December 4, 2010

வானவில் இற்றைகள்

க்ரீஈஈன் - gr... ee n
சபரியின் வகுப்பில் டிக்சனரி செய்யராங்க.. தினமும் 5 புது வார்ட் எழுதவேண்டும். இன்று ஜி யில் தொடங்குவது. நான் அவனுக்கு ஒலியின் நீளம் புரியட்டும் என்று ஈ ஈ என்று சொன்னதும்..
டபுள் ஈ யா
ஆமாம்
அப்ப டபுள் ஈ ந்னு சொல்றதுக்கென்ன ?
:(
-----------------------------------------------------------
’பேபி என்று என்னைச் சொல்லாதே’ என்று அக்கா சொன்னாலும், தம்பி அக்காவை நோ பேபி , கம் பேபி என்று போனமாதங்களில் அழைத்துக்கொண்டிருந்தார்.
ஏண்டா இனி அவ தான் பேபியா நீ இல்லையா.. நீ அப்ப அண்ணா
இனி அவளைத்தான் கொஞ்சனும் வீட்டில் எல்லாரும்..ஒகேயா?
ஓகே
ஒரு ஆறுவருசம் அவளை தனியாக ராணி மாதிரி பார்த்தாச்சு .. இப்ப ஆறுவருசம் ஒன்னைப்பாத்தாச்சு திரும்ப அவ டேர்ன் போலயே..?
எங்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த மகளின் முகம் பளிச் பளிச்
ஏக்கம்?
------------------------
மகள் சிறுவயதில் 11 மணி வரைகூட புத்தகமும் ரைம்ஸும் படிப்பாள் என்று சொல்லி இருக்கிறேனில்லயா . நம்மையும் படித்துக்காட்டச்சொல்லி நச்சரிப்பாள். மகனை உக்காரவைக்கப் பாடு படவேண்டும். அதற்காகச் சொல்லிக்கொண்டிருந்தேன்.
‘இவன் அப்படியே உல்டா உன்னை மாதிரி இல்லை ‘
மகள்: ’ அம்மா அப்ப இவன் பெரிசானதும் நல்லாப் படிப்பானோ’
அப்பா: அப்ப நீ ஒத்துக்கிறியா இப்ப சரியாப் படிக்கிறதில்லன்னு :)
மகள் :அவ்
-----------------------------------------
வாரம் ஒரு விசயம் பற்றி எடுத்துகொண்டு வகுப்பின் நடுவில் நின்று பேசவேண்டும் என்பது சபரிக்கு வகுப்பில் ஒரு பயிற்சி முறை.
போனவாரத்தில் மைசெல்ஃப் பற்றிப் பேசவேண்டும். தயார் செய்த நான்கு வரிகளை பயிற்சி எடுக்க விருப்பமே இல்லை. அவ்வப்போது விளையாட்டின் நடுவே பயிற்சி எடுத்தாலும் அவை அத்தனை போதாது என்று தெரிந்தே இருந்தது. ஆனால் அவனைப் போட்டு பயமுறுத்தும் எண்ணமும் இல்லை. புதன் அன்று சரியாகச் சொல்ல இயலவில்லை. டீச்சர் ‘நோ வெரிகுட்’ என்று சொல்லிவிட்டார்கள் என்று வருத்தப்பட்டான். மீண்டும் நாளை சொல்லலாம் என்றார்கள் இன்று பயிற்சி கொடு என்று அவனேக் கேட்டுக்கொண்டான். :)
இரண்டாவது வரியில் இருந்த ஒரு புது வார்த்தை சொல்ல வராமல் போகவே மற்ற வரிகளைச் சொல்ல தயக்கம் இருந்திருக்கிறது. பிறகு தயார் செய்த எந்த வரியும் அடுத்த வரிக்கு முன்போ பின்போ அல்லது சொல்லாமல் விட்டாலோ பொருள் குற்றம் வரப்போறதே இல்லை. அவ்ளோ சிம்பிள் என்று அவனுக்கு தைரியம் குடுத்தபின் ..வெரிகுட் வியாழன் கிடைத்துவிட்டது.
இந்த வாரம் ’மை மதர் ‘ இதற்கும் பயிற்சியின் போது சுணக்கம் இல்லாமல் பயிற்சி எடுத்துக்கொண்டதோடு இரண்டு முறை சொல்லிப்பார் என்றால் 3 மூன்று முறை என்று உற்சாகமாகவும் இருந்தான்.
மற்ற பையன்கள் பேசியது புரிந்ததா என்ன பேசினார்கள் என்ற கேள்விக்கு பதில்
அவங்க எல்லாம் முஷ்கில் முஷ்கிலா ப் பேசினாங்க.. :)
முஷ்கில் - கஷ்டமான
அடுத்தவாரம் தலைப்பு . என் பள்ளிக்கூடம்
--------------------------------------------
மகளுக்காக ஃபார்ம்வில் விளையாட ஆரம்பித்தேன். இன்னுமா உனக்கு அதுல ஆர்வம் வரலை என்று கேட்டுக்கொண்டே இருந்தாள். சின்னதாக எனக்கு ஆர்வம் வந்ததை கண்டுகொண்டாள் ஒரு நாள். குட் என்று பாராட்டினாள். எனக்கு அவளே கற்றுக்கொடுத்தாள். அடுத்த லெவலுக்கு நான் முன்னேறும்போதெல்லாம் ‘வாவ்’ குட் அம்மா என்று பாராட்டுகிறாள். அவளின் பாராட்டுதலுக்காகவாவது நான் அடுத்தடுத்த லெவலுக்குப் போகவேண்டும் எனத்தோன்றுகிறது.
----------------------------------
வீ கேம் அம்மா பரிசளித்திருந்தார்கள். அரைமணி நேரம் அதற்கு ஒதுக்கப்படும். டென்னிஸ் விளையாடுவதில் வீட்டில் எல்லாரும் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறோம். தனக்காக உருவாக்கப்பட்ட கேரக்டரில் மட்டும் தான் விளையாடுவார் தம்பி. பௌலிங் மற்றும் டென்னிஸில் அவர் தான் வெற்றி பெறுகிறார்.
--------------------------
சபரி முடிந்தவரை எழுத்துக்கூட்டி கதை புத்தகங்களை வாசிக்கமுடிகிறது.
ஒரு பல் விழுந்துவிட்டது. தான் பெரியவனாகிவிட்டதாக பெருமிதம் கொண்டான்.தன் பிறந்தநாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்
-----------------------------------
மகளின் பள்ளியில் வால்ட்விட்மேனின் கவிதையை பாடலாக இசையமைத்துப் பாடச்சொல்லி இருந்தார்கள். அவளுடைய  தளத்தில்  அனுபவத்தை பதிவு செய்திருந்தாள்.


