November 15, 2010

வியல் * விருதுகள்

வியந்துகொண்டே தொடர்ந்துகொண்டும்
சிலரைத் தொடர்ந்து கொண்டே - அறிந்துகொண்டும்
அறிந்துகொண்டே புரிந்துகொண்டும்
பலவும் புரிந்துகொண்டே - கற்றுக்கொண்டும்
சிறுமுயற்சியின் பயணம் ஐந்தாம் ஆண்டில் நுழைகின்றது.


இந்த வருட தொடக்கத்தை சில சக பதிவாளர்களிடம் கலந்துரையாடித் தொடங்குகிறேன். விடுபட்டவர்களைத் தொடர்புகொள்ள கால அவகாசம் கிட்டவில்லை என்பதற்கு வருந்துகிறேன். பதிவின் நீளத்திற்கு மன்னிக்கவும்.

பதிலளித்துள்ளவர்கள் : Jyothi Vallaboju(telugu blogger), சுசீலாம்மா ,ரோகிணி , ஹுசனைம்மா , கபீஷ், விக்னேஷ்வரி , சுமஜ்லா , தீபாகோவிந்த், புனிதா ,சித்ரா, அன்புடன் அருணா, முல்லை, ராமலக்‌ஷ்மி , ஆதி , உயிரோடை லாவண்யா , கோமதி அரசு,மங்கை, துளசி கோபால்
*********************************************

Q : Jyothi you connect with the world thorugh blog .. what r the things you learn from the fellow bloggers.
I have now settled as a successful blogger, and freelance writer from a simply and shy home maker four years back. I have learnt and gained a lot from blogging. Many of my co- bloggers helped me, supported me and encouraged me to improve my writing, presenting the issue and learning the technical process in blogging.. I never knew what and how to write four years back. But reading and writing blogs had earned me good name and love from thousands of readers around the world. So I am called as Jyotakka in Telugu blog industry.. Now I am writing for different print media and also giving cookery programmes in various TV channels All this happened only be-cos of my blogging and my friends on net.. So I always say... nothing is impossible if we really are sincere and dedicated .. We can learn a lot from internet just sitting at home with minimum educational qualification..

*********************************

இணையத்தில் வியத்தலுக்குரிய செயல்களைச் செய்யும் ஒவ்வொரு வரையும் பெருமைப்படுத்தி இப்பொன் விருதினை வழங்குகிறேன். இங்கு பதிலளித்தவர்களுக்கும்  எனக்கு பதிவுகளில் பின்னூட்டம் இட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் என் சக பதிவாளர்கள் அனைவருக்கும் இவ் “ வியல் ’* விருதினை வழங்குகிறேன். நேர்மறை எண்ணங்களைப் பரப்ப வாழ்த்துகிறேன். Jyothi you too please accept this viyal award . (viyal )means gold. please spread the positive thoughts.
*******************************



***************************************
பணிஓய்விற்கு பிறகு இணையத்தில் நுழைந்து பலருக்கும் இலக்கிய இன்பத்தை பகிர்ந்தளிக்கும் சுசீலாம்மா ப்ளாக் பற்றி தனது கருத்தாக கூறுகிறார்கள்.

‘இணையம் தரும் இளம் நண்பர் கூட்டம்...
மீட்டுத் தருகிறது என் இளமை நாட்களை!”
*****************************************

பதிவர் ரோகிணி

கேள்வி: ப்ரஃபஷனல் வேலையில் இருக்கும் (பல் டாக்டர்) உங்களைப்போன்றவர்கள், வேலை சம்பந்தமான பதிவிடும் போது அதற்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கிறது?

ப்ரொஃபசனலாக வேலைகள் பற்றி பதிவெழுதும் போது இரண்டு விசயங்கள் ..
நாம் ஒரு நல்ல விசயத்தைச் செய்கிறோம் என்கிற திருப் தியும்
கேள்விகள் எழும்போது அதனை விளக்க நல்ல ஒரு வாய்ப்பும் கிடைக்கிறது.
எனக்கு தெரிந்தவகையில் சின்சியராக எழுதப்பட்ட உடல்நலம்பற்றிய பதிவுகள் நல்ல வரவேற்பு கிடைக்கிறது மக்களுக்கு நல்ல விசயங்களைத் தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கிறது.
ஆனால் ஒருவிசயம் உண்மை.. எழுதுபவர் அடிக்கடி பதிவிடுபவராக அல்லது பரவலாக அறியப்பட்டவரா இல்லாமல் போனால் பதிவுக்கு பெரிய வரவேற்பு இருப்பதில்லை .
எழுதுபவர் மற்றும் பதிவு சாராம்சம் இரண்டும் 50- 50 என்ற வகையில் ஒரு பதிவு அனைவரையும் அடைய வாய்ப்புகள் உள்ளது .
********************************************
ட்ரங்க்பெட்டிய திறந்து கதை சொல்லும் ஹுசைனம்மா
கேள்வி..: நீங்கள் பதிவெழுதுவதைப்பற்றி உங்கள் நண்பர்களிடம் சொல்வீர்களா? என்ன சொல்லுவீர்கள் அது பற்றி? நல்லா கேன்வாஸ் செய்து எத்தனை பேரை எழுத வைத்திருப்பீர்கள்?


என் நண்பர்கள் யாருக்கும் நான் இப்படியொரு பிளாக் எழுதுகிறேன் என்று இதுவரைச் சொல்லவில்லை, ஒரே ஒரு தோழியைத் தவிர (அவ இந்தப் பக்கமே வரமாட்டான்னு நிச்சயமாத் தெரியும்!!). ஆனா, எதிர்பாராத விதமா ஒரு கல்லூரித் தோழன் என் பதிவுகளைத் தொடர்ந்து வாசிச்சதுல அது நான்தான்னு கரெக்டா கண்டுபிடிச்சுட்டாப்ல!! ஆக்சுவலி, அவர் மனைவிதான் (ஒரே ஒரு முறை பார்த்தது அவரை) பதிவில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்களை வைத்து நானாக இருக்குமோ என்று கேட்டாராம்.
என் தங்காச்சி இப்ப பிளாக் ஆரம்பிக்கலாமான்னு யோசிச்சுகிட்டிருக்கா - நீயே எழுதும்போது நான் எழுதக்கூடாதான்னு கேக்கிறா!! (வாரிசு அரசியல்!!)

கேள்வி: என்றைக்காச்சும் எழுதுகிற விசயத்தில் குறிப்பிடப்பட்ட ஆள் அதை படிக்க நேர்ந்தால் என்று நீங்க சிந்திப்பதுண்டா.. அனானிமஸா அதாவது புனைப்பெயரில் எழுதுவதே கண்டுபிடிக்கப்படும் போது ..இதை சிந்திச்சுத்தானே ஆகனும்.. அப்ப எழுதுவதில் கவனமெடுத்துப்பீர்களா.

