தமிழ்மீடியா தளத்தில் சிறுமுயற்சி தளம் பற்றி அறிமுகம் வெளிவந்திருக்கிறது. இன்றைய வலைப்பூ பகுதியில் சிறுமுயற்சிக்கும் இடமளித்த அவர்களுக்கு என் நன்றிகள். இங்கே கீழே இருப்பது அங்கே வெளிவந்திருக்கும் பதிவு.
-----------------------------------------------------------------
வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக,
தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக மாற்றுங்கள்.. எனக் கூறும் முத்துலட்சுமி அதற்கு எல்லாவிடங்களிலும் தேவையானது சிறு முயற்சி என்பதைச் சொல்லாமல் சொல்வது போல் தன் வலைப்பதிவுக்கு வைத்திருக்கும் பெயர் சிறு முயற்சி.இவரது வலைப்பதிவின் பெயர் சிறு முயற்சியாக இருந்தாலும், அதன்மூலம் இவர் பதிவு செய்கின்ற விடயங்கள் பெருமுயற்சி என்பதில் சந்தேகமில்லை. புதிய இடங்களைச் சுற்றிப்பார்பது சுகமென்றால், அதனை அழகாகவும் ரசனையாகவும் மற்றவர்களுக்கு சொல்வது மகிழ்ச்சி கலந்த பெருமிதம்.தொடர்புச் சாதனங்களும், உலக வலையாக்கம் விரிவுபடாதிருந்த காலத்தில், தமிழ் எழுத்துலகில் தனது பயணக்கட்டுரைகள் மூலம் உலகின் பல இடங்களுக்கு அழைத்துச் செல்லும் அனுபவத்தைக் கொடுத்தவர் எழுத்தாளர் மணியன். இன்று அந்தச் சூழ்நிலை மாறி, பலரும் பலதும் தெரிந்திருக்கக் கூடிய சூழலிலும், அதேவிதமான ரசனைச்சுவையைத் தனது எழுத்துகளால் வலைப்பதிவில் பதிவு செய்யும் முத்துலெட்சுமியின் முயற்சியை சிறுமுயற்சி என்றிடலாமா..?சுற்றுப் பயண அனுபவங்கள் என்றில்லாமல் பல்வேறு அனுபவங்களையும் தனது ரசனையின் நோக்கோடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது சிறுமுயற்சியில். இவ்வாறு அனுபவங்களை, அறிந்தவைகளை அழகாகப் பதிவு செய்யும் முத்துலெட்சுமி குறித்து பலராலும் அறிந்து கொள்ளப்படாத செய்தி ஒன்று உள்ளது.4தமிழ்மீடியாவில் முன்பு வாரமொரு வலைப்பதிவு பகுதியிலும், 'ஆனந்தி' சஞ்சிகையில் வலைப்பதிவு பகுதியையும் சிறப்பாகத் தொகுத்தளித்தவர் என்பதை, 4தமிழ்மீடியா 4வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இவ்வேளையில் பெருமையோடு தெரிவித்து, பல வலைப்பதிவுகளின் பரவலான அறிமுகத்துக்குக் காரணமாக இருந்த அவரது சிறுமுயற்றி வலைப்பதிவினை இந்தப் பகுதியில் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.அவரா..இவர் என ஆச்சரியப்படுகின்றீர்களா?..
14 comments:
//பல வலைப்பதிவுகளின் பரவலான அறிமுகத்துக்குக் காரணமாக இருந்த அவரது சிறுமுயற்றி வலைப்பதிவினை இந்தப் பகுதியில் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.//
அந்த "பல வலைப்பதிவு"களில் ஒன்றான எனது வலைப்பதிவையும் அறிமுகம் செய்வித்ததற்கு என்றென்றும் நன்றியுள்ளவனாய்.....!
A bouquet!That's so nice!
வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்...
வாழ்த்துகள்....
மனமார்ந்த வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்.
சேட்டைக்காரன் நன்றி :)
அருணா நன்றிப்பா:)
குணசீலன் நன்றி :)
குமார் நன்றி :)
வெங்கட் நன்றி :)
ரமணி நன்றி :)
ஜோதிஜி நன்றி:)
இன்னும் பல சிகரங்களைத்தொட வாழ்த்துகள்..
மனமார்ந்த வாழ்த்துக்கள்
வாழத்துக்கள் முத்துலெட்சுமி.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html
வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி
வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி.
Post a Comment