July 21, 2010

வானவில் இற்றைகள்*

பேசத்தொடங்கியதிலிருந்து ஹிந்தியே பேசிவந்த மகனுக்கு இந்த முறை தமிழ்நாட்டில் தமிழில் பேசியாக வேண்டிய கட்டாயம். விளையாட வரும் ஆட்களிடம் தமிழில் பேசினால் தான் வேலையாகும் என அவர் தமிழைப் பேச முயற்சி செய்யத்தொடங்கி .. மழலை வயது முடிந்த பின்பு மீண்டுமொரு மழலைக்குரல் கேட்கும்வாய்ப்பு எங்களுக்கு வந்தது.

’ நானெப்படி செய்வேன் இதை? நான் சின்னப்பையன் உங்களுக்கு ’தெர்லே’ ?

(இது என்ன மொழி புர்லே தெர்லே ந்னு ஹய்யோ)
----------------
வருது இல்லை - வரலை
டீவி கிடைக்குது இல்லை - சேனல் கிடைக்கலை

அக்கா சொல்றா இல்லை - அக்கா பதில் சொல்லலை
-------------------------


இப்பத்தானே டாஃபி சாப்பிட்ட திரும்ப ஏன் ப்ரிட்ஜை திறக்கிறே..?
‘எங்க’?(நெற்றிய சுருக்கியபடி கோவமாக, ஒரு இழுவையான ராகத்தோடும் வேகத்தோடும் )

எங்க- என்பது எப்போ, இல்லையே, நான் எப்ப சாப்பிட்டேன் என்று இடத்திற்கு ஏற்ப பொருள் படும்.
-----------------------
பேசுவது ஃபன்னி லேங்க்வேஜ் ‘பண்ணி’ லேங்குவேஜ் .. என்ன பண்றே .. நான் பண்ணிடுவேன். நான் அப்படி பண்ணிடுவேன்.. இப்படி பண்ணிடுவேன் என்று ஒரே வீரப்ரதாபங்கள்.

அடிக்கடி கண்ணாடியின் முன் நின்று பலத்தை சோதிக்கிறார்.
-----------------------

முடியெல்லாம் வகிட்டோரமா கொட்டுது (வயசாகுதுல்ல)
சரி கோணவகிடு எடுப்போம் (ஆமா ரொம்ப முக்கியம்) என்று செய்தபோது கண்ணில் பட்டது
அட ஒரு வெள்ளை முடி..(மற்றவை கண்ணுல படல இன்னும்)
பையர்-
’அம்மா நீங்க கொஞ்ச நாளில் அப்பா மாதிரி ஆகிடுவீங்க..’ (நிறைய வெள்ளை முடியாம்)
’அப்ப ரெண்டு பேரும் மேட்சா இருப்போம்ல டா..’
’இல்ல அப்ப அப்பாக்கு முழுசா நரைச்சிடும்’
அவ்வ்


------------------------------------
ஊரில் ஆளும்பேறுமாக இருந்துவிட்டு இங்கே ஒரு அறையில் தனியாக இருக்க பயப்படுகிறான் பையன்.
அம்மா கிச்சன்லயே எவ்ளோ நேரம் நிப்பீங்க... கால் வலிக்கும் வாங்க ரெஸ்ட் எடுங்க ..
அர்த்தம் - என் கூட டீவி பாருங்க..

அம்மா இத்தனை நேரம் கம்பூட்டர்ல வேலை செய்தீங்க இல்லை ரெஸ்டு எடுங்க படுத்து.
அர்த்தம்- இதே ரூமில் நான் கம்ப்யூட்டரில் விளையாடும் வரை படுத்திருங்க..
-------------------------------

அக்கா நீங்க லெமன் ஜூஸ் செய்து தர்ரீங்களா?
அம்மா கிட்ட லெமன் ஜூஸ் செய்து தாங்க லெமன் ஜூஸ் செய்து தாங்கன்னு கேட்டால் தரமாட்டேங்கறங்க..

அடே நீகூடத்தான் நல்லபையனா இருக்கே நல்ல பையனா இருக்கேன்னு சொல்றே ஆனா இருக்கியா இல்லைல்ல அது மாதிரி தான்..
---------------------------------------
வீட்டுப்பாடம் செய்யவாடா!
அதுல்லாம் ராத்திரி செய்தா தான் சஹியா இருக்கும் அம்மா (சஹி- சரி அல்லது பொருத்தம்)
-----------------------------
தம்பியின் பையனுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்..
கண்ணைக் கட்டிய படி கழுதைக்கு (படத்துக்குத்தான்)சரியாக வாலை ஒட்டுவது தான் போட்டி.
மகளும் , தம்பி மனைவியும் நிகழ்ச்சி நடத்துபவர்கள். நான் புகைப்படம் எடுப்பவர்.
பையன் சியர் லீடர்.

தப்பாக வைக்கும் போதெல்லாம்..
‘ஆமா அங்க தான் அங்கயே தான்.. இல்ல ல்ல இங்க இங்க.. மேலே மேலே இல்ல கீழே கீழ தான் கரெக்ட் ஒட்டுங்க ’என்று எல்லாரையும் கிண்டலடித்து ஓட்டிக்கொண்டிருந்தார். அதுவும் மைக் பிடித்தபடி..

