October 9, 2010

கதையூர் போயிருக்கீங்களா..?

வாங்க இது எங்க வீட்டு கொலு..முழுக்க முழுக்க படி அடுக்கியது மகளும் அவள் தோழியும் தான்.. சுண்டல் செய்தது நான். சுண்டல் எடுத்துங்கோங்க.. பச்சை பயறு பிடிச்சவங்க பச்சை பயறு இல்லன்னா கடலைப்பருப்பு சுண்டல் உங்க விருப்பம்.
From golu 2010


இதுதாங்க கதையூர் (ஸ்டோரி லேண்ட்) இது ஒரு டீம் ஒர்க் . மகள் அவளுடைய தோழி மற்றும் நான்.
பொம்மைகள் உதவி : குட்டிப்பையன்.

From golu 2010


கதைபுத்தகத்திலிருந்து காட்சிகள் :
ஷெர்க் , கோட்டை , ஜேக் அண்ட் தெ பீன்ஸ்டாக் ,மோக்ளி ஜங்கிள் புக் ,ஜிஞ்சர் ப்ரெட் மேனும் அவனைதுரத்தும் மாடு ,குதிரை சாப்பிடக்காத்திருக்கும் நரி, கிணத்துக்குள் விழுந்த சிங்கம், ஸ்லீப்பிங்க் ப்யூட்டி,

From golu 2010




From golu 2010

 ஐஸ் ஏஜ் அணில், மெர்மெய்ட் , சிந்துபாத்தோட கப்பல் (சிந்துபாத் காணோம் )

From golu 2010

கார்டூன் கேரக்டர்கள்:
ஜன்னல் வரிசையில் முதலில், கார்ஸ் (அனிமேசன் பட ஹீரோ) ,பவர்பஃப் கேர்ள், பிக்காச்சோ, பென் டென் , பாப்தெ பில்டர் , ஸ்பைடர் மேன், பவர் ரேஞ்சர்ஸ்..

பிக்காசா ஆல்பத்தில் ( http://picasaweb.google.co.in/muthuletchumi/Golu2010?feat=directlink )

கடைசிபடத்தில் பெரியவங்களுக்கு கைக்குட்டை டவல் குழந்தைகளுக்கு தலைக்கு வைக்க க்ளிப்ஸ் இருக்கு எடுத்துக்கோங்க.. மஞ்சள் குங்குமமும் வெத்தலைபாக்கும் போட்டுத்தர மகள் கையால் செய்த நியூஸ் பேப்பர் கவர்கள் கூடவே இருக்கு..
From golu 2010

நவராத்திரிக்கு வந்ததற்கு நன்றி நன்றி நன்றி.

48 comments:

துளசி கோபால் said...

கொலு அட்டகாசமா இருக்கு. கதையூர் சூப்பர்.

குழந்தைகளின் கற்பனை வளத்துக்குத் தீனிதான் இந்த கொலு வைப்பத்தின் முக்கிய அம்சம்.

மகளுக்கும் தோழிக்கும், அண்ணாத்தைக்கும் இனிய பாராட்டுகளும் நல் வாழ்த்து(க்)களும்.

Thamiz Priyan said...

எனக்கு சுண்டல் ப்ளீஸ்.. :)

Thamiz Priyan said...

கதைக் கொலுவில் முன்னாடியே The End இருக்கே.. ;-)

பனித்துளி சங்கர் said...

வாழ்த்துக்கள் அனைவருக்கும் ஒரு அருமையான டீம் ஒர்க் . பகிர்வுக்கு நன்றி

பத்மா said...

sundal super..
ungal pennukkum aval thozhikkum vaazhthukkal

அம்பிகா said...

கொலு அழகா இருக்கு முத்துலெட்சுமி. பெண்ணுக்கும் தோழிக்கும் வாழ்த்துக்கள்.

பொன் மாலை பொழுது said...

இன்னும் பெரிய சைஸ் ல பொம்பைகள் வைக்கலாம்தானே!
இதுவும் நல்லாத்தான் இருக்கு.

'பரிவை' சே.குமார் said...

