August 17, 2011

ஜாக்தே ரஹோ - விழித்துகொண்டிரு

நேற்று பலூன்மாமா கல்வெட்டு வின் பஸ்ஸை எல்லாரும் பகிர்ந்திருந்தார்கள், திண்ணை மற்றும் காலியிடங்களில் வழிபோக்கர்கள் தங்குவதற்கு அனுமதிக்காத நம் ஊர்களில் மனிதம் செத்துவிட்டதாகக் கூறி இருந்தார். தங்க விடுகிறோமோ இல்லையோ இன்றளவில் தண்ணீர் கொடுக்கக்கூடப் பயமாக இருக்கிறதாம்.

கல்லூரிக்கு நாங்கள் தண்ணீர் எடுத்துச்சென்றோமா என்று நினைத்துப் பார்க்கிறேன். நான்கு மணிநேரக்கல்லூரிக்கு நாங்கள் தண்ணீர் எடுத்துச்சென்றதாக நினைவில்லை. பஸ்ஸுக்கு காத்திருக்கும் போது அங்கு ஒரு குடிசை வீட்டில் தண்ணீர் கேட்போம் அவர்களும் ஒரு செம்பு நிறைய தண்ணீர் தருவார்கள்.ஊரில் எங்கள் வீடும் ரோடு பார்க்க இருந்ததால் யாராவது தண்ணீர் என்று கேட்டு வருவார்கள்.நாங்களும் கொடுப்பதுண்டு. வீட்டுக்கு எதிர்புறத்தில் ஒரு பொதுக்குழாயும் உண்டு. அதில் தண்ணீர் வருகின்ற நேரத்தில் போவோர் வருவோரும் அங்கே தண்ணீர் குடிப்பதுண்டு. பலசமயம் உடைந்து தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கும்.

தனிவீடுகளில் இன்று தண்ணீர் கேட்கவந்து அடித்துபோட்டு கொள்ளை என்கிறார்கள். சரி அடுக்குமாடிகளிலோ காவலுக்கு ஆள் இருப்பான் உள்ளே நுழைய முடியாது. இப்படி ஒரு படத்தைப் பார்த்தது  நினைவு வந்தது.
ஜாக்தே ரஹோ.. (விழித்து இரு..)1956


ராஜ்கபூர் நடித்தபடம் .இப்படி ஒரு நல்லபடத்தை சொந்த செலவில் எடுத்திருக்கிறார். படத்தில் அவருக்கு அதிகம் வசனமில்லை. எல்லாம் முகக்குறிப்பில் தான். மிக அருமையான நடிப்பு. ஒரு ஏழை விவசாயி நகர்புறத்திற்கு தன் வாழ்வின் முன்னேற்றத்திற்காக வந்து சேர்கிறான். அவனுக்கு தண்ணீரக்கு தட்டழிந்து ஒரு அடுக்கு மாடிக்குடியிருப்புக்குள் இருந்த தண்ணீர்குழாயில் தண்ணீர் குடிக்க நுழைகிறான். அழுக்கு உடையும் பஞ்சப்பராரி தோற்றமும் அவனை ஒரு திருடன் என நினைக்கவைத்து குடியிருப்பே அவனைத்தேடி அலைய அவன் ஒவ்வொரு வீடாக ஒளிந்து தப்பிக்க முனையும் போது ... அங்கே வசிக்கும் ஒவ்வொருவரும் , பெரியமனிதப்போர்வையில் செய்கின்ற திருட்டுத்தனங்களை , தவறுகளை காண்கிறான்.

