August 31, 2011

தூரத்து வெளிச்சம்

இறக்கை இழந்த
சிறுநெல்மணிக்கான
பறவைக் குறுநடையோடு
தேடித்தேடி
களைத்திருந்தான்

எவனுக்கோ இவனுக்கோ
உருவங்கள் சாயங்கள் மறையும் வரை
சீட்டுக்கள் என்றும் ஏமாற்றுவதில்லை

கதைகளைப் புனைந்து
வாக்குகளை உரைக்கும்
ஆருடக்காரனின்
அடுக்கு மொழிகள்
தன் வசீகரங்களை இழந்திருந்தது

சொன்ன சொற்களுக்கான
உரைகள்
திருத்தப்பட்டன
சொல்லாத சொற்கள்
அரங்கேறி
வாழ்க்கை கலைத்தது

ஆருடங்கள் மாறுகிறதாயில்லை
ஆருடக்காரன்
மாறிக்கொண்டே இருக்கிறான்
வேதனை உதறி
எட்டி இட்ட நடையின் வழியில்
கோர்த்த கரங்களால்
உடைபடும் வேலிகள்
---------------------------------
(புதன்கிழமை, 14 அக்டோபர் 2009 )முல்லை( ஈழநேசன்)

----------------------------------

15 comments:

ராமலக்ஷ்மி said...

//சொன்ன சொற்களுக்கான
உரைகள்
திருத்தப்பட்டன
சொல்லாத சொற்கள்
அரங்கேறி//

அருமையான வரிகள். நல்ல கவிதை முத்துலெட்சுமி.

கோபிநாத் said...

\\வேதனை உதறி
எட்டி இட்ட நடையின் வழியில்
கோர்த்த கரங்களால்
உடைபடும் வேலிகள்\\

கலக்கல் ;-)

முனைவர் இரா.குணசீலன் said...

நல்லதோர் கவிதை படித்த நிறைவு கிடைத்தது.

அன்புடன் அருணா said...

Good one kayal!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ராமலக்‌ஷ்மி

நன்றி கோபி

நன்றி குணசீலன்

நன்றி அருணா..

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை முத்துலெட்சுமி.... வரிகள் அருமை...

ராமலக்ஷ்மி said...

இப்போதுதான் கவனிக்கிறேன். ஓவியமும் மிக அருமை:)! பொருத்தமாக வரைந்துள்ளீர்கள். தொடர்ந்து அதில் ஈடுபடுங்கள். வாழ்த்துக்கள்!

ஆச்சி ஸ்ரீதர் said...

//ஆருடங்கள் மாறுகிறதாயில்லை
ஆருடக்காரன்
மாறிக்கொண்டே இருக்கிறான் //
உண்மை.வாழ்த்துகள்.

Easwaran said...

//வேதனை உதறி
எட்டி இட்ட நடையின் வழியில்
கோர்த்த கரங்களால்
உடைபடும் வேலிகள்//

படிக்கப் படிக்க எத்தனையோ மனவோட்டங்களையும், நம்பிக்கை வெளிச்சத்தையும் ஒருங்கே கொடுத்த வரிகள்.

kumaraguruparan said...

"சிறு நெல் மணிக்கான பறவைக்குறு நடையோடு"-நுட்பமான சொல்லாடல் ...எங்கோ இழுத்துச் செல்லும் வசீகரப் பெண்ணெழுத்து!!கோட்டுச்சித்திரங்களும் அருமை, மகளே!!..வாழ்த்துக்கள்.--சித்தப்பா

'பரிவை' சே.குமார் said...

நல்ல கவிதை. வரிகள் அருமை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி வெங்கட்

நன்றி ராமலக்‌ஷ்மி

நன்றி திருமதி ஸ்ரீதர்

நன்றி சித்தப்பா

நன்றி குமார்.

சாந்தி மாரியப்பன் said...

கவிதையும், அதுக்கேத்த ஓவியமும் எக்கச்சக்க அருமை முத்துலெட்சுமி.

ADHI VENKAT said...

ஓவியமும், கவிதையும் அருமை. வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி.

ஷைலஜா said...

ஓவியமே கவிதையாக....
நல்ல வரிகளுடன் அமைந்த கவிதை இது!