April 27, 2010

வானவில் இற்றைகள்

சந்தனமுல்லையின் குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் அறிவிப்பின் மூலம் சபரிக்கு ஹரீஸ் என்கிற நண்பன் கிடைத்திருக்கிறார். அவருக்காக எதாவது படம் அனுப்பும்படி கேட்டிருந்தேன். எப்போதெல்லாம் சபரியின் கணினி நேரம் வருமோ அப்போதெல்லாம்

“இரு இந்த விளையாட்டுக்கு அப்பறம்” என்று என்னை திசை திருப்பிவிடுவான்.
பின் எப்போதெல்லாம் அவன் அக்காவுக்கோ எனக்கோ கணினி நேரம் வருமோ அப்போதெல்லாம்
“அம்மா , ஹரீஸ் ஃப்ரண்டுக்கு படம் வரையனும்ன்னு சொன்னியே எப்ப வரைய? “ என்று சாமர்த்தியமாகக் கேட்டுக் கொண்டிருப்பான். இருந்தும் எப்படியோ கொளுத்தும் வெயிலால் இந்த கோடை விடுமுறையானது வழக்கம்போல மே 15 தேதிக்கும் மேல் தொடங்கவேண்டியது இந்தமாதமே தொடங்கிவிட்டது. இதனால் ஹரீஷுக்கு படம் வரைந்து விட்டான்.

நிஜத்தில் தான் வெயில் கொளுத்துகிறது.இங்கே படத்தில் மழையும் வெயிலும் அடித்து வானவில்லும் வந்து விட்டது.


--------------------------------------------
விடுமுறை தொடங்கியது. வெயிலில் சிவந்து வந்து இறங்கும் குழந்தைகளைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. ஆனால் உண்மையில் நீதான்மா பாவம் என்று மகள் முதல் நாளே சொல்லிவிட்டாள். போர் போர் போர் என்று போர் தொடுப்பான் சபரி. அவனுக்கு காலையில் எழுந்ததுமே போர் அடிக்கத்தொடங்கிவிடும். கணினி விளையாட்டு, கார்டூன் இவற்றுக்கு நடுவில் இவனுடைய தோழர்கள் யாருக்கும் விடுமுறை இன்னும் கிடைக்காததால் அடைபட்டு கிடக்கிறான்.
மாலையில் பூங்காவில் சிறிது விளையாட்டு. வீட்டில் நடக்கும் பெயிண்ட்டிங் வேலைகளை மேற்பார்வையும் நடக்கிறது.

--------------------------------------------
டைக்வாண்டோ சேர்ந்து மூன்று மாதமாகிறது.
மஞ்சள் பட்டைக்காக (yellow belt) நடந்த தேர்வில் தனக்கு பாராட்டு கிடைக்கவில்லை என்று வந்து சொல்லிக்கொண்டிருந்தான். அன்றே கையில் பட்டை கிடைக்காததால் எனக்கு கிடைக்கவில்லை என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தான். மாஸ்டரிடம் விசாரித்ததில் B+ கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த தேர்வுகளுக்கு முன்பே அக்காவின் வாயால் பாராட்டு கிடைத்துவிட்டது.