மனைவியிடம் திருடும் கணவன், குடிகாரன் மனைவியை படுத்தும்பாடு, கள்ளநோட்டு அச்சடிப்பவன், ஜோசியம் என்று பொய்வேசம் போடுபவன் என இருக்கிறது அந்த பெரியமனிதர்களின் இடம் . கள்ளநோட்டுக்களை அடிப்பவனோடு மருத்துவர் உடந்தை. அவர்களிருவரும் வீடுகளுக்கு இடையில் ரகசியப்பாதை வைத்து திருடனைத் தேடிவரும் போலீஸ் குழுவிலிருந்து தங்கள் தவறை மறைக்க முயல அங்கே போய் ராஜ்கபூர் சிக்கிக்கொள்கிறார். தங்களுக்காக ராஜ்கபூரை பலியிடவும் அவர்கள் தயங்கவில்லை.. போலீஸ் வந்து சோதனை செய்வதும் அதற்கு முன் ஒரு குழுவாக காவல் செய்பவர்களும் பின் வருகின்ற பத்திரிக்கையாளர்களும்.. 1956 லேயே அப்படித்தான்,  இன்னமும் பிப்லிலைவ் எடுக்கவும் நம்மிடம் கதை இருக்கிறது.

படத்தைப் பார்த்து பலநாட்களாகிவிட்டதால் சில பகுதிகள் நினைவில் இல்லை. ரோந்துகுழு அமைக்கப்படும்போது அதன் தலைவன் மிக நல்ல வசனங்கள் பேசுவான் . அதற்கான வீடியோ கிடைக்கவில்லை. இந்தப்பாடலைக் கேளுங்கள், படத்தில் வரும் ஒரு பஞ்சாபி ரோந்துக்குழுவின் பாடல்..
The Lyrics and its Translation


Oye aiwe duniya dewe duhai,
jhootha pondi shor
te apne dil to pooch ke vekho
kaun nahi hai chor

The world appeals for no reason
the liar makes hue and cry
Why don't you ask your heart
who is not a thief!


te ki mein jhooth bolya
koi na
te ki mein mein kufr tolya
koi na
te mein ki zeher gholya

Hey have I lied?
No!
Hey have I spread disbelief?
No!
Hey have I poisoned?
No!


Oye hath dooje ka maar maar ke
ban de log ameer
mein ainu kainda chori
dunika kendi taqdeer
By pulling stuff from others hands
people become rich
I call it thievery
the world calls it destiny

te ki mein jhooth bolya
koi na
te ki mein mein kufr tolya
koi na
te mein ki zeher gholya

Hey have I lied?
No!
Hey have I spread disbelief?
No!
Hey have I poisoned?
No!

O hut ke
Paraji bach ke

Hey move aside
Sir, be careful!


O vekhe pandit gyaani-dhyaani
daya-dharam de bande
Ram naam japte
khaave goshala de chande

I have seen wise and pious
men of religion and kindness
They chant the name of Ram
and hoard all the charity


te ki mein jhooth bolya
koi na
te ki mein mein kufr tolya
koi na
te mein ki zeher gholya

Hey have I lied?
No!
Hey have I spread disbelief?
No!
Hey have I poisoned?
No!

O hut ke
Paraji bach ke

Hey move aside
Sir, be careful!

O sachche phansi chade vekhe
jhoota mauj udave
Loki kende rab di maya
Mein kenda anyay

I have seen honest people hanged
while the culprit enjoys life
People say it god's will
I call it injustice

te ki mein jhooth bolya
koi na
te ki mein mein kufr tolya
koi na
te mein ki zeher gholya

Hey have I lied?
No!
Hey have I spread disbelief?
No!
Hey have I poisoned?
No!

O hut ke
Paraji bach ke

Hey move aside
Sir, be careful!
(thanks to sandeep)

இரக்கமே இல்லாமல் ராஜ்கபூரின் உடம்பில் பணக்கட்டுகளை அடுக்கி ஜன்னல் வழியாக வெளியேறவைக்கிறார்கள். மேலே இருந்து தொங்கும் துணியை அறுக்கிறான் முதலாளி. கீழே இருந்து நெருப்பு பற்றவைக்கிறான் ஒருவன். கீழே திரண்ட மக்கள் ( யாரு எவன் என்று தெரியாவிட்டாலும் கூட்டமாக சேர்ந்து கொடிபிடித்தால் கொடிபிடிப்போம், தர்ம அடி போட்டுகிட்டிருந்தால் அதையும் செய்வோம்) ராஜ்கபூரை கீழே இருந்து பொருட்களால் அடிக்கத்தொடங்குகிறார்கள். திருடன் திருடன் என்று திட்டும் அவர்கள் பணம் பையிலிருந்து கீழே விழும்போது அடுத்தவன் பணமென்ற உணர்வின்றி பணம் பணம் என்று பொறுக்கத்தொடங்கிவிடுகிறார்கள்.


