December 16, 2009

ஹிப் ஹிப் ஹிப்போ!! (ஹூர்ரே!)

தொலைகாட்சியிலும் வானொலியிலும் ஹலோ நாந்தாங்க ... பேசறேன். எப்படி இருக்கீங்க ? உங்க வீட்டுல ? நல்லாருக்காங்களா சரி.. எனக்கு இந்த பாட்டு .. அதை இவங்களுக்கு டெடிகேட் ந்னு அடித்துப் பிடித்து எல்லாரும் கேட்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஆனால் நானும் கானாப்பிரபாவின் ரேடியோஸ்பதி தளத்தில் பதிவர் தேர்வுகள் வரிசைக்கு சில பாடல்களை கேட்டு எழுதி இருந்தேன் அவரும் ஒலிபரப்பினார். அதற்கு பிறகு இபோழுது 4தமிழ்மீடியா தளத்தில் வாரம் ஒரு நேயர் விருப்பம் பகுதிக்கு என்னுடைய விருப்பப்பாடலாக 5 பாடல்களை அனுப்பி இருந்தேன். அதில் நான்கு பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளது. (இணைய இணைப்புவேகம் குறைவாக இருந்தால் சற்று சிரமமாக இருக்கலாம்)

நிகழ்ச்சியை நடத்துபவர் அஸ்வதன். நிகழ்ச்சிக்கு நடுவில் எதாவது புதுப்புது விசயங்களைச் சொல்வார். அவருடைய நிகழ்ச்சியை வாழ்த்தி நான் என்குரலில் ஒரு வாழ்த்து செய்தியையும் (பீ ஃகேர்புல்)அனுப்பி இருந்தேன். அதனை நிகழ்ச்சிக்கு நடுவில் ஒலிபரப்பி இருக்கிறார் . நன்றி அஸ்வதன்.
--------------------
நாங்கள் சின்னவயசா இருக்கும்போது நொறுக்குத்தீனிய “என்னமாச்சும்” ந்னு சொல்வோம். என்னமாச்சும் இருக்காம்மா? பிஸ்கட் இருக்கு , முறுக்கு இருக்கு, நெய்யுருண்டை இருக்குன்னு அம்மா சொல்வாங்க.. அதனால் நொறுக்குத்தீனிக்கு எங்க வீட்டில என்னமாச்சும்ன்னே ஆகி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

மகன் வழக்கமாக பள்ளியிலிருந்து வரும்போதே கடைக்கு போகலாம் போகலாம் என்று நச்சரிப்பான். போனால் குர்க்குரே , லேஸ் , அங்கிள் சிப்ஸ் அல்லது ஃபன் ஃப்லிப்ஸ் இப்படி எதயாவது வாங்குவேன் என்று அடம்பிடிப்பான். குர்க்குரே சாப்பிடாதீர்கள் அதில் ப்ளாஸ்டிக் இருக்கிறது. லேஸ் சாப்பிடாதீர்கள் அதில் கேன்சர் வரவழைக்கும் பொருள் இருக்கிறது என்று நம் நலம்விரும்பிகள் அனுப்பிய மெயில்கள் ஏற்படுத்திய திகில் வேறு. ஃபன் ஃப்லிப்ஸ் போன்றவை உண்மையில் அரிசி வச்சி அப்படி பொரி மாதிரி தக்கையாக எப்படித்தான் செய்வார்களோ? ஒரு பயத்தோடுதான் வாங்கித்தருவேன்.

சிறிது நாட்களாக கடையில் ஹிப்போ என்ற ஒரு பெரிய கருப்பு ஹிப்போ நம்மைப் பார்த்தபடியே நிற்பதைப் பார்த்துவிட்டு கண்டும் காணாமல் வந்துகொண்டிருந்தேன். அதன் மேலட்டையில் இருந்த நீள்வட்ட வடிவ அந்த மன்ச்சீஸ் (backed munchies) என்றால் என்ன என்று தெரியவில்லையே என்று ஒரு ஆர்வத்தில் இத்தாலியன் பிசா வகையில் ஒன்றை வாங்கிவந்தேன்.


