பொதுவாக நாம் அனைவருமே ஆடம்பரமாக எதையும் செய்வதில்லை என்று சொல்லிக்கொள்ள முடிவதில்லை. காந்தி குறைந்த அளவு ஆடைகளை வைத்துக்கொள்ளுங்கள் என்றார். நான்கா வைத்திருக்கிறோம் ? நாற்பது வைத்திருந்தும் போதவில்லை புதியதாய் எடுக்கிறோம். புதிய வீட்டில், கூட ஒரு அறை இருந்தால் போதுமெனத்தோன்றி 8 வருடம் போகவில்லை இன்னும் ஒரு அறை இருந்தால் என்று யோசிக்கிறது மனம். அழகாய் இருக்குமே சேண்டிலியர் தொங்கவிடலாமே என்கிறார் காண்ட்ராக்டர். அவசியப்படாத ஒரு விளக்கும் எரியாத வீட்டில் நாலு விளக்கு ஒரே நேரத்திலா ? என்ன நடக்கிற காரியமா? ஐயா தொலைச்சுவிடுவார்கள் என்று நழுவிக்கொண்டோம்.
அன்றாட வாழ்க்கையிலேயே ஆடம்பரங்கள் சூழ்ந்துவிட்டது. கல்யாணத்தில் எப்படி ?என் தோழி ஒருத்தி ஏழைப் பெண்களுக்கு திருமணத்திற்கு வருடந்தோறும் 10000 உதவிக்கொண்டிருப்பதாக அறிந்தேன். நினைத்துப் பார்க்கும் போதே எனக்கு அது அசாத்தியமான செயலாகப்பட்டது. எத்தனை பெண்கள் வரதட்சணையால் பாதிக்கப்படுகிறார்கள். தவிர்க்க இயலாத காரணத்தால் இன்னமும் சமூகத்துக்கு இப்படிப்பட்ட உதவிகள் தேவைபடுகிறது.
மொய் வேண்டாம் என்கிற அழைப்பிதழ்களை இன்று பல இடங்களில் காண்கிறோம். ”யாரோ வருவார்கள் கட்டாயத்திற்காக மொய் வைப்பார்கள் அதை நான் வெறுக்கிறேன்” என்று சொல்வார் ஒரு தோழி. வாழ்த்தி அளிக்கும் விதம் போய், சடங்கோடு சடங்காக மொய்சடங்கும் ஆகிவிட்டது. பல அழைப்பிதழ்கள் மனதைக் கவர்ந்திருக்கின்றன. நல்லுள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் ’மை ப்ரண்ட் அனு ’ தானாகவே தயாரித்த ஒரு வாழ்த்து மடல் ஒன்றை அழைப்பிதழில் இணைத்திருந்தார்.
அய்யனார் கவிதையால் நிரப்பி இருந்தார் தன் அழைப்பிதழை...
குசும்பனும் காயத்ரியும் இன்று ராமும் தமிழ் பாடல்களை அழைப்பிதழில் இட்டு பலருக்கு தமிழ் மேல் ஆர்வத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள் .
நேற்றைய பதிவு எழுதிக்கொண்டிருக்கும்போதே தமிழ்பிரியனிடம் அதைப்பற்றி விவரித்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் அருகில் நடக்கும் நன்மையொன்றை கவனிக்கத்தவறியதை உணர்ந்தேன். அவருடைய திருமணப் பத்திரிக்கையைப் பாருங்கள். 12 வருடங்களாக வரதட்சணை வாங்கும்\கொடுக்கும் திருமணங்களுக்கு செல்வதில்லையாம். வாயிலில் வரதட்சணை வாங்கும் திருமணங்களுக்கு அழைப்பிதழே தரவேண்டாம் என்று கூட எழுதி வைத்திருக்கிறார்களாம். ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
ஆனால் இப்படி ஒரு பத்திரிக்கையை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இருந்தால் அதனையும் பகிர்ந்து கொள்ளுங்கள். நல்லதொரு மாற்றத்திற்கு நன்மையை பலமுறை பல இடங்களில் சொல்வது தவறே இல்லை.
