மாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக
June 2, 2009
கால எந்திரம் - காமிக்ஸ்
போனமுறை மாயவரம் வந்தபோது காமிக்ஸ் மற்றும் பூந்தளிர் பைக்கோக்ளாசிக்ஸ்களை பைண்ட் செய்ய குடுத்து இருந்தோம்.. அப்போதே அவை அட்டைகளையும் சில பல பக்கங்களை இழந்து நின்றது என்றாலும்... மேலும் மோசமடையாமல் இனி பாதுகாக்க எண்ணி பைண்ட்க்கு குடுத்தோம்.
பல சோவியத் ரஷ்ய கதை புத்தகங்கள் உண்டு. மந்திரக்குதிரை என்று ஒரு புத்தகத்தை ஆவலோடு பீரோவில் இருந்து எடுத்துக்கொண்டு அட்டையை படம் எடுத்துக்கொண்ட(ப்ளாக்கராகிவிட்டாலே உள்ள தொல்லை தான் ) பின் தான் கவனித்தேன்.. அது வெறும் அட்டை தான் அடியில் வேற ஒரு புத்தகம். ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு மற்ற புத்தகங்களை எடுத்துப் படிக்க உட்கார்ந்தேன்..
காலஎந்திரத்தில் ஏறி அமர்ந்தது போல நான் என் சிறுவயதுக்கு சென்றேன். இரும்புக்கை மாயாவியும், மாண்ட்ரெக்கும், ஃபேண்டம் மற்றும் கிர்பியும் டேஸ்மண்டும் .... கதைகளின் தலைப்புகள், முதல் பக்கங்கள் இல்லை . இருந்தாலும் சுவாரசியமாக படித்தேன். மகளுக்கு சிலவற்றை வாசித்துக்காட்டினேன்.. அத்தனை விருப்பமாக அவள் கேட்டதைப்போல தோன்றவில்லை..:(
அ.கொ.தீ கழகத்துக்கு என்னப்பா விரிவு ?? மறந்து போச்சே..
மண் இனத்தினர் எல்லாம் அப்ப பயங்கர திகிலான கதைகள்...
Subscribe to:
Post Comments (Atom)
34 comments:
மீ த பர்ஸ்டேய்ய்ய்ய்...?!
பாஸ் இரும்புக்கை மாயாவி என்னோட ஆதர்ச நாயகன் அப்ப ! :))
25 பைசா கொடுத்து இரும்புகடையில பழைய ராணி காமிக்ஸ் வாங்கிட்டு வந்து படிக்கிறதுதான் அப்ப என்னோட வீக் எண்ட் வழக்கமாக்கும் :)
இதுக்காக அடிக்கடி கூறை நாடு பக்கமெல்லாம் திரிஞ்சுயிருக்கோமாக்கும் :)
//மகளுக்கு சிலவற்றை வாசித்துக்காட்டினேன்.. அத்தனை விருப்பமாக அவள் கேட்டதைப்போல தோன்றவில்லை//
Generation Gap முத்து. இப்பொது வருகிர கார்ட்டூன்கள் ஒன்னும் சொல்லிக்கிர மாதிரி இல்லை, என் மகன் டோரா பார்த்து பார்த்து, அதுல பேசுரது மாதிரி என்கிட்டேயும் பேசுரான்.
உங்க காலத்துக் கதையை புள்ளைக்கு படிச்சுக்காட்டி டெரர் பண்ணா எப்படி...
ஆயில்யன் உண்மைதான்.. அந்த இரும்புக்கடையிலிருந்துகூட சில சமயம் காமிக்ஸ் வாங்கி படிச்சிருக்கோம்..தம்பி வாங்கிட்டுவருவான்னு ஞாபகம்..
ஷஃபி ..உண்மைதான் ஜெனரேசன் கேப் ..:( உங்க வீட்டுலயும் டோரா விளைவு உண்டா.. :))
விக்கி அவளே தான் கேப்பா ..நீங்க சின்னப்பிள்ளையா இருந்தப்ப என்ன செய்வீங்க .. சொல்லு சொல்லுன்னு ..அதான் இப்படித்தான் கார்டூன் கிடையாது ..கதைப்புத்தகம் தான்னு.. காமிச்சேன்..
:)
அதெல்லாம் அந்த காலம்ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாலே மூத்த பதிவர்தானேக்கா :-)
//ஷஃபி ..உண்மைதான் ஜெனரேசன் கேப் ..:( உங்க வீட்டுலயும் டோரா விளைவு உண்டா.. :))//
நல்லா கேட்டீங்க, அன்னக்கி என்னுடன் மகன் அத்னானும் காரில் வந்தான், தூரத்தில் ஒரு பாலம் தெரிந்தது, உடனே அத்னான் ..."எனக்கு ப்ரிட்ஜ் தெரியுது....உங்களுக்கு தெரியுதான்னு சொல்லுங்க" ஹா...ஹா.. ரசிக்க வைத்த டைமிங் ஜோக்.
என் ப்ரொஃபைலிலேயே சொல்லியிருப்பேங்க, நான் முத்து இந்திரஜால காமிக்ஸ்களை விரும்பி வாசித்ததை. கால எந்திரத்தை சுழல விட்டு நல்லாவே கூட்டிப் போகிறீர்கள் உங்களோடு எங்களையும்:))!
ஆஹா..இரும்புக்கை மாயாவி..மஞ்சள் பூ மர்மம்....அ.கொ.தீ. கழகம்(எனக்கும் இதோட விரிவு மறந்து போச்சு)....நல்ல கதைகள்..
டோரா காலத்தில மாயாவியைப் படிச்சு காட்டினா எப்படிங்க?