ஹிப்போ பார்லேயின் புது தயாரிப்பாம். மற்றவங்க மாதிரி இல்லை நாங்க.. ஆமாம் சும்மா என்ன உருளைகிழங்கும் , வறுத்ததும் , பொறிச்சதும் சாப்பிட்டுக்கிட்டு... ஹிப்போ கேர்ஸ் (cares) அதுவும் இந்த சூப்பர் ஹீரோஸ் மற்றும் உலகத்தலைவர்கள் எல்லாம் எதெதெற்கோ போராடுகிறார்கள் . பசிக்கு எதிரா போராடலயாம். அதனால் தான் ஹிப்போ இந்த ப்ரச்சனையை தன் கையில் எடுத்துக்கிட்டு அடுக்களைக்குள் புகுந்து விட்டதாம் பசியா இருக்கும் போது நீங்க வறுத்தது பொறிச்சத சாப்பிட்டு என்னடா இதைப்போய் சாப்பிடுகிறோமே என்றெல்லாம் குற்ற உணர்ச்சியில் வாடவேண்டாமாம். இது ரொட்டித்துண்டுகளை (wheat bread crumbs) (bake) செய்து தயாரிக்கப்படுகிறது.

”ஹிப்போவை கையோடு வைத்துக்கொண்டால் நீங்கள் பசியோடு வேலை செய்யவேண்டியதில்லை. பசியோடு இருக்கிறவன் மகிழ்ச்சியா இருப்பதில்லை. பசியோடு இருப்பவன் அதிகம் சண்டைபோடுவான். அதனால் ஹிப்போ ட்ரை’
ந்னு எக்கச்சக்கமா ஹிப்போ மேலட்டையில் அறிவுரை சொல்லி இருக்கிறது.இதை எழுதிக்கொண்டே நேற்று வாங்கிவந்த ஹிப்போ தாய் சில்லி (thai chilli) காலி செய்துவிட்டேன். நிஜமாய் சொல்கிறேன். இப்போ நான் ஹிப்போக்கு அடிமை. ஹிப்போ என்னை ஹிப்னாடிஸ் செய்துவிட்டது. கடைக்கு மகனுக்கு என்னமாச்சும் வாங்கச் சென்றால் ”அம்மாக்கு இது ஒன்று” என்று நானே எடுத்துக்கொள்கிறேன். இதிலும் அது இருக்கு இது இருக்கு என்று யாராவது மெயில் போட்டு பயப்படுத்தாத வரை ஹிப் ஹிப் ஹிப்போ!!

47 comments:

ராமலக்ஷ்மி said...

ஹிப்போ மேலட்டையின் அறிவுரை நல்லாதான் இருக்கு! வாங்கிப் பார்க்கிறேன், சாப்பிட்டும்தான்:))!

இதே போல Fritolay-யின் Aliva Crackers எனும் பிஸ்கட் made with wheat and daal என ரூ12 ஒரு பாக்கெட் ஆக பல flavour-ல வருது. அதையும் ட்ரை பண்ணுங்க:)!

நேயர் விருப்பத்தில் உங்கள் விருப்பத்துக்கு வாழ்த்துக்கள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நீங்க சொல்றது பிஸ்கட்டா.. வாங்கிபாத்துடலாம்..நான் சொல்றது சிப்ஸ் ஸ்னாக்ஸ் மாதிரி கருக் முறுக்குன்னு இருக்குதுப்பா.. ராமலக்‌ஷ்மி.. :)சைனீஸ் மஞ்ச்சூரியன் அடுத்து ட்ரை செய்யலாம்ன்னு இருக்கேன்.. மத்த இரெண்டு பேரு ஹாட் அண்ட் ஸ்வீட், யோஹார்ட் மிண்ட் சட்னியாம் அதான் யோசனையா இருக்கு .. :))

சென்ஷி said...