கதையூர் படங்களின் விளக்கம் நல்லாயிருக்கு...
உங்கள் செல்லத்துக்கும், அவரின் தோழிக்கும் வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

துளசி நன்றி.. நிறைய தீம் வச்சிருந்தாங்க நான் அப்ரூவ் செய்தது இந்த தீம் .. கற்பனை ஊத்து பெருக்கெடுக்குது போங்க ;)
----------------
தமிழ்ப்ரியன் சுண்டல் தான் ரெண்டு வகை தொன்னையில் போட்டு வச்சிருக்கமே ஆல்பம் போகலையா நீங்க ..எடுத்துக்குங்க போய்..
:)

எண்ட் ஏன் முன்னாடி இருக்குன்னா.. கதை புத்தகத்தின் லாஸ்ட் பேஜ் உங்க கண் முன்னாடி பக்கத்துல இருக்கு .. கடைசி படி உங்களுக்கு அருகில் இருக்கிறது மாதிரி .. :)

--------------------
நன்றி பனித்துளி ..டீம் ஒர்க் யெஸ்..செய்யும்போது செம ஜாலியா இருந்தது..
----------------
பத்மா நன்றிங்க ..தேங்காய்ப்பூ போட்டு காரம் குறைச்சலா நல்லா இருந்திருக்குமே..:)
----------------
நன்றி அம்பிகா ;)
------------------------
ஆமாங்க மாணிக்கம் .. இப்பத்தான் பெரிய பொம்மைங்க வாங்க ஆரம்பிச்சிருக்கிறோம்.. முதல் வருசம் கைக்குள் அடங்கும் சின்னச்சின்ன பிள்ளையார்கள் மட்டும் வைத்து பிள்ளையார்கொலுவில் ஆரம்பிச்சது (பிள்ளையார் கலெக்சனை வைத்து)..ஊருல பெரிய பொம்மைகள் வாங்கிவரனும்..இங்க தில்லியில் நம்மூர் பொம்மைகள் அதிகம் கிடைப்பதில்லை.
---------------------
நன்றி குமார்.. :)

ஆயில்யன் said...

சூப்பர்:)

ஊர்ல இருந்து,கிடந்த காலத்துல இப்பிடியெல்லாம் இண்ட்ரஸ்ட் இல்லாம ஏனோதானோன்னு செஞ்ச கொலு செட்-அப் - நேத்து அம்மாவும், அப்பாவும் 5 படி வைச்சு, கொலு வைச்சோம்ன்னு போன்ல சொல்றப்ப, கேக்குறச்ச வெளிப்படுத்த இயலா அழுகைதான் மனசுல வந்துச்சு :(

☀நான் ஆதவன்☀ said...

இப்ப தான் போன வருச கொலு பதிவை படிச்ச மாதிரி இருக்கு. அதுக்குள்ள இந்த வருசமா!

அனுமார் யாருக்கா வரைஞ்சா? சூப்பரா இருக்கு :))

பிளாஸ்டிக் தவிர்ப்போம்’யை ஹேண்ட்மேட் பேப்பர் பையை கொடுத்து வருசா வருசம் பின்பற்றுறீங்களே :) வாழ்த்துகள்க்கா

Unknown said...

சுண்டலுக்கு நன்றி....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயில்யன் ரொம்ப உண்மை.. நானும் எங்கம்மா வீட்டு கொலுவை ரொம்ப மிஸ் செய்கிறேன்..
நெத்திசுட்டி வச்சிட்டு வீடு வீடாப்போய் அழைப்பதும்
வெந்தயத்தைப்போட்டு பார்க்ல புல் வளர்ப்பதும் , மண் தரையில் வண்ணக்கோலமும் .. அழுவாச்சியா வருது.. ;(
-------------------------
ஆதவன் நான் ரொம்ப கொஞ்சமா பதிவு போடறேனோ
அதுக்குள்ளன்னு தோணுதே கொலுபதிவு ;)

அனுமார் பத்தி கேட்டது நல்லதாப்போச்சு அது இந்தவருச தசராவுக்காக பள்ளிக்கூடத்தில் குட்டிப்பையன் செய்துட்டு வந்தது.. போனவருச கொலுவில் நீங்க ராவணன் பாத்திருக்கலாம்.. இதே மாதிரி பள்ளியில் செய்துட்டு வந்தது.. குட் இப்படித்தான் நுணுக்கமாக கவனிக்கனும் அது தான் கொலுவோட சிறப்பு.. அதே பொம்மைகளை கூட அடிக்கடி மாத்தி வைப்பாங்க புதுமைக்காக பெரிய பெரிய கோயில் கொலுவில் அதை கண்டுபிடிக்கிறதே எங்களுக்கு பெரிய விளையாட்டு.. ;)

--------------
கலாநேசன் நன்றிங்க.. :)

கோபிநாத் said...

