March 18, 2010

வீட்டைக்கட்டிப்பார்!

வீட்டைக் கட்டிப்பார்! அதுவும் கூகிள் ஸ்கெட்ச் அப் பில் கட்டிப்பார் !சரி நான் இணையத்தில் கட்டிய விர்ச்சுவல் வீட்டை நீங்க சுற்றிப்பாருங்க..

கூகிள் ஸ்கெட்ச் அப் உதவியோடு வீட்டில் நடக்கும் கட்டிடவேலைகளில் எப்படி இருக்கவேண்டும் என்கிற மாடலை கொத்தனாருக்கு விளக்க வரையத் தொடங்கினேன். மிக சாதாரணமான ஒரு அவுட்லைனை முதலில் அவருக்கு காண்பித்த பின்னரும் வீடு மாடல்களை வரைவதில் பொழுது போக்கியதில் கொஞ்சமே கொஞ்சம் முன்னேற்றம் வந்திருக்கிறது. கூகிளில் ஸ்கெட்ச் அப் டிசைனிலும் வீடு கட்டுவதும் கடினம் தான். ஒரு இடத்தை தூக்கினால் வீடே ஸ்டார் மாதிரி நீட்டித்துக்கொள்ள ஆரம்பித்துவிடுகிறது.


சில டிப்ஸ்களை வாசித்து ஒருவழியாக இதுவரை வளர்ந்திருக்கிறது கூகிளார் வீடு. http://www.esnips.com/displayimage.php?pid=3689309 முதல் தளத்தில் இருக்கும் வீடு பற்றி வரைந்திருக்கிறேன். மேல் வீடு கீழ் வீடுன்னு டீட்டெய்லா வரையல.. சுற்றி வரும் வரும்போது வீட்டின் உள் பகுதியும் தெரியும் படியாக காண்பித்திருக்கிறேன். மேல் வீடு கீழ் வீடு நடுவில் மாட்டிக்கிட்டு மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடிவாங்கறதுக்கு ரிலாக்சேஷனாக, ஃபேஸ்புக்கில் மக்கள் விளையாடுவது போல எனக்கு இது பொழுது போக்க உதவுகிறது.


சிறிது நாட்களுக்கு முன் இந்த வீடியோவை என் ஸ்டேட்டஸில் வைத்திருந்தேன் பார்க்காத மக்கள் இதையும் பாருங்கள். மிகச்சிறிய வீடியோ தான்.

49 comments:

சந்தனமுல்லை said...

அட..அட..அட...கலக்குறீங்கப்பா!

தமிழ் பிரியன் said...

ஜூப்பரா இருக்கே.. :)

புதுகைத் தென்றல் said...

எனக்கும் உதவியாய் இருக்கும். நன்றி கயல்

☀நான் ஆதவன்☀ said...

வாவ்!!! சூப்பரா இருக்குக்கா :))

Anonymous said...

படத்தில் வர்ற மாதிரி ஒன்றரை நிமிஷத்தில் செய்ய முடிந்தால் இன்னும் நன்றாக இருக்கும் :)

.:: மை ஃபிரண்ட் ::. said...

Google Sketch ரொம்ப நாளா ட்ரை பண்ணனும்ன்னு நெனசிட்டு இருந்தேன். சரியா நேரம் கிடைக்கலை. இனி கண்டிப்பா ட்ரை பண்ணனும். :-)

தமிழ் பிரியன் said...

வீட்டுக்கு வெளியே மஞ்சள் பெயிண்ட் நல்லா இல்லியே.. பச்சைக் கலர் நல்லா இருக்குமே? ஹிஹிஹி

சங்கத்திற்கு ஆள் சேர்ப்போர் சங்கம்..
தோஹா - கத்தார்

தமிழ் பிரியன் said...

\\\ .:: மை ஃபிரண்ட் ::. said...

Google Sketch ரொம்ப நாளா ட்ரை பண்ணனும்ன்னு நெனசிட்டு இருந்தேன். சரியா நேரம் கிடைக்கலை. இனி கண்டிப்பா ட்ரை பண்ணனும். :-)\\\

யாருங்க இது புச்சா இருக்கு... கண்டிப்பா டிரைப் பண்ணி பாருங்க.. இனி நிறைய தேவைப்படும்.. ;-))

.:: மை ஃபிரண்ட் ::. said...

@தமிழ் பிரியன் அண்ணா,

வீடு கட்டியாச்சு.. நாங்க கொஞ்சம் ஃபாஸ்ட்டு இல்ல.. ;-)

நட்புடன் ஜமால் said...

