கேப் மே எமலன் பிசிக் எஸ்டேட் (Emlen Physick Estate)
பிசிக் ந்னு ஒரு டாக்டர் . ஆனா அவர் டாக்டருக்கு ப்ராக்டிஸ் செய்யலையாம். விவசாயி யா மாறிட்டாராம். அவர், அவருடைய அம்மா , ஒரு அத்தை அந்த எஸ்டேட் வீட்டில் இருந்தாங்களாம். பிசிக்கோட தாத்தா தான் அமெரிக்க அறுவை சிகிச்சை மருத்துவத்துக்கு தந்தையாம்.. அவர் கண்டுபிடித்த சிகிச்சைக்கான புதிய முறைகளும் கருவிகளும் இன்றும் பயன்படுகிறதாம்..
வீடுகள் வாங்கி விற்பதும் , (கேப் மே)ஊர் எப்படி இருக்கவேண்டும்ன்னு முடிவு செய்யும் கூட்டங்கள் நடத்துவதுன்னு அவர் பொழுதைப்போக்கி இருக்கிறார். அவருக்குப் பின்னால் அந்த இடத்தை இப்பொழுது மிட் -அட்லண்டிக் செண்ட்டர் என்கிற ஆர்ட் அண்ட் ஹுயுமனிடீஸ் நிறுவனம் எடுத்து நடத்துகிறதாம். வருகிறவர்கள் நுழைவுக்கட்டணம் கொடுப்பதை வைத்தே நிர்வாகம் நடக்கிறதாம். இதையெல்லாம் இதோ இவங்கதான் எங்களுக்கு சொன்னாங்க...
சுற்றிக்காட்ட அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கூட்டம் வரவேண்டும் . அதனால் எங்களைக் காக்க வைத்திருந்தார்கள். எங்களுக்கு கேப் மே ஃபெர்ரிக்கு அடுத்து போகவேண்டுமே என்ற போது சரி உங்களுக்கு முதல் தளம் மட்டும் காட்டுகிறேன். நீங்கள் பிறகு செல்லலாம் என்றார். அதுல என்ன பெருந்தன்மையோ.? மற்றவர்கள் வரும் முன் மேல்தளத்தை எங்களுக்கு காட்டி இருக்கலாம். ம்..
வீட்டின் ஒவ்வொரு அறையும் அன்றைய காலத்தில் எப்படி அலங்கரிக்கப்பட்டிருந்ததோ அதே முறையில் அப்படியே இருந்தது. வரவேற்பரையின் ப்ரம்மாண்ட அலங்கராங்களும் , உணவுக்கூடத்தின் அருமையான தட்டு கரண்டிகளின் கலெக்சனும் ( என் மருமகனுக்கு ஸ்பூன் கரண்டின்னா பிரியம் எடுத்து தரலன்னா அழுவான் அடுத்த அறைக்கு ஓடுங்க ) பெரிய பெரிய இரும்பு அடுப்புகளும் சின்ன இரும்பு இஸ்திரி பெட்டியும் துணி துவைக்கும் மர அடுக்குகளும் வித்தியாசமான ஒன்று தான். மரவேலைப்பாடுகள் நிறைந்த அந்த வீடு அழகோ அழகு. இன்னும் அந்த எஸ்டேட்டில் பார்க்க வேண்டியது இருந்தாலும். என்ன கிடைத்ததோ அதை சரியாகப் பார்த்துவிட்டோம். இந்த வண்டியில் வைத்து இன்னும் சில இடங்களையும் உள்ளே காண்பிப்பார்களாம்.
கீழ்தளத்தைச் சுற்றிக்காண்பித்துவிட்டு வீட்டுக்கு வந்த விருந்தாளியை வழியனுப்புவது போல வெளீயே வந்து சரியான நேரத்துக்கு ஃபெர்ரியைப் பிடித்துவிடுவீர்கள்ன்னு நினைக்கிறேன் என்று சொல்லி வழியனுப்பினார்கள்.
