October 18, 2010

வானவில் இற்றைகள் *

(இற்றைகள்* = அப்டேட்ஸ்)

தூங்குவதற்கு முன்பு சில நாள் கலந்துரையாடல் நடக்கும். அப்போது குட்டிபையனுக்கு விதவிதமான கேள்விகள் தோன்றும்.. பெரியவளுக்கு விதவிதமான கதைகள் கேட்பதில் விருப்பமிருந்தது ஒருகாலத்தில்.

கேள்வி: அம்மா நீ பூடி(வயதானவள்) ஆனதும் கூட சமைச்சுத்தருவியா எனக்கு ?

ம் ஆமாடா ஏன்?
கேள்வி : அக்காவும் சமைப்பாளா?
ஏண்டா அவள் சமைக்கனும்.. என்று கேட்டுவிட்டு பின், சரிதான் அவளுக்கும் உனக்கும் சேர்த்தே தான் சொல்லித்தருவேன் சமைக்க.. ஒருநாள் நீ ஒருநாள் அவள் சரியா?

கேள்வி: அப்ப நாம மூணுபேரும் சமைக்க அப்பா மட்டும் சாப்பிடுவாங்களா?
அட அவங்களுக்கும் சிலதெல்லாம் சமைக்கத்தெரியுமே அதெல்லாம் அவங்களை செய்ய சொல்லலாமேடா..
கேள்வி: அப்ப நாம நாலு பேருமே சமைச்சா யாரு சாப்பிடுவது..

நாம தான் ..மாத்தி மாத்தி சாப்பிட்டுக்கலாம் வேணா யாரையாச்சும் கூப்பிட்டு சாப்பாடு குடுக்கலாம்..

ம் சரி..கொர் கொர்
-----------------------
கேள்வி: அம்மா ராத்திரி பல் தேய்க்கும் போது மூக்கில் தண்ணி ஏறிடுச்சு ..அந்த தண்ணி எங்க போகும்?
ம் தொண்டை கிட்ட சாப்பாடு போற பைப் கூட ஒரு கனெக்சன் இருக்கு அது வயிற்றுக்குள்ள போயிடும்..
கேள்வி: அய்யோ வாஷ்பேசின் தண்ணி அழுக்குத்தண்ணி அதை குடிக்கக்கூடாதுன்னியே? இப்ப என்ன ஆகும் ? :(

அதெல்லாம் ஒன்னும் ஆகாது ..இன்னிக்குத்தான் பால் , சாப்பாடு எல்லாம் நல்லா சாப்பிட்டியே அதனால் உள்ள ரத்தத்துல இருக்கிற ஃபைட்டர் செல் எல்லாம் சண்டைபோட்டு கிருமிய கொன்னுடும்

ஓ அப்ப சரி கொர் கொர்..
-------------------------
டைக்வாண்டோவில் சேர்ந்து ஒருவருடத்திற்குள் மஞ்சள் மற்றும் பச்சை பெல்ட் கள் வாங்கி விட்டார்.. ஒயிட் பெல்ட் ஆரம்பநிலைக்கானது.

கேள்வி: அம்மா அக்காக்கும் ஆசையா இருக்காம் டைக்வாண்டோ..அப்ப அவ ஒயிட் பெல்ட் ஆகிடுவாளா?

ஆமா ஒயிட் பெல்ட் இப்பத்தானே சேரப்போகிறா..

நான் க்ரீன் பெல்ட(பெருமையுடன்)..சொல்லித்தருவேன் அக்காக்கு..எதிர்வீட்டில் போய் ஆச்சி தாத்தா ப்ரண்ட் துருவ் எல்லாருக்கும் எங்கக்கா ஒயிட் பெல்ட் நான் க்ரீன் என்று காலையில் பந்தாவாக சொல்லிவிட்டு வந்தான்.

அக்காவைப்பார்த்து தம்பி பாடவும் ஆடவும் விரும்பியது போக ..தம்பியைப்பார்த்து அக்காவுக்கு இந்த ஆசையோ அல்லது அடிவிழும் வேகம் பார்த்து தன்னை தற்காத்துக்கொள்ளவோ :)

------------------------------
பள்ளியில் விட்டுவந்த நோட்காக ஒரே அழுகை..அதில் ஹிந்தி வீட்டுப்பாடம் இருந்ததாம்..டீச்சர் மேல் ஓவர் மரியாதையும் பயமும் அழுகைக்கு காரணம்.. அவன் அழுவதை சகிக்காத போது இத்தனை ஒழுக்கமாக இருக்கனுமா என்று வருந்தினேன்.
----------------------------
பக்கத்துவீட்டு தோழன் துருவ், இவன் வாங்கிய பொம்மையைக் காட்டி அவன் ஒன்று வாங்கி இருப்பான். அதைக்காட்டி நம்மை வாங்கித்தர சொல்லி இவன்... (டீலிங்க் நல்லா இருக்கே..)

