December 4, 2012

வார்த்தைகளும் மௌனங்களும் - 2


த சீக்ரெட் லைஃப் ஆஃப் வார்ட்ஸ்(2005)-


The secret life of words - Isabel Coixet

எண்ணெய் எடுக்கும் இடத்தைப்பற்றி ஒரு டாக்குமெண்ட்ரி எடுக்கச்சென்ற இசபெல்  ..அங்கே கிடைக்கும் வெளியுலகத்திலிருந்து பிரிக்கும் தனிமையும் அதனால் அங்கிருப்பவர்களுக்குள் உருவாகும் ஒரு நெருக்கத்தையும் வைத்து ஒரு படம் எடுக்க நினைத்தாராம்..

 இதிலும் சாராவே (Sarah Polley) கதாநாயகி   காதுக்கு கருவி பொருத்தி கேட்கக்கூடியவராக உணர்ச்சிகளற்ற முகத்தோடு ஒரே விதமான உணவை ஒரே விதமான வேலையை ஒரேவிதமான வாழ்க்கையை இயந்திரத்தனமாக வாழ்பவராக  சாரா  அப்படியே வாழ்ந்திருக்கிறார். சாராவுக்காகவே  இந்தப்படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன்..

ஹன்னா ஒரே விதமான பூத் தையல் செய்வாள். ஆனால் அதையும் முடித்ததும் தூக்கி எறிந்துவிடுவாள்.. யாரோடும் பழகாமல்.. வருகின்ற கடிதங்களைப் படிக்காமல்.. காதுக்கு பொருத்திய கருவியையும் அணைத்தே வைத்து இருக்கிறாள். மௌனத்தினால் அவள் அவளைச்சுற்றிலும் வேலியிட்டுக்கொண்டு அதற்குள் வாழ்கிறாள். 

4 வருடங்களாக விடுப்பு எடுக்காமல் சரியான நேரத்திற்கு வந்து வேலை செய்யும் நீ கண்டிப்பாக விடுமுறை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மேலதிகாரி வற்புறுத்தி அனுப்பி வைத்தாலும் அவளால் என்ன செய்யமுடியும் என்று அவள் ஹோட்டல் அறையில் வெறுப்புடன் எல்லாவற்றையும் கலைத்துப்போட்டு விட்டு அழுகிறாள். 

தற்செயலாக ஒரு உணவகத்தில் காதில் விழுந்த விசயத்தை வைத்து எண்ணெய் எடுக்கும் இடத்தில் ஏற்பட்ட விபத்தில் காயமுற்ற ஒருவரை தற்காலிகமாக பார்த்துக்கொள்ள நர்ஸ்  வேலையைச் செய்ய ஒப்புக்கொள்கிறாள். அங்கே சென்றபின் அங்கே இருக்கின்ற ஒவ்வொருவரும் எப்படி உலகத்திலிருந்து தனிமைப்படுத்திக்கொண்டு அங்கே இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்கிறாள். 

ஜோசப் என்கிற அந்த காயமுற்றவன் தற்காலிகமாக கண் தெரியாமல் போனவன் மற்றும் தன்காரியங்களைத் தானே செய்துகொள்ளமுடியாத ஒருவன். ஜோசப் ஹன்னாவுடன் பேசமுயற்சிக்கும் போதெல்லாம் அவள் பதில் சொல்லாமல் இருந்தாலும் ஜோசப் தானாகவே அவளுக்குப் பெயர் வைத்து தனக்கு நீச்சல் தெரியாது என்று தொடங்கி ..தன் ரகசியங்களை , தன் குற்ற உணர்ச்சியை ,தன் மனதின் கஷ்டங்களைப் பகிரத்தொடங்க கொஞ்சம் கொஞ்சமாக ஹன்னாவும் பேசத்தொடங்குவாள். 
ஹன்னாவின் தனிமைக்கு காரணம் அவள் போர்க்காலத்தில் கொடுமைக்குள்ளாக்கப்பட்டது , எப்படி பெண்களைக் கொடுமைப்படுத்தினார்கள் எப்படி தன் தோழி இறந்தாள். எப்படி தன் உடம்பெல்லாம் கத்தியால் கீறப்பட்டது என்று மௌனத்திலிருந்து வெளியேறி  வார்த்தைகளாக்கி சொல்லும் போது இசபெல் காட்சியை ஹன்னாவின் வார்த்தைகளின் மூலமாக மட்டுமே காட்சிப்படுத்துகிறார். 

