October 27, 2009

ஊருல தீபாவளி

வெகுநாட்களுக்கு பிறகு தென்னிந்தியாவில் (பொள்ளாச்சி) தீபாவளி கொண்டாடினோம். குறைவான பட்டாசை வெடித்து அதிக பட்டாசை வேடிக்கைப் பார்த்தோம்.ஆம்புலன்ஸ் ஊஊ என்று கத்திகொண்டே புகைகக்கும் பட்டாசுகள் எரிச்சலைக் கிளப்பின. ஊரெங்கும் போஸ்டரில் வடிவேலு ”இவங்க மட்டும் எப்படி தீபாவளிக்கு குறைச்சவிலையில் தரமான வெடி தராங்க”ன்னு ஒரு கடையைப் பார்த்து அவ்வ்வ்விக்கொண்டிருந்தார். முதல் நாள் சென்னை ரங்கநாதன் தெருபோல மகராஜா ரோட்டில் மக்கள் தள்ளிக்கொண்டே அடுத்த முனையில் விட்டார்கள். இன்னைக்கு ஒரு நாள் கூட சைக்கிள் பைக்கைவிட்டு இறங்க மாட்டாங்களே என்ற பாராட்டு வார்த்தைகளை வண்டிக்காரர்கள் பெருமையாகக் கேட்டுக் கடந்தார்கள்.


தீபாவளி காட்சிக்கு போகலாம் என யாருக்கோ ஆசை வர நுழைவுச்சீட்டும் மாமனாரே முன்கூட்டி வாங்கித்தந்து விட்டார்கள். படம் ஆதவன். காலையிலிருந்து அது நாலாவது காட்சி. பெண்களை எல்லாம் முந்தின காட்சி முடியும் முன்பாகவே திரையரங்கின் பக்கவாட்டு கதவுக்கருகில் நிற்க சொல்லி இருந்தார்கள். படம் முடிந்து எல்லாரும் எழுந்து நின்று பார்க்கத்தொடங்கியும் வெளியேறாமல் இருந்ததைப் பார்த்து க்ளைமேக்ஸில் மக்களைக் கட்டிப்போடக்கூடிய படமா இது? என்று பெண்கள் எல்லாரும் குழம்பிப்போனோம்.
காலையில் பார்த்தவங்க நல்லா இல்லன்னு சொன்னாங்களே ? மத்த நாள் திரையரங்கு காலியாத்தாங் கிடக்குமுங்க.. எல்லாம் சீரியல் பாத்துட்டு கிடப்பாங் இன்னிக்கு தீவாளிக்கு பாக்கனும்ன்னு தான் வந்திருக்கறது எல்லாம்
என்று ஒரு அம்மா எங்களிடம் பாவ மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருந்தார். நாங்கள் அந்த காட்சியைப்பார்த்த போது இதற்கா அப்படி சிலையா நின்னாங்க என்று நொந்து போனதென்னவோ உண்மை.

எண்ணிக்கை இடாத இருக்கைகளை நாமகப் பிடிச்சிக்கனும். அந்த பக்கம் மக்கள் வெளியேற இந்த பக்கம் பெண்கள் வரிசைக்கொன்றாய் நின்றபடி அவங்கவீட்டு ஆண்களுக்கு இடம்பிடிக்க நானும் என் ஓர்ப்படியும் மெதுவா தலை மறைக்கிற இடமா இருந்தாலும் இரண்டு இருக்கைகளை கணவருக்காக பிடித்து அமர்ந்தோம்.
தலையெல்லாம் படம் பார்க்க ஆரம்பிச்சாத்தெரியாது
இது அப்பாவின் வழக்கமான வசனம்.. மனதிற்குள் எதிரொலித்தது. மற்றபடி தில்லியிலேயே தியேட்டர் எஃபெக்டோடத்தானே சிடியில் பாக்கறோம்..

ஆண்களுக்கு வெளிக்கதவைத் திறந்து விட்டதும் ஜோ என்று ஆட்கள் நுழைந்தனர் . கொஞ்சம் திகில் தொடங்கியது. அதிகப்படி போடப்பட்டிருந்த ப்ளாஸ்டிக் இருக்கைகள் அவர்கள் வழியை மறைத்த கோபத்தில் எட்டி உதைத்ததில் திகில் எகிறியது. நல்லவேளை எங்களவர்கள் வந்து சேர்ந்தனர்.