இந்த இணைப்புக்கு சென்று அந்த அறைகளை நீங்களும் பார்க்கலாம்.
கப்பலுக்கு நேரமாச்சு..
வாங்க இந்த வீடியோவைப் பாருங்க.. அப்படியே நீங்களும் கூடவே காரில் அமர்ந்தபடியே கப்பலுக்கு ஏறுங்க..
கேப் மே டெர்மினல் பாருங்க நீலக்கலர் கூரையோட எவ்வளவு அழகா இருக்கு. அந்தப்பக்கம் லூயிஸ் லயும் டெர்மினல் இதே அமைப்பும் நிறமும் தான்.
இதோ இந்த வழியாப்போனோம்ன்னா கப்பலுக்குள் கார்களை நிறுத்தற இடம் இருக்கு.
நிறுத்திட்டு அப்படியே படிகளில் ஏறி மேல போகலாம். மேலே ஏறும்போதும் இறங்கும்போதும் மிகக்கவனம் வேணும்.. அடிக்கின்ற காற்றோ அல்லது கப்பலின் ஆட்டமோ நம்மை தண்ணிக்குள் தள்ளிவிட்டுவிடும். கைப்பிடியை சரியாப்பிடிச்சுக்கவேணும்..
முதல் தளத்தில் நல்ல உணவுக்கூடமும் கடையும் இருக்கிறது. வாங்கும் உணவுகளை கப்பலின் ஆட்டத்தோடு சரியான மேஜைக்குக் கொண்டு செல்வது கூட பெரிய விசயம் தான். கொஞ்சம் மஃபின்ஸும் சல்சாவும் சிப்ஸும் ஐஸ்க்ரீமும் வாங்கிக்கொண்டு அமர்ந்தோம். பிறகு அதற்கடுத்த தளத்துக்கு ஏறவேண்டும். காற்று தள்ளுகிறது. கதவைத்திறக்க ரெண்டு ஆள் பலம் வேண்டும். படிகளில் ஏறி மேலே போனால் வெள்ளை நிற பெஞ்சுகள் வரிசை வரிசையாக இருக்கிறது.
கடலைக்கிழித்துக்கொண்டு செல்லும் கப்பலின் தடம் பின்னால் .. சிறுது நேரம் அதை ரசித்துவிட்டு .. கப்பலின் முன் பகுதிக்குச் சென்றோம்.
அப்போது தூரத்தில் ஒரு யாட்ச் படகு காற்றில் சரிந்தது போலத் தெரிந்தது . கப்பலின் கேப்டன் உடனே ஒலிபெருக்கியில் ,’நாம் அவர்களுக்கு உதவி தேவையா என்று பார்த்துவிட்டு பிறகு தொடர்வோம்’ என்ற படி அதன் அருகில் செல்ல ஆரம்பித்தார். ஒலிபெருக்கியில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கேட்டார். அங்கிருந்து ஒரு கை அசைப்பு வந்ததும் சரி என்று மீண்டும் லூயிஸ் நோக்கித் திரும்பினோம்.
ஒரு பாய்மரக்கப்பல் வந்தது. அதைப்பார்ததும் கதை மற்றும் காமிக்ஸ் புத்தகத்தில் பார்த்த கனவு போன்ற கடற்பயணத்தில் இருப்பது போன்ற உணர்வு ..
இந்தப்பயணம் கேப் மே யிலிருந்து லூயிஸுக்கு தரைவழிப் பயணமான 4 நான்கு மணிநேரத்தை கடல்வழியில் ஒருமணி நேரமாகக் குறைக்கிறது. கடலுகு நடுவில் சிறிய இரண்டு லைட் ஹவுஸ்களும் உண்டு. இப்பொழுது தானியங்கி . ஆனல் முன்பு தனியாக அங்கே சிலர் காவல் காத்துக்கொண்டிருந்தார்களாம். எப்படி இருந்திருக்கும்?
googlegoogle
18 comments:
படங்களனைத்தும் ஜூப்பரா இருக்குது.. கப்பல் பயணத்தையும் ஜாலியா எஞ்சாயிருப்பீங்க போலிருக்குதே :-))
அமெரிக்கா வரச்சொல்லி தோழி கூப்பிட்டுகிட்டேயிருக்கா. இந்தத் தொடர் முடிஞ்சதும், அவகிட்ட நான் பாத்தாச்சுன்னு சொல்லிடுவேன்!!
