August 20, 2010

ஸெர்யோஷாவும் குட்டீஸ் சிந்தனைகளும்

புத்தகங்களைப் போல போதையொன்று இல்லையென்ற ரீதியில் அவை சில நேரம் கிறக்கத்திலேயே வைத்திருக்கும். வேண்டாவெறுப்பாய் போ என்று ஒதுக்கினாலும் மீண்டும் மீண்டும் போய் விழுந்துவிடுகிறோம் தானே. விடுமுறை பொள்ளாச்சியில், புத்தக உலகம் என்கிற கடையைத் தாண்டிப் போகிற போதெல்லாம் எப்போதடா உள்ளே நுழைவோம் என்றிருந்தது. மகளின் பிறந்தநாளுக்காகக் காத்திருந்தோம்.
கௌரிகிருஷ்ணாவில் பரோட்டாவும் புத்தக உலகில் புத்தகங்களும் என்று திட்டமிட்டிருந்தோம்.

நிறைய புத்தகங்களை ஒருசேரப்பார்த்தால் எதை எடுப்பது எதை விடுவது என்று தெரிவதில்லை. நூலகத்தில் என்றால் செலவு பற்றியும் கவலை இல்லை . ஆனால் காசு கொடுத்து வாங்குவது என்றபிறகு மிகுந்த யோசனையும் இருக்கும். மகள் அவளுக்கான தேடுதலில் இருந்தாள். குழந்தையும் அல்லாத பதின்ம வயதும் இல்லாத அவளுக்கு குறைவான புத்தகங்களே இருந்தது. அதில் இரண்டை எடுத்துக்கொண்டாள்.

குழமம் ஒன்றில் பரிந்துரைத்த ’இரண்டாம் இடம்’ நாவல் நான் எடுத்துக்கொண்டேன். அந்த நாவலை நான் ரயில் பயணத்தில் கோவையில் துவங்கி கீழேயே வைக்காமல் படித்து முடித்தபோது ஃபரிதா பாத் வந்துவிட்டது. . சின்னவளா இருக்கும்போதிலிருந்து ரஷ்யக் கதைபுத்தகங்களை வாசித்த ஆசையில் ஒரு குறுநாவல் ஒன்று ’ஸெர்யோஷா என்றொரு சிறுவன் ’. வங்காளிக்கதைகள் தொகுப்பு ஒன்று.

இந்த ஸெர்யோஷாவைப் படிக்கத்தான் தாமதம் செய்துவிட்டேன். உங்களில் சிலர் இக்கதையைப் படித்திருக்கலாம். போனவாரம் கதையைப்படித்ததும் முடிவில் தொண்டை அடைத்து கண்ணில் நீர்முட்டிக்கொண்டு வந்தது. சில இடங்களில் குழந்தையாக சில இடங்களில் குழந்தைகளின் தாயாக என்று மாறி மாறி யோசித்து ஒருவழியாகிவிட்டேன். இப்பொழுது இற்றைகள் எழுதும் ஒரு தாயாக குழந்தைகளின் சிந்தனைகளை கவனிக்க முயற்சி எடுக்கிறேன் தான் .. ஆனாலும் இன்னமும் கூட முயற்சி செய்ய வேண்டுமோ போதாதோ என்று தோன்றுகிறது. சின்னச்செடியை நறுக்கி செதுக்கி மரமாகவிடாம போன்சாய் செய்வது போல டூஸ் அண்ட் டோண்ட்ஸ் வைத்திருக்கிறோமே நிறைய. மேலும் சொல்லும் அறிவுரையைப் போல நடந்து காண்பிப்பதும் சிரமம் தான்.