யூ ட்யூபில் அப்பாடலை  வரிகள் கீழே தெரியும்படி தமிழ்பிரியன் வடிவமைத்ததை இங்கே காணலாம் (கேட்கலாம்). க்ளாஸிக்ன்னு போட்டிருக்கீங்களேன்னு கேட்டா சினிமான்னாலும் எங்கூர் சினிமால்லா க்ளாசிக் லிஸ்ட்ன்னுட்டார் தமிழ்பிரியன்.
நன்றி  தமிழ்பிரியன்.

31 comments:

☀நான் ஆதவன்☀ said...

:))) ஈ'ன்னு இழுத்துகிட்டே இருந்தா டபுள் ஈ ஆகிடுமா? ஒழுங்கா சொல்லி கொடுக்கனும்க்கா :)

ஃபார்ம்வில்லால என்கிட்ட ஆடு,மாடு யானைனு நிறைய இருக்குக்கா.. என் நிலத்தோட எல்லாத்தையும் நல்ல ரேட்டுக்கு வாங்கிக்கங்களேன்.

பாட்டு ரூம்ல கேட்குறேன்

ADHI VENKAT said...

இற்றைகள் அனைத்தும் நல்லா இருக்கு. என் பொண்ணுக்கும் ஒரு பல்லு விழுந்திடுச்சு. மாதினி குரல் அழகு.

கானா பிரபா said...

பாட்டு கலக்கல்ஸ் மாதினி, ஆதவனுக்கு பொறாமை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பெரியமனுசன்னா , சொத்தை நீங்களே எழுதிக்கொடுக்கனும் ஆதவன். ( அப்படித்தான் சொல்லிக்கிறாங்க )

காசுகொடுத்து வாங்கச்சொல்றீங்க :)
---------------
ஓ சபரிக்கிட்ட சொல்ரேன் உன் ப்ரண்டுக்கும் பல் விழுந்துடுச்சாம்ன்னு நன்றி ஆதி.. :)
---------------------
நன்றி கானா :)

புவனேஸ்வரி ராமநாதன் said...

அழகா பாடியிருக்காங்க.

ஆயில்யன் said...

//பாட்டு கலக்கல்ஸ் மாதினி, /

அதே :))

ஆஹா ஃபார்ம் வில்லாவில களமிறங்கியாச்சா ரைட்டு :)

கோபிநாத் said...

