November 20, 2007

லவகுசா,துர்கையானா அமிர்தசரஸ்ஸ்பெஷல்-4

அமிர்தசரஸ் தொடர் 1,2,3
ராம் தீர்த் என்கிற இடம் அமிர்தசரஸிலிருந்து சௌகன்வான் சாலையில் 16 கிமீ தூரத்திலிருக்கிறது இங்கே தான் வால்மீகி ஆசிரமத்தில் சீதைதன் மகன்கள் லவாகுசாவைப் பெற்றெடுத்தாளாம். வால்மீகி ராமாயணத்தை எழுதிய இடமும் இது என்று சொல்கிறார்கள்.


மிகப்பெரிய குளம் அதை சுற்றியும் சிறு சிறு கோயில்கள் இருக்கின்றன.இப்போது பூஜ்ய மாதா என்கிற வயதான அம்மா பெயரால் குளக்கரை
யில் ஆங்காங்கே கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன .





லவாகுசாவின் பிறப்பிலிருந்து வளர்ப்புவரை பொம்மைகளால் செய்யப்பட்ட காட்சி கண்ணாடி ஓவியங்கள் என்று இப்போது தான் தயாராகிறது. குகை போன்ற ஒன்றில் அழகான காட்சிகள் செய்துவருகிறார்கள் பின்னாளில் இதுவும் ஒரு நல்ல சுற்றுலா தலமாகிவிடும்.






மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலை. வைஷ்ணோதேவியின் குகைக்கோயிலைப்போன்ற மாடல்கள் தான் எத்தனை விதம். ஒரு சுண்டெலியின் வாயில் குகை இன்னொருகோயிலில் முதலையின் வாய் தான் குகை வாயில். குழந்தைகள் குதித்தபடி உள்ளே ஓடுவதும் ஆடுவதும் என்று ஆனந்தம். குளத்தில் பொரி போட்டு கொஞ்சம் மீன்களோடு விளையாட்டு.




வால்வீகி ஆசிரமத்தில் ஒருவர் சாம்பல் மடித்து கொடுத்துக்கொண்டிருந்தார் பக்கத்தில் ஒரு ஹோம குண்டம் அவரைப்பார்த்தால் முஸ்லீம் துறவி போலக்கூட இருந்தார் வாய்விட்டு எதையோ மந்திரம் முணுமுணுத்தபடி இருந்தார் அதனால் ஒன்றும் கேட்க இயலவில்லை. அங்கெல்லாம் நம் ஓட்டை ஹிந்தியும் கிராமத்தாளுகளிடம் செல்லுபடியும் ஆவதில்லை என்பது வேறு விசயம்.


நவம்பர் மாதம் பௌர்ணமி நாளில் விழா நடக்குமாம்.. 4 நாட்களுக்கு.அங்கே குளிப்பதற்கு ஒரு லட்சம் பேர் வருவார்களா ம்.அத்தனை பெரிய குளம் தான் இந்த படத்தை பாருங்களேன் சிறப்பு பேருந்துகள் இருக்குமாம் அப்போது . ஆனால் சாதாரண நாட்களில் பேருந்துகளைக்கண்களில் காண்பதே அபூர்வமாகத்தெரிகிறது.அமிர்தசரஸில் உள்ளூர் வாகனங்கள் மிக மோசம். எல்லாரும் புகைக்கக்கும் வாகனங்களோடு அதிவேகமாக ஓட்டுகிறார்கள். சின்ன சின்ன சந்துகளில் கூட வளைத்து நெளித்து, ஆனால் இடித்தால் சண்டைப்போட்டு அந்த இரு நாட்களில் பார்க்கவில்லை அது அப்படித்தான் என்று போய்க்கொண்டிருந்தார்கள்.