“அம்மா இவனை டைக்குவாண்டோ சேர்த்தே இல்லை. நல்ல வித்தியாசம் தெரியுதும்மா”
“அப்படியா ?”
”ஆம அடி நல்லா அழுத்தமா விழுதுல்ல”
---------------------------------------------------
நடன வகுப்பு ஆசிரியைக்கு முதுகு வலி என்பதால் வகுப்பு நின்று இருக்கிறது.
மற்றபடி அங்கே இருந்த பையன்கள் சிலர் வேறு நேரத்துக்கு மாறிப்ப்போய்விடட்தால். கோபியருக்கு நடுவில் இவர் ஹீரோ. இப்போது பம்பம் போலே பம்சிக்போலே பாட்டுக்கு பயிற்சி எடுக்கிறார்கள். நடனம் பயிலத்தொடங்கி நாலைந்து மாதங்களாகிறது. முன்பை விட இப்போது கலை கை வந்திருக்கிறது. (காலும் தான்) இருந்தாலும் டைக்குவாண்டோவுக்கு கிளம்புகிற வேகம் இங்கே இருப்பதில்லை.
-----------------------------
விடுமுறையில் தற்போது மூன்றெழுத்து ஆங்கில வார்த்தைகளை படிக்கிறான்.
MAN MAT இப்படி எதுவானாலும் முதல் இரண்டு எழுத்துக்களிலேயே முன் முடிவாக எதையாவது ஒன்றை சொல்லிவிடுவான். கடைசி எழுத்தைப் பார்க்காமலே அது மேனாகவோ மேட்டாகவொ இருக்குமென்று சொல்லிவிடுவார்.
-----------------------------------
யானை வரைய முயற்சி செய்து பின் அது கொஞ்சம் ரைனோசரஸ் போல இருக்கிறது என்று..
வேண்டாம் வேண்டாம் அழிக்காதே ஒரு கொம்பு மட்டும் வரைந்து ரைனொவாக்கிவிடறேன் என்று மாற்றிவிட்டான்.
அக்காவுக்கு தப்பாத தம்பி.
--------------------------------------------
மூன்று நாட்கள் ஆனதுமே 3 டேஸ் சொன்னே லீவு முடிந்துவிட்டதா? என்று கேட்கிறான். பாவம்
‘3 டேஸ் இல்லைம்மா 3 மந்த்ஸ் ந்னு இல்லை நான் சொன்னேன்’.. என்றால் வா ரயிலைப் பிடி தாத்தா வீட்டுக்குப் போலாம் இல்லையா ப்ளைனை பிடி மாமா ஊருக்குப் போகலாம். என்கிறான். ஆனா அக்காவுக்கு விடுமுறை ஆரம்பிக்காததால் நாங்கள் இன்னும் ஒரு மாதம் போர் கூட போர் தொடுக்கிறதுக்கான ஆயத்தங்களை செய்துவருகிறோம். இதற்கு நடுவில் அடிக்கடி குல்ஃபி , பெப்சி(திருமணவிழாக்களில் குடுக்கிறாங்களே) குடித்து நேற்று ஜுரம் வேறு வந்திருக்கிறது.
ஆனால் இப்போதும் குல்ஃபி கேட்கிறான்.
“நேற்று கூட தான் லேசா சளி இருந்தது அப்ப மட்டும் ஏன் வாங்கித்தந்தே?”
”அன்றைக்கு அழுதியே என்று பாவம் பார்த்ததுக்கு இன்றைக்கு நல்ல கேள்விடா மகனே!”

33 comments:

ஆயில்யன் said...

ஐய்யோ பாவம் பாப்பா !


அதானே!

:))

படம் கணினியிலா நல்லா வந்திருக்கு! அப்புறம் இன்னும் நீங்க வீடுங்க முக்கோண டைப்லேர்ந்து மாறி நொம்ப நாளாச்சுன்னு சொல்லலையா? :)

Chitra said...

“அம்மா இவனை டைக்குவாண்டோ சேர்த்தே இல்லை. நல்ல வித்தியாசம் தெரியுதும்மா”
“அப்படியா ?”
”ஆம அடி நல்லா அழுத்தமா விழுதுல்ல”

...... ha,ha,ha,ha..... வீட்டில் கலகலப்பு, கைகலப்புக்கு பஞ்சம் இல்லை என்று சொல்லுங்க.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

”ஆம அடி நல்லா அழுத்தமா விழுதுல்ல”//
:))

--

பேப்பர்லயும் படம் வரையசொல்லுங்கள்.:)

அன்புடன் அருணா said...

கொளுத்தும் வெயிலுக்கு இதமான கலகலப்புகள்!

தமிழ் பிரியன் said...

படம் நச்னு கலக்கலா வந்திருக்கு... :-) அரசியல்ன்னு வந்துட்டா சமாளிக்கனுமே அதனால் டேக்வாண்டோ எல்லாம் கத்துப்பது தலைநகரத்தில் இருப்பவங்களுக்கு கட்டாயமாப் போச்சுது.. ;-)))

தமிழ் பிரியன் said...