பொம்மையிலிருந்து இப்ப சினிமாவிற்கும் இடம்பெயர்ந்துவிட்டது இந்த டீலிங்க்..
ரோபோ எந்திரன் குட்டிப்பையன் பார்த்தான்.
பதிலுக்கு தோழன் இராமாயன் போகிறான். மீண்டும் கண்ணீர் விட்டு அழுகை.. ஓ இந்த பட்ஜெட் கட்டுபடியாகாதப்பா..:)

36 comments:

இராமசாமி கண்ணண் said...

இற்றைகள் அருமை :)

☀நான் ஆதவன்☀ said...

:)))) க்யூட்..

படிக்கிற எங்களுக்கே இவ்வளவு ஒழுக்கம் தேவையா?ன்னு இருக்கு :(

ஒன்னு மட்டும் தெரியுதுக்கா.. இப்ப உங்க வீட்ல நீங்க செஞ்ச சமையலை நீங்களே சாப்பிடுறது இல்லன்னு :))

அமைதிச்சாரல் said...

//நாம நாலு பேருமே சமைச்சா யாரு சாப்பிடுவது//

நியாயமான கவலைதான் :-))))))))
(நீங்க நல்லா சமைப்பீங்கதானே?? just kidding :-))

Chitra said...

so cute!!! சமத்து.

ராமலக்ஷ்மி said...

இற்றைகள் இனிமை:))!

பரிசல்காரன் said...

நல்ல பகிர்வு!

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமை.

துளசி கோபால் said...

நாலுபேரும் சமைச்சு வையுங்க.
இதோ வந்துக்கிட்டே இருக்கேன், சாப்பிட:-)))))

மணிநரேன் said...

பகிர்வு அருமையாக இருக்கின்றது.:)

சந்தனமுல்லை said...

வானவில் இற்றைகள் ஒவ்வொன்றும் வானவில் கற்றைகள்!

பைதிவே, அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு! ;‍)

goma said...

இவ்வளவு ஒழுக்கம் தேவையா?ன்னு இருக்கு


நிஜம்தான் அதிகப்படியான ஒழுக்கமும் சமயத்தில் அவஸ்தைதான்...

அம்பிகா said...

குழந்தைகளின் உரையாடல்கள் எப்போதுமே இனிமை.
இற்றைகள் மிக இனிமை.

ஆயில்யன் said...

//அக்காவுக்கு இந்த ஆசையோ அல்லது அடிவிழும் வேகம் பார்த்து தன்னை தற்காத்துக்கொள்ளவோ :)//

இருக்கும் இருக்கும் :)))

//வானவில் இற்றைகள் ஒவ்வொன்றும் வானவில் கற்றைகள்! //

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் [ஆச்சி கலக்குறீங்க போங்க]

கோமதி அரசு said...

குழந்தைகள் உலகம் தனி உலகம் தான்.
நம் வாழ்வை இனிமையாக்கும்.

அக்கா தற்காப்பு கலை படிப்பது தன் தம்பியிடமிருந்து தப்பிக்ககாவா!
அருமை.

இற்றைகள் படிக்க இனிமை.

வெங்கட் நாகராஜ் said...

இற்றைகள் அனைத்தும் அருமை. நாலு பேரும் சேர்ந்து சமைச்சு வையுங்க, சாப்பிடறதுக்கு ஆளா இல்லை?, வந்துட்டா போச்சு!

க.பாலாசி said...

படிக்கும்போதுகூட நம்மையுமறியாமல் சந்தோஷம் உண்டாக்குகிற உலகம் குழந்தைகளுக்கே உரியது... இந்த இற்றைகளும்...

க.பாலாசி said...

//வேணா யாரையாச்சும் கூப்பிட்டு சாப்பாடு குடுக்கலாம்..//

இத நினைச்சாத்தான் கொஞ்சம் பயமாயிருக்கு...ஹி..ஹி...

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

சமத்தானக் குழந்தை.......நல்ல ப்திவுங்க.....வாழ்த்துக்கள்.

சே.குமார் said...

பகிர்வு அருமையாக இருக்கின்றது.

ஹுஸைனம்மா said...

//ம் சரி..கொர் கொர்//

பிள்ளைங்க கதைகேட்டு தூங்குவாங்க, பாட்டுப்பாடி தூங்குவாங்கன்னு கேள்விப் பாட்டுருக்கேன். நீங்க பேசியே தூங்க வைக்கிறீங்களே, சமத்துதான்!! ;-)))

யார் வேணாலும் சமைங்க, உக்காந்து சாப்பிட (மட்டும்) நான் ரெடி!! :-)))

அந்த ‘எண்ணெயில்லா வடை’ ரெஸிப்பி கொஞ்சம் டீடெய்லா ஒரு பதிவாப் போடுங்களேன். நீங்க அன்னிக்கு ஒத்த வரில சொன்னது எனக்குப் புரியல!! :-(

எஸ்.கே said...