ஆனால் ஆடம்பரங்கள் என்று இன்று சொல்லும் வருத்தப்படும் எவரும் நாளை தங்கள் வீட்டில் ஆடம்பரங்களை நிகழ்த்தாமல் இருப்போமோ என்பது முத்துலிங்கம் அவர்கள் சொன்னது போல ஐயம் தானே? பதிந்து வைப்போம். முயன்று பார்க்கலாம். இயன்றவர்கள் செய்யலாம்.
42 comments:
நல்லா இருக்கு! :)
தற்போதைய காலகட்டத்தில் திருமண பத்திரிக்கைகளில் வெகுவாகவே தமிழ் பாடல்களினை பயன்படுத்திக்கொள்ளும் போக்கு அதிகரித்திருக்கிறது !
வரவேற்கப்படவேண்டிய விசயம் !
பரிசு பொருட்களுக்கு பதில் பசுமை போற்றும் விசயங்களில் கவனம் செலுத்தலாம் என்பது எனது எண்ணம்!
தமிழ்ப்பாடல்கள் திருமண பத்திரிக்கைகள்ல பாக்க மகிழ்ச்சியா இருக்கு. மொய் வைக்க வர்றவங்க கடன் அடைக்கற மாதிரிதான் வருவாங்க. வாழ்த்துதல் இரண்டாம் பட்சம்தான்.
ஆனால் ஆடம்பரங்கள் என்று இன்று சொல்லும் வருத்தப்படும் எவரும் நாளை தங்கள் வீட்டில் ஆடம்பரங்களை நிகழ்த்தாமல் இருப்போமோ?
.....நெத்தியடி கேள்வி. நல்ல இடுகை. :-)
நல்ல இடுகை. யோசிக்கத்தான் வேணும்.
ஃபிஜி குஜராத்திகள் சமூகத்தில் நான் கவனிச்ச ஒன்னு இந்த மொய் விஷயம்.
யாரா இருந்தாலும் ஒன்னேகால் டாலர்தான் மொய் வைக்கணும். அதுக்கு மேல் கூடாது. இந்தப் பணமும் அவர்கள் நடத்தும் கல்வி நிலைய அறக்கட்டளைக்குப் போயிருது!
அருமையா சிந்தனையை தூண்டிட்டீங்க. அவசரப்பட்டு(!!!) எனக்கு கல்யாணம் பண்ணிட்டாங்க. இல்லாட்டி கொஞ்சம் வெயிட் பண்ணி தமிழ்ச்செய்யுள் எல்லாம் போட்டு அழைப்பிதழ் அடிச்சு இருக்கலாம். இப்போ இட் ஈஸ் டூ லேட்! :(((. என் வீட்டு ரங்கு, ஆல்வேஸ் ரெடி ஃபார் தி நெக்ஸ்டு வெட்டிங் கார்டு!!!க்ர்ர்..
நல்ல இடுகை.. பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி சகோதரி.. :)
ஹ்ம்ம்ம்.. இஸ்லாத்துல திருமணம்கிறது எவ்வளவு எளிமையான விஷயம் தெரியுமா? ஒரு பெண்ணுக்குத்தான் மணக்கொடை கொடுக்கப்பட வேண்டும்.. அதிலும் கூட ஆடம்பரம் இருக்கக்கூடாது.. கல்யாணம் ஒப்பந்தம் சாட்சிகளின் முன் கையெழுத்தான பிறகு, மாப்பிள்ளை சார்பில் எல்லாருக்கும் விருந்து ஒன்று இருக்கும். அவ்வளவு தான் கல்யாணம்.
ஆனா இங்க நடக்குறது எல்லாம் தலைகீழ்.. இப்ப வடநாட்டுக்காரங்கள பாத்து மெஹந்தி ஃபன்க்ஷன் எல்லாம் வேற வைக்கிறாங்க. கொடுமைங்க.
//பரிசு பொருட்களுக்கு பதில் பசுமை போற்றும் விசயங்களில் கவனம் செலுத்தலாம் என்பது எனது எண்ணம்!//
ஆயில்யனை வழிமொழிகிறேன்
எத்தனை விதங்களில் நம் ஆடம்பரங்கள் விளைந்துகிடக்கின்றன...