கவலையேப்படாதீங்கக்கா!

ஹிப்போ பத்தி யாராச்சும் எனக்கு ஃபார்வர்ட் மெயில் அனுப்பினா முதல் வேலையா உங்களுக்கே அனுப்பி வைக்கறேன்.

நான் Laysக்கு நலம் விரும்பி :-)

சென்ஷி said...

//சைனீஸ் மஞ்ச்சூரியன் அடுத்து ட்ரை செய்யலாம்ன்னு இருக்கேன்.. //

ஓஹ்.. அதை நீங்க இன்னும் சாப்பிட ஆரம்பிக்கலையா. ச்சீக்கிரம் ஆரம்பிங்க..

பட் உள்ளே புழுவோட சேர்த்து பொறிச்சுடப்போறாங்க.. விசாரிச்சு கேட்டுட்டு சாப்பிடுங்க :)

(ஃபார்வர்ட் மெயிலை விட பின்னூட்டத்துல பயமுறுத்தறது சூப்பரா இருக்குதே)

ராமலக்ஷ்மி said...

இதுவும் Baked Crackers-தான். டயட்ல இருக்கவங்க பயப்படாம சாப்பிடலாம். மிண்ட், டொமட்டோ, ப்ளெயின் சால்டட்னு நிறைய வெரய்ட்டி.

//சைனீஸ் மஞ்ச்சூரியன் அடுத்து ட்ரை செய்யலாம்ன்னு இருக்கேன்.. மத்த இரெண்டு பேரு ஹாட் அண்ட் ஸ்வீட், யோஹார்ட் மிண்ட் சட்னியாம் அதான் யோசனையா இருக்கு .. :))//

ஆகா கேட்கவே நல்லாயிருக்கே?
ஹி வீட்ல உட்கார்ந்து இதான் வேலை நமக்குன்னு நினைச்சுக்கப் போறாங்க எல்லோரும். பின்னே நாம தெம்பா இருந்தாத்தானே...இத்யாதி இத்யாதி..))?

சென்ஷி said...

ஊர்ல என்னோட ஃபேவ் குர் குர்ரேதான் - ஜூஹி சாவ்லாவோட குடும்ப மகிழ்ச்சியை பிரதி எடுத்துக்க நானும் அதை சாப்பிட ஆரம்பிச்சேன் :-)

ராமலக்ஷ்மி said...

சென்ஷி, நான் சொல்லியிருக்கும் Aliva கூட குர்குரே செய்யறவங்களோட தயாரிப்புதான்:)!

Jeeves said...

முடிஞ்ச வரைக்கும் குர்ர்குர்ரே, லேய்ஸ் தவிர்த்திடுவோம் வீட்ல. பிஸ்கட்டும் கூட எப்பவாச்சும் தான்.

பாப்போம்.. ஹிப்போ கிடைக்குதான்னு.. அப்புறம் உங்களுக்கு பதில் சொல்றேன்

goma said...

ஹிப்போ சாப்பிட்டா நம்ம ஹிப் என்ன ஆகும்னு சொல்லவே இல்லையே.
எதற்கும் இன்ச் டேப் கையில் வைத்துக் கொண்டு சாப்பிட்டு பார்க்கலாம்.
அது சரி நீங்களும் ராமலஷ்மியும் என்னன்னவோ புது புது தீன்னீக்களை வழி மொழிகிறீர்கள் எங்கே கிடைக்கும்னு சொன்னா நல்லது

சென்ஷி said...

என்ன ஆனாலும் நம்ம ஊரு வெங்காய பக்கோடா டேஸ்ட்டுக்கு கிட்டக்க வந்ததில்லைங்கறதால நான் அதுக்கும் இங்க தனியா வோட்டுப் போட்டுக்கறேன் :)

வல்லிசிம்ஹன் said...