பதில்: நான் பிளாக் எழுதுவது என்னவர் மற்றும் தங்கைகள் குடும்பத்தினருக்குத் தெரியும். நண்பர்களுக்குத்தான் அவ்வளவாகத் தெரியாது. நிச்சயமா நான் எழுதும் விஷயம் இன்றில்லைன்னாலும் என்றாவது ஒருநாள் பிறருக்கும் தெரியவரும்; அன்று, நான் எழுதியதை வாசிப்பவர் குறித்து ஒருவேளை நான் எழுதியிருந்தால், அது அவரைக் காயப்படுத்தக்கூடாது என்றும், இதனால் எங்கள் உறவு/நட்பில் விரிசல் ஏற்படுதல் கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொண்டுதான் பிளாக் எழுதவே ஆரம்பித்தேன். எனக்கு வலையுலகத்தைவிட நிஜ உலகம்தான் முக்கியம்!! இதனாலேயே நிறையக் ‘கதைகள்’ என்னால் இன்னும் எழுதப்படாமலேயே இருக்கின்றன!!
*************************************************
பதிவை மறைச்சிட்டாலும் பதிவுகளை வாசிப்பதை விடாத கபீஷ்
கேள்வி : நீங்க பதிவெழுதினால் (சோம்பேறித்தனப்படாமல் உ.த ரேஞ்சுக்கு எழுத முடிந்தால் ) எது பற்றியெல்லாம் எழுத ஆசை? இன்னும் பெண்கள் எழுதவந்தால் நல்லதா ?கெட்டதா?
விவசாயம், மதம், ஸிவிக் ஸென்ஸ்

கண்டிப்பா நல்லது.

இப்போது படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் :Manifest your Destiny, by Wayne Dyer(இருக்கிர ஊர்ல லைப்ரரில இருக்கற தமிழ் புக்
எல்லாம் முடிச்சாச்சு அதான் ஆங்கிலம்)

எப்ப ப்ளாக் படிப்பீங்க? எப்ப புக் படிப்பீங்க?
எந்த மூட் ல
?


வெட்டியா இருக்கும்போதெல்லாம் ப்ளாக் படிப்பேன். எப்போ வெட்டியா இருக்கேன்னு கேக்கப்டாது. ப்ளாக் போரடிச்சா புக் வாசிப்பேன்.
********************************************
கேள்வி : விக்னேஷ்வரி ஒருவரியில் ப்ளாக் பத்தி சொல்லுங்கன்னா என்ன சொல்வீங்க ?
”நேரம் திருடும், எண்ணம் பகிரும், நண்பர்கள் குழுமும் அக எழுத்துருக்களின் நம் பக்கம்”
****************************************
கேள்வி: பொதுவான இணையவெளியில் எழுதவந்தபின் அதன் நன்மை தீமைகளை எப்படி ஏற்றுக்கொள்கிறீர்கள்? பயன்பெறுகிறீர்கள்? என்று சொல்லுங்கள் சுமஜ்லா.

பதிவு எழுதும் போது, நம்முடைய எல்லாப்பதிவுகளும் சிறந்த பதிவென கொள்ளமுடியாது. நமக்கே ஓரளவுக்கு புரியும். ஆனாலும், சில நல்ல பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்படாத போது சிறு வருத்தம் தான் மனதிற்குள் தோன்றும். உதாரணமாக, அயல்நாட்டு தீபாவளி என்று நான் எழுதிய கவிதையை மிகவும் ரசித்து எழுதினேன். ஏனோ, அது அவ்வளவு வரவேற்பு பெறவில்லை. ஒரு வேளை நான் எழுத வந்த ஆரம்பத்தில் இதை எழுதியதால் யாருக்கும் தெரியவில்லையோ என்னவோ என்று விட்டு விட்டேன். பிறகு அந்த வருட தீபாவளியின் போது இதை மறுபதிப்பு செய்தேன். நான் முதலும் கடைசியுமாக மறுபதிப்பு செய்தது, இது ஒன்று தான். அப்போதும், அவ்வளவாக, இதை யாரும் ரசிக்கவில்லை. நம்முடைய ரசனையும், அடுத்தவருடைய ரசனையும் எப்போதும் ஒன்று போல் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை.

பொதுவாக, நான் என் வலையில் எழுதுவது, ஆங்காங்கே பல டைரிகளில், பல துண்டு காகிதங்களில் சிதறிக் கிடக்கும் என் ஆக்கங்களை ஒரே இடத்தில் சேர்க்க வேண்டும் என்று தான். சில சமயங்கள், என் வலைப்பூவை பிரைவேட் சர்குலேசனுக்கு மட்டும் வைத்துக் கொள்ளலாமா என்று கூட நினைப்பது உண்டு.

இன்னொரு விஷயம், ஓரளவு பதிவுலகைப் புரிந்து கொண்ட பிறகு, நான் பின்னூட்டத்துக்காக மட்டும் எழுதுவதை விட்டு விட்டேன். ஆனாலும், மனதைத் தாக்கி, உள்ளத்தைக் காயப்படுத்தும் விதமாக வரும் பின்னூட்டங்கள் எனக்கு பதிவுலகின் மேல் ஒரு வெறுப்பு ஏற்படுத்தி விட்டது என்னவோ உண்மை தான். சிலருடைய உண்மை முகங்களை அறியக் கண்ட போது, சற்று அதிர்ச்சியாகக் கூட இருந்தது.

பதிவுலகால் நான் பெற்ற பயன், நான் எழுதிய புத்தகம்.. என்னை ஊக்குவித்த, என் எழுத்து பிழையுறும் போது தலையில் கொட்டி, என் எழுத்து இகழேல் என்று நான் கேட்டபோது, என் எழுத்துக்களுக்கு ஆக்கப்பூர்வமான விமர்சனம் தந்த என்னருமை நண்பர்கள் நான் சம்பாதித்த சொத்துக்கள். நன்றி நண்பர்களே!

என் பணியின் நிமித்தம் நான் ஆங்கிலத்தில் நிறைய எழுதிக் கொண்டிருக்கின்றேன். என் எழுத்தார்வம் ஓரளவு இதன் மூலம் நிறைவேறி வருவதாலும், நேரமின்மையாலும் நான் பதிவிடுவதில்லை
***************************************
தீபாகோவிந்த்
இணையத்தில் ப்ளாகின் மூலம் அடைஞ்ச நன்மை பற்றி சொல்லுங்களேன்ப்பா?

பொழுதுபோக்கா ஆரம்பிச்ச ப்ளாக்கை பார்த்து (மக்கள் படிச்சு), "எங்க வலைதளத்துக்காக எழுதறீங்களா" ன்னு கேட்க ஆரம்பிச்சாங்க. இதுக்கு நல்லதா ஒரு சன்மான தொகையும் கிடைச்சுது. அதுக்கப்புறம் வந்த " பொறி’" தான் - இணையதள சஹாயி ன்னு சொல்லர Virtual Assistance ல் முழுமூச்சோட செயல்பட ஆரம்பிச்சேன்.இன்னைக்கு வருமானம் வர அளவுக்கு எனக்குன்னு ஒரு பாதையை நானே வகுத்துக்கிட்டேன். இது பிளாகரானதாலே தான் எனக்கு சாத்தியம் ஆச்சு.
*****************************
கேள்வி : புனிதா தற்போது அதிகம் பதிவெழுதலைன்னாலும் விட்டு விலகாமல் இருக்கீங்க.. ப்ளாக் எழுத வந்தது பற்றியும் வலையுலக நட்பு பற்றியும் சொல்லுங்களேன்..