நிறைய யோசிக்கவைத்த இடுகை...
தமிழ்ப்ரியன் அண்ணனுக்கு ஒரு சல்யூட் :)
வித்தியாசமான பத்திரிக்கைகள் தான்க்கா. இப்பெல்லாம் அன்பளிப்போட கல்யாணத்துக்கு போறதுக்கே ஒரு மாதிரி கூச்சமா தான் இருக்கே. அதான் இப்ப பெரும்பாலும் புத்தகத்தை பரிசா கொடுத்துட்டு வந்திடுறேன்.
மாத்தி யோசிக்க வேண்டிய விஷயம்தான். அன்பளிப்புகள் என்ற நிலை மாறி, கடனை திருப்பிச்செலுத்தும் நிகழ்வாகவும், தன்னுடைய பொருளாதார அந்தஸ்தை காட்டிக்கொள்ளும் விஷயமாகவும் ஆகிவிட்டது.
நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க முத்துலெட்சுமி.
வெங்கட் நாகராஜ்.
என்னுடைய தங்கையின் திருமணமும், இரண்டாம் அண்ணனின் திருமணமும் வரதட்சணை, அன்பளிப்புகள் தவிர்க்கப்பட்ட திருமணமாகவே நடைபெற்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எனக்குத் தெரிந்து பலர் தங்கள் திருமண அழைப்பிதழில் பரிசுப்பொருட்களை அன்புடன் மறுக்கும் வாசகங்களை இணைத்தே அச்சடிக்கின்றனர். தற்சமயம் கைவசம் ஏதும் பத்திரிக்கைகள் இல்லை.
கடைசியில் போட்டிருக்கற மாதிரி அழைப்பிதழ்கள் நிறைய பாத்திருக்கேன், எங்க ஊர்ல. வகாபி முஸ்லிம்கள் வரதட்சணை வாங்கறதில்லைன்னு சொன்னாங்க.
மொய் ஒழிக்கப்படவேண்டும், சொந்த சோகத்த கிளறிட்டீங்க. முன்ன பின்ன தெரியாதவங்க கடனே கொடுக்கற கிஃப்ட்,கவர் வாங்கறது வன்கொடுமை.
ஆடம்பரம் எல்லா இடத்துலயும். என் கல்யாணத்துல எங்க அப்பா கூட விவாதிச்சு முடியல, மாப்பிள்ளை வீட்டுல எப்படின்னாலும் ஓகே. எங்க அப்பா வில்லனாகிட்டார்.அது ஒரு துன்ப்பியல் சம்பவமாயிடுச்சு. :))))) கல்யாணம் தவிர வேற எதிலயும் எங்க வீட்டுல ஆடம்பரம் இல்ல. (இப்படி ஆறுதல் பட்டுக்கறேன் :-)
காலம் காலமாக சொல்லிவரும் விஷயம் யார் கேட்கிறார்கள்.
ஒருவர் மேல் ஒருவர் பழியைப் போட்டு ,நடப்பதென்னவோ நடந்து கொண்டுதான் இருக்கிறது.
நல்ல இடுகை...வரவேற்கலாம் உங்க கருத்தை...
எல்லாருக்குமே மனசுல ஒரு நெருடல் இருக்கும் இதுபத்தி; கல்யாணம் ஆனவங்க, ஆகாவதங்க ரெண்டு பக்கத்துக்கும் இதைப் பெரியவங்ககிட்ட எடுத்துச் சொல்லி, தாண்டி வர்றது ஒரு பெரிய சவால். பெரியவங்களும் வழக்கமா சொல்றது “ஊர்வழக்கம்ப்பா”.
நல்ல விஷயம் முத்தக்கா.
தலைப்பு மாற்றி யோசிப்போம். இல்லையா?
Let me think out of the box.
Opulant marriages are performed by affluent sections of society. They have much money to splurge. They ouught to splurge.
Money is muck, if not spread. This is elementary economics.