சூப்பர்! இற்றைகள் அருமை! சிறப்பாக இருந்தது! வாழ்த்துக்கள்!

"உழவன்" "Uzhavan" said...

//அப்ப நாம நாலு பேருமே சமைச்சா யாரு சாப்பிடுவது..//
 
ஹா ஹா.. :-))) சமத்துங்க

ப.செல்வக்குமார் said...

உண்மைலேயே அந்த சாப்பாட்டு மேட்டர் செம காமெடிங்க..!!
இன்னும் சிரிச்சிக்கிட்டே இருக்கேன் .. நல்லா இருக்கு அக்கா ..!!

ஜெயந்தி said...

பசங்களுக்குத்தான் எத்தனை சந்தேகம். அந்த டீலிங்க நல்லாருக்கே.

கோபிநாத் said...

\\தம்பியைப்பார்த்து அக்காவுக்கு இந்த ஆசையோ அல்லது அடிவிழும் வேகம் பார்த்து தன்னை தற்காத்துக்கொள்ளவோ :)\\

:))))

வல்லிசிம்ஹன் said...

ஆகக் கூடி எல்லாரும் தற்காப்பில பத்ரமா இருக்கீங்க;)
சமையலாகட்டும், டேக்வாண்டோ ஆகட்டும்!! இற்றைகள் ஒளி இதமாக இருக்கிறது.

அன்புடன் அருணா said...

அட!இற்றைகள் புது வார்த்தை படிச்சுட்டேனே!!!!.அருமையாருக்கு...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி இராமசாமி கண்ணன்:)
-------------
ஆதவா எல்லாருமே அவங்கவங்க அம்மா சாப்பாடுதான்ப்பா
விரும்புவாங்க..நானும் எங்கம்மா சமைச்சா
நல்லா சாப்பிடுவேன்..:))
------------------
அமைதிச்சாரல் ;) நான் சிலதெல்லாம் நல்லா சமைப்பேன்
சிலதெல்லாம் சமைச்சப்பறம் பேரு வைப்பேன்
----------------
நன்றி சித்ரா :)
-------------------
நன்றி ராமலக்ஷ்மி :)
---------------------
நன்றி பரிசல் :)
-------------------
நன்றி புவனேஸ்வரி :)
-------------------------
துளசி ஓ வாங்க வாங்க ரெடியா இருக்கோம்:)
------------------------
நன்றி மணிநரேன் :)
---------------------
முல்லை நன்றி..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோமா நன்றி அதே தான்.. அவன் நல்லபையனா இருப்பதால் மனசு மகிழ்ந்தாலும் அவன் அழுவது சகிக்கல எனக்கு..
----------------
ஆமா அம்பிகா நன்றி :)
--------------
ஆயில்யன் நன்றி :)
-------------------
கோமதிம்மா நன்றி ;)
----------------
வாங்க வெங்கட் நன்றி :)
--------------------
நன்றி க.பாலாசி :) வரிசையில் நிக்கிறாங்க நீங்க என்ன இப்படி சொல்றீங்க ..
------------------
நித்திலம் நன்றிங்க :)
----------------
குமார் நன்றி :)
-------------------------
ஹுசைனம்மா இவனுக்கு கதை சொன்னா
அதையெ உட்டாலக்கடி அடிச்சி நம்மை திரும்ப
கதை கேக்கவச்சிடுவான்..பேச்சு தான் பெஸ்ட்..
:)
--------------------
எஸ்.கே நன்றி :)
------------------------
உழவன் நன்றி ;)
-----------------------
செல்வக்குமார்.. நன்றி:)
-----------------------------
ஜெயந்தி சந்தேகத்துக்கு பதில் சொல்லி
சொல்லி தான் நான் இப்படி மெலிஞ்சு போய்ட்டேன்னா
நீங்க ந்ம்பனும் :)

மாதேவி said...

மழலை இனிமை.:)

சென்ஷி said...

சபரியின் போஸ் அருமை :)

நசரேயன் said...

//வானவில் இற்றைகள் ஒவ்வொன்றும்
வானவில் கற்றைகள்!//

ஆமா .. ஆமா

asiya omar said...

தொகுத்து பகிர்ந்த விதம் அருமை.

தியாவின் பேனா said...

அருமையான நகைச்சுவைப் பதிவு

கோவை2தில்லி said...

இற்றைகள் இனிமை. குழந்தைகளின் கேள்விகளே வித்தியாசமானது.

இசக்கிமுத்து said...

இன்றையே குழந்தைகள் நன்றாக சிந்திக்கிறார்கள்!!