சிறு முயற்சியே இவ்வளவா

நல்லது

பொழுது போக்குவது மட்டுமல்லாது, ப்ர்யோஜனமாகவும் இருக்கும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முல்லை நன்றிப்பா..
----------
நன்றி தமிழ்பிரியன்..பச்சைக்கலரெல்லாம் அடிக்கமுடியாது..இங்க எல்லா வீடும் ஒரே கலரில் தான் இருக்கும் மஞ்சக்கலரில் :)
--------------
தென்றல் வீடு இண்டீரியர் டெக்கரேசனுக்கு கூட இதை பயன்படுத்தலாம்ப்பா.. எஙக் எதை வைக்கனும்..ன்னு..
பயன்படுத்திப்பாருங்க
-------------
சின்னம்மிணி நுணுக்கத்தை புரிஞ்சுகிட்டா 5 நிமிசத்துல வரைஞ்சுடலாம்.. கத்துக்கும்போது தான் கஷ்டம் ..புரிஞ்சுடுச்சுன்னா இது ரொம்பவே ஈஸி .. நானே செய்துட்டேன்ல.. :)

---------------
நன்றி ஆதவன் உங்க ஊக்கமெல்லாம் தான் சிறுமுயற்சிக்கு வழிகாட்டி.
-----------------------
மை ப்ரண்ட் கண்டிப்பா ட்ரை செய்யுப்பா .. அந்த ஃபார்ம் வில்லிய விட சேலஞ்சிங்க் தான்.. :)

அன்புடன் அருணா said...

சூப்பர் முயற்சி!!!

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்த்துகள்.புதுவீடு குடிபோகும்போது சொல்லிவிடுங்க

:)

goma said...

எனக்கும் இதைப்போல் எக்ஸ்பெரிமெண்ட் ரொம்ப இஷ்டம்...நானும் செய்துபார்க்கிறேன்
நன்றி

அநன்யா மஹாதேவன் said...

இந்த டூல் பத்தி எனக்கு தெரியாது. அருமையான தகவல். டாங்க்ஸ்பா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ஜமால்.. இதை வச்சி ஓவ்வொருத்தர் ஒரு விர்ச்சுவல் ஊரே செய்யும்போது இது சிறுமுயற்சிதானே..

------------------------
நன்றி அருணா..
---------------
நன்றி அப்துல்லா..இருக்கறவீட்டில் தான் நடக்குது வேலை ..
--------------------
கண்டிப்பா செய்துபாருங்க கோமா..
எங்களுகும் அதை காண்பிங்க ..
--------------------------

அநன்யா ,ஓசியில் கிடைக்கிற டூலெல்லாம் தெரிஞ்சு வச்சிக்கனும் கண்டிப்பா.. ;))

KarthigaVasudevan said...

வீடு நல்லா இருக்கு. கூகுள் sketch up ட்ரை பண்ணிட்டு அதை விட தக்காளி கெச் அப் பண்றது ஈசியா இருக்கும் போலன்னு விட்டுட்டேங்க நான் .
:))

ஆயில்யன் said...

சிறு முயற்சி ஜெயித்துவிட்டது :)

மேலும் மேம்படுத்தும் முயற்சிகளை தொடருங்கள் !

விக்னேஷ்வரி said...

இந்த லின்க் நல்லா இருக்கு. இனி நானும் வீட்டைக் கட்டிப் பாக்குறேன். :)

ராமலக்ஷ்மி said...

அருமையான தகவல். பொறுமையாகக் கற்றுக் கொண்டு அசத்தியிருக்கிறீர்கள்.

//எஙக் எதை வைக்கனும்..ன்னு..
பயன்படுத்திப்பாருங்க//

ஆமாம், இதற்கு நிச்சயம் உபயோகமாகும். நன்றி முத்துலெட்சுமி.

துளசி கோபால் said...

very nice

முகுந்த் அம்மா said...

கூகிள் ஸ்கெட்ச் ல இதெல்லாம் பண்ணலாமா!! நெறைய research செய்றீங்க போங்க. வீடு சூப்பர் ஆ வந்து இருக்குங்க. நான் கூட ஒரு வீடு கட்டலாமுன்னு இருக்கேன். (கூகிள் ஸ்கெட்ச் ல தான்)

கோமதி அரசு said...