They spread. The benefits go to many thousands of people from working classes: cooks, pandal decorators, drivers, sweepers, florists, printers, foremen, electricians, videographers, and so on.
Not but not the least, the beggers who will be given either the left overs of the first class food, or laid a separate and last pandhi.
The money gets circulated or generated, that is important in an vibrant economy.
They marry into the same affluent families which have to keep up certain standard of life. May them continue to do that.
Coming to ordinary masses, for them, too, a marriage is a special occasion. Whichever the religion may be. He or she looks forward to; and never forgets the experience, esp. in our society where one-man-one-woman tradition is still kept.
We dont get married again and again.
I welcome giving and taking dowry: for, in our society, marraige is for girls more than for boys.
She is given away in a marriage (கன்னிகாதானம்) whichever religion it may be for her. So, her parents feel she should NOT be given away like a beggar, with empty hands and bare neck and ear lobes. Hence, dowry.
'Give till it hurts' - so says the Bible. That ought to apply here. Give to your daughter in the form of dowry, till it hurts you.
Marry within means.
Dont imitate affluent classes. Dowry within means.
Dont suffer yourself if you cant.
If you have less money,
go for a groom
who accepts less dowry.
All talks of No dowry is bogus.
If someone says he does not like the idea of dowry,
I would say he has perverted
the meaning of dowry itself.
Dowry per se is desirable and welcome:
nothing bad about it.
அழைப்பிதழ்கள் - நல்ல கலெக்சன்..பகிர்வுக்கு நன்றி முத்து!
:) நல்லது நடக்கட்டும்
சரி, எல்லாரும் ஒரு ’சிறுமுயற்சி’ செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள்! அவசியம் தான்!
அடுத்தடுத்து இரண்டு இடுகைகள்?? வீடு தயாராகி விட்டது போலிருக்கிறதே? :-) வாழ்த்துக்கள்
வரவேற்கப் படவேண்டிய விசயம்
திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் மொய் எழுதுவது எனவும் பணம் ஓதி விடுவது எனவும்
பல்வேறு வழிகளில் விருந்தினரிடமிருந்து பணம் பெறுவதும் அவர்களுக்கு வெகுமதி என்றும்
அன்பளிப்பு என்றும் பல்வேறு பரிசளிப்புகள் தருவதும் ஏதோ எழுதாத விதி முறை ஆகிவிட்டது
எனப்து மிகவும் வருந்துதற்குரியதே.
எனது நண்பர் ஒருவர் தமது திருமணத்தன்று வெகுமதி / மொய் தருபவர்களிடத்து ஒரு சீட்டு
தந்தார். அதில் எழுதியிருந்தது: தாங்கள் தந்த வெகுமதி வெகு விரைவில் உதவும் கரங்கள்,
சேவாலயா போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு தங்கள் பெயரிலேயே அனுப்பபட்டு உரிய
ரசீதும் தங்களுக்கு அனுப்பப்படும். நன்றி.
இது ஒரு புறமிருக்க, பல பெண் வீட்டார் இது போன்ற அன்பளிப்புகளை (முக்கியமாக ரொக்கப்பணத்தை)
எதிர்பார்த்து அதற்கேற்றாற்போலத்தான் திருமணச்செலவுகளையும் நிர்வகிக்கிறார்கள் என்பதும்
தெரிகிறது.
இந்த காலத்தில் ஐடியலிசம் ஒரு பக்கம். ப்ராக்மாடிஸம் இன்னொரு பக்கம். நடுத்தர மக்கள்
இரண்டுக்குமிடையே தான் எங்கோ இருக்கிறார்கள்.
சுப்பு தாத்தா.
நல்ல இடுகை.
அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷ்யங்களை பதிவிட்டிருக்கிறிர்கள்.சிறு முயற்சி நல்ல முயற்சி
யோசிக்க வைக்கும் நல்ல பதிவு முத்துலெட்சுமி.
நல்ல இடுகை. யோசிக்கத்தான் வேணும்.
என் கணவரின் மாணவர் அவர் திருமணத்திறகு எல்லோருக்கும் தென்னங்கன்று தந்தார்.