மேலும் கொஞ்சம் பணத்தை இறைத்து கவனம் திருப்பி ,தப்பி மேல் மாடிக்கு சென்று நீங்கள் படித்தவர்கள் , பெரியமனிதர்கள் ,நீங்கள் என்னைத்திருடன் என்றா சொல்கிறீர்கள் .. நீங்கள் மட்டுமென்ன..அனைவருமே திருடர்கள் என்று அவர்களின் குற்றங்களைச்சொல்லும்போது அனைவரும் அவனைக் கொல்ல நெருங்குகிறார்கள். அந்தக்காட்சியில் வசத்தின் வீச்சு அருமையானதாக இருக்கும். (அதன் வீடியோ கிடைக்கவில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.)


மீண்டும் தப்பி ஒரு வீட்டில் நுழையும் போது டெய்சி ராணி (குழந்தைநட்சத்திரம் )அங்கே அவரிடம் கனிவுடன் பேசுகிறார். நீ திருடனா ? இல்லை தானே? அப்பறம் எதுக்காக நீ பயப்படனும் தைரியமாக நட . யாரும் உன்னை எதுவும் செய்யமாட்டார்கள் என்று தன்னம்பிக்கை கொள்ளச்செய்கிறாள். தைரியமாக அவர் நெஞ்சு நிமிர்த்தி நடந்துவெளியேறுகையில் சோதனையிடவந்த போலீஸ் அங்கே தவறு செய்த பெரியமனிதர்களைக் கையும்களவுமாகப் பிடித்துச்செல்கிறார்கள். எளிய விவசாயியை யாரும் கவனிக்கவே இல்லை. அந்த காட்சியை இந்த வீடியோவில் பார்க்கலாம்.


இந்தப்படத்தை என் மகனோடு பார்த்துக்கொண்டிருந்தேன். அழுக்கு உடையும் ஏழையுமாய் இருப்பவனெல்லாம் திருடன் இல்லைடா என்று சொல்லிக்கொண்டிருந்தேன். குழந்தை அவனுக்கு தைரியம் சொல்லும் காட்சி வரை கவலையாக இருந்த அவன் முகம் மலர்ந்ததைக் கண்டேன். இன்று இப்பதிவை எழுதத் தயார் செய்தபோது கூட.. இந்தக்காட்சியை மீண்டுமொருமுறை பார்க்கவேண்டுமென்று  உட்கார்ந்திருந்தான்.
Jaago mohan pyaare, jaago
Jisne mann ka deep jalaaya
(Who ever lit the lamp in heart)
Duniya ko usne hi ujalaa paaya
(has found the world lit)
Mat rehna ankhiyon ke sahaare
(Do not depend on eyes only)
Jaago mohan pyaare, jaago
(Arise dear Mohan, Wake up)


20 comments:

கோமதி அரசு said...

//அழுக்கு உடையும் ஏழையுமாய் இருப்பவனெல்லாம் திருடன் இல்லைடா என்று சொல்லிக்கொண்டிருந்தேன். குழந்தை அவனுக்கு தைரியம் சொல்லும் காட்சி வரை கவலையாக இருந்த அவன் முகம் மலர்ந்ததைக் கண்டேன்.//

நல்ல படங்களை குழந்தைகள் பார்ப்பது அறிந்து மகிழ்ச்சி.

உடையை வைத்து யாரையும் எடை போட முடியாது என்று குழந்தைக்கு சொன்னது உண்மை தான் முத்துலெட்சுமி.

பசுத்தோல் போர்த்திய புலிகள் அன்றும் உண்டு,இன்றும் உண்டு.