ஹன்னா தினம் ஒரு புதிய சோப் பயன்படுத்துவதாக காட்டியபோது அது ஏன் என்று முதலில் தெரியவில்லை... அவளுடைய இறந்தகாலத்தை அழிக்க அவள் தினம் புதிய ஒன்றைப் பயன்படுத்துவதாகக் காட்சிப் படுத்தியிருக்கலாம்.

ஜோசப்பை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபின் ஹன்னா தன்னைப்பற்றியவிவரங்களை தராமலே திரும்பிவிடுவாள்.ஆனால் ஜோசப் அவளைத்தேடிகொண்டு வருவது ஒரு சுபமான முடிவு தான்.  படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் வருகிற சிறுமியின் குரல் ஹன்னாவின் பாதிக்கப்படாத வயதின் குரலாக இருக்குமோ ? 

துக்கமோ, பயமோ நம்பிக்கைக்குரிய இடத்தில் பகிர்ந்துகொள்ளப்படும் போது அது மாறிவிடக்கூடியது . 



Hanna: Um, because I think that if we go away to someplace together, I'm afraid that, ah, one day, maybe not today, maybe, maybe not tomorrow either, but one day suddenly, I may begin to cry and cry so very much that nothing or nobody can stop me and the tears will fill the room and I won't be able to breath and I will pull you down with me and we'll both drown. 

Josef: I'll learn how to swim, Hann

7 comments:

வல்லிசிம்ஹன் said...

அன்பு கயல்,
முதல்படத்துக்கே கேட்க நினைத்தேன். இவை ஆங்கில டைடில்களுடன் வருகின்றதா.

ஸ்பானிஷ் புரியாதே அதனால் கேட்டேன்.
இந்தப் படத்தைப் புரிந்து விவரித்திருக்கிறீர்கள்.இஸபெல் ,சாராவை வைத்தே நிறையப் படங்கள் செய்திருக்கிறாரா. சாராவின் முகத்தைப் பார்க்கும் போது நம் பள்ளிகளில் இருக்கும் மேரி சிலையின் முகமே நினைவுக்கு வருகிறது. பளிங்கு போல.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இல்லை ரெண்டுமே ஆங்கிலத்தில் எடுத்திருக்காங்க.. இன்னொரு ஸ்பானிஷ் படம் பத்தி நான் எழுதல.. ஆனா ஸ்பானிஷ் ல யே வசனம் புரியாமப் பார்த்துட்டேன்.. இந்த அளவு இல்லை அது ..அதனால் குறிப்பிடல.. இந்த ரெண்டு படமும் அந்த கேரக்டருக்காக சாராதான் பொறுத்தமா இருப்பாங்கன்னு முடிவா இருந்துருக்காங்க..
முதல்படத்துக்கு சப்டைட்டிலும் இருந்தது ஈஸியா இருந்தது..
ரெண்டாவது படத்துக்கு வசனம் ஆங்கிலமா இருந்தாலும் ஃபாலோ செய்ய எனக்கு கஷ்டம் தான்..:)

பள்ளிக்கூட மேரி ..:))

”தளிர் சுரேஷ்” said...

நல்ல பகிர்வு! மிக்க நன்றி

கோபிநாத் said...

நோட் பண்ணியாச்சி ;))

மாதேவி said...

படப் பகிர்வு நன்றாக இருக்கின்றது.

கோமதி அரசு said...

பட விவரிப்பு படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.

ezhil said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்