அப்புறம் அந்த குட்டீஸ் கிளப்பில் என்னை, ஆயில்யனைப் போன்ற சின்னப் பசங்களை ஆச்சி சேர்க்க மாட்டேங்கறாங்க... ஒரு நீதிக் கமிஷன் வச்சு தீர்ப்புச் சொல்லுங்க நாட்டாமை... ;-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா ஆயில்யன் பாவம் அக்கா..

முக்கோண டைப் நான் தான் சொல்லிக்கொடுத்தேன் இனி மாத்திடறேன் இஞ்சீனியர்..:)
-----------------------------
சித்ரா உண்மைதான் கலகலப்பும் கைகலப்பும் பஞ்சமில்லாம ...
--------------------------
பேப்பர்ல வரைஞ்சதுதாங்க அந்த ரைனோவா மாறிப்போன யானை.. அத போட்டோ எடுக்க நேரமில்ல.. ஸ்கேனர் இல்லை ..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா அருணா ஒரே ரூமில் oஒளிஞ்சுகிட்டு இருக்கோமா . அதுல ஓவரா இருக்கு கலகலப்பு..

---------------
நன்றி தமிழ்பிரியன் , சமாளிப்பு திலகம் அவன்
சமாளிச்சுப்பான்..
ஹலோ உங்க பையனை சேக்கற வயசில் இருந்துகிட்டு நீதிகமிசனா வைக்கனும்..

சென்ஷி said...

:)

☀நான் ஆதவன்☀ said...

//”ஆம அடி நல்லா அழுத்தமா விழுதுல்ல”//

:))))))))) உங்களுக்கும் நாலு கொடுக்க சொல்லனும். ஏன்னா கம்யூட்டரை டைம் பார்த்து தான் கொடுக்குறீங்க!

அப்புறம் அந்த படம் சத்தியமா நீங்க வரையறதை விட சூப்பரா இருக்குக்கா. :)))

☀நான் ஆதவன்☀ said...

// தமிழ் பிரியன் said...

அப்புறம் அந்த குட்டீஸ் கிளப்பில் என்னை, ஆயில்யனைப் போன்ற சின்னப் பசங்களை ஆச்சி சேர்க்க மாட்டேங்கறாங்க... ஒரு நீதிக் கமிஷன் வச்சு தீர்ப்புச் சொல்லுங்க நாட்டாமை... ;-)//

பாஸ் உங்களுக்கு முதியோர் க்ளப் ரெடி ஆகிட்டு இருக்கு. பை த வே நானும் சபரியும் அந்த குட்டீஸ் க்ளப்ல நண்பர்கள். :)

வெங்கட் நாகராஜ் said...

என் பொண்ணுக்கு இன்னும் விடுமுறை விடலை. நேத்திக்கு மூக்கை உறிஞ்சிக்கிட்டே ”அப்பா, ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வர சொன்னேனே, ஏன் வாங்கிட்டு வரலைன்னு” கேட்டாள். டேக்வாண்டோ வேற கத்துக்கிறாரு, எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க :)

வெங்கட் நாகராஜ்

ராமலக்ஷ்மி said...

ரைனோவை பத்திரமாய் வையுங்க:)! மெதுவா படமெடுத்து அவரது வலைப்பூவிலே போடுங்க.

கோபிநாத் said...

:-)))

பாச மலர் / Paasa Malar said...

ஜில் ஜில் கலக்கல்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சென்ஷி.
-------------------------------
ஏன் ஆதவன் ,சபரியும் பெரிய கண்ணாடியா போடனுமா..?
ஆமா அவன் வரையறதில தப்பு வரும்போதெல்லாம் திரும்ப திரும்ப உக்காந்து கண்ட்ரோல் இசட் போட்டேன்ல.. அதனால் நான் வரையறதுவிட நல்லாவே வந்திருக்கு.
----------------------------------
வெங்கட் , எங்க பள்ளியில் லீவு விடறதுன்னா குஷியா விடுவாங்க ஆனா குட்டீஸுக்கு மட்டும் தான் .. அக்கா போறாளே காலையில் ஆறு இருபதுக்கே பஸ்.. :(
----------------------------
கண்டிப்பா ராமலக்‌ஷ்மி ரைனோவை ப்ளாகில் போட்டிருவோம்..
-----------------------------
நன்றி கோபிநாத்.