நாம் விழித்து இருக்கும் போதே ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள்.

நான் இந்த படத்தை பல வருடங்களுக்கு முன்பு பார்த்து இருக்கிறேன். மீண்டும் வீடியோ காட்சிகள் மூலம் பார்த்து ரசித்தேன் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

போட்டிருக்கும் உடையை வெச்சு நிச்சயமா ஆளை எடை போடக்கூடாதுன்னு சொல்லிக்கொடுத்தது வரவேற்கத்தக்கது முத்துலெட்சுமி..

ஜாகோ மோகன் ப்யாரே..எனக்கும் பிடிக்கும். தூங்கும் பெண்ணை சீண்டணும்ன்னா, இந்தப்பாட்டைத்தான் பாடுவேன் :-))

Unknown said...

நல்ல படம்
அருமையான பகிர்வு

நன்றி அம்மா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோமதிம்மா நன்றி.. :)
--------------------

சாரல் அந்தப்பாட்டு உருக்கமானப் பாட்டா இருக்கில்ல..
ஆகா இதை வச்சி எழுப்புவீங்களா ? சரிதான்..
:)
--------------------

ரமேஷ் பாபு நன்றிங்க..:)

ஆமினா said...

//போட்டிருக்கும் உடையை வெச்சு நிச்சயமா ஆளை எடை போடக்கூடாதுன்னு சொல்லிக்கொடுத்தது வரவேற்கத்தக்கது முத்துலெட்சுமி..
//

ஹுஸைனம்மா said...

//தனிவீடுகளில் இன்று தண்ணீர் கேட்கவந்து அடித்துபோட்டு கொள்ளை//

இப்படியிருக்கும்போது எப்படி மனிதம் வளரும்?? அபார்ட்மெண்டுகளிலும் ஒண்ணும் பெரிய பாதுகாப்பு இருக்குனு நிச்சயமா நம்பிட முடியாது..

திண்ணையில் வந்து இருப்பவன் என்ன செய்தான், எங்கிருந்து வந்தான், என்ன செய்யப்போகிறான் என்றெல்லாம் தெரியாத நிலையில்.. எப்படி.. வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் செய்யும் குற்றத்துக்கு வீட்டு ஓனரையும் சேர்த்துதானே போலீஸ் பிடிக்கீறது..

இங்கே ஹைவே ரோட்டில் சிலர் லிஃப்ட் கேட்டு நிற்பார்கள். அத்துவானக் காடு, மண்டையைப் பிளக்கும் வெயில், கீழ்மட்ட வேலைபார்ப்பவர் என்று முகத்திலேயே தெரியும்.. இருந்தாலும் கொடுக்கத் தயக்கம்.. ஏன்? டிரைவரை அடித்துக் கொள்ளையடிப்பது அல்லது ஏதாவது கடத்துவது, உரிய விஸா இல்லாதது இப்படி ஏதாவது இருப்பின், வழியில் பரிசோதனையின்போது அவரோடு லிஃப்ட் கொடுத்தவரும் சேர்ந்து சிறைக்குச் செல்ல வேண்டும். யாரேனும் அமீரகக் குடிமகன் பரிதாபப்பட்டு லிஃப்ட் கொடுத்தால் உண்டு.. அவர்களால்தான் இதை எதிர்கொள்ள முடியும்..

இதையெல்லாம் தாண்டியும் மனிதம் அவ்வப்போது இருந்துகொண்டுதான் இருக்கிறது..

//1956 லேயே அப்படித்தான்//
:-)))) அந்தக் காலத்துலயேவா!!

