January 25, 2013

சிஷுக்கா யாரோட அக்கா?

பள்ளி வீட்டுப்பாடத்தில் எழுதிவைக்க
எதிர்பாராத திருப்பம் கொண்ட 
கதை வேண்டுமாம்

இடம்: மிருகக்காட்சி சாலை
பாத்திரங்கள் : அம்மா யானை
அப்பா யானை
குழந்தை யானை 
மற்றும் இவன்

யானை களித்து குளிக்கும் கதையில்
அக்காவும் வருகிறாள்
இவன் மேல் 
பாட்டில் தண்ணீரைத்தெளித்து
அக்கா 
திருப்பம் சேர்க்கிறாள்

-----------------------------------------------------

அப்பா -
”டேய் தினம் இந்த கார்டூன்ல பார்த்ததையே பாக்கறயே.... இந்த சிஷுக்கா சிஷூக்கா ந்னு சொல்றாங்களே சிஷுக்கா யாரோட
அக்காடா ? ’“

(அதிர்ந்து போய் ...மகன்)
அப்பா கார்டூன் பாக்க விடுங்கப்பா.. 

( மேலே டத்துல இருக்க பொண்ணு பேரு தான் சிஷூக்கா.. கார்டூன் ஹீரோ நோபித்தாவோட கேர்ள்ப்ரண்ட்...மகள் சொல்றா கேர்ள்ப்ரண்ட்னு சொல்லமுடியாது அவ அவனோட க்ரஷ் அவ்ளோதான் ..
அவ்வ்)
----------------------------
மகிழ்ச்சியாய் 
20 க்கு 17 மார்க் .. ம்மா -

ஓ எப்படி மார்க் கம்மியாப் போச்சுடா.. 

ஓ ..ஓஹொ... இது உங்களுக்கு கம்மியா.. 17 கம்மியா.. 
நோ நான் உங்க கிட்ட பேசமாட்டேன்.. நான் உங்க கிட்ட பேசவே மாட்டேன்.. 

பவ்யமாய் அம்மா -
இல்லடா எப்படி கம்மியாச்சு ..அதை திரும்ப பேப்பர்குடுக்கும்போது செக் செய்திருப்பாங்களே ..அதை கவனிச்சியா.. என்னன்னு தான் கேக்கவந்தேன்
--------------------------------------
கொஞ்சமா ஜுரம் அடிச்சது ஒரு  நாள் லீவ் போட்டாச்சு
அடுத்த நாள் சரி தூங்கட்டுமேன்னு விட்டுட்டேன். காலையில் அக்கா ஸ்கூல் போனதுக்கப்பறம் லேசா முழிச்சு 5 தும்மல் தும்மிட்டு
 ’அம்மா நான் பஹொத் புகார் ஹூ “ அந்த தெர்மாமீட்டரை மாத்து அது சத்தம் போடரதில்ல அதனால் அது சரியா காண்பிக்கலன்னு நினைக்கிறேன்’னு தெளிவா டயலாக்.

ஸ்கூல் போகாம இருக்க என்ன ஒரு டெக்னிக். அல்ரெடி எல்லாரும் கிளம்பிப்போயாச்சு நல்லாத்தூங்குன்னதும் நிம்மதியா போர்வைய இழுத்து தூங்கியாச்சு.

இன்றைக்கு ஸ்கூல் போகும் முன்ன சோகமா உக்காந்திருக்கான். என்னடா விசயம்ன்னா
எனக்கு தூக்கம் தூக்கமா வருது .. போர் அடிக்குது டீவி பார்க்கனும்போல இருக்கு..

இருக்கிறது 5 நிமிசம் அதுக்கு எதுக்கு டீவியப்பாக்கனும்..
பஸ் ல வைக்க சொல்லலாம் டீவி..

ஏற்கனவே 3 சீட்ல நாலு பேரு உக்காந்திருக்கோம் அதுல எப்படி வைப்பாங்க ?

ஓ உனக்கு ப்ளைட் மாதிரி ஒவ்வொரு சீட்டுக்கும் டீவி வேணுமோ நான் சொன்னது ஒரே ஒரு டீவி முழு பஸ் க்கு

அது சரியா வராதே கஷ்டமே யாரு கையில் இருக்கும் ரிமோட் ..:)

12 comments:

வெங்கட் நாகராஜ் said...

குட்டீஸ்.... கேள்விகள் ....

இவங்க பண்ற லூட்டிக்கு அளவே இல்லை .... ரசிக்க வைக்கும் லூட்டிகள் தான்! :)

ரசித்தேன்...

கோபிநாத் said...

\\பவ்யமாய் அம்மா -\\

ம்ம்..அந்த பயம் இருக்கனும் ;)))

இராஜராஜேஸ்வரி said...

எதிர்பாராத திருப்பம் கொண்ட
கதை வேண்டுமாம்

ஒவ்வொரு சொல்லுமே எதிர்பாராத திருப்பம் தரும் அழகு செல்லங்கள்.

Dubukku said...

பசங்களோட லூட்டியே சூப்பர் :) ஸ்கூலுக்கு லீவு போடற டெக்னிக் எனக்கு ரொம்பப் பரிச்சயமானது - ரொம்ப சின்ன வயதில் :))

pudugaithendral said...

:))

ஹுஸைனம்மா said...

பாட்டில் தண்ணீரைத் தெளிப்பது அதிபயங்கரமான திருப்பம்தான்!!

//பவ்யமாய் அம்மா//

ம்ம்.. அங்கேயும் இந்தக் கதைதானா!! :-)))

//சிஷுக்கா யாரோடஅக்காடா ?//
சிஷூவோட அக்காதான் சிஷூக்கா!! இதுகூடத் தெரியலையே??!! அதான் புள்ளை அதிர்ந்து போயிட்டான். :-))))

ADHI VENKAT said...

எல்லா வீட்டிலும் அதே கதை தானா..... இங்கயும் பார்த்ததயே புதுசா பார்க்கற மாதிரியே பார்க்கறீயே என்ற கேள்வி தான்....:))

பீம், ஹடோரி...இவைகள் தான்.... சலிக்காதா?

'பரிவை' சே.குமார் said...

எல்லார் வீட்டிலும் இதே கதைதான்...

லூட்டிகளை ரசிப்போம்.

ezhil said...

குட்டீஸ் லூட்டி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வெங்கட், கோபி, இராஜராஜேஸ்வரி
நன்றி..

டுபுக்கு நன்றி.... இங்கே அப்பா எவ்வழி பிள்ளை அவ்வழின்னு கேலி செய்வோம்..:)

புதுகைத்தென்றல்..ஹுசைனைம்மா நன்றி..

அதிபயங்கரமான திருப்பம் வேணாம் ஆனா ஃபன்னியான திருப்பம் கூட ஓகே ..ஒருநாள் டீச்சர் வரலை என்பது தான் ஸ்டோரி ஸ்டார்ட்டரா குடுத்தப்ப இவனோட நண்பன் டீச்சரை ஏலியன் தூக்கிப்போயிடுச்சுன்னு எழுதினானாம்.. அது ரொம்ப ஃபன்னியான ஸ்டோரியா நல்லா இருந்ததாம்.. என்னா கொலவெறி பாருங்க..

மாதேவி said...

நன்கு ரசித்தேன்.

கோமதி அரசு said...

சபரி பேச்சு அருமை.