வடிவேலு தான் கதாநாயகனோ எனும்படி சரி காமெடி பீஸ் படம். லாஜிக் பார்க்காமல் சிரிக்கலாம். மத்தபடி ஒன்றுமில்லை. 25 ரூ நுழைவுச்சீட்டு 60 க்கு விற்கப்பட்டது. அன்று சம்பாதித்தால் தான் உண்டு. ஏற்கனவே ஊரில் இன்னோரு திரையரங்கு மூடப்பட்டுவிட்டது. அதில் தான் முதன் முதலில் நானும் என் நாத்தனாரும் தைரியசாலிகளாக லவ் டுடே பார்க்கச்சென்று வரும்வழியில் யாரோ துரத்துவது போலவே ஓடிவந்தது.

பொள்ளாச்சியில் காலை விருந்துக்குப்பிறகு கோவை. பொள்ளாச்சி கோவை சாலை அன்றைக்கு மட்டும் தான் அத்தனை அமைதி.பேருந்திலிருந்து அதற்கு மேல் பார்த்ததெல்லாம் ஆடை அணிவகுப்பு. புதுச்சட்டை அணிந்த குழந்தைகளும் பட்டுசேலையோ பளபளா சேலையோ அணிந்த அம்மாக்கள் ( நாங்க சுடிதாருங்கோ) மொட மொட பளீர் வெள்ளைஉடையும் பளீர் விபூதியுமாக அப்பாக்களும் ஈச்சனாரியிலும் மகாலக்‌ஷ்மி கோயிலிலும் குவிந்திருந்தனர். புரட்டாசி சனிக்கிழமை தீபாவளி சிறப்பென்று பெருமாள் கோயிவிலில் மக்கள் அலை கரைபுரண்டது.

அடிக்கிற வெயிலில் தில்லி பரவாயில்லை என்றானது கோவையில். அதில் பெரும்கொடுமை சின்னக்குழந்தைகளின் தீபாவளி உடைகள் எல்லாம் பாலியஸ்டரில் கழுத்திலிருந்து கணுக்கால் வரை மூடி ஜிகுஜிகு வேலைப்பாடுகளோடு இருந்தது. புது உடை என்ற மகிழ்ச்சி அதை பொருட்படுத்தாமல் வேர்வையில் குளித்திருந்தார்கள். தீபாவளிக்கு அடுத்த ரெண்டு நாட்களும் நாங்கள் இந்த ஆடை அணிவகுப்பை ஆழியார் அருவியில் கோவைக்கருகில் சென்ற கோயில்கள் என்று எல்லா இடங்களிலும் கண்டு களித்தோம். எப்ப கிராமப்பொங்கல் கொண்டாட்டம் எப்படி இருக்குன்னு பார்க்கப்போகிறோமோ தெரியலை.

குறிப்பு: தீபாவளி பத்தி தொடர்பதிவு எதாச்சும் எழுதனும்ன்னு ஆயில்யன் முன்னாலேயே கூப்பிட்டிருக்கார்.. இதை அதுக்குன்னு இந்த குறிப்பில் போட்டுக்கிறேன்ப்பா..

25 comments:

ஆயில்யன் said...

//”இவங்க மட்டும் எப்படி தீபாவளிக்கு குறைச்சவிலையில் தரமான வெடி தராங்க”ன்னு ஒரு கடையைப் பார்த்து அவ்வ்வ்விக்கொண்டிருந்தார்.//

lol :))))

ஆயில்யன் said...

ஒரு தீபாவளி கதை
ஒரு பயணக்குறிப்பு
ஒரு சமூகம் பற்றிய அவதானிப்பு
ஒரு திரைப்படவிமர்சனம்

அம்புட்டும் ஒரே பதிவுலயா அவ்வ்வ்வ்....:)))

சென்ஷி said...

:)

☀நான் ஆதவன்☀ said...

வடிவேலு விளம்பரம் கலக்கல். இனி எல்லா விளம்பரத்திலும் பார்க்கலாம் போலயே :)

☀நான் ஆதவன்☀ said...

ஆதவன் படத்தை நீங்களும் முதல் நாளே பார்த்திட்டீங்களா? நானும் தான் :)

//அடிக்கிற வெயிலில் தில்லி பரவாயில்லை என்றானது கோவையில். //

கோவையில் இந்த மாசம் நல்ல வெயிலா? அவ்வ்வ் இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா ஊட்டியில கூட இப்படி தான் இருக்கும் போல :(

சந்தனமுல்லை said...

:-)

Anonymous said...

திருமூர்த்தி மலை போங்க பொங்கலுக்கு :)

ராமலக்ஷ்மி said...

