாங்கனும்ன்னா ஒரு காக்கிக்கலர் பை தான் வச்சிருக்கோம்.. அவங்கப்பா அதைத்தான் எடுத்துட்டுபோவாங்க..
இப்பல்லாம் இந்த பிக் ஷாப்பர் கூட கலப்பட துணியில் வர ஆரம்பிச்சிடுச்சு..
மிக நல்ல பதிவு முத்துலெட்சுமி. இப்போது எல்லா சிட்டிகளிலும் இப்படி மடமடவென்று பிளாஸ்டிக் பையில் தருவதே வழக்கமாயிற்று. காய்கறி கடைக்கு நானும் பெரிய பை ஒன்று எடுத்துச் செல்வது வழக்கம்.
ஆமா, அந்த மஞ்சப் பை மறஞ்சுகிட்டே வருது:(.
அப்துல்லா நடைமுறையில்
//”நானெல்லாம் மெட்ராசுக்கு வந்தப்ப வெறும் மஞ்சப்பையோடு வந்தேன்”.// இப்படிக் கேட்டதாகச் சொல்லும் டயலாக் காமெடியாகக் கூட படங்களில் பயன் படுத்தப் பட்டுள்ளது ’அவர்கள் பட்டிக்காடுகள்’ என்ற ரீதியில். அதன் பின்னால் இருக்கும் பயன்பாட்டை இப்போது மக்கள் உணரத் தொடங்கியிருப்பது மகிழ்வுக்குரியதே.
ரொம்ப நல்ல பதிவு!!!அப்பா இருந்த வரைக்கும் வித விதமான பைகள் அப்பாவே தைத்து உபயோகத்தில் வச்சிருந்தோம்.இப்ப அவரோட ஞாபகமா அதை வைச்சிருக்கோம்.இப்ப தான் கட்டைப்பை குடும்ப அங்கம் ஆயிடுச்சே.
muthu nice post.nallmalarum ninaivugal.kanmani
படிச்சேன் முத்துலெட்சுமி,
அருமையா எழுதியிருக்கீங்க. நானும் கட்டைப் பைல தான் எல்லாம் போட்டுக்கொண்டு வருவேன். பிளாஸ்டிக் பேக் வேணாம்னு சொல்லிடுவேன்.
மஞ்சப்பை எங்க கிடைக்குது?
சுவாமி & கோ, முதலியார் பேலஸ் பேர் போட்ட பை ஞாபகம் வந்திருச்சு.
//சீமாட்டியில் துணி எடுத்தா 4 துணி எடுத்தோ நாலு பை தாங்கன்னு கேட்டு வாங்குவது அப்போது. //
இப்பவும் நானும் அப்படியே செஞ்சுட்டேனோ .....! :)))
//தமிழ் பிரியன் said...
மீ த பர்ஸ்ட்டு!
///
அடி ஆத்தி தம்பி ரிடர்ன் ஆகிடுச்சு போல மீ த பர்ஸ்டெல்லாம் சொல்லுது :)))
//ஆயில்யன் said...
//தமிழ் பிரியன் said...
மீ த பர்ஸ்ட்டு!
///
அடி ஆத்தி தம்பி ரிடர்ன் ஆகிடுச்சு போல மீ த பர்ஸ்டெல்லாம் சொல்லுது :)))
//
repeatey :-)
நல்ல பதிவு :)
என்ன செய்யிறது... மஞ்சப்பைகள் கண்ல படுறதே இல்லயே. இப்போ எல்லாமே பிளாஸ்டிக் பைகள் ஆயாச்சி. செய்யிறது எல்லாம் செஞ்சிப்புட்டு அவங்களே... Global warming அது இது நு பேசிக்கிறாங்க :(
ராமலக்ஷ்மி வாங்க... சிட்டிகள் ரொம்பவே மோசம் .. கிராமங்களும் இதுக்கு அடிமையாகிடுச்சு.. ஊருக்குபோனா செடிகளெல்லாம் பாலிதீன் பூ பூத்திருக்கே..:(
------------------------------------
சிந்து வாங்கப்பா.. கட்டைப்பையும் நல்லது தான்ப்பா.. :)
---------------------------------
ஆயில்யன் சீமாட்டியில் இன்னும் மஞ்சப்பை தராங்களா.. ? :)
கண்மணி வாங்க வாங்க..நீங்க மறுமொழிப் போட்டிருக்கீங்கன்னா ரொம்ப மகிழ்ச்சி. :) நன்றி.