வலையுலகில் எனது பயணம் ஒரு விபத்து ஆனாலும் அழகிய விபத்து.. பல்கலைக்கழக நூலக இணையத்தில் தகவல் சேமிப்பில் ஈடுபட்டிருந்தப்போது பிண்ணனி பாடகி சின்மயியின் வலைப்பக்கம் கண்ணில் பட்டது... அந்தப் பக்கத்தில் இருந்த ஏதோதோ விசையை ஆர்வக்கோளாறில் தட்ட எனக்கென்று ஒரு வலைப்பக்கம் உருவானது... முதலில் ஏதும் புரியவில்லை...ஆனாலும் கவிதை எழுத மட்டுமே இயல்பாய் எழுத வந்தது எனலாம்..இதுவரைக்கும் கவிதை எழுதிய அனுபவமே இல்லாத என்னையும் எழுதத் தூண்டியது இந்த வலையுலகம். வலையுலகில் இதுவரையில் எதை பெற்றேனோ இல்லையோ நிறைய நல்லுள்ளங்களை நட்பாய் பெற்றிருக்கிறேன்..வலையுலக நட்பால் இழந்ததை விட பெற்றது அதிகம்.. அதிலும் முக்கியமாய் வலையுலக நண்பர்கள் என்னுள் ஏற்படுத்தியுள்ள மாற்றம் ..நேசம்... என் வாழ்வில் எல்லை வரை தொடரும்..இவ்வேளையில் இறைவனுக்கு நன்றி... தாயாகி தந்தையுமாய் எனைத் தாங்கி நேசிக்கும் அந்த அன்புள்ளங்களுக்கும் நன்றி.

4 வருட நிறைவை எய்தும் சிறுமுயற்சியின் உரிமையாளர் முத்துலெட்சுமி அவர்களுக்கு வாழ்த்துகள். அன்பே சிவம் என்பதை போல் அன்பால் வலையுலகை ஆள்வோம் :)
****************************************
சித்ரா நீங்க ப்ளாக் நிறைய வாசிக்கிறீங்க.. இந்த பதிவுகள் வாசிப்பதால் என்ன நன்மை ? எதாச்சும் கத்துக்கிட்டன்னு சொல்வீங்களா? மீன்ஸ் இது ஒரு நல்ல வாசிப்பனுபவம் இது வாழ்க்கைக்கு எதாச்சும் உதவுதுங்கறமாதிரி.

ஒரே நாளில், "திருக்குறள்" , "பொன்னியின் செல்வன்" , "மங்கையர் மலர்", "குமுதம்", "விகடன்", "பயணக் கட்டுரை" , "நக்கீரன்", "கல்லூரி ஆண்டு மலர்" , "தின மலர்", "சினிமா எக்ஸ்பிரஸ்", "தொழில் நுட்ப மலர்" வாசிப்பதால் என்ன நன்மை? இவற்றில் இருந்து வாழ்க்கைக்கு உதவும் என்கிற விஷயங்கள் என்ன இருக்கிறது? ம்ம்ம்ம்..... ஒரே நாளில், பல தரப்பட்ட பதிவுகள்............ இது ஒரு Variety Show மாதிரி. நல்ல விஷயங்களை எடுத்து கொள்கிறேன் - புதிய தகவல்கள் தெரிந்து கொள்கிறேன் - ஒரு விஷயத்தை குறித்த, பலரது பல்வேறு கருத்துக்களை அறிந்து கொள்கிறேன் - சிறந்த நகைச்சுவைக்கு, மனம் விட்டு சிரிக்கிறேன் - அருமையான கவிஞர்களை , எழுத்தாளர்களை அடையாளம் காண்கிறேன் - தேவை இல்லாத, வேண்டாத விஷயங்களை தவிர்க்கவும் பழகி கொள்கிறேன்.

கேள்வி: எப்படி ? என்று மீண்டும் அவர்களை தொணதொணத்தேன்.. 



 I just focus on the matters that I am interested in. வாசித்து விட்டு புலம்புவதில் அர்த்தம் இல்லையே .... ஒவ்வொருவர் ப்லாக்கும் அவங்க territory. அவர்களுக்கு சரி எனப்படும் விஷயங்களை எழுத்தில் கொண்டு வருகிறார்கள் . அதை வாசிப்பதும் ஒதுக்குவதும் , நமது உரிமை தானே! யாரும் அந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்த முடியாதே!

********************************************
அன்புடன் அருணா
கேள்வி : பதிவுகளை எழுதுவதற்கு உங்களுக்கு எது போன்ற நேரம் வசதிப்படுகிறது? நீங்கள் பதிவெழுதுவதை உங்கள் குழ்ந்தைகள் வாசிப்பார்களா? அவர்களுடைய பாராட்டுதல்களைப்பற்றி பகிருங்களேன்..


எழுதுவது அநேகமாக இரவுகளில்தான்..கொஞ்சம் அமைதியான நேரமாதலால்!!!!
குழந்தைகள் நான் ப்ளாக் பற்றி ஏதாவது வாயைத் திறந்தாலே "போச்சுரா"என்று கத்துவார்கள்.பெட்டர் ஹாஃப் "ம்ம்ம் ஆரம்பிச்சாச்சா!" அப்படீன்னு அலுத்துக்குவாங்க! ஏதாவது ஒன்றைப் பார்த்து அட நல்லாருக்கே அப்படீன்னு சொன்னாலே உங்க ப்ளாக்லே போட்டுருவீங்களே அப்படீன்னு சொல்லிக் கலாய்ச்சிருவாங்க!இதுலே பாராட்டுக்கு எங்கே போறது????

நான் : அங்கயும் அதானா கதை. பட் .. அவர்களிடம் பகிர்ந்து கொள்வதும் அவங்க நம்மை கேலி செய்வதுமே ஒரு ஆரோக்கியமான விசயம் தானே வெல்டன் **********************************************
சித்திரக்கூடம் முல்லை அவர்களிடம் கேள்வி
கேள்வி : நீங்கள் பதிவெழுதுவதைப்பற்றி உங்கள் நண்பர்களுக்கு தெரிவித்து சிலர் எழுதவந்ததையும் நான் அறிவேன். ப்ளாக் உலகில் எழுதுவதற்கு எப்படி அவர்களை ஊக்கப்படுத்துவீர்கள்? பதிவுகள் எழுதத்தொடங்கியபின் உங்கள் வாசிப்பு தளம் மாறுபட்டதாக மாறியிருந்தால் அதைனைப்பற்றியும் பகிர்ந்துகொள்ளுங்களேன்..
முதலில், ஐந்தாம் வருடத்திற்கு வாழ்த்துகள் முத்து.

ப்ளாக் உலகில் எழுதுவதற்கு எப்படி அவர்களை ஊக்கப்படுத்துவீர்கள்?
நல்லவேளை, இந்தக் கேள்வியை என்கிட்டே கேட்டீங்க...(என்கிட்டே கேக்கிறதுக்கு பதில் அவங்கிட்டே கேட்டிருந்தா?! ) அவங்களும் இதைப் படிக்க சான்ஸ் இருக்கிறதாலே சீன் போடாம நானே உண்மைய சொல்றேன்..:-) .என் ப்லாக் முகவரியை கொடுத்து ’படிங்க படிங்க’ன்னு டார்ச்சர் பண்ணுவேன்..அப்புறம் கமெண்ட் போடுங்கன்னு இன்னொரு டார்ச்சர். கொஞ்ச நாள்லே தாங்க முடியாம அவங்களே ப்லாக்கிங் ஆரம்பிச்சுட்டாங்க! இன்னும் ஒருசிலர் இருக்காங்க...என்னோட ப்லாக்கை ஓபன் பண்ணினாலே Hit எடுத்துக்கிட்டு ஓடி வருவாங்க...:-)

மத்தபடி, தொடர்பதிவுக்கு அழைக்கிறதுதான் ஊக்கம்னு தோணுது.