பாட்டு சூப்பர்... ;)

\\இந்த வாரம் ’மை மதர் ‘ இதற்கும் பயிற்சியின் போது சுணக்கம் இல்லாமல் பயிற்சி எடுத்துக்கொண்டதோடு இரண்டு முறை சொல்லிப்பார் என்றால் 3 மூன்று முறை என்று உற்சாகமாகவும் இருந்தான்.\\

தலைப்பு அந்த மாதிரியோ!!! ;))

Thekkikattan|தெகா said...

it seems like having fun with kids - அதற்கானதொரு நல்ல வளர்ச்சி பருவமிது.

//அவளின் பாராட்டுதலுக்காகவாவது நான் அடுத்தடுத்த லெவலுக்குப் போகவேண்டும் எனத்தோன்றுகிறது.//

அப்புறமா ரெண்டு பேரும் ஒரே சிஸ்டத்திற்கு மண்டை உடைச்சிக்கும் போதில்ல இருக்கு :))

பாட்டுக் கேட்டேன் என்ன ஒரு ஃபூயுசன் -கலக்கல்ஸ்

பனித்துளி சங்கர் said...

பாடல் மிகவும் அருமை பாடலுடன் இசை கலந்திருப்பது இனிப்பில் மேலும் தேன் உதறிய தித்திப்பை ஏற்ப்படுத்தியது . பகிர்வுக்கு நன்றி

சாந்தி மாரியப்பன் said...

//டபுள் ஈ யா
ஆமாம்
அப்ப டபுள் ஈ ந்னு சொல்றதுக்கென்ன//

இந்தக்கேள்வியை நாந்தான் எங்கூட்டு ரங்க்ஸ்கிட்ட கேக்குறது வழக்கம் :-)))

ராமலக்ஷ்மி said...

//ஒரு பல் விழுந்துவிட்டது. தான் பெரியவனாகிவிட்டதாக பெருமிதம் கொண்டான்.//

இல்லையா பின்னே:))?

மாதினியின் பாடலை அவள் தளத்திலேயே கேட்டு மகிழ்ந்தேன். மயங்கினேன். மீண்டும் வாழ்த்துக்கள்!

இற்றைகள் இனிமை. அடுத்த தொகுப்புக்கு ஆவலாய் காத்திருக்கிறோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முத்து, தம்பி அண்ணா ஆகிட்டானா:0)

எங்க பேத்தி தான் பேபியாகிவிட்டதாக அறிவித்திருக்கிறாள்.(இத்தனை நாட்களாக வித்தன் .. லிட்டில்..கேர்ளாக இருந்தாள்.! மாதினி குரல் அருமையாக இருக்குப்பா.மீண்டும் கேட்கப் போகிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

Good ones. thanks for sharing. glad to hear Madhini's song for a second time.

எஸ்.கே said...

அருமை!

ஆமினா said...

//அப்ப டபுள் ஈ ந்னு சொல்றதுக்கென்ன ? //

ஹா...ஹா..ஹா....
இப்படி தான் பல நேரம் பல்ப் வாங்கிக்கிறோம் :))

ஆனந்தி.. said...

அழகு...:)))

கோமதி அரசு said...

மாதினி பாடல் அருமை.
சபரிக்கு பல் விழுந்து விட்டதா?
பெரியவன் ஆனதில் அவனுக்கு எவ்வளவு மகிழ்ச்சி.

மாதினியிடம் பாராட்டு!

சந்தோஷம் நிறைய பாராட்டுதல் கிடைக்கட்டும்.

நானானி said...

மாதினியின் பாடல் அருமை. குரல் வளத்தைக் காப்பாற்றுங்கள்.

பள்ளி செல்லும் பிள்ளைகளுடனையே நாமும் எவ்வளவோ கத்துக்கலாம்.

ஈ....!

அம்பிகா said...

குழந்தைகள் மொழி எப்பவும் அழகு தான். ரசனையான பகிர்வு.

சந்தனமுல்லை said...

'மை மதர்' என்ன சொல்லிக்கொடுத்தீங்க..;-)

மகளின் ஏக்கம் ‍ :‍-)

Chitra said...

.... அருமையான விஷயங்களை பகிர்ந்து அசத்திட்டீங்க.

மங்கை said...

குழந்தைகள் இருந்தாலே நமக்கும் learning நடக்கும்....சொல்லப்பொன நாம தான் ரொம்ப தெரிஞ்சுக்குவோம்..