----------------------------
நன்றி சென்ஷி...:)
----------------------
நன்றி எட்வின் ... மஞ்சப்பை இல்லாட்டியும் எதாச்சும் ஒரு துணிப்பையோ சணலானான பையோ பயன்படுத்துங்க.
இப்பல்லாம் ரெக்ஸின் பை-தானே கொடுக்கறாங்க கல்யாணத்துலக்கூட!
சணல் கட்டைப்பைதான்னாலும், உள்ளே பாலித்தீன் தான் கவரிங்கா கொடுத்திருக்காங்க!!
good article on manjal pie.For that matter all your articles are good.Two months back i decided to give only clothe bags as thamboola pie for my daughters marriage. But quality of manjal pie available in the market was not good.My co brother came to my resque.He bought a few bales of milk white (pavadai) clothe and got 1000 bags stitched by a tailoring house known to him.Beleve it only in chennai. Slightly bigger than the usual manjal pie with lesser print on both side was nice and i was also happy.
ஆமாம் முல்லை.. பாலிதீன் கவர்கள் தான் சீப் அண்ட் பெஸ்ட் ஆகிவிட்ட காலகட்டம் இது.. பாருங்க திரு சந்திரமோகன் சொல்லி இருக்கிறத..ரொம்பவே முயற்சி செய்தால் ஒழிய நல்ல காரியங்கள் நடப்பது கடினம் என்று புரிகிறது..
நீங்கள் சொன்னமாதிரி கட்டைபை உள்ளே பாலிதீன் கோட்டிங் என்றாலும் அதை வருடக்கணக்கில் பயன்படுத்தும் போது தினம் வாங்குகிற சின்ன பாலித்தீன் கவர்களின் பயன்பாடு குறைகிறதே அதற்குத்தான்..
சந்திரமோகன் மறுமொழிக்கு நன்றிங்க..
உங்கள் முயற்சி ரொம்பவே பாராட்டுக்குறியது.. இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று நிரூபிக்கிறீர்கள்..உங்கள் கோ ப்ரதருக்கும் பாராட்டுகள்..
நல்ல பதிவு.
இங்கயும்தான் சூப்பர்மார்க்கெட்களில் பாலத்தீன் பைகளுக்கு தடா போடுவாங்க, ஆனா வித்தியாசமா, பெரிய பையிற்கு தடை, சின்ன பை ஓகே:):):) ஆனா, மஞ்சப்பையை பாத்தா கொஞ்சம் பயம்தான், ஏன்னா அது கைல வெச்சிருக்கவங்கல்லாம் ஊர்நாட்டானுங்களாமே:):):) அது என்ன கணக்குன்னு புரியல:):):)
//நான் சிறிது காலமாகவே காய்கறி சந்தைக்குப் போனால் (கட்டைபை எனும் ஆர் எம் கேவி பையோடு).. எடைபோடும்போதே பையா (அண்ணா) அந்த பை வேணாம் வேணாம்ன்னு கத்துவேன். சரியாக காதில் வாங்காத அவர்கள் என்ன எடை சரியாத்தானே இருக்கு//
அவங்க சரியா காதுல வாங்கலையா, இல்ல என்னைப்போல மொழிய காமடியாக்கினதாலா:):):)
சபரிய இப்போ வேல வாங்கினாத்தான் உண்டுன்னு செய்ய வெச்சிட்டு, நைசா பாடம்னா சொல்றீங்க:):):)
அக்கா நல்ல பதிவு:))
மஞ்சப்பை எங்க வீட்டில் இருக்கு.. வேணுனா சொல்லுங்க நான் தரேன் தாத்தாக்கு.. கிண்டல் இல்லை நிஜமா தான் சொல்லரேன்..