SanjaiGandhi™ said...

சரி சரி.. ரயிலைப் பிடிங்க.. கோவை வாங்க :)

அம்பிகா said...

“அம்மா இவனை டைக்குவாண்டோ சேர்த்தே இல்லை. நல்ல வித்தியாசம் தெரியுதும்மா”
“அப்படியா ?”
”ஆம அடி நல்லா அழுத்தமா விழுதுல்ல”

ஆஹா..
குட்டீஸ் கலகலப்பு.. அழகு.

ஹுஸைனம்மா said...

//அன்றைக்கு அழுதியே என்று பாவம் பார்த்ததுக்கு இன்றைக்கு நல்ல கேள்விடா மகனே!//

ஆமாங்க, நாம (இவங்களுக்காக) மீறின விதிமுறைகளைக் கரெக்டாச் சொல்லிக்காட்டுவாங்க!!

சின்ன அம்மிணி said...

சபரி அப்டேட்ஸ் நல்லா இருக்கு :)

புதுகைத் தென்றல் said...

:) சபரிக்கு என் அன்பைச் சொல்லிடுங்க

"உழவன்" "Uzhavan" said...

ஸோ.. கோடையைக் கொண்டாடுகிறீர்கள் :-)

சேட்டைக்காரன் said...

பொடிசுகள் செய்கிற எதிலும் ஒரு தனி அழகு இருக்கத்தான் செய்கிறது. படம் சூப்பர்! வெயில்,மழை,வானவில் என்று கலந்திருந்தாலும் அதில் கற்பனையின் விரிவு தெரிகிறது.

செல்வநாயகி said...

நல்லா இருக்கு .

நசரேயன் said...

நல்லா இருக்கு

கோமதி அரசு said...

முத்துலெட்சுமி,நிஜ வெயிலின் கொடுமையை சபரி படத்திலுள்ள
மழை தணிக்கட்டும்.கண்ணுக்கு குளிர்ச்சியான படம்.

//அடி நல்லா அழுத்தமா விழுதுல்ல//

மாதினி பாவம்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////நிஜத்தில் தான் வெயில் கொளுத்துகிறது.இங்கே படத்தில் மழையும் வெயிலும் அடித்து வானவில்லும் வந்து விட்டது. ///////


அட ஆமா படம் நல்லாத்தான் இருக்கு !

அப்பாவி தங்கமணி said...

குட்டிஸ் குறும்பு, சூப்பர் பகிர்வு. நன்றிங்க, நல்ல ரிலாக்ஸ் ஆச்சு இதை படிச்சு (பட்ற உங்களுக்கு தானே கஷ்டம், படிக்கற எங்களுக்கு ஜாலி தான்)

மங்கை said...

//அம்மா இவனை டைக்குவாண்டோ சேர்த்தே இல்லை. நல்ல வித்தியாசம் தெரியுதும்மா”
“அப்படியா ?”
”ஆம அடி நல்லா அழுத்தமா விழுதுல்ல//

adapaavmaea...ithu vera aaa?... aaahaa...

அமைதிச்சாரல் said...

சார் taekwondo போறாரில்ல.. இனிமே அப்படித்தான்.. :-))))) ஹே..ன்னு சவுண்டோட கால் பறந்து வரும்.. பார்த்து பத்திரமா இருந்துக்கோங்க ஹா..ஹா..ஹா.

சே.குமார் said...

கொளுத்தும் வெயிலுக்கு இதமான கலகலப்புகள்!

ஜில் ஜில் கலக்கல்..!

அண்ணாமலை..!! said...

நல்ல கலகலப்புதேன் ..
இப்ப உள்ள பசங்களுக்கு
என்னா Schedule-பா??!!
:)

PPattian : புபட்டியன் said...

So.... Sweet.