உப்பில்லாத ரொட்டித் துண்டுகளா. இங்க கிடைக்குமா. அதுவும் வீட் ப்ரெட்!!
எனக்கு வேணும் வேணும்
பயப்படாதீங்க. சாப்பாட்டு நேரம் வந்தா இப்படி ஆகிடறேன் நான்:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி வெங்காயப்பக்கோடா வெங்காயப்பக்கோடா தான்.. நாங்க சின்னப்பிள்ளையா இருக்கிறப்ப சாயாங்காலம் காசு வாங்கிட்டுபோய் சிங்கமடை அய்யனார் ஸ்வீட் ஸ்டாலில் பொட்டலம் வாங்கி சாப்பிடுவோம்...

பொய் மிரட்டலுக்கு நாங்க பயப்ப்டமாட்டோம் சென்ஷி ஏன்னா நீதான் லேஸ் நலவிரும்பின்னு சொல்லிட்டியே..
------------------------
ஓகே ராமலக்‌ஷ்மி அது எங்கே கிடைக்குதுன்னு பாக்கறேன்..ஹிப்பொ கொஞ்ச நாளாத்தான் எங்க கடைகளில் அடுக்கி வைக்கிறாங்க..
---------------------
ஜீவ்ஸ் குர்குரே லேஸ் தவிர்த்தாலும் பிஸ்கெட் எல்லாம் தவிர்க்கவேமுடியறதில்ல.. அள்ளிபோடுறதில் முதல் லிஸ்ட் பிஸ்கட் லிஸ்ட் தான்..

----------------
கோமா இதெல்லாம் இந்த ப்ரெட் சிப்ஸ், கேக் விக்கிற பக்கத்துக்கடையில் தான் விக்கிறாங்க..புது ஐயிட்டம்ங்கறதால் வெளியே அதுக்குன்னே ஒரு ஹிப்போ வச்ச செல்ஃப் வச்சிருந்தான் அதுல அடுக்கி இருந்தது. முதல்ல 5 ரூ க்கு பேக் இருந்ததாம்.. இப்ப பத்து ரூபாய் பேக் மட்டும் தான் வாங்கி வைக்கிறார்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உப்பில்லாத ரொட்டித்துண்டா நல்லாக் கேட்டீங்க வல்லி ..உப்பும் உறைப்புமா ஃப்ளேவரோட இல்லை இது இருக்கு.. பாத்து சாப்பிடுங்க.. :))

SanjaiGandhi™ said...

:)

☀நான் ஆதவன்☀ said...

//வாங்கச் சென்றால் ”அம்மாக்கு இது ஒன்று” என்று நானே எடுத்துக்கொள்கிறேன். /

:))))

ஆஹா பின்னூட்டமெல்லாம் கலக்குதே :)

க.பாலாசி said...

இப்போ ஹிப்போவா....ரைட்டு நடத்துங்க...

ஆனாலும் முறுக்கும், சீடையும் மறந்துபோச்சே....

சென்ஷி said...

// முத்துலெட்சுமி/muthuletchumi said...

உப்பில்லாத ரொட்டித்துண்டா நல்லாக் கேட்டீங்க வல்லி ..உப்பும் உறைப்புமா ஃப்ளேவரோட இல்லை இது இருக்கு.. பாத்து சாப்பிடுங்க.. :))//

அதானே... கவரைத் திறந்ததுமே மேல சிவப்பு சிவப்பா மிளகாய்ப்பொடித்தூள் ஒட்டிட்டு இருக்கறதப் பாத்து நாக்குல எச்சி ஊற ஆரம்பிச்சுடுமே....

அமிர்தவர்ஷினி அம்மா said...

:))) தலைப்பு மிகப்பொருத்தம் பதிவுக்கு

☼ வெயிலான் said...

அட! நானும் எங்கம்மாவிடம் தின்பண்டத்துக்கு என்னமாச்சும் இருக்காம்மா? என்றபடியே தான் வீட்டுக்குள் நுழைவேன்.

சந்தனமுல்லை said...