பதிவுகள் எழுதத்தொடங்கியபின் உங்கள் வாசிப்பு தளம் மாறுபட்டதாக மாறியிருந்தால் அதைனைப்பற்றியும் பகிர்ந்துகொள்ளுங்களேன்..
நீங்க கேட்டிருக்கிற வாசிப்பு தளம்...வாசிக்கறதெல்லாம்...ஹிஹி-தான்.
அதுவும் இல்லாம, ஆன்லைன்லே படிச்சு படிச்சு...இப்போல்லாம் அதிகபட்சமா மூணு ஸ்க்ரோல்தான்.(சில பதிவுகள்/இடுகைகள் விதிவிலக்கு.) அதைத்தாண்டி வாசிக்க எனக்கு பொறுமை இருக்கிறதில்லை. இந்த அழகுலே புத்தகங்களை எல்லாம்...ஹூம்... ஆனா, எப்போ நான் சிஸ்டம் முன்னாடி இருந்தாலும் தமிழ்மணத்திற்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு. அது இல்லேன்னா, என்னோட கண்ணாடியையே இழந்த மாதிரி இருக்கும் - தட்டு தடுமாறிதான் வேலையே நடக்கும்.

ஆனா, என்ன மாறியிருக்குன்னா...முன்னெல்லாம், ஆன்லைனிலே ரொம்ப வெளிப்படுத்திக்க மாட்டேன்.ஒரு சைலனட் அப்சர்வர்.பின்னூட்டங்கள் இடுவது கூட தவிர்க்க இயலாத நேரங்களில்தான். ஆனா, இப்போ என்னோட கருத்துகளை, எண்ணங்களை வெளிப்படுத்தறேன். படிச்சதை பகிர்ந்துக்கறேன். பதிவுலகம் எனக்கு அறிமுகமானப்போ (2005-2006)பெரும்பாலும் கவிதை, கதைன்னுதான் நிறைய பேரு எழுதுவாங்க. அப்படிதான் ப்லாக்லே எழுதணுமோன்னு லேசா தயக்கம் இருந்தது உண்மை. அந்த தயக்கத்தை உடைச்சதுலே பப்புவுக்கு முக்கிய பங்கிருக்கு.
******************************
முத்துச்சரம் ராமலக்‌ஷ்மியிடம் கேள்வி: நீங்க... கவிதையிலும் கதைகளிலும் ஒருவித நேர்மறை எண்ணங்களை விதைக்கறீங்களே.(பல பின்னூட்டங்களிலு ம் கூட ) அந்த விதைகளின் பலன்கள் எப்படி இருக்குமென்று நினைக்கிறீர்கள்?

பொதுவாக பார்க்கையில் , ஒரு ஊரில் இருக்கும் ஆயிரம் பேரில் ஒருவன் தவறானவனாக இருந்தால் அவன் செய்தியாகிறான். நல்லவராய் மற்ற 999 பேரும் இருந்தாலும் கவனிக்கப் படாமல்தான் போகின்றனர். உலக இயல்பு இது. தினம் நாம் எதிர் கொள்ளும் செய்திகள் பெரும்பாலும் எதிர்மறையாகவே உள்ளன. அவை ஒரு அலையாக எதிர்மறை செயல்பாட்டுக்கும் வித்திடுகின்றன. நேர்மறை எழுத்தால் மட்டும் உலகம் திருந்தி விடாது என்பது உண்மை என்றாலும் அதன் தேவையும் அவசியமானது. பெருக்கெடுத்தபடி இருக்கும் எதிர்மறை அலைகளுக்கு அணை போட சிறு சிறு துளியாக (அவை ஒன்று சேர்ந்து பெருவெள்ளமாகும் எனும் நம்பிக்கையோடு) நேர்மறை எண்ணங்களை எழுத்தில் விதைக்கும் வெகு சிலரில் ஒருவராக இருக்க விருப்பம்.

கேள்வி: நேர்மறை எண்ணங்களுக்கு உங்களுக்கு ரோல் மாடல் யாரு?
அம்மாவும் கணவரும்
**************************************

உயிரோடை லாவண்யா
ப்ளாக் பற்றி ஒரு வரியில் சொல்லுங்க ..
ப்ளாக் கடவுள் மாதிரி, நம்பி நல்லது செய்யனும் நினைக்கிறவங்களுக்கு நல்லது மட்டும் தான் செய்யும்.
*********************************************
பெயரில் ஆதி வலையுலகுக்கு புதுசு வலைப்பூ பற்றி என்ன சொல்றாங்கன்னா
”இது முகமறியா நட்புக்களை பெற்றுத் தரும்
அவரவர் எழுத்துத் திறமையை வெளிப்படுத்தும்
பலதரப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ளும்
தனிப்பட்ட முறையில் ஆத்ம திருப்தி தரும்
ஒரு கருவி (தளம்)”
********************************************
திருமதி பக்கங்கள் கோமதி அரசு

கேள்வி : பதிவுகள் எழுத வந்தபின் உங்களுக்கு தோன்று வது என்ன? இதனால் என்ன நன்மையை உணர்கிறீர்கள்?
பதிவு எழுத முடியும் உங்களால் என்று என்னை எழுத தூண்டியதே நீதான்.இந்த சமயத்தில் நான் உன்னுடைய அம்மா என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

வாழ்க்கைக் கல்வியை கற்றுக் கொடுத்த எனக்கு வலைக் கல்வியை கற்றுக் கொடுத்தாய். அதனால் பெற்ற நன்மைகள் மனமகிழ்ச்சி,அன்பான வலை உலக நட்புகள்.

என் அனுபவங்களையும்,பகிர்ந்து கொள்ள முடிகிறது.மற்றவர்களிடம் உள்ள அனுபவங்களையும்,படிக்க முடிகிறது,எத்தனை திறமைகள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்று வியந்து போகிறேன்.
********************************************
பதிவர் மங்கை
கேள்வி:
சமூகப்பிரச்சனைகளை உடனுக்குடன் அலசி ஆராயும் வேகத்தில் ப்ளாக் உலகத்தில் எல்லாருமே அடுத்தவரை சுட்டுவிரல் சுட்டுவது போல சிலசமயம் எழுதுவதைப்பற்றி என்ன சொல்றீங்க..? அவர்களை மட்டும் அறிவு ஜீவிகளாக பாவித்து சில சமயம் எழுதும்போது சமூகப்பிரச்சனை பேசப்படுதா அவர்க்ளுடைய அறிவார்ந்த மனம் மட்டும் வெளிப்படுகிறதா என்று கூட
தோன்றும் அளவுக்கு
?


ஒரு முறை கிருஷ்ண்ர் யுதிர்ஷ்டரை அழைத்து உங்களை விட மோசமான எண்ணங்களையுடைய ஒருவரை தேடிப்பார்த்து அழைத்து வரமாறு கூறினார். துரியோதனனைப் பார்த்து உன்னை விட புத்திசாலியான ஒரு மன்னனைத் தேடி கண்டுபிடித்து அழைத்து வரவும் என்று கூறி இருவரையும் அனுப்பி வைத்தார். சிறுது நேரத்தில் யுதிஷ்டர் திரும்பி வந்து, என்னை விட மோசமான எண்ணங்களையுடைவர் யாரும் இல்லை என்று கூறினார். துரியோதனனோ என்னை விட புத்திசாலியான மன்னன் இந்த உலகத்தில் இல்லை என்று கூறீனான். தெளிவான மனநிலையில் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள குறைகளை ஆராய்வதால் அதைபற்றிய ஒரு விழிப்புணர்வு இருக்கும்.

என்னைப் பொருத்த வரையில், என்னைக் கடந்து செல்லும் நிகழ்வுகளை எழுதும் போது அந்தப் பிரச்சனைக்குண்டான தீர்வை எழுதி இருக்கிறேனா என்று பார்த்தால், பல முறை பிரச்சனைகளை மட்டுமே ஒரு செய்தியாக எழுதியிருக்கிறேன் என்று சொல்லலாம். நான் பகிர்ந்து கொண்ட விஷ்யங்கள் பெரும்பாலும் வெளியே வராத, அல்லது என் தொழிலில் நான் எதிர்கொள்ளும் சவால்களை சார்ந்தே இருக்கும்.