கதை முழுதும் சிறுவனின் மனவோட்டங்களாலும் தந்தைக்கும் மகனுக்குமான உறவின் அழகுணர்ச்சியிலும் முடிவான மகிழ்ச்சியிலும் வாசிப்பவருக்கு இனிமையானதொரு அனுபவத்தைத் தருகிறார் வேரா பனோவா. இவர் ஸ்டாலின் பரிசைப் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் அவருடைய இரண்டாம் படைப்பாம் இது. குழந்தையைப் பற்றிய கதையாக இருந்தாலும் இதனை பெற்றவர்களுக்காகத்தான் வெரா பனொவா எழுதி இருக்கிறார். வாசிப்பவர்கள் இனி குழந்தையை அணுகும்போது அவர்கள் எண்ணவோட்டம் என்னவாக இருக்குமென்று யோசிக்கத்தொடங்குவார்கள். மேம்போக்காக யோசித்தால் மிகச்சாதரணமான விசயத்தைக் கையாண்டது போலத்தெரிந்தாலும் உள்பொதிந்திருக்கும் விசயம் மிக மேன்மையானது. குழந்தைகள் உலகம் நம்மிலிருந்து வேறுபட்டது. நாம் அதைத் தாண்டி வந்ததை மறந்து அவர்களை தவறாக கையாள்வதை தவிர்க்க இக்கதையில் உணர்த்துகிறார் வேரா பனோவா.

{Vera Panova’s Серёжа (translated as Seryozha and Time Walked and A Summer to Remember}
இக்கதையைப் பற்றிய என்னுடைய சிறு விமர்சனத்தை ஈழநேசன் தளத்தில் வெளியிட்டிருக்கிறார்க்ள். (சிறுமுயற்சியிலும் இங்கே பதியப்பட்டுள்ளது.)  நண்பர்கள் அங்கு சென்று வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வரிக்கு வரி அதைப்பற்றி பேச எனக்கு நிறைய இருக்கிறது. ரசித்த பகுதிகள் என்று பிரித்து சொல்லவே முடியாமல். ..ஒவ்வொன்றையும் ரசித்திருக்கிறேன். அதனால் தான் அங்கிருப்பது மிகச்சிறிய விமர்சனம் என்கிறேன். :)

25 comments:

கோபிநாத் said...

ரைட்டு...அங்க போறேன்..!

ரோகிணிசிவா said...

thnks for sharing ,
its easy to preach than pratice nu algha solirkeenga

ஆயில்யன் said...

//மேலும் சொல்லும் அறிவுரையைப் போல நடந்து காண்பிப்பதும் சிரமம் தான்.///

ரொம்ப சிரமம்தான்!

ஆனாலும் முயற்சி/செயல்படுத்த முயற்சிக்கின்றோம் என்ற எண்ணம் வரும் அளவிலாவது நம் செயல்பாடுகள் இருக்கவேண்டும்!

Chitra said...

வரிக்கு வரி அதைப்பற்றி பேச எனக்கு நிறைய இருக்கிறது. ரசித்த பகுதிகள் என்று பிரித்து சொல்லவே முடியாமல். ..ஒவ்வொன்றையும் ரசித்திருக்கிறேன். அதனால் தான் அங்கிருப்பது மிகச்சிறிய விமர்சனம் என்கிறேன். :)

....விமர்சனமே தேவை இல்லை.... நீங்கள் ரசித்து சொல்லி இருக்கும் விதமே, புத்தகத்தை வாசிக்கத் தூண்டுகிறது.

பா.ராஜாராம் said...

வாசிக்க தூண்டும் பகிர்வு. பகிர்விற்கு நன்றி முத்துலெட்சுமி.

ADHI VENKAT said...

நாங்களும் ஒவ்வொரு முறையும் ஊருக்கு போகும் போதும் புத்தகங்கள் வாங்கிக் கொண்டு வருவோம்.
மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

ராமலக்ஷ்மி said...

//சில இடங்களில் குழந்தையாக சில இடங்களில் குழந்தைகளின் தாயாக என்று மாறி மாறி யோசித்து ஒருவழியாகிவிட்டேன்.//

புரிகிறது.

அருமையான பகிர்வு. அங்கு சென்றும் வாசிக்கிறேன்.

கோமதி அரசு said...

