December 13, 2006

பஜ்ஜி விளையாட்டு

குளிர்காலத்திலும் மழைக்காலத்திலும் விடுமுறையில் வீட்டில் இருக்கும் போது இந்த பஜ்ஜி பஜ்ஜின்னு ஒன்னு இருக்குமே அதைக் கொஞ்சம் கண்ணுல காட்டறதுன்னு கணவர் கேட்கும் போதுதான் சரி செய்வோமேன்னு தோணும். சமைப்பது முழுநேரப் பொழுது போக்காகி விட்ட இப்போது பஜ்ஜி செய்யணும் என்பது ஒன்றும் பெரிய விசயம் இல்லை.

ஆனால் நான்காவதோ ஐந்தாவதோ படிக்கும் போது [மத்தவங்க என்னைவிட சின்னவங்க] எல்லாரும் கூட்டாஞ்சாதம் செய்து விளையாடுவார்களே அது போல பஜ்ஜி செய்தோம் நாங்கள்.. காலனியில் இருந்த குழந்தைகள் அவர்கள் அவர்களுக்கு கிடைக்கும் பாக்கெட் மணியில், [ அதிகமில்லை பத்திலிருந்து இருபத்தைந்து பைசா ]
கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைக்க ஆரம்பித்தோம்.

கொஞ்சம் சேர்த்ததும்...ரெண்டு பேர் போய் கடையிலிருந்து பொறிக்க கொஞ்சம் எண்ணெய், கடலைமாவு வாங்கி வந்தாங்க. வெங்காயம் மட்டும் வீட்டில் எடுத்து வந்தாள் ஒருத்தி. மொட்டை மாடியில் கொஞ்சம் கல் வைத்து, மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி , எரிக்க தென்னை ஓலை . ஆம்பள பசங்க நாங்க தான் சமைப்போம்ன்னு ஒரே அடம்வேற. ஒரு வழியா பஜ்ஜி சுட்டோம் பெரிய சாதனை மாதிரி.

நாங்கள் சாப்பிட்டது போக வீட்டுக்கு ஒன்று என்று சுவை பார்க்க கொண்டு போனோம். ஆமா உன்னவிட சின்னவ எதிர் வீட்டு பலகாரகடைகாரங்க பொண்ணு கடை பாத்திரமெல்லாம் அண்டா அண்டாவா கழுவி சமையலுக்கும் உதவி செய்யுறா. ஆனா நல்லாதான் இருக்கு பஜ்ஜின்னு சொன்னாங்க அம்மா. பின்ன சாப்பிட மட்டும் தானே எட்டி பார்ப்பேன் சமையல்கட்டில்.

2 comments:

வல்லிசிம்ஹன் said...

அப்போ டெல்லிக்கு வந்தால் கண்டிப்பாக காரசாரமா பஜ்ஜி வேணும் சொல்லிட்டேன்.
நல்லா இருந்தது பதிவு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ரேவதி.
கண்டிப்பா கிடைக்கும்.
அதுதான் பத்து வருடமாக ஒருத்தரை பணயம்
வைத்து சமையல் கத்துகிட்டாச்சே.