'சமூகப் பிரச்சனைகளை அலசி ஆராயும் வேகத்தில்' என்று நீங்க குறிபிட்டிருக்கீங்க... அப்படி உண்மையான நோக்கத்தோடு காரண காரணிகளை அலசி ஆராய்ந்தால் மற்றவர்களுக்கு அது ஒரு நல்ல விழிப்புணர்வுப் பதிவாக இருக்கும். ஆராய்ந்து எழுதும் போது இன்னும் பல விஷயங்கள் வெளியே வரும். அதுவும் ஒரு இச்சமுதாயத்திற்கு தேவையான ஒன்று தான்.

சமுதாய பிரச்சனைகளை எழுதும் போது அது சார்ந்த கருத்துக்கள் பெரும்பாலும் அவர்களின் அனுபவம், சூழ்நிலை, கேள்விஞானம் போன்றவைகளை பொருத்து மாறுபடும். நீங்கள் சொன்னது போல் தங்களை அறிவுஜீவிகளாக காட்டிக் கொள்பவர்களிடம் ஒரு தன்னலம் மட்டுமே இருக்கும். அங்கே சமுதாய நோக்கோ, உள்ளுணர்வோ இருக்காது. இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். சமுதாய பிரச்சனைகள் மட்டுமல்ல, எதிலும் தங்களின் கருத்துக்கள் வித்தியாசமாக இருக்கவேண்டும், தங்களின் எண்ணங்களும் அறிவும் மற்றவர்களைக் காட்டிலும் உயர்வானது என்று காட்டிக்கொள்ளும் ஆர்வத்துடன் எழுததத்தான் செய்கிறார்கள். இவர்களை புறந்தள்ளிவிட்டு போக வேண்டியது தான். அந்தப் பிரச்சனைக்குரிய சூழ்நிலையை அவர்கள் எதிர்கொள்ளும் போது, அவர்களின் மனநிலை, அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதை பார்த்தால் புரிந்து விடும்.

Many of us believe that wrongs aren't wrong if it's done by nice people like ourselves.
****************************************
வலையுலகில் எனக்கு ஒரு ரோல் மாடல் துளசி  அவங்க என்ன சொல்றாங்கன்னா..

“நம்ம கயலுக்கு இப்ப நாலு வயசு முடிஞ்சு அஞ்சு ஆரம்பிக்குதுல்லே......... நம்ம வாழ்த்து(க்)களைச் சொல்லாம இருக்க முடியுமா? இனிய வாழ்த்து(க்)கள் உங்கள் சிறு முயற்சிக்கு:-)

இந்த ப்ளொக் உலகம் மட்டும் இல்லைன்னா இப்படி உலகத்துலே எங்கெங்கோ இருக்கும் நம் மக்கள்ஸ் கிட்டே ஒரு தொடர்பும் நட்புணர்வும் வந்துருக்குமா?

வலை தந்த கொடைன்னு சொல்லிக்கலாம். அந்தக் காலத்துலே பேனா நண்பர்கள்ன்னு நட்பு வச்சுருந்தோம். ஆடிக்கொன்னு அமாவாசைக்கு ஒன்னுன்னு கடிதம் வரும். நாமும் பதில் போட அதே அமாவாசைக்குக் காத்திருப்போம். இப்போ பாருங்க.......... என்ன கொழம்பு வச்சேன்னு ஒரு பதிவு போட்டாப் போதும். அட! இந்தக் கொழம்பு வச்சு ரொம்ப நாளாச்சேன்னு நாமும் மறுநாளைக்கு வச்சுறமாட்டோமா?

எல்லாமே உடனுக்குடன் வலைப்பதிவு மூலமாப் பதிஞ்சு பதில் வந்து, பதிலுக்குப் பதில் போட்டுன்னு......எந்நேரமும் படுபிஸியாக் கிடக்கோம். லோகமந்தா ஸ்பீடே காதா? அன்னி ஃபாஸ்டே பாஸ்ட்டு:-))))

நம்ம கருத்துக்கள், அனுபவம், இன்னபிற ஐட்டங்கள் எல்லாத்தையும் சேமிச்சு வச்சுக்கும் கிடங்கு ஒன்னு இருக்கட்டுமேன்னு ஆரம்பிச்சதுதான் இந்த வலைப்பதிவுகள். முக்கியமா என்னப்போல தொலைதூர தேசங்களில் வசிப்பவர்களுக்கு தனிமை உணர்ச்சி எல்லாம் போயே போயிந்தி. இட்ஸ் கான்!!

முக்கியமாக இப்பெல்லாம் நானே (!!!!) எதாவது பயணம் போகணுமுன்னா நம்ம மக்கள்ஸ் என்ன எழுதி இருக்காங்கன்னு பார்த்துவச்சு 'ஹோம் ஒர்க்' செஞ்சுக்கிட்டுபோறேன்னா பாருங்களேன்!

முந்தாநாள் என்னன்னா........... 'மெக்டொனால்ட்ஸ்'லே குளிர் பானம் ஒன்னு வாங்கிக்கிட்டு உறிஞ்சிக் குடிக்கும் முன் ஸ்ட்ராவை உள்ளே உத்து உத்துப் பார்த்தேன். ஏன்? அதுக்கு முதல்நாள்தானே இன்னொரு வலைத்தோழி 'ஸ்ட்ராவுக்குள்ளே பூச்சி முட்டை போட்டு வச்சுருக்கு(ம்) கவனமாப் பார்த்துட்டுக் குடிங்க மக்களே'ன்னு சொல்லிட்டுப் போனாங்க!

இந்த ப்ளொக் நட்பு மட்டும் இல்லைன்னா நான் அப்படியே குடிச்சுருக்கமாட்டேனா???

என்னைப் பொறுத்தவரை இந்த ப்ளொக்கர் என்ற பதவியும் பட்டமும் நல்லாத்தான் இருக்கு.

உலகெங்கும் நமக்கு நண்பர்கள் கிடைச்சுருக்காங்க. நட்பைப் போற்றுவோம். பாராட்டுவோம். நல்ல நண்பர்களா இருப்போம். இப்போதைக்கு இதைவிட வேறென்ன வேனும்?

வாழ்க பதிவுலகம்! வளர்க நட்பு!!”
-----------------------------------------------------------------
குறிப்பு : வியலுக்கான பொருள் கீழ்கண்ட இடங்களிலிருந்து பெறப்பட்டது
நன்றி..

1. வியல் என்ற சொல் பொன்னையும் குறிக்கும். வியலன்>வியாழன் என்பதும் பொன்னிற Jupiter யைக் குறிப்பது தான். 

2.வியல் - அகலம் : காடு : பெருமை : விரிவு : மிகுதி : பொன் : மரத்தட்டு : பலதிறப்படுகை

67 comments:

Thamiz Priyan said...

5 க்கு வாழ்த்து(க்)கள்!
பேட்டிகள் எல்லாம் சூப்பர்!

வல்லிசிம்ஹன் said...

ஐந்தாவது ஆண்டுக்கு வாழ்த்துகள் முத்து. தேர்ந்தெடுத்த அனைவரும் முத்துகள் தான்.
அம்மாவுக்கு வாழ்த்துகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இசை மற்றும் அனிமேசன் உதவி தமிழ்ப்ரியன் அண்ட் ஆயில்யன் ..நன்றி நன்றீ..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வல்லி வாங்க.. வியல்விருதைப்பெற்றுக்கொண்டீர்களா? நான் உங்களிடமிருந்தும் தான் கற்றுக்கொள்கிறேன். பின்னூட்டமிட்டும் கருத்துக்களைப் பகிர்ந்தும் எனக்கு உதவும் அனைவருக்கும் இவ்விருது உரித்தாகும். :)

தமிழ் said...