//குழந்தைகள் உலகம் நம்மில் இருந்து வேறுபட்டது//

ஆம் முத்துலெட்சுமி, முற்றிலும் வேறுபட்ட்து தான்.

குட்டீஸ் சிந்திப்பது போல் நம்மால் சிந்திக்க முடியாது.

ஈழநேசனில் கதை விமர்சனம் படித்தேன்
நல்ல பகிர்வு.

சாமக்கோடங்கி said...

நல்லதொரு அருமையான விஷயம்.. பயனுள்ள தகவல்.. படிக்க முயற்சிக்கிறேன்..

நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

அழகா இருக்கு.. உங்க பகிர்வு.

சிங்கக்குட்டி said...

விடுங்க படிச்சுடுவோம் :-) பகிர்வுக்கு மிக்க நன்றி.

'பரிவை' சே.குமார் said...

வாசிக்க தூண்டும் பகிர்வு. பகிர்விற்கு நன்றி

மனோ சாமிநாதன் said...

உங்களின் எண்ணக்குவியலே ஒரு அழகிய, அருமையான சிறுகதை போல இருக்கிறது!!

வெங்கட் நாகராஜ் said...

இதோ ஈழநேசனில் வாசிக்கிறேன். சில புத்தகங்கள் இப்படி நம்மை புரட்டி போட்டு விடும் உண்மைகளைச் சொல்லும்!

வெங்கட்.

மங்கை said...

//சின்னச்செடியை நறுக்கி செதுக்கி மரமாகவிடாம போன்சாய் செய்வது போல டூஸ் அண்ட் டோண்ட்ஸ் வைத்திருக்கிறோமே நிறைய. மேலும் சொல்லும் அறிவுரையைப் போல நடந்து காண்பிப்பதும் சிரமம் தான்.//

ம்ம்ம் நல்லா சொல்லி இருக்கீங்க... போன்சாய் 'மரங்கள், மரங்களுக்குண்டான அனைத்து தன்மைகளும் இல்லாத ஒரு உயிரனமாகவே இருக்கும்.. முழு வளர்ச்சி இல்லாத பழங்களும் பூக்களும் பார்ப்பதற்கு மட்டுமே அழகு.. ம்ம்ம்.. குழந்தைகளின் உணர்வுகளை அந்த அந்த கால கட்டத்தில் புரிந்துகொண்டு அவர்களின் வளர்ச்சிக்கு நாம் துனையாக இருக்காவிட்டால், குழந்தைகளும் போன்சாய் மரங்களாக ஆகிவிடுவார்கள்

விமலாதித்த மாமல்லன் said...

விருப்பமும் நேரமும் இருப்பின் படித்துப்பார்க்கவும்
http://madrasdada.blogspot.com/

'பரிவை' சே.குமார் said...

விமர்சனமே தேவை இல்லை.

நீங்கள் ரசித்து சொல்லி இருக்கும் விதமே, புத்தகத்தை வாசிக்கத் தூண்டுகிறது.

Thekkikattan|தெகா said...

இந்த மாதிரி புத்தகம் வாசிக்கணும்னா அதுக்கு ரொம்ப பொறுமை வேணும், பொறுப்பு வேணும். அப்படியே வாசிச்சாலும் எந்த பிரதிபலனுமில்லாம திரும்பிக் கொடுக்கிற கண்ணாடி மனசு வேணும்... அதெல்லாம் இருந்து பதிவை கொடுத்த விதம் படிக்கும் பொழுதே புத்தகம் நல்லா இருக்குமின்னுதான் எனக்குத் தோணுது. ஈழநேசன் பதிவு இனிமேதான் படிக்கணும்.