ஹிப்போக்கு ஹுர்ரேவா! :-))

அமுதா said...

ஹிப்போ!!! ம்... ட்ரை பண்றேன். ராமலஷ்மி மேடம் சொன்ன அலைவா இப்ப தான் எங்க வீட்ல நுழைஞ்சு எனக்கும் என் சின்னதுக்கும் ஃபேவரைட் ஆய்டுச்சு

அண்ணாமலையான் said...

ஹிப்போ எங்கெல்லாம் கிடைக்கும்?இப்போ?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சஞ்சய்..
----------------
ஆமா ஆதவன் பின்னூட்டமெல்லாம் அசத்தலா வருது ;) ரசிச்சிச்சிட்ட்ருக்கேன்
-----------------------------
பாலாஜி முறுக்கு சீடைக்கெல்லாம் சில சீசன் இருக்கு.. இதுக்கெல்லாம் நோ சீசன்..
:)
-------------------------------
வாங்க அமிர்தவர்ஷினி அம்மா.. எழுதி முடிச்சதும் தோணுச்சு.. நானே என்னமா தலைப்பு வச்சிட்டே முத்துன்னு என்னை பாராட்டிட்டிருக்கேனாக்கும் ஹிஹி..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வெயிலான் ஒரு வேளை என்னமாச்சும்ங்கரது நம்ம ஊரு வழக்கமோ ? :)
------------------------
ஆமா முல்லை அந்த படத்துல இருக்கிறமாதிரி ஈஸி ஹிப்போ வரையச் சொல்லிக்குடுங்க உங்க பப்புவுக்கு :)
------------------------------
அமுதா அலைஞ்சாவது அந்த அலைவாவை கண்டுபிடிச்சிடறேப்பா :)
---------------------------------
அண்ணாமலையான்.. ரைமிங்கா கேட்டுருக்கீங்க.. :)
இப்போதைக்கு எனக்கு
தெரிஞ்சு டில்லியில் கிடைக்குது.. பார்லே அக்ரோக்கு மெயில் போட்டு கேட்ட்ருவோம் எங்கல்லாம் கிடைக்குதுன்னு :)

SurveySan said...

good timing.

நொறுக்குத்தீனி சாப்பிட்டுக்கிட்டே பதிவுகள் மேயும்போது இது கண்ணில் பட்டது.

என் சமீபத்திய ஃபேவரைட், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கடையிலிருந்து வாங்கிய வேர்கடலை ஃப்ரை. இன்னா டேஸ்ட்டு.. அசத்தல் :)

sindhusubash said...

ஐயோ இப்படி டயட்ல இருக்கும்போதா இப்படி சாப்பிடற பொருட்களை பத்தி தெரியணும்!!!!

லேஸ் ல வர்ற யோகர்ட் வித் பிளாக் பெப்பரும்,பாப்ரிக்கா வும் ..சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம்ம்ம்.

ராமலக்ஷ்மி said...

SurveySan said...

//வேர்கடலை ஃப்ரை//

சர்தான்:)! ஹிப் ஹிப் ஹிப்போதான்:))!!

ஆயில்யன் said...

//என்னமாச்சும் இருக்காம்மா?? //

வாவ்! :))

யம்மா என்னம்மா இருக்கு திங்கிறதுக்கு ஆரம்பிச்சு என்னமாச்சும் கொடுவு வரைக்கும் நச்சரிக்க உபயோகப்படுத்திய வார்த்தைகள் திரும்ப வந்துப்போச்சு!

சூப்பரூ!

Anonymous said...

:))))))))

SUFFIX said...

