மாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக
June 17, 2010
கண்ணாடிகளற்ற அறை
கண்ணாடிகளற்ற அறை
-------------------------
திரும்பிய பக்கமெல்லாம்
எதிர்படுவோரிடமெல்லாம்
தன்னைப்போலவே
எதோ ஒன்றைக் கண்ட
பயத்தில் புகுந்த இடம்
இன்னாரென்று
அடையாளப்படுத்திவிட
கண்ணாடிகளும் அற்ற அறை
எப்போதும் போலில்லை
யாரைப்போலும் இல்லை
இல்லை
இல்லையென்று
தனக்குள் ஓதிக்கொள்ளும்
மந்திரங்கள் சூழ்ந்த அறை
எப்போதைப்போன்ற எதையும்
மறுத்தும்
மாற்றியும்
அலங்கரிக்கப்பட்ட அறை
எப்போதாவது நுழைபவரிடமும்
கண்ணாடிகளற்றதாயும்
மாற்றப்பட்ட அலங்காரங்களுடனும்
புதிய மந்திரங்களோடுமான
என் அறை இது என்று
அதே நான்
சொல்லிக்கொண்டிருக்கிறேன்
எதிரில் நானே கேட்டுக்கொண்டுமிருக்கிறேன்.
ஜூன் மாத வடக்குவாசலில் வெளியாகியுள்ள கவிதை.. நன்றி வடக்குவாசல்
Subscribe to:
Post Comments (Atom)
31 comments:
கவிச்சிற்றிலக்கியவாதி முத்துக்காவிற்கு வாழ்த்துகள்!
(டெம்ப்ளேட் நல்லாருக்கு)
நல்ல கவிதை.
//அதே நான்
சொல்லிக்கொண்டிருக்கிறேன்
எதிரில் நானே கேட்டுக்கொண்டுமிருக்கிறேன்.//
மிக அருமையாக முடித்து இருக்கிறீர்கள்.
வடக்கு வாசலில் வெளிவந்திருப்பதற்கும் வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி.
புது டெம்ப்ளேட் மற்றும் ஹெட்டர் வாசகங்கள் அருமை.
”வடக்கு வாசல்” மாத இதழிலேயே வாசித்துவிட்டேன். நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.
நல்ல கவிதை அருமை...
வடக்கு வாசலில் வெளிவந்ததற்கு வாழ்த்துகள்.
அருமையா இருக்குங்க...
வாழ்த்தும் பூங்கொத்தும்!
/அதே நான்
சொல்லிக்கொண்டிருக்கிறேன்
எதிரில் நானே கேட்டுக்கொண்டுமிருக்கிறேன்.//
மிகவும் அருமை
நல்ல படைப்பு
இந்தக் கவிதை வந்து யாரு படிச்சாலும் தனக்கு சொல்லுற மாதிரியே கண்ணாடி பங்களாவில பட்டு எதிரொலிக்கும் :) -
நான் படிச்சிட்டு எனக்குத்தான் சொல்லப் பட்டிருக்கோன்னு நினைச்சிட்டேன் -- நல்லாருக்கு!
//அதே நான் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்
எதிரில் நானே
கேட்டுக் கொண்டுமிருக்கிறேன்.//
நாமே பேசிக்கொண்டு நாமே கேட்டுக் கொண்டு இருந்தால் மிகவும் நல்லது.
உள்முக பார்வை நல்லது.
கவிதை நல்லா இருக்கு.
வடக்கு வாசலில் வந்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.
//சென்ஷி said...
கவிச்சிற்றிலக்கியவாதி முத்துக்காவிற்கு வாழ்த்துகள்!
(டெம்ப்ளேட் நல்லாருக்கு)
//
ஆமா.. ஆமா
சென்ஷி , நசரேயன்.. டெம்ப்ளேட் மட்டும் தான் பாத்தீங்களாக்கும்..சரி சரி.நன்றி நன்றி..
-----------
நன்றி ராமலக்ஷ்மி ..