கடைசியில் ஆச்சி ( அப்பாவோட அம்மா) வந்தபோது பக்கத்துல நின்று கொண்டு கையை இவரே பிடித்துக் கொண்டுபோய் சரியான இடத்தில் காண்பித்து இங்க இங்க ஒட்டுங்க என்று உதவ எல்லாரும் ஓ ஓ ஓஹோ என்று குரலெப்பி சிரித்துவிட்டார்கள். வெக்கச்சிரிப்பு தவழவிட்டான் .
-------------------------------------------
மகள் தன் நடன வகுப்பு நோட்டை அலங்காரம் செய்ய வேண்டி என்னை உதவிக்கு அழைத்தாள். செய்து முடித்தபின் ..

“ அம்மா நீ ரொம்ப லக்கி”
“ஏன்மா”
“அடுத்த வருசமும் நடனம் (ஆக்டிவிட்டி வகுப்பில்) எடுக்கிறவங்களுக்கு புதுசா நோட் போடவேணாம்..இதேவச்சிக்கலாம்ன்னு சொல்லிட்டாங்க மேடம்..”
“ஙே’
‘நீ திரும்ப அலங்காரம் செய்ய உதவி செய்ய வெண்டியதில்லை பாரு அதான் சொன்னேன்’
-----------------------------------
பொள்ளாச்சியில் விடெக்ஸ் என்றவொரு சிறிய கடைக்கு நைட்டி வாங்கப்போயிருந்தோம். முதல் நாள் நாத்தனார் மகளுக்கு குடுத்துவிட வாங்கிய நைட்டி பிடித்துவிட்டதால் மகளுக்கும் வாங்கலாம் என்று அடுத்த நாள் கடைக்கு சென்ற போது கடையின் ஓனரம்மா (ஃபாத்திமா) மகளைப்பார்த்து ’நீ பாடுவியாம்மா. உன்னைப்பாத்தா அந்த ஏர்டெல் சூப்பர் சிங்கர் ல வந்த நித்ய ஸ்ரீ மாதிரியே இருக்கு ’என்றார்கள்.(நித்யாஸ்ரீ தான் பிடிக்காது இருந்தாலும்) அவர்களுக்காக ஒரு பாடலைப் பாடிக்காண்பிக்க சொல்லி அன்புத்தொல்லை. பாடிய பாட்டுக்கு ஒரு கர்சீப் பரிசு. ’பார்த்துக்கிட்டே இருப்பேன் இதுபோல ஒரு நாள் நீயும் டீவியில் பாடனும் சரியா? உன் பேரென்ன’ என்று கேட்டு வைத்துக்கொண்டார்கள்.

------------------
இற்றைகள்* - அப்டேட்ஸ்

29 comments:

ஆயில்யன் said...

//இது என்ன மொழி புர்லே தெர்லே ///


என்னாது? என்ன மொழியா

நோஓஓஓஓஓ திஸ் இஸ் அவர் டமில் லாங்குவேஜ்

நான் நொம்ப வாட்டி யூசு பண்ணியிருக்கேன்

தெர்லே
வர்ல
போல
புர்யல
சொல்லல

:)

சென்ஷி said...

சினிமால சேட்டுங்க இப்படித்தான் பேசுவாங்க.. அது சும்மான்னு நினைச்சேன்.. இப்ப அது தப்புன்னு தெர்ல.. :)

SurveySan said...

//நானெப்படி செய்வேன் இதை?//

ஜுனூன் ஞாபகம் வருது :)

☀நான் ஆதவன்☀ said...

:)))) இதுதான் உண்மையான செம்மொழியோ?

'பரிவை' சே.குமார் said...

//தெர்லே
வர்ல
போல
புர்யல
சொல்லல
//

ellam tamil thanga...

ayyo ithu kooda 'தெர்லே' ungalukku...

haa.. haa.... haa...

வர்ட்டா...

வல்லிசிம்ஹன் said...

ஜுனூன் ஞாபகம் வந்தது. அஷ்டே:0)குழந்தை முழு சேட் பையனாகறத்துக்கு முன்னால் ஏதாவது செய்யுங்கப்பா.!முழு நீள நகைச்சுவை சித்திரம் பார்த்த மாதிரி இருக்கிறது.:)

வெங்கட் நாகராஜ் said...

சபரியின் மொழி - அழகு. தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று நான்கு மொழிகளை சிறு வயதிலேயே கற்றுக்கொள்வதனால் உள்ள விஷயம் இது. தில்லி தமிழ் குழந்தைகளுக்கு இது வரமா சாபமா தெரியவில்லை. நம்ம வாண்டு பேசறதும் பல உறவினருக்கு புரிவதில்லை. அழகிய பகிர்வுக்கு நன்றி.

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா... எல்லாமே அழகு. சபரி சொல்றதை அவன் ஃபேசியல் ரியாக்‌ஷனோட வாசிக்க செமையா இருந்தது. எப்போ கிடைக்கும் சார் அப்பாயின்மெண்ட்...