ம்ம்ம் உங்க பதிவுகள் இருந்து உண்மைனு தெரியுது....

ஜூனியர் ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்களும் என் அன்பும்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி புவனேஸ்வரி :)
----------------
நன்றி ஆயில்யன் ..:)
--------------
நன்றி கோபிநாத்:)
டைட்டில் பற்றிய கருத்து கேட்டு புல்லரிக்குதுப்பா
அப்படி யும் இருக்குமோ ஹஹஹ்ஹா
---------------
நன்றி தெகா:)
-------------
நன்றி சங்கர் :)
-------------
அமைதிச்சாரல் கேள்வி நாம கேக்காட்டி தான் ஆச்சரியம் இல்லையா :))) இப்படி காதில் வாங்கித்தான் குட்டீஸ் திருப்பி அடிக்கிறாங்களோ என்னவோ?
---------------
ராமலக்‌ஷ்மி பிறந்தநாளில் பெரியாளாகலாம்ன்னு இருந்தான் சீக்கிரமே பல் விழுந்து சீக்கிரமே பெரியவனாகிட்டான்:))
----------------
வல்லி சூப்பர்.. பேபியாகிட்டதா அறிவிச்சிருக்காளா ஹ்ம்..நல்லா யோசிக்கிறாங்க:)
------------------
வெங்கட் நன்றி :)
--------------
எஸ்.கே நன்றி :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமினா கொஞ்சம் நஞ்சமில்ல பல்ப் போட்டு
ப்ரகாசமா இருக்கோம்..
:)
-------------
ஆனந்தி நன்றி :)

-----------
கோமதிம்மா நன்றி:)
---------------
நானானி நன்றி :)
---------------
அம்பிகா நன்றி ;)
----------------
முல்லை நானே என்னப்பற்றி பேசினா பெருமையாகிடாதா
அதனால் நான் தயாரிக்கல .. என் மகள் தான் தயாரித்தாள். அம்மா ரொம்ப ஸ்வீட் அவங்களுக்கு பாடப்பிடிக்கும் அம்மா டெலிசியஸா எனக்கு செய்துதருவாங்க மாதிரி :)
------------------
நன்றி சித்ரா:)
--------------
நன்றி மங்கை:)

விக்னேஷ்வரி said...

டபுள் ஈ யா
ஆமாம்
அப்ப டபுள் ஈ ந்னு சொல்றதுக்கென்ன //

:)

Dubukku said...

சுவையான பகிர்தல்கள்.
//அப்ப டபுள் ஈ ந்னு சொல்றதுக்கென்ன ? //
ரொம்பவே ரசித்தேன். சிலசமயம் குட்டீஸ் நம்மள லூசாக்கிடுதுங்க :))

SurveySan said...

அழகான பகிர்வு. ப்ளாகின் பவர் இந்த மாதிரி பதிவுகளை படிப்பதில்தான் புரியுது.

மாதேவி said...

இனிமை.

NewBee said...

//மகள் முகம் பளிச் பளிச் ஏக்கம்?//

:) இங்கேயும் அதே. சின்னவளைப் பாராட்டும் போழ்து, பெரியவனையும் சேர்த்துச் சொல்லணும் :)

//இரண்டாவது வரியில் இருந்த ஒரு புது வார்த்தை சொல்ல வராமல் போகவே மற்ற வரிகளைச் சொல்ல தயக்கம் இருந்திருக்கிறது...//

எல்லாக் கோணங்களிலும், பிள்ளைகளைப் பற்றி நாம் யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது, அவர்களுக்கு எல்லாக் கோணங்களிலும் தங்களை வெளிப்படுத்தயியலாத போழ்து.நாதனும் அதே :)

நீங்கள் எழுதும் விதம், அழகு கயலக்கா :)

geetha santhanam said...

உங்கள் குழந்தைகள் பற்றிய அனுபவங்கள் படிக்க இனிமை. முன்பு ஒரு முறை உங்கள் மகள் பாடிய (திருவாசகம் என்று நினைவு) பதிவைப் பார்த்து 'எப்படி இதெல்லாம் கற்று கொடுக்க முடிகிறது' என்று வியந்தேன். நானும் அன்றிலிருந்துதான் என் மகளுக்கு தமிழில் துதிப்பாடல்களை அறிமுகம் செய்ய தொடங்கினேன்.

விடுதலை said...

இதையும் கொஞ்சம் படிக்கலாமே


பெண்ணெழுத்து: உடலரசியலும் உலக அரசியலும்!

http://maattru.blogspot.com/2010/12/blog-post_07.html