அதே ஹெட்டர் தான்.. புது டெம்ப்ளேட்டில் புதுசா தெரியுது போல.. ;)
------
நன்றி வெங்கட் ..
-------------------
நன்றி அஹமது
--------------
நன்றி மாதேவி
-----------------
நன்றி பாலாசி
------------
நன்றி அருணா
------------------
நன்றி வேலுஜி
----------------
நன்றி தெகா.. கண்ணாடி இல்லாத அறையை கண்ணாடி பங்களாவாக்கிட்டீங்க.. ;)
வலுவான வார்த்தைகள் கோர்த்த கண்ணாடிக் கவிதை.
நல்லாருக்கு முத்தக்கா.
நீங்க ஒரு கவிதாயினின்னு எனக்கு இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே...
வாழ்த்துகள் அக்கா. கவிதை நல்லாருக்கு. (என்ன அர்த்தம்ன்னு அடுத்த முறை பேசும் போது சொல்லுங்க)
நான் வழி போகனுங்க்கா ;))
\\\விக்னேஷ்வரி said...
நீங்க ஒரு கவிதாயினின்னு எனக்கு இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே... \\\
;-))
கவிதை சிம்பிளா இருக்க மாதிரி இருக்கு... ஆனாலும் புரியல
//எப்போதாவது நுழைபவரிடமும்
கண்ணாடிகளற்றதாயும்
மாற்றப்பட்ட அலங்காரங்களுடனும்
புதிய மந்திரங்களோடுமான
என் அறை இது என்று
அதே நான்
சொல்லிக்கொண்டிருக்கிறேன்
எதிரில் நானே கேட்டுக்கொண்டுமிருக்கிறேன்.//
அருமை. வாழ்த்துக்கள்
முத்துலெட்சுமியின் முத்தான கவிதை, வடக்குவாசலில், கோலமென மிளிர்கிறது.
வழ்த்துக்க்ள்.
வாவ்! வாழ்த்துகள் முத்து!
அருமையான கவிதைக்கு நன்றி!
கவிதை அழகு! கருத்து அருமை!!
வ.வாசலில் படித்தேன். வாழ்த்துகள்
அசத்தலா இருக்கு.
உள்முகப்பார்வை // :) நன்றி கோமதிம்மா..
-------------------
நன்றி ஹேமா
-----------------
விக்கி.. க்விதாயினின்னு தெரிந்தா ஓடிப்போயிருப்ப்பீங்களா..:)
---------------------
கோபி , சரி சரி :)
--------------
தமிழ்பிரியன் புரியாதுன்னு நினைச்சா புரியாது.
------------------------
நன்றி மதுரை சரவணன்
--------------------
நன்றி கோமா
-----------------
நன்றி முல்லை
-------------------------
நன்றி நஜீபா
-----------
நன்றி உழவன்
----------------
நன்றி அமைதிச்சாரல்
/அதே நான்
சொல்லிக்கொண்டிருக்கிறேன்
எதிரில் நானே கேட்டுக்கொண்டுமிருக்கிறேன்.//
நல்ல வரிகள்.
"...எப்போதும் போலில்லை
யாரைப்போலும் இல்லை
இல்லை
இல்லையென்று
தனக்குள் ஓதிக்கொள்ளும்...."
இதமான வரிகள்.
வடக்கு வாசலில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்
நல்லதொரு பயிற்சி இது.முத்து.
நம்மை நாமே உணர்ந்துவிட்டால்
வாழ்க்கை அமைந்துவிடும்.
வாழ்த்துகள் அக்கா.. டெம்ப்ளெட் ஜூப்பரு.. :)
வணக்கம் நான் இன்றுதான் தங்களின் தளத்துக்கு
முதன் முதலாக வந்துள்ளேன்.அருமையான படைப்புகளை
பகிர்ந்துகொள்ளும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும்
வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.நன்றி பகிர்வுக்கு....
வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_14.html) சென்று பார்க்கவும்...
தொடர்ந்து பகிர்ந்திட வாழ்த்துக்கள்... நன்றி...
Post a Comment