வாழ்த்துகள்

/வியல் விருது ‍- தமிழ் விருந்து/

துளசி கோபால் said...

இனிய பாராட்டுகள் & வாழ்த்து(க்)கள்.

எல் கே said...

அருமையான பேட்டிகள். ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

ADHI VENKAT said...

உங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி. என்னையும் உங்கள் பதிவுக் குழாமில் இணைத்துக் கொண்டு என் கருத்தையும் வெளியிட்டதற்கு நன்றி.

Vidhoosh said...

அனைவருக்கும் வாழ்த்துகள் :)

உங்களுக்கு ஐந்தாம் ஆண்டுக்கு வாழ்த்துக்கள் :)

புவனேஸ்வரி ராமநாதன் said...

வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

ஐந்தாம் வருட தொடக்கத்துக்கு அன்பான வாழ்த்துக்கள்.

வியல் விருதுக்கு நன்றி.

சுவாரஸ்யமான கேள்விகளும் அருமையான பதில்களுமாய் பதிவு சிறப்பாக வந்துள்ளது.

உங்கள் அம்மாவுக்குப் பெருமை. இருவருக்கும் வாழ்த்துக்கள்.

இசை மற்றும் அனிமேஷன் அமைப்பாளர்களுக்குப் பாராட்டுக்கள்:)!!

தொடருங்கள் முத்துலெட்சுமி!!

சென்ஷி said...

வாழ்த்துக்கள் முத்துக்கா..

தமிழ்பிரியன், ஆயில்யனின் பணியும் அழகு...

சென்ஷி said...

//Jyothi Vallaboju(telugu blogger)//

அகில உலக ப்ளாகர் சேவையா கேள்வி பதிலைக் கொண்டுப் போவீங்கன்னு நினைச்சேன். :))

Deepa Govind said...

வாழ்த்துக்கள் முத்துக்கா..

Thekkikattan|தெகா said...

நல்ல முயற்சி சிறு முயற்சி :) - உங்களுக்கு வாழ்த்துக்கள்; கலந்துக்கிட்டவங்க அனைவருக்கும் என் சார்பாகவும் வாழ்த்துக்கள்...

மங்கையின் கருத்திற்கு ஒரு சின்ன விளக்கத்தோட ஒதுங்கி நின்னு பார்க்கிறேன்...

முதலில் முத்துவிற்கு ஒரு பாராட்டு, நல்ல ஆழமான கேள்வியது. அவங்களும் நின்னு நிதானமா பதில் சொல்லியிருக்காங்க!

//ஆராய்ந்து எழுதும் போது இன்னும் பல விஷயங்கள் வெளியே வரும். அதுவும் ஒரு இச்சமுதாயத்திற்கு தேவையான ஒன்று தான்.//

மிக மிக உண்மை! ஆழமாக உண்மையான அக்கறையோட, நல்ல பரந்த வாசிப்பும், சிறந்த சமூகம் பொருத்தான அவதானிப்பும் இருக்கும் ஒருவர் அப்படியான பார்வையை வேறு எந்த விதமான புற அரசியல்/சொந்த காரணங்களையும் கொண்டு தாக்கம் செலுத்தவிடாமல் முன் வைக்கும் பொழுது அது ஆழ்ந்த ஒரு பாதிப்பை வாசிப்பவர்களின் மனத்தினுள் எழுப்புவது திண்ணம்.

அப்படியான பார்வை உண்மையானதாக இருக்கும் பட்சத்தில் அது பெரும்பாலானோருக்கு உவப்பாக இருக்கும் என்று சொல்லுவதற்கில்லை. பல வசவுகளையும், முகம் தெரியாத எதிரிகளையும் கூட உருவாக்கியிருக்கக் கூடும்.

இருப்பினும் உண்மையை மட்டுமே முன் வைத்து செல்லும் ஒருவனுக்கு அதுவே தவ முயற்சியாக அமைந்து - பொது நலத்திற்கென கல்லடி படுவதால் தேவையானவர்கள் பிரயோசனம் அடைவதின் பொருட்டு கிடைக்கும் எதிர்கால பலனே அவனுக்கு ஊக்கம்.

மாறாக...

//அறிவுஜீவிகளாக காட்டிக் கொள்பவர்களிடம் ஒரு தன்னலம் மட்டுமே //

மங்கை கூறியது போலவே... அங்கே சமுதாய நோக்கோ, உள்ளுணர்வோ இருக்காது... மேலும் --- என் பார்வையில் அது ஓர் எழுத்து மிஷின்... அங்கே அக உணர்வு மரத்துப் போயி தொழில் ரீதியான சொல்லாடல்கள் தூக்கலாக காணப்படலாம். The thirst might die down in the long run.

சாந்தி மாரியப்பன் said...

ஐந்தாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி. பேட்டிகள் அத்தனையும் அருமையாக இருந்தன.. அனிமேஷன் ஒர்க் சூப்பரேய்ய்ய்.. செய்து கொடுத்த சகோக்களுக்கும் பாராட்டுக்கள்..

சாந்தி மாரியப்பன் said...

ஐந்தாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி. பேட்டிகள் அத்தனையும் அருமையாக இருந்தன.. அனிமேஷன் ஒர்க் சூப்பரேய்ய்ய்.. செய்து கொடுத்த சகோக்களுக்கும் பாராட்டுக்கள்..

Anonymous said...

ஐந்தாவது ஆண்டுக்கு வாழ்த்துகள் முத்துக்கா :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

திகழ் நன்றி..:)
---------
துளசி நன்றி :)

-----------
நன்றி எல்.கே:)
------------------
நன்றி ஆதி KtoD :)
-------------------
நன்றி விதூஷ்:)
---------------
நன்றி புவனேஸ்வரி ;)
-----------------------
நன்றி ராமலக்‌ஷ்மி :)
-----------
அடுத்த வருசம் போட்டிரலாம் சென்ஷி டோண்ட் ஒர்ரீ :)நன்றி
------------------
நன்றி தீபா :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தெகா உங்கள் நீண்ட பதிலுக்கு நன்றி. விசயங்களை இப்படி வெவ்வேறு கோணங்களில் பெரும்போது ஒரு தெளிவு கிடைக்கிறது.
உண்மைதான் மங்கையின் அந்த க்டைசி வரி எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை உண்டுசெய்கிறது..
---------------------
நன்றி அமைதிச்சாரல் :)

வெங்கட் நாகராஜ் said...

அருமையான பேட்டிகள். ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் உங்கள் சிறுமுயற்சிக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

எம்.ஏ.சுசீலா said...

அற்புதமான ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்திற்கு நேசமுடனான வாழ்த்துக்கள்.
சிறு முயற்சி..பெரு முயற்சியாகப் பல்கிப் பெருகட்டும்.
விருதுக்கும் நன்றி...

Sanjai Gandhi said...

//பதிவை மறைச்சிட்டாலும் பதிவுகளை வாசிப்பதை விடாத கபீஷ்//

ஓ..இந்தம்ணி ப்ளாகரா? சொல்லவே இல்லை..


மற்ற எல்லார் பதிகளும் நல்லா இருக்கு.. இன்னும் நெறைய கத்துக்க/பகிர்ந்துக்க வாழ்த்துகள்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சஞ்சய் நன்றி ..
அந்தம்மணிக்குத்தான் லிங்க் குடுத்திருக்கம்ல.. ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் போதாதா..:)

சந்தனமுல்லை said...