நம்ப பேவரிட் மாயாவி தான்.. காமிக்ஸ் ஜேம்ஸ்பாண்ட்.. :)
:-)
இரும்புக் கை மாயாவி தான் நான் படிச்சு இருக்கேன்...:-)
பூந்தளிருக்காக நான் அடம்பிடித்து, அம்மா நிபந்தனைப்படி அதுக்காகவே ராங்க் வாங்கிய கதையெல்லாம் உண்டு. அதில், கபீஷ் குரங்கு, தூப்தூப் முதலை, சிகால் நரி, காக்கை காளி, எல்லாமே மறக்க முடியாத கதாபாத்திரங்கள்.
எங்க வீட்டிலும் இப்படி ஒரு 2புக் இருக்கு..;)
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............நான் என்னைக்கு சாதா கொழந்தையா இருந்தேன், காமிக்ஸ்ல படிச்சதும் புடிச்சதும் ஒன்னே ஒண்ணுதான் ஆர்ச்சீஸ். சரி, என்னைக்கு விஷயத்தை தெரிஞ்சு பின்னூட்டம் போட்டிருக்கோம், ஆனா இதுல பிரச்சினை என்னன்னா தெரிஞ்சா மாதிரியே புருடா விட முடியாதுல்ல:):):)
//விக்கி அவளே தான் கேப்பா ..நீங்க சின்னப்பிள்ளையா இருந்தப்ப என்ன செய்வீங்க .. சொல்லு சொல்லுன்னு ..அதான் இப்படித்தான் கார்டூன் கிடையாது ..கதைப்புத்தகம் தான்னு.. காமிச்சேன்..
//
சமாளிக்காதீங்க, மாதினி சொல்ல சொல்லிதான கேட்டாங்க. இதுதான்னு காமிச்சதோட நிறுத்தாம நீங்க ஏன் படிச்சே காமிச்சீங்க:):):)
ஓட்டுப் போட்டீங்க போல இருக்கு!
//அ.கொ.தீ கழகத்துக்கு என்னப்பா விரிவு ??//
அழிவு கொள்ளை தீமை கழகம்.
வெல்கம் டூ காமிக்ஸ் க்ளப் :-)
இரும்புக்கை மாயாவி கதையெல்லாம் சூப்பரா இருக்கும்,நானும் எங்கப்பாக்கிட்ட கேட்டு காமிக்ஸ் புக்,அம்புலிமாமா,பாலமித்ரா,ரத்னபாலா புக்ஸ்லாம் வாங்கிப் படித்திருக்கேன்,பழயை ஞாபகம் வந்துடுச்சு..
சென்ஷி :)
-----------------------------------
ஷாஃபி :)) உங்க பையன் டோராவை தலைபாடமாக்கிட்டான் போல
--------------------
ராமலக்ஷ்மி .. நன்றிப்பா..:)
பாசமலர்.. லக்கி அண்ட் கண்ணன்னு ரெண்டு பேரு விடைய பின்னூட்டத்தில் சொல்லி இருக்காங்க :)
------------------------
தீஷு சரியாத்தான் சொல்றீங்க..? அப்பறம் நான்மட்டும் தான் படிச்சிட்டிருந்தேன்..:)
சஞ்சய் , மங்கை நன்றிநன்றி ...
--------------------------
சுமஜ்லா உங்கபேரை தமிழிலும் வைச்சதுக்குமுதலில் நன்றி,
கதாப்பாத்திரங்களின் பெயர்களை எல்லாம் மிகச்சரியா ஞாபகத்தில் வச்சிருக்கீங்க..சந்தடி சாக்கில் நீங்க ராங்க் வாங்கினதும் தெரியவச்சிட்டீங்க :)))
கோபி ஒரு புக்கா ரெண்டு புக்கா ? :)
ராப்.. நீ சைல்ட் ப்ராடிஜின்னு தான் தெரியுமே..:) என் சித்திப்பொண்ணு ஆர்ச்சி தான் படிப்பா.. நானும் அவ வீட்டுல அதெல்லாம் படிச்சிருக்கேன்..
----------------------
எவனோ ஆமாங்க ..யாராச்சும் கவனிப்பாங்கன்னு நினைச்சேன் .. :))
நன்றி.. லக்கி
மேனகா ..நன்றிப்பா.. ஞாபகம்வருதே... ஞாபகம்வருதே.:)
திரு கண்ணன் உங்கள் விடைக்கு நன்றி..ஆனா ஏங்க அரசியல் எனக்கெதுக்கு .. :))
nalla pathivu
எக்கா..இந்த காமிக்ஸத்தான் எத்தன நாளக்கி பார்த்துக்கிட்டே இருப்போம், சீக்கிரமா புது படத்த போடுங்க (ஒரு மொக்கையாவது...)
அம்புலி மாமா என்னோட சாய்ஸ்.படிச்ச கதையெல்லாம் இப்ப மறந்துபோச்சு...ஆனாலும் பொண்ணுக்கு கதை ஆர்வத்தை ஏற்படுத்திட்டேன்.Bed time storyயில்லாம அவளால தூங்க முடியாது.
முதலில் என்னை அறிமுகப்படுத்துகிறேன். நானும் மாயவரத்துக்காரன். பதிவுலகில் கூட இவ்வளவு சொந்தங்கள் இருப்பது சந்தோஷமாக உள்ளது.
முத்துலெட்சுமி அவர்களே, காமிக்ஸ் பற்றிய கூகிள் தேடலில் உங்கள் பதிவை காண நேர்ந்தது! மிக்க மகிழ்ச்சி! நேரம் கிடைத்திட்டல் எனது காமிக்ஸ் குறித்த வலைதளத்தை பார்த்திடலாமே!
அன்புடன், கார்த்திக்
Post a Comment