லேட்டானாலும் தீபாவளிக் கொண்டாட்டம் களை கட்டுது:)!

//எப்ப கிராமப்பொங்கல் கொண்டாட்டம் எப்படி இருக்குன்னு பார்க்கப்போகிறோமோ தெரியலை.//

பொங்கலுக்கும் ஊர்ப்பக்கம் போய் வாருங்கள், வரும் வருடம் முடியாவிட்டாலும் அடுத்து வரும் வருடத்தில்:)!

அமிர்தவர்ஷினி அம்மா said...

:))))

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

//குறைவான பட்டாசை வெடித்து அதிக பட்டாசை வேடிக்கைப் பார்த்தோம்//

அவங்க காசு கொடுத்து வாங்கியது தானே, எல்லாத்தையும் உங்களுக்கே எப்படி தருவாங்க?

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

//அடிக்கிற வெயிலில் தில்லி பரவாயில்லை என்றானது கோவையில்//

அப்படியா? படிப்பதற்க்கே கஷ்டமா இருக்கு, ஏன் இப்படி ஆச்சு!!

Anavaradha said...

//தலையெல்லாம் படம் பார்க்க ஆரம்பிச்சாத்தெரியாது //

Romba unmai.....

ARUN

துளசி கோபால் said...

என்னப்பா ஒரே அட்டகாசமாக் கொண்டாடி இருக்கீங்க!!!!!

குழந்தைகள் + பாலியஸ்ட்டர் துணி= பரிதாபம்(-:

வல்லிசிம்ஹன் said...

ஆழியாறு போனீங்களா. அப்ப காதலிக்க நேரமில்லை பங்களா பார்த்தீங்களா:)

இந்த விருந்தினர் மாளிகை(?)
மௌனம் சம்மதம் படத்திலும் வரும்.பொங்கலுக்கு அம்மா ஊருக்குப் போங்க.

.

R.Gopi said...

//குறைவான பட்டாசை வெடித்து அதிக பட்டாசை வேடிக்கைப் பார்த்தோம்.//

பலே வர்ணனை......

//”இவங்க மட்டும் எப்படி தீபாவளிக்கு குறைச்சவிலையில் தரமான வெடி தராங்க”ன்னு ஒரு கடையைப் பார்த்து அவ்வ்வ்விக்கொண்டிருந்தார்.//

ஹா...ஹா...ஹா....இப்போ அவ‌ருமா???அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//படம் முடிந்து எல்லாரும் எழுந்து நின்று பார்க்கத்தொடங்கியும் வெளியேறாமல் இருந்ததைப் பார்த்து க்ளைமேக்ஸில் மக்களைக் கட்டிப்போடக்கூடிய படமா இது? என்று பெண்கள் எல்லாரும் குழம்பிப்போனோம்.//

அம்புட்டு அப்பாவியா நீங்க‌ எல்லாம்???

//அதிகப்படி போடப்பட்டிருந்த ப்ளாஸ்டிக் இருக்கைகள் அவர்கள் வழியை மறைத்த கோபத்தில் எட்டி உதைத்ததில் திகில் எகிறியது.//

இது ஒரு பெரிய‌ "டெர்ர‌ர் எபிசோட்" மாதிரி இருக்கே முத்துலெட்சுமி மேட‌ம்....

//பட்டுசேலையோ பளபளா சேலையோ அணிந்த அம்மாக்கள் ( நாங்க சுடிதாருங்கோ)//

ப‌ட்டு சுடிதாரா... இல்ல ப‌ர்ஸை வேட்டு வைக்காத‌ சாதார‌ண‌மான‌தா??

//எப்ப கிராமப்பொங்கல் கொண்டாட்டம் எப்படி இருக்குன்னு பார்க்கப்போகிறோமோ தெரியலை..//

ஏன், அதையும் வ‌ர்ற‌ வ‌ருஷ‌ம் ட்ரை ப‌ண்ணிட‌ வேண்டிய‌துதானே??

ஆயில்யன் said...

//வல்லிசிம்ஹன் said...