இங்கும் வாழ்த்துகள் முத்து!

ஓ...லேடீஸ் ஸ்பெஷலா...உங்க தீவிர வாசகர்கள் (ஆயில்ஸ்,தாடிப்பிரியன்....) எல்லார்க்கிட்டேயும் பேட்டி இருக்கும்னு நினைச்சேன்.அனிமேஷன் இன்னும் பார்க்கவில்லை. வீட்டுக்குப் போய்த்தான்....

தொடர்ந்து எழுதுங்கள்.

ஆயில்யன் said...

வாழ்த்துகள் முத்தக்கா

ரொம்ப வித்தியாசமாய் [தமிழ்ல சொல்லணும்ன்னா செம டிபரெண்டான சப்ஜெக்ட்டு] பலரோட கருத்துக்களும் நட்பு என்ற ஒரு புள்ளியில் இணைவது வரவேற்கப்படவேண்டிய விசயம்! புதுமையான முயற்சிகள் வலையுலகில் எப்பொழுதுமே வரவேற்புகளை பெற்றுக்கொண்டே இருக்கின்றது! துறை சார்ந்த பதிவுகள் தொடங்கி வெவ்வேறு ரகங்களிலான பதிவுகள்,பின்னூட்டங்களை பெற்று தராவிடிலும்,வாசகர்களை கண்டிப்பாக ஈர்த்துச்செல்கின்றன! அனைவரும் தம்மால் இயன்ற அளவில் வலையுலகில் தங்கள் பங்களிப்புக்களை தொடரவேண்டும் என்பதனை வெளிப்படுத்தும் விதமாக இந்த ”வியல் விருதுகள்” இருக்கட்டும்!

ஆயில்யன் said...

//சென்ஷி said...

தமிழ்பிரியன், ஆயில்யனின் பணியும் அழகு...//


போங்க பாஸ் எனக்கு வெக்கம் வெக்கமா வர்து! இதெல்லாம் ஒரு பெரிய வேலையா? ! :)

கோபிநாத் said...

முதலில் மனமார்ந்த 5வது ஆண்டுக்கு வாழ்த்துக்கள் அக்கா ;)))

கேள்விகளும் பதில்களும் கண்டிப்பாக அடுத்த பதிவுலகின் அடுத்த சிறுமுயற்சிக்கு உதவும் ;)

அனைத்து பதிவுல மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

suneel krishnan said...

அழகாக கோர்க்க பட்ட வினாக்கள் ,அதற்க்கு இயல்பாக பூச்சு இல்லாமல் வந்த விடைகள் .வலை உலகம் பற்றிய தெளிவான பார்வை கிட்டியது .உங்களுக்கு வாழ்த்துக்கள் .சிறு சிறு முயற்ச்சிகள் அனைத்தும் பெரும் முயற்ச்சியாக வாழ்த்துக்கள்

விக்னேஷ்வரி said...

ஐந்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் அக்காவிற்கு வாழ்த்துகள். இந்த வருடத்தில் உண்மைத் தமிழன் சாருக்குப் போட்டியாகப் பதிவெழுதி பதிவுலகத்தைக் கலக்குங்க. :)

நேசமித்ரன் said...

வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

ஐந்தாவது ஆண்டுக்கு வாழ்த்துக்கள்!

இசை மற்றும் அனிமேசனுக்கு உதவிய ஆயில்யன்,தமிழ்பிரியனுக்கு வாழ்த்துக்கள்!

வியல் விருதுக்கு நன்றி.

ஹேமா said...

கேள்வியும் பதில்களும் பொறுப்போடு இருகிறது.வாழ்த்துகள் அக்கா !

☀நான் ஆதவன்☀ said...

:) வாழ்த்துகள் க்கா. கேள்விகளும் பதில்களும் சூப்பர். விருதோட ட்சைன் சூப்பர் :)

geetha santhanam said...

ஐந்தாம் ஆண்டில் வெற்றிகரமாக நுழையும் சிறு முயற்சி முத்துலெட்சுமிக்கு வாழ்த்துக்கள். நூறாண்டு காலம் வளர்க.

கானா பிரபா said...

ஐந்து ஆண்டுகளாக சிறுகச் சிறுகச் செய்த பெருமுயற்சிகளைப் பெருமூச்சுடன் வாழ்த்துகிறோம்.

வியல் விருதை ஆண்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யுமாறு கோருகிறோம்.
நலிவுற்ற ஆண்கள் முன்னேற்றச் சங்கம்
சிட்னிக்கிளை

ஆயில்யன் said...

//வியல் விருதை ஆண்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யுமாறு கோருகிறோம்.
நலிவுற்ற ஆண்கள் முன்னேற்றச் சங்கம்
சிட்னிக்கிளை//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

நலிவுற்ற ஆண்கள் முன்னேற்றச்சங்கம்
தோஹா கிளை :)))))))))


அண்ணன் பெரிய பாண்டி வாழ்க! வாழ்க [பொறுப்பு தர்றேன்னு சொல்லியிருக்காரு]

கானா பிரபா said...

Blogger சந்தனமுல்லை said...

இங்கும் வாழ்த்துகள் முத்து!

ஓ...லேடீஸ் ஸ்பெஷலா...உங்க தீவிர வாசகர்கள் (ஆயில்ஸ்,தாடிப்பிரியன்....) எல்லார்க்கிட்டேயும் பேட்டி இருக்கும்னு நினைச்சேன்.//

வாசகர்கள் மல்லு சேனல்ஸ் இல் பிசிங்கோ

கானா பிரபா said...

//சென்ஷி said...

தமிழ்பிரியன், ஆயில்யனின் பணியும் அழகு...//

சே சே அப்படி எல்லாம் சொல்லக்கூடாது அவங்க கடமையைத் தானே செஞ்சாங்க

அன்புடன் அருணா said...

ஆஹா! ஒவ்வொரு கேள்வியும் பதிலும் அருமை! 5வது ஆண்டுக்குப் பூங்கொத்து!ஒவ்வொருவரிடமிருந்தும் கற்றுக் கொள்ள ஆயிரம் இருக்கிறது!நன்றி!

சந்தனமுல்லை said...

//வியல் விருதை ஆண்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யுமாறு கோருகிறோம்.
நலிவுற்ற ஆண்கள் முன்னேற்றச் சங்கம்
சிட்னிக்கிளை//

அறிவியல், கணிதவியல், புவியியல்லாம் கட் அடிக்காமல் ஒழுங்காக படித்து தேறிவரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வியல் விருது ‍ கழகம்
சென்னை கிளை

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ஐந்தாம் வருட தொடக்கத்துக்கு அன்பான வாழ்த்துக்கள்.
தொடருங்கள் முத்துலெட்சுமி!!

மங்கை said...

வாழ்த்துக்கள் லட்சுமி... சிறுமுயற்சி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணனுமுமா வளர்ந்துட்டு இருக்கு... உங்கள் ஆர்வமும் முயற்சியும் பாராட்டப்படவேண்டியவை..