//வாசிப்பவர்கள் இனி குழந்தையை அணுகும்போது அவர்கள் எண்ணவோட்டம் என்னவாக இருக்குமென்று யோசிக்கத்தொடங்குவார்கள்.//

அது தேடுறவங்களுக்குத்தானே கிடைக்கும். அப்படியே தேடுறவங்களும் ஓரளவிற்கு விவரமானவங்களாத்தான் இருந்து போயிருராங்கங்கிறது ஒரு கசப்பான உண்மை :)

ஏங்க, குழந்தைகள் நிலையில தன்னை வைச்சுப் பார்க்க ஒண்ணுமே பெரிசா தேவைப்படுற மாதிரி தெரியல... ஜஸ்ட் கொஞ்சம் அடுத்தவிங்க உணர்வை எதார்த்த வாழ்வில மதிக்க தெரிஞ்சவிங்களுக்கு இயல்பாவே குழந்தைகள் மனச ஈசியா புரிஞ்சிக்க முடியுங்கிற மாதிரிதான் தெரியுது, எனக்கு.

எம்.ஏ.சுசீலா said...

ஈழநேசன் சென்று கட்டுரையை வாசித்தேன்.
கதையின் ஜீவனை விமரிசனத்தில் கொண்டுவரச் சிறப்பாக முயன்றிருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.
நீங்களே கூடக் கதை எழுத ஆரம்பித்து விடலாம்(இன்னும் தொடங்கவில்லையென்றால்)என்பது என் கணிப்பு.

அப்படியே தமிழில் பி.எஸ். ராமையாவின் ‘நட்சத்திரக் குழந்தைகளையும்,கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’கதையையும் கொஞ்சம் எட்டிப் பார்த்து விடுங்களேன்.
நீங்கள் குறிப்பிட்ட கதை போலவே குழந்தை உலகச் சித்தரிப்பு அவற்றில் மிகக் கூர்மையானது.

Anonymous said...

உங்கள் எழுத்து அந்தப் புத்தகத்தை உடனே படித்து விட வேண்டுமென்ற ஆவலை அதிகரிக்க வைத்துவிட்டது..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபிநாத் அங்க போய் வாசிச்சதுக்கு நன்றி.. :)
ரோகிணி நிஜம்மாவே சொல்வது எளிதுங்க முயற்சிப்போம்..
ஆயில்யன் அதே தான் முயற்சிக்கிறோம் என்கிற செயல்பாடுகள் தானே முக்கியம்.
சித்ரா நன்றிங்க.. :)
பா.ராஜராம் நன்றி :)
ஆதி வாங்க.. நன்றி:)
ராமலக்‌ஷ்மி நன்றி :)
நன்றி கோமதிம்மா ;)
பிரகாஷ் நன்றி:)
அமைதிச்சாரல் நன்றீப்பா :)
சிங்ககுட்டி :) அவ்ளோவா புலம்பிட்டேன்? நன்றீ
சே.குமார் நன்றி :)
மனோ ரொம்ப நன்றிங்க அன்புக்கு :)
வெங்கட் ஆமாங்க நல்லா யோசிக்கவைத்தது என்னை இந்த புத்தகம் ..
மங்கை எவ்ளோ அழகா சொல்லிட்டீங்க.. நன்றி நன்றி
விமாலாதித்த மாமல்லன் பகிர்வுக்கு நன்றி
தெகா அதே ! அடுத்தவங்க உணர்வை மதிக்கத்தெரிஞ்சவங்கங்கறது சரியான பதம். நன்றி
சுசீலாம்மா நன்றி.. கண்டிப்பாய் தேடி வாசிக்கிறேன்..நான் நாலு கதை எழுதிப்பார்த்து அவ்ளோ கச்சிதமா வரலைன்னு விட்டுட்டேன் ம்மா.. ;)
படைப்பாளி நன்றிங்க :)

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை.....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி உலவு.

Anonymous said...

Thnx much because of it! My spouse and i haven’t also been this fired up through a post for ages! You have the idea, no matter that implies found in running a blog. Well, You are most definitely moat people that have a specific thing to pronounce that men and women might pay attention to. Stick to any awesome activity. Carry on noble affiliates!

ADMIN said...

பயன்மிகு பதிவு.. ! பாராட்டுக்கள்..

இத்தகைய நூல்கள் இணையவழி பெற நூல்உலகம்