ஆழியாறு போனீங்களா. அப்ப காதலிக்க நேரமில்லை பங்களா பார்த்தீங்களா:)//


ஆழியாறு பங்களா அப்புறம் அந்த டேம் எதிரே ரோட்டு ஓரம் இருக்குற மீன் க்ண்காட்சி பண்ணையெல்லாம் பார்த்தீங்களா ? நான் முன்ன்ன்ன்னாடி போனப்ப பார்த்தது வல்லியம்மா சொன்னதும் டக்குன்னு ஞாபகம் வருதே ஞாபகம் வருதே :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இஞ்சீனியர் ஆயில்யன் பாடத்தை அக்குவேறு ஆணிவேராப் பிரிச்சு படிப்பீங்க போல :)
--------------
சென்ஷி நன்றி
----------------
கொஞ்ச நாள் என்ன இப்பவே கேளுங்க ஆதவன், முன்னைப்போல நான் இல்லைன்னு ஊட்டியும் சொல்லும்..
---------------------
நன்றி சந்தனமுல்லை
------------------
நன்றி சின்னம்மிணி கண்டிப்பா முயற்சி செய்யறேன்.. திருமூர்த்திமலை அருவி கூட்டமில்லாமப் போயிருந்தப்ப ரொம்ப நல்லா இருந்தது.
-------------
ராமலக்‌ஷ்மி ஒருமுறை பொங்கலுக்கு போகனும் தான் ஆனா இந்த முறை இல்லை..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அமிர்தவர்ஷினி அம்மா நன்றி
-------------------------------
ஷஃபிக்ஸ் நல்லாச் சொன்னீங்க ஆனா எங்க குட்டீஸ் பின் வீட்டுல போய் அவங்களோட மத்தாப்பூம் கொளுத்தினாங்க .. :)
ஏன் அப்படி ஆச்சுன்னா மக்கள் கூட்டம் கொஞ்சமா நஞ்சமா.. ஊரு விஸ்தரிச்சிட்டே போகுது .. பொள்ளாச்சின்னா இருக்கற குளுமையே இல்லைன்னு அங்க இருக்கறவங்களே புலம்புறாங்க..
----------
அருண் சின்னதா இருக்கும் போது தலை ம்றைக்குது மறைக்குதுன்னு சொல்லும்போது இப்படி சமாதனப்படுத்துவாங்க அப்பா.. இப்பவும் எனக்குன்னு உயரமானவங்க தான் முன்னாடி வந்து உக்காருவாங்க.. பெரிய ஊரு திரையரங்கில் இந்த ப்ரச்சனை இருப்பதில்லை.. படிப்படியாக இறக்கமாக இருக்கும் இருக்கைகள்..
-------------------------
துளசி அந்த பளபள ஜம்கி வச்ச ட்ரஸ் கள் இருக்கே அது கத்துக்குட்டி தச்ச மாதிரி வேற இருக்கும்..
-----------------------------
வல்லி ஆழியார் தானே அடிக்கடி போய் வந்து அந்த இடமெல்லாம் போரடிச்சிடுச்சு..அந்த பங்களாவிலேயே மதிய உணவைச் சாப்பிட்டிருக்கோம் நாங்க :)அருவி ஒன்னு தான் போரடிக்கல இன்னும்..அம்மா ஊருல ஒரு முறை பொங்கல் கொண்டாடியாச்சு .. பாக்கி பொள்ளாச்சி பொங்கல் தான்.
----------------------------
ஆர் கோபி சரியாக்கேட்டிங்க கொஞ்சம் வேட்டுவைக்கிற சுடிதார் தான்.. :)

விக்னேஷ்வரி said...

தீபாவளிக்கு ஊருக்குப் போயிட்டு வந்துட்டு வயித்தெரிச்சல் கிளப்புறீங்களா..
சீக்கிரமே பொங்கலும் ஊரில் அமைய வாழ்த்துக்கள்.

புதுகைத் தென்றல் said...

தீபாவளி நல்லா போனிச்சு போல இருக்கு. சந்தோஷம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

விக்கி நினைச்சா நீ பஞ்சாப் போறே நினைச்சா கோவை போறே ஸ்ரீவில்லிபுத்தூர் போறே.. என்னைப்பாத்து வயித்தெரிச்சல் படலாமாம்மா..? :))
------------------------
ஆமா புதுகைத்தென்றல் நல்லாவே இருந்தது.. மாமியார் வீட்டுலயும் தாத்தாவீட்டுலயுமா தீபாவளி டபுள் ஷாட்..

கோபிநாத் said...

சூப்பர் தீபாவளி ;)

கோபிநாத் said...

சூப்பர் தீபாவளி ;)

மணிநரேன் said...

:)

கோமதி அரசு said...

//தலை எல்லாம் படம் பார்க்க ஆராம்பித்தால் தெரியாது//

உண்மை தான் முத்துலெட்சுமி.