//நாங்கள் சின்னவயசா இருக்கும்போது நொறுக்குத்தீனிய “என்னமாச்சும்” ந்னு சொல்வோம்//

அப்படியா எங்க ஊரு பக்கமும் இதே மாதிரி தான் 'என்னமாச்சும்னு' கேட்போம், ஏமாற்றாமல் முறுக்கு, கடலை, பனியாரம் மாதிரி என்னமாச்சும் நிச்சயம் கிடைத்து விடும், இப்பொ என்னமாச்சும்னா 'பிஸ்கெட்' தான் பெரும்பாலும் வருது, காலம் மாறிப்போச்சு. என்னோட ஃபேவரைட் லேஸ் தான், புதுசா 'ஃபேன்டசின்னு' வந்துச்சு, அதே லேசோட ஆனா நல்லாவே இல்லை, ஹிப்போ இன்னும் இங்கு வரலை (ஜித்தா, சவூதி அரபியா), வந்துருச்சுன்ன உங்க பேர சொல்லி ஒன்னு வாங்கி சாப்பிடுறேங்க‌.

இயற்கை நேசி|Oruni said...

எஞ்சாய், ஏதாவது கண்டுபிடிச்சு சொல்ற வரைக்கும் :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சர்வேசன் வறுத்தகடலை எனக்கும் பிடிக்கும். சிங்கமடையில் நான் என்னல்லாம் வாங்குவேன்னு ஒரு லிஸ்ட் வேணா குடுத்துடறேன்..

வறுத்த க்டலை, கடலை பக்கோடா, கடலைப்பருப்பு வறுத்து காரம் போட்டது, வெங்காயப்பக்கோடா.... இப்படி பெரிய லிஸ்ட் இருக்கு.. ஹ்ம்.. அதெல்லாம் இங்க வாங்க கொஞ்சம் தூரம் போகனும்.. :)
---------------
சிந்து , சாரிப்பா.. என்ன செய்ய லேஸ் எனக்கு பிடிக்கவே இல்லை..
கொஞ்ச நாள் முன்ன ஒரு பொண்ணு சிப்ஸ் தின்னுட்டு முத்தம் பறக்கவிட்டு பையன் ஒருத்தன் சட்டை எரியுமே அந்த விளம்பரம் பாத்த அடுத்த நாள் பையன் அது வாங்கிட்டான் க்டையில் அதான் வேணும்ன்னு ;))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ஆயில்யன் :)
------------------------------------
நன்றி மயில்:)
------------------------
ஷஃபி நீங்க நெல்லையா.. :)
இப்ப என்னமாச்சும் செய்ய எல்லாம் நேரமும் இல்லை.. மெனக்கெடவும் முடியறதில்லை வருத்தம் தான் :(
---------------------
நன்றி இயற்கை நேசி :)

தமிழ் பிரியன் said...

ஹைய்யா.. எங்க வீட்லயும் என்னாமாச்சும் இருக்கான்னு கேட்டுக்கிட்டே தான் வருவோம்.. :-)))

ஓமன் சிப்ஸ்ன்னு ரொம்ப நாளா வாங்கி சாப்பிடும் சிக்கனமான பாக்கெட் இங்க கிடைக்கும்.. சூப்பரா இருக்கும். மத்த அயிட்டெமெல்லாம் சாப்பிட்டதில்லை.

ஹுஸைனம்மா said...

எங்க வீட்லயும் என்னமாச்சும்தான். ஸ்நேக்ஸை இல்லை; சாப்பாட்டையும்தான். சாப்பிட எதாவது கிடைச்சாலே பெரிய விஷயம் எங்க வீட்டில.

அப்புறம் இந்த பேக்ட் பிரட்ஸ் இங்கயும் பல ஃப்ளேவர்கள்ல கிடைக்குது. டேஸ்ட்டாவும் இருக்கும். ஆனா இதுலயும் ஏதோ ப்ரிஸர்வேடிவ்ஸ், கெமிக்கல்ஸ் எல்லாம் சேர்க்கிறாங்களாம் சுவைகூட்ட.

(மெயில் வர்ற வரைக்கும் ஏன் உங்களை காக்க வைக்கணும்னுதான் பின்னூட்டத்திலேயே...ஹி..ஹி..)

ஹுஸைனம்மா said...