இளம் தலை முறைகள் மாற்றி யோசியுங்கள்.
முறையாய் யோசியுங்கள்!
வாழ்த்துக்கள்.
பசுமை போற்றும் விசயங்கள் நல்ல எண்ணம் ஆயில்யன்..
---------------------------------
ஆமா சின்னம்மிணி முன்ன அவங்க வச்சதைவிட குறைவா வச்சிடக்கூடாதேன்னு வேற க்வலை இருக்கும் ;(
----------------------------
சித்ரா அப்பறம் நம்மாள முடியலன்னா என்ன செய்யறதுங்கற டிஸ்கியா அந்த அடியைப் போட்டிருப்பேனோ.. :)
-------------------------------
துளசி சூப்பர் ஐடியா. முன்னயே உங்க பதிவு பின்னுட்டத்தில் சொன்னேன்னு நினைக்கிறேன். கோயில் நன்கொடையில் பத்து ரூபாய் கொடுத்தால், ஆயிரம் என்று மைக்கில் சொல்வார் ஒரு குருக்கள் / எல்லாரும் ரசித்து சிரிப்பார்கள். அப்படி சொல்லிக்கலாம் .
---------------------------------------
அனன்யா ரங்குக்களுக்கு எத்தனை பட்டாலும் புரிவதில்லை.. நமக்கு அப்படியா ..? :)
வாங்க நாஸியா.. மாற்றம் அவசியங்கறதை இப்படி தப்பா புரிஞ்சுகிட்டாங்களோ.. நல்ல விசயங்களை எல்லாம் கசப்பாக நினைத்து ஒதுக்குதல் தானே நடக்குது.
------------------------------------------------
கதிர் நன்றி..
===============================
க.பாலாசி.. இப்படியும் யோசித்துப் பார்த்தேன்..
நான் விரும்பி செய்கிறவரை அது ஆடம்பரமாகத் தெரிவதில்லை.. வேறு யாரோ செய்யும்போது நம்மால் செய்யமுடியாத போது சிலது ஆடம்பரமாகத் தெரிகிறது. அதுக்கு என்ன சொல்றீங்க :)))
----------------------------------------
வாங்க ஆதவன் .. நானும் வாழ்த்திக்கிறேன் தமிழ்பிரியனை.
ஆமா பெரிய பெரிய பரிசுப் பொருள்களூக்கு முன் டீகோப்பைகளை கொண்டு போய் வைத்துக்கொண்டு நின்று இருக்கிறோம் எங்கள் தோழிகள். எங்கள் கையிருப்பு அவ்வளவு தான் ..அது பயன்படுமா என்று பார்த்தோமா தெரியல. நம்ம ஊரில் யாரு ப்ளாஸ்டிக் டீக்கோப்பை பயன்படுத்தறாங்க. :)
அமைதிச்சாரல் , வெளிநாடுகளில் இருப்பது போல இன்னும் என்ன வேண்டுமோ அதை கிப்ட் செய்ய தேர்ந்தெடுக்கச் சொல்லும் கலாச்சாரம் மட்டும் தான் பாக்கி :) எல்லாமே ஒரு வகையில் பாஸிட்டிவாகவும் இன்னொரு சைடுல நெகட்டிவாகவும் இருக்கிறது.
====================================================
நன்றி வெங்கட்
-------------------------------
சென்ஷி உங்கள் வீட்டு திருமணங்களுக்கு பாராட்டுக்கள் .. தொடருங்கள்.
:))
-----------------------------
கபீஷ் உங்க சோகத்தைத்தான் பதிவில் பகிர்ந்திருக்கிறேன் .. ஹஹஹா..
============================================
உண்மைதான் கோமா.. பழக்கம் வழக்கமாகி விட்டது.
----------------------------
நன்றி தமிழரசி
--------------------------
ஹுசைனம்மா நிச்சயம் இது பெரிய சவால் தான்
மாத்தி யோசிச்சதும் நல்லாவே இருக்கு ஜோ ,
நிச்சயம் பணம் பரவலாப் போய் சேரும் என்பது உண்மைதான். ஆனா இது பூனைகள் சூடுபோட்டுக்கொள்ள உதாரணமாகிடக்கூடாதுங்கற ஒன்றைத்தவிர தப்பே இல்லை.