ம்ம்...சூப்பரு ;))

ஹேமா said...

முத்தக்கா...கொலு என்பதை சினிமாவிலும் இப்போ பதிவுகளிலும்தான் பார்க்கிறேன்.
எங்க ஊர்ல நவராத்திரி கொண்டாடுவாங்க.எங்களூரில் இப்படிச் செய்வதாய் அறியவில்லை.
நவராத்ரிக்குத்தானே இப்பிடி கொலு வைப்பீங்க.

எனக்கு....சுண்டல்தான் பிடிக்கும்.

SurveySan said...

happy golu.

VSK said...

ரொம்ப நல்லா இருக்குங்க!

Chitra said...

ஆல்பம் பார்த்தேன்.... ரொம்ப அழகாக இருக்கிறது.... நல்லா செய்து இருக்கீங்க... வாழ்த்துக்கள்!

புவனேஸ்வரி ராமநாதன் said...

எல்லாமே நல்லாயிருக்கு.

ராமலக்ஷ்மி said...

எதைச் சொல்ல எதை விட? அடடா அசத்தியிருக்கிறார்கள் குழந்தைகள்! ஒவ்வொன்றையும் ரசித்தேன்.

சுண்டல், தாம்பூலம் எடுத்தாச்சு. நன்றி.

குழந்தைகளிடன் என் வாழ்த்துக்களை மறக்காம சொல்லிடுங்க:)!

பவள சங்கரி said...

ஆகா...அருமையான கொலு வீட்டிற்குச் சென்று சுண்டல் சாப்பிட்ட திருப்திங்க....புகைப்படங்கள் அவ்வளவு அழகு.......கதையூர் புதுமை.........இனிமை,வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாவ்... கொலு சூப்பர்... கதையூர் அதை விட அழகு... சுண்டல் யம்மி யம்மி டஸ்டி... உங்க பொண்ணுக்கு நல்ல ரசனை போல இருக்கு... எல்லாத்துலயும் ஒரு நேர்த்தி தெரியுது... மகளுக்கு எனது வாழ்த்துக்கள்... படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி உங்களுக்கு

சுந்தரா said...

கொலு ரொம்ப அழகு.

குழந்தைகளோட கற்பனையில் கதையூர் அருமை.

குழந்தைகளுக்கு என் பாராட்டுகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கோபிநாத் :)
-----------------------
வாங்க ஹேமா சுண்டல் பிடிக்குமா ரெண்டு சுண்டலும் எடுத்துக்கோங்க ..:)
உங்க ஊரு நவராத்திரி பத்தி எழுதி இருக்கீங்களா ? இல்லன்னா எழுதுங்களேன் ..
---------------------
நன்றி சர்வேசன் உங்களுக்கும் ஹேப்பி கொலு..:)
--------------------
நன்றி வி எஸ் கே..:)
--------------------------
நன்றி சித்ரா :)
---------------------
நன்றி புவனேஸ்வரி ..:)
---------------
நன்றி ராமலக்ஷ்மி சொல்லிடறேன்..:)
ஒவ்வொண்ணா சுட்டிக்காமிச்சு சொல்றதுல தான்
எங்களுக்கும் மகிழ்ச்சி..பொறுமையா ரசிப்பவர்களுக்கு
பாராட்டுகள்
---------------------
நித்திலம் நன்றிங்க.. :)கதையூருக்கு நன்றி மீண்டும்வருக..
---------------------
அப்பாவி .. நன்றிங்க.. ஒவ்வொருத்தர் ஐடியா கொடுக்கும்போது மற்றவர் தட்டிக்கொடுக்க அது ஒரு இனிமையான அனுபவம்.. ரெட் கார்பெட் க்கு இந்த முறை செம பாராட்டு .. விதவிதமான துணி கலெக்சன் செய்ய சொல்லிய பள்ளி ப்ராஜகட்ல இருந்து கிடைத்தது..;)
-------------------------
சுந்தரா நன்றிங்க.. :)

எஸ்.கே said...