பத்மா said...

nallairukunga

நாகை சிவா said...

:))))

சாந்தி மாரியப்பன் said...

ஹா..ஹா.ஹா சேம் ப்ளட்..

pudugaithendral said...

http://pudugaithendral.blogspot.com/2010/07/blog-post_21.html

தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கேன்

கானா பிரபா said...

பையர் கலக்குறார் போங்க ;-))) ரசித்தேன்

Iyappan Krishnan said...

சூப்பர் சபரி :))

கமலேஷ் said...

அட இதாங்க எங்க செந்தமிழ்..

Thamiz Priyan said...

சபரி ஹிந்தியில் முதலில் சிந்தித்து பின்னர் தமிழில் மொழி பெயர்க்கின்றான்.. அதன் நீட்சி தான் இது போல.. எங்க தெருவிலும் என் மகன் பேச்சைக் கேட்டு நிறைய பேருக்கு புரிவதில்லை. அவங்க டீச்சர் இவனுக்கு தமிழ் தெரியாதான்னு கேட்குற அளவுக்கு இருக்கு.. எல்லாம் அவங்க அம்மா ஊர் பாஷை.. :)

கோபிநாத் said...

சியர் லீடர் கலக்குறார் ;-))

இற்றைகள் - கலக்கல்...அந்த கடைசியில விளக்கத்துக்கும் ;)

Dhiyana said...

அழ‌கான‌ இற்றைக‌ள்

Thenammai Lakshmanan said...

ஹாஹாஹா குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்.. முத்து..:)))

Chitra said...

....... cho chweet! Charming!

Anonymous said...

சபரியின் மழலை அத்தனையும் இனிமை முத்தக்கா

கோமதி அரசு said...

சபரியின் மழலை அழகு.

வாழ்த்துக்கள் சபரிக்கு.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சூப்பர் மழலை தமிழ்...

//’இல்ல அப்ப அப்பாக்கு முழுசா நரைச்சிடும்’ //'
சூப்பர் வாலுக தான் போல...ஹா ஹா ஹா... மிகவும் ரசித்த இடம் இது...

மா சிவகுமார் said...

nice :-)

அமுதா said...

/*இது என்ன மொழி புர்லே தெர்லே ந்னு ஹய்யோ)
*/
உங்களுக்கு ஒண்ணுமே தெர்லே

/*தீஷு said...
அழ‌கான‌ இற்றைக‌ள் */
அதே!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ ஆயில்யன் நீங்க டமிலரா நான் மல்லு தேசத்து
ஆளுன்னு நினைச்சேனே :)
---------------------
ஆமா சென்ஷி நீ தமிழ்பையன் தமிழ் பேசுன்னா
இல்ல நான் ஹிந்திபையன் நான் டில்லியில் தான்
பிறந்தேன்னு சொல்வான்:)
----------------
சர்வேசன் நானே இப்ப ஜுனூன் தமிழ்ல்ல தான்
பேசிட்டிருக்கேன்.. தாக்கம் அப்படி :)
--------------------
ஆமா ஆதவன் செம்மொழி நடக்கும் கோவையின் மண் வாசனை
தான் அவனை தமிழ் பேசவே தூண்டி இருக்கு..
---------------------
நன்றி குமார்..
எனக்குத்தெர்லேன்னு இப்பத்தான் தெர்து
------------------------------
வல்லி அல்ரெடி ஹிந்திப்பையன் தான் இப்பத்தான் தமிழுக்கு
அவராவே மாறிட்டிருக்கார்..
------------------------
ஆமா வெங்கட் .. வரமா சாபமா தெரியல.
-----------------------------
விக்கி சார் சனி ஞாயிறு ஃப்ரீ தான்
------------------------
பத்மா
நாகைசிவா
அமைதிச்சாரல்
கானா
ஜீவ்ஸ்
கமலேஷ்
நன்றிங்க :)
------------------------
ஆமா சரியாச்சொன்னீங்க தமிழ் பிரியன்
சிந்திப்பது அவர்களுக்கு ஹிந்தி.
---------------------
கோபி
தீஷூ
நன்றி நன்றி :)
-------------
தேனம்மை உண்மைதாங்க நம்ம மனசை லேசாக்கும் யாழ் இவங்க தான் :)
----------------------------
சித்ரா
சின்ன அம்மிணி
கோமதிம்மா
மா.சி
அமுதா
அப்பாவி தங்கமணி நன்றி நன்றி :)

Unknown said...

வெளி மாநிலத்தில் வசிப்பவர் குழந்தைகளிடம் இது தவிர்க்க முடியாதது. என் மகள் அடிக்கும் லூட்டி பற்றி தனி பதிவே போடலாம். அப்பா தேக்கோ, நோ டிவி போடு, நோ மம் மம், தீதி அக்கா இப்படி ஏராளம்.......

மாதேவி said...

ரசித்தேன்.

ராமலக்ஷ்மி said...

//கையை இவரே பிடித்துக் கொண்டுபோய் சரியான இடத்தில் காண்பித்து இங்க இங்க ஒட்டுங்க என்று உதவ //

ரசித்தேன் கற்பனை செய்து:)!