வாசலில் திண்ணை வைக்கும் வீட்டைக் கட்ட பலகாலம் ஆகலாம். இருந்தாலும் பால்கனியில் திண்ணை . பழைய பால்கனி சதுரமாக இருக்கும். அதில் ஒரு அறை எடுத்து விட்டு , தூண்கள் போட்டு கட்டிய புது பால்கனியில் திண்ணை வந்திருக்கிறது.
இப்படி வெளியே வந்து இடதுபக்கத்தில் திண்ணை . புதியபால்கனி ‘ட’ வடிவத்தில் உள்ளது.
ஓரமாய் செம்பருத்தி.
ட வின் மறுபக்கம் திரும்பினால் மற்ற நண்பர்களும் இருக்கிறார்கள்.
மேல்வீடு கீழ் வீடு இவர்களிடம் பேசி தீர்த்து மத்தளத்துக்கு இரண்டு பகக்ம் இடியாக இரண்டரை மாதங்கள் பாடாய் பட்டு அக்கடாவென டீ குடிக்க உக்கார திண்ணை ரெடி. காலையில் சற்றே இதமான காற்று .. மாலையில் அது ஒரு தோசைக்கல். வெயில் 44 டிகிரி என்கிறார்கள். வருடா வருடம் போன மூன்று ஆண்டுகளில் அல்லது ஐந்து ஆண்டுகளில் ரெக்கார்ட் என்று போடுகிறார்கள். உண்மையா பொய்யா என்று அந்த ஆதவனுக்கே வெளிச்சம்.
26 comments:
நல்லா இருக்குதுக்கா.. வாழ்த்துக்கள்..
ஆஹா, தில்லி வந்தா திண்ணைப்பேச்சுக்கு இடம் இருக்குன்னு சொல்லுங்க! வாழ்த்துக்கள்!
அருமையா இருக்கு திண்ணை. வாழ்த்துக்கள். நானும் ரொம்ப மிஸ் பண்றேன், திண்ணை வம்பு!
ஆமா, இந்த வருஷம் அந்யாய வெயிலாமே?
நல்லா இருக்கு. அடுத்த பதிவர் மீட்டிங் திண்ணையில்தான்.
வர்றேன்.
சேம்.. சேம்... எங்க வீட்டு மொட்டை மாடியிலும் கடப்பா கல் போட்டு திண்ணை போட்டு இருக்கோம்... சாயங்காலம் ஆனா தோசைக் கல் தான். :-)
ரொம்ப நல்லா இருக்குங்க...
திண்ணை அழகாருக்குப்பா!
இதோ இப்பவே வரேன் ...திண்ணையில் அமர்ந்து சூடா டாஜ் டீ...குடிச்சுட்டே வம்படிக்கணும்....
தயாரா இருங்க...
நன்றி சென்ஷி
நன்றி சேட்டைக்காரன்
அநன்ய நன்றி.. வருசா வருசம் இதானெ சொல்றாங்க இந்த வருசம் தான் அதிகம்ன்னு ;(
நன்றி துளசி :)))
ஓ உங்க வீட்டுலயும் தோசைக்கல் இருக்கா.. தமிழ்பிரியன் :)
அருணா நன்றிப்பா..
நன்றி கமலேஷ்
’’திண்ணை எனும் கனவு’
நினைத்தது பலித்தது.
வண்ணகுடை ஒன்று வாங்கி வைக்கலாம்.
அடுத்த பதிவர் மீட்டிங் திண்ணையில்.
யப்பா...ஆசை கனவு பளிச்சிடுச்சி...குட் குட் குட் ;))
முத்துலெட்சுமி,
உங்களை, ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நேரம் அனுமதிக்கும் போது தொடருங்கள்.
நன்றி
Good idea. Really, it looks very nice too.
திண்ணை அருமையா இருக்குங்க. கனவு பலித்ததுக்கு வாழ்த்துக்கள்.
அழகான திண்ணை. அடுத்த தில்லி பதிவர்கள் சந்திப்பை இங்கேயே வைத்துவிடலாம் போல இருக்கே.
”சாயங்காலத்தில் தோசைக்கல்” இருக்காதா பின்ன? வெய்யில் 46 டிகிரி தொட்டுடுச்சே. 7 மணிக்கு மேல் கொஞ்சமா தண்ணீர் வேண்டுமானால் விட்டு வையுங்கள். உட்கார வசதியாக இருக்கும். :)
நல்ல ஐடியா :))
கனவு பலிச்சிருச்சா,
வாழ்த்துக்கள்.
நல்லா வடிவமைச்சிருக்கீங்க...
//மாலையில் அது ஒரு தோசைக்கல்//
கடையப் போட்டுறவேண்டியதானே? ;-)))
திண்ணை(செய்த உங்களு)க்கு வாழ்த்துகள்!!
ஆகா...கனவு நனவானதற்கு ஹை-ஃபை! :-)
Good idea.. vaazthukkal.
\\ உண்மையா பொய்யா என்று அந்த ஆதவனுக்கே வெளிச்சம்.\\
ஆதவன் துபாய்ல தானே இருக்காரு?
ஏம்பா...எல்லாம் நான் போகட்டும்னே காத்துட்டு இருந்துட்டு வருது..
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
உங்கள் திண்ணைக் கனவு நிறைவேறியதில் எனக்குதான் ரொம்ப சந்தோஷம் ஆமா:))!
தோசைக்கல் கோடை முடியும் வரைதானே. அப்புறம் ஆசைக்கல்தான்:)!
வீடு நல்லா வந்திருக்கு. வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி.
அட.. சூப்பர் ஐடியா தான்...
ரசனை, அருமை, வாழ்த்துக்கள்
சில நாட்கள் தோசைக் கல் என்றாலும் பலநாட்களுக்கு உங்களுக்கு துணையாய் இருக்கும் என்று நினைக்கிறன்..
Post a Comment