//சுற்றி வரும் போது வீட்டின் உள் பகுதியும் தெரியும் படியாக காண்பித்திருக்கிறேன்.//

சூப்பராக வீட்டை சுத்திக் காட்டி உள்ளீர்கள்.

சிறு முயற்சிக்கு வாழ்த்துக்கள்!!

க.பாலாசி said...

கஷ்டமாத்தான் இருக்கும்போல....

Thekkikattan|தெகா said...

அடேஏஏஏஏங்கப்பா... சுய ஆர்வத்தில இம்பூட்டு வளர்ச்சியா?? அப்போ வீட்டிற்கு ப்ளூ ப்ரிண்ட் வரைய ஆள் கிடைச்சாச்சியோவ்வ்வ்வ்... :)

Chitra said...

வூடு கட்டி அடிக்கிறாங்க......... நல்லா இருக்கு.

சேட்டைக்காரன் said...

இப்படியெல்லாம் சங்கதி இருக்குதா என்ன? அசத்தல்!!!

நசரேயன் said...

//Chitra said...

வூடு கட்டி அடிக்கிறாங்க......... நல்லா இருக்கு.
.//

ஆமா .. ஆமா

கபீஷ் said...

Thanks for sharing. Will try.

அக்பர் said...

அருமையான தகவல் ரொம்ப நன்றி.

கோபிநாத் said...

நல்ல முயற்சி...;)

ஆனா டக்குன்னு பார்க்கும் போது எங்க factory மாதிரி தெரியுது ;-)

ராஜ நடராஜன் said...

நான் 131ங்க மேடம்!

ஸ்கெட்ச் மாதிரி ஒரு வீடு கட்ட சுமார் எவ்வளவு செலவாகும்?

எங்கேன்னு கேட்கலையே!நிலா.இடம் குறைஞ்ச விலைல கிடைக்கிற போதே வாங்கிப் போடறது நல்லதில்லீங்களா:)

செல்வநாயகி said...

கலக்குறீங்கப்பா!

மின்னல் said...

முதலில் முயற்சிக்கு வாழ்த்துகள்.இதை கொத்தனார் புரிந்து கொண்டாரா?

அப்பாவி தங்கமணி said...

சீக்கரமா வீடு கட்டி முடிக்க வாழ்த்துக்கள்...கூகிள்லில் மற்றும் நிஜத்திலும். நல்லா இருக்குங்க

subalalitha said...

கூகுள் ஸ்கெட்ச் பற்றி தெரிவித்ததற்கு மிக்க நன்றி..புதிய வீட்டிற்கு என் வாழ்த்துக்கள் ...

காரணம் ஆயிரம்™ said...

//ஸ்கெட்ச் மாதிரி ஒரு வீடு கட்ட சுமார் எவ்வளவு செலவாகும்?

Google Sketchup - லைஸன்ஸ் கேட்கிறதே? இதென்ன புது கலாட்டா? கூகிளிடமிருந்து எதையும் இலவசமா எதிர்பார்க்கிறதுதானே வழக்கம்?

அன்புடன்
கார்த்திகேயன்
http://kaaranam1000.blogspot.com

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கார்த்திகா, :) அப்ப எனக்கு தக்காளி கெச்சப் செய்யறது கஷ்டமோ ?
-----------------------------
ஆயில்யன் , வீட்டுக்குள்ள பர்னீச்சர் , பக்கத்துல மரம்ன்னு காம்பொனெண்ட் சேர்க்கும் முயற்சியில் இருக்கேன் .:) நன்றி
------------------------------------
அதே அதே விக்னேஷ்வரி வீட்டைக்கட்டிப்பாருங்க.
-----------------------------
நன்றி ராமலக்‌ஷ்மி
-----------------------------
நன்றி துளசி
--------------------------
நன்றி முகுந்தம்மா உங்களளவு நான் ரிசர்ச்சர் இல்லைங்க :)
-------------------------------
நன்றி கோமதிம்மா
----------------------------
க.பாலாசி .. அப்படில்லாம் சொல்லக்கூடாது .. முதல்ல ட்யூட்டோரியல் வீடியோக்களை நல்லா கவனிச்சு பார்த்தீங்கன்னா ..நல்லாவே செய்யலாம்..
----------------------------
நன்றி தெகா.. செய்துடலாம்..
-------------------------------
நன்றி சித்ரா
---------------------------------
நன்றி சேட்டை
----------------------------
நன்றி நசரேயன்
----------------------------
நன்றி கபீஷ்
----------------------------
நன்றி அக்பர்
----------------------------
நன்றி செல்வநாயகி
----------------------------
ராஜநடராஜன் 131 ந்னா என்ன?
----------------------------
கோபி உள்ள பொருள் இல்லாத வீடு சத்திரம் பேக்ட்ரி மாதிரி தான் இருக்கும்.. :) என் தம்பி கல்யாணம் ஆன புதுசுல என் வீட்டை சத்திரம் மாதிரி இரூக்குன்னான் இப்ப எடம் பத்தல வீட்டுல அத்தன சாமான் :(
---------------------------------
மின்னல்.. கொத்தனார் புரிஞ்சுகிட்டாருங்க.. :) என்ன மனசுக்குள்ல நினைச்சிருப்பார்.. பயங்கர பந்தா தான் இந்தம்மாக்குன்னு.. :)
------------------------------
நன்றி அப்பாவி..
----------------------------
நன்றி லலிதா
------------------------
காரணம் 1000 .. நானோ மற்றவர்களோ டவுன்லோட் செய்யும் போது அப்படி எதும் லைசென்ஸ் கேக்கலையே.. ப்ரீ தாங்க அது. மேபி எந்த வெர்சன்னு இருக்குமா இருக்கும் பாருங்களேன்..