இது போல ஹெல்தி & டேஸ்டியா வீட்டிலேயே செய்ய ஒரு சிம்பிள் வழி: (பிரவுன்) ப்ரட்டை சிறு துண்டுகளா நறுக்கி சூடான தவாவில் இருபுறமும் போட்டு எடுத்து, அதன்மீது மீதமுள்ள குழம்பு அல்லது ஊறுகாய் அல்லது சாஸ் அல்லது மயோனைஸ் அதுவும் இல்லைன்னா மிளகாய்த்தூள்+உப்பு... உங்க சாய்ஸ்தான்..

இதுல என்ன சிம்பிள்ன்னா, ரங்கமணி(தான்)கூட ஈஸியாச் செய்யலாம்.

கோபிநாத் said...

;)))

நசரேயன் said...

வியாபார உக்திஎல்லாம் பலமா இருக்கு.. சாப்பிட்டா என்ன ஆகுன்னு சொல்லவே இல்லை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி தமிழ்பிரியன் ----------------- ஹூசைனம்மா நல்லா பயமுறுத்திறீங்க ..அப்பறம் ஐடியாவும் குடுக்கறீங்க நன்றி ------------------ நன்றி கோபி ----------------------- நசரேயன் சாப்பிட்டா என்னாகும்ன்னு இப்பவரை ந்யூஸ் எதும் வரலை..ப்ராடக்ட் வந்து கொஞ்ச நாள் தான ஆகுது.. இதுக்கு போட்டிக்கம்பெனி எதும் இன்னும் வரல வந்தா புரளி வருமா இருக்கும். :)

ஷங்கி said...

”என்னமாச்சும்” மலரும் நினைவுகள்...
அந்த என்னமாச்சும் நொண்ணமாச்சும் ஆகிரும் அம்மா கோவத்திலிருந்தா..

தியாவின் பேனா said...

ஆகா அருமை

சிங்கக்குட்டி said...

என்னெனவோ சொல்றீக நமக்குதான் ஒன்னுமே புரிய மாட்டேன்கிறது :-)

hayyram said...

gud

regards,
ram.

www.hayyram.blogspot.com

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

நமக்கு இந்த ஹிப்போ, டிப்போலாம் தெரியாதுங்க! இப்பவும் எப்பவும் மதிய சாப்பாட்டுக்குப் பிறகு கடலை மிட்டாய் தானுங்க! அதுல உணவை ஜீரணிக்க வைக்கிற சக்தி இருக்குதாம்... கொழுப்பும் இருக்காதாம். ட்ரைப் பண்ணிப் பாருங்களேன்!

Mrs.Faizakader said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
என்றும் நட்புடன்
http://eniniyaillam.blogspot.com/

மாதேவி said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மலர்ந்திருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் சகல நலன்களையும் அள்ளித் தரட்டும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஷங்கி ஆமாமா சாப்பாடு ஒழுங்கா சாப்பிடாதே அப்பறம் நொண்ண்மாச்சும்ன்னு வந்தேன்னா பாருன்னு திட்டு விழும் :))

--------------------
தியாவின் பேனா நன்றீங்க..
---------------------
என்ன போங்க சிங்ககுட்டி கொரியால இதெல்லாம் நீங்க வாங்கி சாப்பிடறதில்லயா.. :)
------------------
ஹேராம் உங்க பதிவுக்கு வாழ்த்துக்கள்
----------------------------
வத்திராய்ப்பு கவுதமன் .. நிறைய பேரு கடலைமிட்டாய் சாப்பிடறதை பாத்திருக்கேன்.. இங்கே நேரம்ன்னு இல்லாம எப்பன்னாலும் எடுத்து சாப்பிடறது தான்..இப்படி ஒரு காரணம் இருக்குன்னு இப்ப தெரிஞ்சுகிட்டேன்..நன்றி
------------------------------
திருமதி ஃபைசா மற்றும் மாதேவி இருவரின் வாழ்த்துக்கும் நன்றீ.. உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்..
----------------------------------