அங்க நானும் சில எளிய உறவினர்களைப்பார்த்தேன் அவர்கள் நிச்சயமாக இப்படி ஒரு விருந்தை உண்பதற்கும் கொண்டாட்டத்தை அனுபவிப்பதற்கும் அது ஒரு நாள் இன்பமாக இருக்கும் என்பதில் ஐயமே இல்லை.
தங்களை வருத்திக்கொண்டு தான் மத்தியதர மக்கள் டௌரி கொடுக்கிறார்கள். கொடுக்க முடிந்த அளவுக்கு மாப்பிள்ளை என்றால் பெண்ணுக்கு தகுதியான மாப்பிள்ளை கிடைப்பதில்லை.
அதற்கு அதேமாதிரி நீங்கள் சொல்வது போல பெண்ணை பணம் குடுத்து அனுப்பினாலே பத்தலை என்று அடிப்பவர்கள் சும்மா அனுப்பினால் நிச்சயம் மதிக்கப்போவதில்லை.
பேரம் பேசாதவரை கொடுப்பது வாங்குவது தப்பில்லை என்று தான் பல இடங்களில் நடக்கிறது.
நீண்ட பின்னூட்டமும் மாற்றியோசித்ததற்கும் நன்றி
-------------------------
முல்லை , இன்னும் சிலது கைக்கு சிக்கவில்லை..:)
-------------------------------
நன்றி ராதாகிருஷ்ணன்
-----------------------
சேட்டைகாரன் சரியாக ஊகித்துவிட்டீர்கள் ஆம் வீடு தயாராகிவிட்டது.:)
--------------------------
நன்றி நசரேயன்
சூரி சார் ஆமாங்க, மொய் இத்தனை வரும் என்றும் அதை வைத்து கல்யாண செலவுகளில் சிலவற்றை நேர் செய்யலாம் என்பதும் நடப்பது தான். எவ்வளவு கடினம் பாருங்க..
-------------------------------
நன்றி அம்பிகா
----------------
நன்றி ராமலக்ஷ்மி
-------------------
நன்றி குமார்
-----------------------
கோமதிம்மா, தென்னங்கன்று ந்ல்ல விசயம் . பாரட்டவேண்டும்.
ஆஹா.. அழைப்பிதழ் சேர்த்து வைப்பது ஒரு நல்ல ஹாபியா இருக்கே :-)
முன்பெல்லாம் மொய் வைப்பது ஒரு அந்தஸ்துக்கே என்றாலும் இப்போது பலர் மொய் வைப்பது திருமண வீட்டுக்காரர்களின் சுமையை குறைப்பதற்க்கு மட்டுமே என நினைக்கிறேன். (எல்லாரும் அப்படி யோசிக்கிறார்களா என்று தெரியாது.) நான் போகும் திருமணங்களுக்கு அவர்களே எதிர்ப்பார்க்காவிட்டாலும் என் திருப்திக்கு & என்னால் முடிந்த ஒரு சிறு அன்பளிப்பில் அவர்கள் சுமையை கொஞ்சமாவது இறக்கி வைத்தோம் என்ற சந்தோஷத்தில் மட்டுமே வைக்கிறேன். :-)
மொய் மட்டுமல்லாது கிப்டும்தானே வேண்டாம் எனச் சொல்கிறீர்கள். அப்படி நீங்கள் பத்திரிக்கையில் அடித்தால், பெரும்பாலானோர் திருமணத்திற்கு வரமாட்டார்கள். அப்படியே வந்தாலும் வாழ்த்திவிட்டு, பந்தியில் அமராமல் சென்றுவிடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது ஒரு சென்சிட்டிவான விசயங்க.
நல்ல பதிவு ;)
Great. No more words to say
.
திருமணம் ஒரு விழா.