//அழுக்கு உடையும் ஏழையுமாய் இருப்பவனெல்லாம் திருடன் இல்லைடா//
உண்மை..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ஆமினா..:)

------------------------
சரியாச்சொன்னீங்க ஹுசைனம்மா.. இன்றைக்கு இருக்கும் நிலையில் தன்னைக்காப்பாற்றிக்கொள்வதே பெரும்பாடாகிவிட்டது என்பது உண்மை..இந்தப்படத்தில் ஒரு குடிகாரர் ராஜ்கபூர் ஒளிந்திருக்கும் ட்ரம் க்கு செம்யா அன்பு காட்டுவார். அந்த ட்ரம்மை வீட்டுக்கு அழைத்து உடை யெல்லாம் குடுப்பார்.. :)அப்படி தன்னிலை அறியாதவர்களோ தன்னலம் கருதாதவர்களோ ஈஸியா உதவலாம்..

கோபிநாத் said...

நல்ல பகிர்வு அக்கா ;-)

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு சகோ.

எவரும் போட்டிருக்கும் உடை வைத்து மதிப்பிட முடியாது என்பது நல்ல ஒரு பாடம்..... எனக்கு அதில் சொந்த அனுபவம் ஒன்று இருக்கிறது... :) என் வலைப்பூவில் ஏற்கனவே எழுதி இருக்கிறேன் என நினைக்கிறேன்.


ஜாக்தே ரஹோ... நல்ல படம். நீண்ட நாட்கள் ஆகிவிட்டது அப்படம் பார்த்து.

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு அக்கா.

Thekkikattan|தெகா said...

திண்ணை விசயம் பஸ்ஸில் நிறைய பேசிட்டோம்னு நினைக்கிறேன். :)

படம் பத்தின விவரணை படத்தை பார்க்காமயே பார்த்த மாதிரி முடிஞ்சிருச்சு. அப்பவே எல்லாமே சொல்லிட்டாங்க. அதில எந்த மாற்றமும் இன்றையளவுக்குமில்லை.

அந்த பாடல் வரிக்கு வரி பஞ்ச். அதிலும் குறிப்பா இது... சிச்சுவேஷனல்...

I have seen honest people hanged
while the culprit enjoys life
People say it god's will
I call it injustice...

pudugaithendral said...

பகிர்வுக்கு நன்றிப்பா. இந்தப் படம் பாத்தா மாதிரி ஞாபகம் இல்லை.:(
மிஸ் செஞ்சிட்டேனோ. யூ டூயுப்ல பாத்திடறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கோபி :)

நன்றி வெங்கட்.. :)
இந்தபடத்தை நான் தற்செயலாகத்தான் பார்த்தேன்

நன்றி குமார் :)

நன்றி தெகா
நிஜம்மாவே சிச்சுவேசன் சாங்க் தான்..

தென்றல் நன்றிப்பா.. யூ ட்யூப் ல இல்லைப்பா.. முழுசா கிடைக்கல..

RAMA RAVI (RAMVI) said...

வணக்கம் முத்துலெட்சுமி. என் பதிவிர்க்கு வந்து கருத்திட்டதற்க்கு நன்றி.
உங்க பதிவுகள் அருமையாக இருக்கு.தொடர்ந்து படிக்கிறேன்.நன்றி.

அயன் உலகம் said...

romba naal kazhichu blog padikka neram kidaithathu... meendum blog eluthanumnu aasaiya kilappi vidureengale.. nalla pathivu.. thanx..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராம்வி.. வருகைக்கு நன்றி.:)

அயன் ..நன்றி :)தொடர்ந்து எழுதுங்களேன் ..

Unknown said...

திண்ணைகள் , தண்ணீர் எடுத்து செல்வது என்பதை மனிதம் தளர்ந்து போனதன் அடையாளமாக எடுத்துக்கொள்ளலாம். இந்த விஷயங்ளை ராஜ் கபூரின் படத்துடன் இணைத்து நினைவு கூர்ந்தது அருமை. இயல்பாகவும் இருந்தது..
வசீகரிக்கும் எழுத்து நடை உங்களுடையது.

rajamelaiyur said...

நல்ல முயற்சி

rajamelaiyur said...

இன்று என் வலையில்

மனசாட்சிய தொட்டு சொல்லுங்கள். நீங்கள் நல்லவரா?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அழகான விமர்சனம்... வாய்ப்பு கிடைத்தால் பார்க்கனும்... நன்றிங்க