மிக அழகாக உள்ளன அனைத்தும். நவராத்திரி நல்வாழ்த்துக்கள்!

சென்ஷி said...

கொலு அட்டகாசமா இருக்கு. கதையூர் சூப்பர்.

பாச மலர் / Paasa Malar said...

அழகா இருக்கு முத்து....சிறப்புப் பாராட்டுகள் உங்கள் மகளுக்கும், தோழிக்கும்...

கோமதி அரசு said...

கதையூர் வந்து குழந்தைகளின் டீம் ஒர்க்கை கண்டு ரசித்தோம்.

குழந்தைகளுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!

சுண்டல் ருசியோ ருசி.

டவல் எடுத்துக் கொண்டுவிட்டேன்,பேப்பர்கவரில்.

மாதினிக்கு பேப்பர் கவர் செய்ததற்கு
வாழ்த்து.

வல்லிசிம்ஹன் said...

இப்படி ஒரு க்ரியேடிவ் கொலு இப்பதான் பார்க்கிறேன் முத்து. ரொம்ப நல்லா இருக்கு. குழந்தைகளின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. கோலமும் விளக்கும் அம்சம்.கதையூர்தான் வேலை வாங்கியிருக்கும். குழந்தைகளுக்கு ரசிச்சுப் பார்க்கற மாதிரி சூப்பர்மா.

Starjan (ஸ்டார்ஜன்) said...

கொலு ரொம்ப சூப்பரா இருக்கு.. நான் நிறைய தடவை பாத்துட்டேன்.. ஆனா இன்னும் இன்னும் பார்க்கத் தூண்டுது உங்க கொலு..

என் இனிய நவராத்திரி வாழ்த்துகள் முத்துலக்ஷ்மி மேடம்.

pudugaithendral said...

பசங்களுக்கு என் வாழ்த்துக்கள். கொலு அருமை.

ஹுஸைனம்மா said...

நல்ல ரசனை.. அழகு!!

//கடைசி படி உங்களுக்கு அருகில் இருக்கிறது மாதிரி ..//

சமாளிப்பா... இல்லை நெஜமாவா? :-)))

பயறு பரிமாறுகிற கிண்ணம் ஏன் ஃபாயிலில் பொதியபப்ட்டிருக்கிறது?

சாந்தி மாரியப்பன் said...

சூப்பர் கொலு.. சூப்பர் சுண்டல்ஸ் :-))

கானா பிரபா said...

கதையூர் சூப்பர்

ஒரு பொட்டலம் சுண்டல் பார்சல் பிளீஸ்

மாதேவி said...

அருமை.மகளுக்கு எனது வாழ்த்தைத் தெரிவியுங்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ..எஸ்.கே.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்..
:)
----------------
நன்றி சென்ஷி :)
-------------------
நன்றி பாசமலர் வாங்கவாங்க நலமா? நவராத்திரிக்கு வந்தீங்களா.. நல்லது ..:)
----------------
கோமதிம்மா நன்றி :)
-----------------------
நன்றி வல்லி , கதையூருக்கு பத்திருபது நாள் முன்னயே இருந்து படம் வரைவதுநடந்தது.. :)
----------------------------
ஸ்டார்ஜன் .. ஆர்வத்துக்கும் ஊக்கத்துக்கும் நன்றி..அடுத்த வருசம் இதை விட கலக்கிடுவோம்..:)
----------------------------
நன்றி தென்றல்..:)
------------------------------
நன்றி ஹுசைனம்மா.. அது தொன்னையே அப்படித்தான் இங்க கிடைச்சது, பக்கத்து கடையில்.. சாதாரண தொன்னை கிடைக்கலைப்பா.. கீழே பேப்பர் மேல ஃபாயில் லேசா ஒரு கோட் இருக்கும்..
------------------------
நன்றி சாரல் ..;)
------------------------
நன்றி கானா.. சுண்டல் இந்நேரம் அங்க வந்திருக்குமே..:)
-------------------------
நன்றி மாதேவி வாழ்த்துக்களைச் சொல்லிவிட்டேன் :)

அமுதா said...