யாழினி said...

நல்லாயிருக்குக்கா..

கண்ணா.. said...

நல்ல பகிர்வு.

நானும் டவுண்லோட் டிரை செய்தேன். வரவில்லை :(

3D home architect இதை விடவும் எளிதாகவும், நல்லாகவும் இருக்குமென நினைக்கிறேன்

மதார் said...

இப்படி ஒரு சாப்ட்வேர் இருக்கா? நானும் ட்ரை பண்ணி பாக்குறேன் . வேற சிவில் சாப்ட்வேர் இருந்தா சொல்லுங்க சிவில் மக்களே . QC PLAN இல்லாம வேற ஏதும் Quantity எடுக்குற சாப்ட்வேர் இருக்கா ? ஒரு ஸ்கூல் டிராயிங் குடுத்து என் உயிரை வாங்குறாங்க. மேனுவலா எடுத்தா அது லேட் ஆகும் . எனக்கு சீக்கிரம் முடிக்கணும் .

மங்கை said...

கலக்கல்
அசத்தறீங்கப்பா

//கோபிநாத் said... நல்ல முயற்சி...;) ஆனா டக்குன்னு பார்க்கும் போது எங்க factory மாதிரி தெரியுது ;-)//

இது குசும்பு..:)

பாச மலர் said...

நல்லாருக்கு முத்து...நல்ல பயனுள்ள பொழுதுபோக்குதான்....இன்னும் நிறைய இது போல் சொல்லுங்க..உங்க முயற்சிக்கு கிடைக்கும் பலனை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்...

SUFFIX said...

நல்ல முயற்சி, நானும் ட்ரை பண்ணுறேன். உபயோகமான ஒன்றை தெரிஞ்சிக்கிட்டேன்.

Deepa said...

http://deepaneha.blogspot.com/2010/03/blog-post_24.html

தொட‌ர்ப‌திவுக்கு அழைத்திருக்கிறேன். இய‌ன்ற‌ போது எழுத‌வும்!

அன்புட‌ன்,
தீபா

(வீட்டுக்குப் போய் உங்க வீட்டைச் சுத்திப் பாக்கறேன். :))

அப்பாவி தங்கமணி said...

அடுத்தது எப்போ? உங்களுக்கு ஒரு தொடர் பதிவுக்கு அழைப்பு வெச்சு இருக்கேன். போய் படிச்சுட்டு சட்டு புட்டுன்னு பதிவ போடுங்க

KABEER ANBAN said...

அட இப்படி ஒரு மென்பொருள் இருக்குதா? கண்டுபிடிச்சு சொன்னதுக்கு ரொம்ப நன்றி.

சீக்கிரமே இதையும் ட்ரை பண்ணிடணும்:)

உங்க வீடும் சூப்பர். முதல் மாடி எப்ப கட்ட போறிங்க ?

Anonymous said...

சரிதான் தா அந்த கூகிள் ஸ்கெட்ச் அப் 490 டாலர் கொடுத்து வாங்கினாயா என்ன?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அனானி அவர்களே.. நான் காசு குடுத்து வாங்கி எல்லாம் செய்யலைங்க..அது ஓசில குடுக்கிறாங்கன்னு டவுன்லோட் செய்து வச்சதுங்க.. ஓசி வெர்சன் இருக்கும் .