கப்பல் பயணம் தூள் ;-)
புகைப்படங்கள்
அவ்வளோ அழாக இருக்குக்கா,
ஜில்லுனு இருக்கு இந்த பதிவு
ஜூப்பர் :))
//ஹுஸைனம்மா said...
அமெரிக்கா வரச்சொல்லி தோழி கூப்பிட்டுகிட்டேயிருக்கா. இந்தத் தொடர் முடிஞ்சதும், அவகிட்ட நான் பாத்தாச்சுன்னு சொல்லிடுவேன்!!
//
ஆவ்வ்வ்வ்வ் அக்கா இதைவிட பெரிய பாராட்டு கிடைக்காது போலயே.. அப்படியே சுத்தி காமிச்சதுக்கு செலவா ஒரு அமௌண்ட் வாங்கிடுங்க
சாரல் ஆமாங்க.. நல்ல பருவநிலை அப்ப.. ஜாலியா இருந்தது.. :)
ஹுஸைனம்மா.. அப்படிசொல்லக்கூடாது.. போய்ட்டுவாங்க.என்னன்னா நாங்க பார்த்த அமரிக்கா வேற உங்களுக்கு உங்க தோழி வேற அமரிக்கா காட்டலாம்.நாங்க கூட்டம் குறைஞ்ச இடங்களாத் தேடிப்போனொம்.
அப்பறம் இன்னோன்னு உங்கள் தோழியோடு நீங்கள் சேர்ந்துசுற்றும் போது அதன் அனுபவசுகமே தனிதானே..:)
கோபி நன்றிப்பா..:)
யாழினி நன்றி :) .. ஒரே சில்லுன்னு தான் இருந்தது காற்று வேற..
ஆதவன் நன்றிப்பா.. :)
அமௌண்ட் எல்லாம் வேண்டாம்.. அவங்க ஊருக்கு போகும் போது இதே மாதிரி என்னைக் கூட்டிட்டு போய் சுத்திக்காட்டமாட்டாங்களா என்ன?..
கப்பல் பயணமும், படங்களும் நல்லாயிருந்ததுங்க.
தொடர்ந்து வந்திட்டிருக்கோம்.
பாய்மரக்கப்பல் அழகு.
அமெரிக்காவில் நாங்கள் பார்க்காத பகுதிகளை சுத்திக் காட்டுவது அருமை.
இந்த பக்கம் வந்துட்டு, சொல்லாமல் போறீகளே!!!!
Lovely photos and super journal! :-)
வாங்க ஆதி .. நீங்கள்ளாம் துணைக்கு வருவது தானே பலம்.:)
நன்றி கோமதிம்மா.. :)
சித்ரா என்ன செய்வது உங்களுக்கு நான் செய்தி அனுப்பி நீங்க எனக்கு உங்க நம்பரை அனுப்பிய தினத்தில் பேசமுடியல , அடுத்த நாள் இந்தியா கிளம்பிட்டீங்க..:)
அருமையான படங்கள் அழகான விளக்கங்கள்
ஐ... பாய்மரக்கப்பல்.... நிஜமாகவே காமிக்ஸ் புத்தகக் கதைகள் நினைவுக்கு வருது.... எத்தனை நீலம்ம்ம்.... கண்ணுக்குக் குளிர்ச்சியாய்....
தொடரட்டும் அமெரிக்கப் பயணம்....
மிக அருமை ஓசியிலேயே பார்த்தாச்சு ஹேஹே
முழுவதும் சுத்தி பார்த்தாச்சு
படங்கள் அனைத்தும் மிக அழகு
Post a Comment