சூப்பர் கொலு. குட்டீஸ்க்கு எனது பாராட்டுக்கள். சுண்டலுக்கு உங்களுக்கு பாராட்டுக்கள்

செல்வா said...

// சுண்டல் செய்தது நான். சுண்டல் எடுத்துங்கோங்க.. பச்சை பயறு பிடிச்சவங்க பச்சை பயறு இல்லன்னா கடலைப்பருப்பு சுண்டல் உங்க விருப்பம்.//

ப்ரீயா குடுக்குற எந்த சுண்டலுமே எனக்குப் பிடிக்கும் அக்கா ., அதனால நான் இரண்டையுமே எடுதுக்கிறேனே..!

செல்வா said...

உண்மைலேயே கலக்கலா இருக்கு .,

மங்கை said...

எனக்கும் மலரும் நினைவுகள்... ஒன்னு பட்டு பாவாடையோட அழைப்புக்கு போனது... இன்னொன்னு அதே குதூகலத்துடன் உங்க வீட்டுக்கு வந்தது..ம்ம்ம்ம்ம்....இனிமையா இருக்கு நினைச்சு பார்க்க...

அமுதா கிருஷ்ணா said...

கலக்கல் கொலு...

ரோகிணிசிவா said...

சூப்பர்

அருட்பெருங்கோ said...

கொலு குழுவுக்கு வாழ்த்துகள்!

வலைப்பதிவைப்போலவே கொலு பின்னணியும் பால்வெள்ளை பளிச்.. அழகு!!!

geetha santhanam said...

நன்றாயிருக்கு உங்கள் கொலு. பால ஹனுமான், கதக்களி முகம் நல்லாயிருக்கு. கதையூர் சூப்பரோ சூப்பர். கிணத்துக்குள் சிங்கம், சிந்துபாத் கப்பல் - அருமை. சுற்றுப்புற சூழலைப் பாதுகாக்கும் உணர்வுடன் கையால் செய்த பேப்பர் பைகளா!-பலே!பலே!!.
வெத்திலைப் பாக்கு, சுண்டல் எடுத்துக் கொண்டேன். நன்றி.--கீதா

Jaleela Kamal said...

ரொம்ப அருமை,

கொலு ரொம்ப அழகு வாழ்த்துக்கள், அடுத்து கை வண்ணங்கள். சுண்டல் வகைகள், அடுத்து பரிசுகள் சூப்பர் சூப்பர்

Jaleela Kamal said...

உங்கள் மகளுக்கு என் வாழ்த்துகக்ள்

கொலு அழகு , படங்கள் அழகை பார்த்து கொண்டேஎ இருக்கனும் போல் இருக்கு.

அந்த பச்சை சுண்டலும் , பானையும் ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கு

நானானி said...

கயல்,

நல்ல கற்பனை வளத்தோடு அமைந்த கொலு அழகு.
கொலுவுக்கு மரப்பாச்சி பொம்மைகள்தான் முக்கியம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உங்க கொலுவில் அம்சமாக அமர்ந்திருந்தார்கள்.

குழந்தைகளின் கற்பனைக்கும் ஆர்வத்துக்கும் நவராத்திரி ஒரு வடிகால். மகளுக்கும் அவள் தோழிக்கும் என் வாழ்த்துக்கள். பீன்ஸ்டாக் அழகு. கதையூரை உல்லாசமாக சுத்தி வந்தேன்.

சந்தனம் குங்குமம் எடுத்துக்கொண்டேன். எங்க வீட்டு கொலுவில் செய்த சுண்டல் வகைகளை சாப்பிடவே நேரமில்லை.
வரவங்களுக்கு கொடுக்கணுமேன்னு தொடவும் இல்லை. உங்க கொலுவில் ரெண்டு சுண்டலையும் எடுத்துக்கொண்டேன். சந்தோஷம்!!

ADHI VENKAT said...

கொலு அழகு. கதையூரும் போயாகி விட்டது. மஞ்சள் குங்குமம் எடுத்தாச்சு. சுண்டலும் டவலும் எடுத்துக் கொண்டேன். குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.