வாழ்த்துக்கள்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வெங்கட் நன்றி..:)
----------------
சுசீலாம்மா நன்றீ விருதினை
தளத்தில் இட்டு பெருமைப்படுத்தியதுக்கும்
நன்றி :)
-------------------
முல்லை கழகம் ஆரம்பிச்சிட்டீங்க்ளா..குட்..
நன்றி :)
---------------
ஆயில்யன் இதன் நல்ல பக்கத்தை மீண்டும்
மீண்டும் சொல்லிக்கொண்டிருக்க விரும்புகிறேன்ப்பா
நன்றி :)
---------------------

நன்றி கோபி நண்பர்கள் உங்களின் உதவி தான் சிறுமுயற்சிக்கு
எல்லாமே..
------------------
டாக்டர் சுனில் நன்றி.. தோழிகள் இயல்பாக பேசிக்கிறமாதிரி இருந்ததா
நன்றி நன்றீ :)
---------------------
விக்கி தேங்க்ஸ்.. ஆமா எடுத்தவுடனே போட்டியா ? இல்ல அவரைப் பாத்துக்கத்துக்கிட்டது
நீளபோஸ்ட் ந்னு விருதைக்குடுத்துடலாம்..:)
------------------
நன்றி நேசமித்ரன்:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கோமதிம்மா.. :) நீங்க தானே முதல் ஆசிரியை.

ஹேமா நன்றிப்பா..;)
---------------
ஆதவன் நன்றி ;)
----------------
கீதா வாழ்த்துக்கு நன்றிங்க:)
----------------
கானா என்ன நலிவுற்ற ஆண்களா..
இது எந்த வருடம் 2090 ஆ :))
வாழ்த்துக்கு நன்றீப்பா :)
-------------------
ஆயில்யன் இப்படியே சங்கம் ஆரம்பிச்சிட்டே
இருங்க பட் உங்களுக்கு வாலிபர் சங்கம் தான்
:)
--------------
அருணா.. பூங்கொத்துக்கு நன்றிப்பா..:)ரொம்ப உண்மை
நாம் பார்க்காத பல அனுபவங்களை மற்றவர்கள் பெற்றீருக்கிறார்கள்
அதிலுருந்து என்ன கற்றுக்கொள்வோம் என்று பார்க்கிறேன்.
---------------
ஜெஸ்வந்தி வாங்க நன்றி..:)
-------------
மங்கை நீங்களெல்லாம் கூட
இருக்கும்போது வளர்ச்சிக்கென்னப்பா
நன்றி :)

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துகள் மேடம்!

நிறைய விஷயங்கள் நேர்மறை எண்ணங்கள் பற்றி தெரிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி!

குட்டிப்பையா|Kutipaiya said...

வாழ்த்துக்கள்...

முகுந்த்; Amma said...

ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்க்கு வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி அவர்களே. மென்மேலும் பல ஆண்டுகள் உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்.

பதிவர்களிடம் நீங்கள் வைத்த கேள்விகளும் அதற்கு அவர்கள் கொடுத்த பதிலும் டாப்.

நசரேயன் said...

ஐந்தாம் ஆண்டு வாழ்த்துக்கள் ..
கபீஷ் எப்ப பதிவர் ஆனாங்க ?

பாலராஜன்கீதா said...

விருது
கொடுத்தவருக்கும்
பெற்றவர்க்கும் :-)
வாழ்த்துகள்.

பாத்திமா ஜொஹ்ரா said...

எல்லோருக்கும் எங்கள் இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

பனித்துளி சங்கர் said...

வாழ்த்துக்கள் அறுபது மாதங்களுக்கு

ஸாதிகா said...

அடடா..எவ்வளவு சீனியர் பதிவர்.வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..இன்னும் நெடுங்காலம் பதிவெழுதி அனைவரும் பிரயோஜனப்பட வேண்டும்.அருமையான பேட்டி.வித்தியாசமாக சிந்திக்கின்றீர்கள் சகோ.முத்துலக்ஷ்மி.

జ్యోతి said...

Thankyou Lakshmi for the lovely award... Happy Blogging dear..

settaikkaran said...

டபுள் நன்றி! ’வியல்’ என்ற வார்த்தையின் விளக்கத்துக்கும், இத்தனை பேரின் பேட்டிகளை அளித்ததற்கும்...! :-)

ஐந்தாண்டுகள்?? யம்மாடியோவ்! பாராட்டுகள்! :-)

காட்டாறு said...

பயணத்தில் மென்மேலும் வெற்றி பெற இதோ பிடியுங்கள் வாழ்த்துக்களை! 5ஆம் ஆண்டு தொடக்கமே அமர்க்களப் படுது. சூப்பர். உங்கள் பணி மேலும் தொடரட்டும்.

டுபாக்கூர் பதிவர் said...

வாழ்த்துகள்...

ரொம்ப வயசானவங்களா தேடிப் பிடிச்சி கேள்விகேட்டு வாங்கி போட்ருக்கீங்க...

:))

Vidhya Chandrasekaran said...

பிறந்தநாள் வாழ்த்துகள் சிஸ்டர்:)

ஹுஸைனம்மா said...

5வது வருட ‘சிறு முயற்சி’க்கு வாழ்த்துகள் முத்தக்கா.

கோமதியக்கா உங்க அம்மாவா? சொல்லவே இல்லை. நான் பாருங்க, அம்மா, பொண்ணு ரெண்டு பேரையுமே அக்கான்னு கூப்பிட்டுகிட்டிருக்கேன்!!

’வியல்’ - அழகு. ‘இற்றைகள்’ போலவே. நேரம் போகலைன்னா தமிழ் அகராதியைப் புரட்டிகிட்டிருப்பீங்களோ??!! ;-))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி வசந்த் :)
---------------
பையா நன்றி :)
---------------------
நன்றி முகுந்தம்மா:)
--------------------
நசரேயன்.. கபீஷ் பதிவரா இருந்தாங்க இருக்காங்க.. பதிவு லிங்க் குடுத்திருக்கேனே பாக்கலையா.. குழுவாக பதிவிட்டாலும் பதிவர் தானே..:)
------------------------
பாலராஜன் கீதா நன்றிங்க :)
--------------------------
பாத்திமா நன்றி :)
---------------------
பனித்துளி அது என்ன கணக்கு செய்து சொல்றீங்களா :) நன்றி..

-------------
நன்றி ஸாதிகா ..சீனியரெல்லாம் இல்லைப்பா..பழையபதிவர் :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

thankyou jyothi .. :)
---------------------
சேட்டை , நன்றி :)
----------------
காட்டாறு நன்றி..அப்படியே
நீங்களும் ஒரு கவிதை எழுதுங்க பாக்கலாம்.:)
----------------
டுபா .. வயசுக்கும் அனுபவத்துக்கும் தானே
சம்பந்தம் இருக்கு..:)
நன்றி ‘
---------------
வித்யா நன்றி :)
---------------
ஹுசைனம்மா.. கூப்பிட்டாலும் தவறில்லைப்பா..
நாம் எல்லாம் இங்க ஒரு தோழிகள் தானெ..
நன்றி :)

ராமலக்ஷ்மி said...

வியல் விருதுகளுக்கு தமிழ்மணம் விருது! மனமார்ந்த வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி!!!

சென்ஷி said...

/ராமலக்ஷ்மி said...

வியல் விருதுகளுக்கு தமிழ்மணம் விருது! மனமார்ந்த வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி!!!//

அப்படியா..! மகிழ்வான செய்தி.. வாழ்த்துகள் முத்துக்கா.. :)

உமர் | Umar said...

விருது பெற்ற விருதுகளுக்கு வாழ்த்துகள்.

Asiya Omar said...

தமிழ்மண பதக்க விருதிற்கு வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.அருமையான இடுகை.

க.பாலாசி said...

தமிழ்மணம் விருதிற்கு வாழ்த்துக்கள் அக்கா..

ராமலக்ஷ்மி said...

மகளிர்தின வாழ்த்துக்கள்! இந்தப் பதிவு இன்றைய வலைச்சரத்தில்.., நன்றி.