:)
எங்க தாத்தா, கடைகட்டிடு வரும் போது ஒரு லெதர் பேக் எடுத்துட்டு வருவாங்க, ஆனா அதுக்குள்ள பணத்தை ஒரு மஞ்சள் பையில் சுத்தி தான் எடுத்து வருவாங்க..
உங்க பதிவு தாத்தாவை ஞாபகபடுத்தியது
பதிவு கலக்கல் போல!!!...அப்பாரும் ரெண்டு மூணு மஞ்சப்பையை வச்சியிருக்காரு..;)
ஆஹா...அருமையான பதிவுப்பா... அந்த மஞ்சப் பைய தொடாத காலம் ஒன்னு இருந்துச்சு... இப்போ அதை தேடி போற காலம்... ம்ம்ம்.. ஏதொ ஒரு உணர்வு...
அட மஞ்சப்பை!
இங்கு அந்த பையிலதான் முக்கியமான பொருட்களெல்லாம் வச்சிருக்கேன்! ”உஷ்..! அதென்னன்னு இங்க சொல்லக்கூடாது அதான் :)
என்கிட்டயும் வித விதமான மஞ்சப்பை நிறைய இருக்கு வேணுமின்னா சொல்லுங்க அனுப்பறேன் :)
முத்துலெட்சுமி கயல், என்னோட வீட்டிற்கு வந்து தாலாட்டு கேட்டு பாராட்டியதற்கு மிக மகிழ்ச்சி நன்றி.
நன்றி நி.நல்லவர்..:)
-------------------
ராப்.. சில சமயம் மொழித்தகராறு வரும் தான்..ஆனா இந்த விசயத்துல இல்லை.. அவங்க அவசரத்தில் இருப்பாங்க சட்டுன்னு கவரை எடுத்துபோடுவாங்க.. காசு பேரம் செய்யராங்கன்னு ஒருநிமிசம் நினைச்சிடுவாங்க..
பூர்ணிமா.. நல்ல காட்டன்ல இருக்காப்பா ..இருந்தா நிஜம்மாவே வந்து வாங்கிக்கறேன்..
-------------------------
நாகைசிவா ..நன்றி.. :)
அது அழகா மடிக்கவருமில்ல பத்திரமான உணர்வு தரும்..
------------------------
கோபி நன்றி :)
மங்கை அப்படித்தான் பல விசயத்தை விட்டுட்டு பின்ன யோசிப்போம்..:)
--------------------
கப்பி நன்றி :)
-------------------------
மீனா வாங்க.. நாங்களும் முக்கியமானதை அதுல வைக்கிறது தான். ..:)
ஒரு சில கடைகளில் தவிர இப்போ மஞ்சப் பை கொடுக்கறதே இல்லை இல்லியா..நிறைய மலரும் நினைவுகள் வந்துச்சு முத்து இதைப்படிக்கும்போது..
me the 50th:):):)
இன்னும் இந்தியாவுல தான் மஞ்ச பை எடுத்திட்டு போக கூச்ச படுறாங்க. நான் இங்கே என்னோட பைல எப்போதுமே ரெண்டு வெள்ளை நிறத்துல துணிப்பை வெச்சு இருப்பேன். கடைக்கு சாமான் வாங்க போகும் போது எனக்கு எப்போதுமே அதுதான். அதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு, இங்கே பாலிதீன் பை எல்லாம் காசு கொடுத்து தான் வாங்கணும். :) :)
Your blog is so interesting ML, Colourfulனு சொல்லலாம்!!
நல்ல ஒரு முயற்சி
பெரும்பாலும் சென்னையில் தென் மாவட்டங்களில் இருந்து வருபவர்களை
கேலி செய்ய மட்டும் "தொ பார்டா மச்சி மஞ்சா பயி " என்று சொனவர்களும் இன்று அதையே தூகுஹின்ற நிலை
Post a Comment