அந்த விழாவில் கலந்து கொள்வதுடன் புதிதாக குடும்பம் குட்டியாகப் போகும் தம்பதிகளுக்கு அவரவர் தங்களின் சேமிப்பில் இருந்து இருந்து சிலவற்றைக் கொடுப்பார்கள். ஆடு,மாடு கொடுப்பது இன்னும் உள்ளது.
இந்த உதவி என்று கட்டாய வசூலாக மாறியதோ அதுதான் தவறு. இப்போது மொய் சடங்காக மாறிவிட்டது.
அரபு நாடுகளில் ஆண்கள் பெண்களுக்கு தட்சிணை கொடுத்து மணமுடிக்க இயலாமல், கொஞ்சம் ஏழப்பட்ட பகுதிகளில் பெண்தேடும் அரபுக்கள் உண்டு. அது போல காசு கொழுத்த அரபி பல பெண்களை மணம் முடிப்பார். எனவே தமிழ்ப்பிரியன் அச்சடித்துள்ள வரதட்சிணை அற்ற நபி வழித்திருமணம் === பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளைக் கட்டாயமாகக் கொடுங்கள்" என்பது நகைமுரண்.
வரணுக்கு தட்சணை தவறு. நபியே சொன்னாலும் ஆணுக்கோ பெண்ணுக்கோ பரிசைக் கட்டாயமாக்குவது தவறு. அப்படி ஒருவருக்கு கட்டாயமாகக் கொடுங்கள் என்பது எப்படி வரதட்சிணை அற்ற திருமணமாகும்?
பெண்களைப் போல கொடுக்க முடியாத ஆண்களுக்கு அல்ல இது சுமையே.
***
எதையும் கட்டாயப்படுத்தி சடங்காக மாற்றும் போது ஒரு இயலாதவர் பாதிக்கப்படுவார்கள்.
இந்தியாவில் பெண்கள்
அரபு நாடுகளில் ஆண்கள்
.
எங்கள் திருமணத்தில் மொய் வேண்டாம் என்று சொல்லியும் விட்டோம். மொய் வாங்க என்று யாரையும் உக்கார வைக்க வில்லை. ஆனாலும் அனைவரும் எங்கிருந்தோ கவர் வாங்கி வந்து பணம் வைத்து கையில் திணித்து விட்டு சென்றனர்.
மிக நல்ல பதிவு முத்துலெட்சுமி..
மை ப்ரண்ட் நீ ரொம்ப நல்ல பொண்ணு .. அப்ப இதை ஹாபியாவே ஆரம்பிச்சிடலாமா :)
-------------------------------.
உழவன் நீங்க சொல்றது ரொம்ப சரிங்க.. நான் மொய் வேணாம்ன்னு சொல்லல..
வரதட்சணையா இவ்வளவு நடைபெறு ம் பேரங்களை மட்டுமே சொன்னேன்..
மொய் பத்தி வருத்தபப்ட்டது என்னோட தோழி..
--------------------------------------------
நன்றி கோபி .. எப்ப உங்களுக்கு நாங்க மொய் வைக்கிறது ?
------------------------------------
அப்பாவி தங்கமணி நன்றி
-----------------------------------------
இந்தியாவில் பெண்கள்
அரபு நாடுகளில் ஆண்கள்//
கல்வெட்டு நிச்சயம் யோசிக்கவேண்டியது தான்.
குடுக்கமுடியலைன்னா அது யாரா இருந்தாலும் கஷ்டம் தானே..
---------------------------------------
முகுந்த் அம்மா அதான் வட்டி இல்லாக்கடனை செலுத்தலைன்னா
அவங்க வருத்தப்படுவாங்களா இருக்கும்.. அன்பினால் கொடுத்தால் வாங்குவது தவறில்லை.
பெரியவங்க காலில் விழுந்து அவர்கள் கையால் ஒரு ரூபா பத்துரூபா வாங்கறது
நம்ம நல்ல நாட்களில் செய்யும் வழக்கம் தானே.. ஆனால் எவ்வளவு பணம் என்பது
மரியாதையை நிர்ணயிக்கும் என்றால் சங்கடமாகிடுது.
--------------------------------------
நன்றி தேனம்மை
MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
Feel பண்ணக்கூடாது..
Post a Comment