துர்கையானா தீர்த் இது இன்னொரு பொற்கோயில் போன்ற தோற்றம் தருகிறது.. இக்கோயில் அமிர்தசரஸிலேயே தான் இருக்கிறது ஆட்டோவில் 150 ரூபாய் பேசிக்கொண்டு 4 அல்லது 5 இடங்கள் ஒரு நாளில் பார்த்தோம்.தண்ணீருக்கு நடுவில் இருக்கும் கிருஷ்ணன் கோயில் எப்போதும் அங்கே பஜன் நடந்த வண்ணம் இருக்கிறது. தங்க கோபுரம் நிறைவு பெறவில்லை தங்கம் தானம் செய்யக்கோருகிறார்கள்.இத்தீர்த்ததில் குளிக்க நோய் போகும் என்று நம்பிக்கை .. கொய்யா கனிகள் வைத்து பூஜை செய்வார்களாம்.. இப்படத்தை பெரிதுசெய்து இந்தி தெரிந்தவர்கள் கதையைப் புரிந்துகொள்ளுங்கள்.. இங்கே (130 வருடங்கள் என்று ஞாபகம்..)சியமாளா தேவிக்கோயில் இருக்கிறது..






பூஜ்ய மாதாவின் கோயில் இன்னொன்று அமிர்த சரஸிலேயே ஒரு வைஷ்னோ மாதா கோயில் இது நிஜமாகவே தவழ்ந்து செல்லும்படி ஒரிடத்தில் வருகிறது பிறகு தன்ணீர் காலை நனைக்கும் படியான குகைக்குள் போய் பார்க்கவேண்டும் சாமியை.. ஒரிஜனல் வைஷ்ணோ தேவிகோயில் போக இன்னும் வாய்ப்புகிடைக்கவில்லை..கோயிலில் பெங்களூர் கெம்ப் போர்ட் சிவன் கோயில் போல எல்லா சாமியும் இருக்கிறார்கள் அதில் நம்மூர் சாமிகளும் உண்டு.. மீனாட்சி , ரங்கநாதர் போன்று சில தெய்வங்கள்.

20 comments:

ஆயில்யன் said...

இன்னும் பதிவு படிக்கல அக்கா!
அத விட முக்கியமான விஷயம்
பொங்கலுக்கு ஊருக்கு வர்றப்பா அர்ச்சனா ஹோட்டல்ல பர்த்டே டீரிட்க்கு ரெடி பண்ணிடலாம்ல?

கோபிநாத் said...

\\போர்ட் சிவன் கோயில் போல எல்லா சாமியும் இருக்கிறார்கள் அதில் நம்மூர் சாமிகளும் உண்டு.. மீனாட்சி , ரங்கநாதர் போன்று சில தெய்வங்கள்.\\

ம்ம்ம்ம்...அடுத்து

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயில்யன்.. நம்ம ஊருக்காரங்க எல்லாருமே பதிவைப்படிக்காம பின்னூட்டமிடறவங்கன்னு நினைச்சுட போறாங்கப்பா..
அப்பரம் ஒரு விசய்ம் நான் தான் பொங்கலுக்கு வரலையே...(அப்பாடா தப்பிச்சாச்சு)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபி கடைசிவரி மட்டும் எடுத்து போட்டா பதிவைப்படிச்சதா அர்த்தமா..ஓகே ஓகே..
அடுத்து ன்னு கேட்டது எழுதனும் இனிமேதான்.. ட்ரிப்போட முதல் முக்கிய காரண்மான பொற்கோயில் பத்தி..

ஆயில்யன் said...

பதிவில் போட்டோக்கள் சூப்பர்!

பிக்காஸோவில் பூந்து விளையாடுவது தெரிகிறது!
நடக்கட்டும்!
நடக்கட்டும்!!

ஆயில்யன் said...

//கோபி கடைசிவரி மட்டும் எடுத்து போட்டா பதிவைப்படிச்சதா அர்த்தமா//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..!!!!!!!!!!!!!!!!!!!!
(குசும்பன் ஸ்டைல்)

ஆயில்யன் said...

//முத்துலெட்சுமி said...
ஆயில்யன்.. நம்ம ஊருக்காரங்க எல்லாருமே பதிவைப்படிக்காம பின்னூட்டமிடறவங்கன்னு நினைச்சுட போறாங்கப்பா.. //
பதிவை விட எவ்ளோ பாசமா இருக்காங்க பாருப்பான்னு! ஆச்சர்யப்படுவாங்க....!!!!
அத விட்டுத்தள்ளுங்க!

ஆயில்யன் said...

//அப்பரம் ஒரு விசய்ம் நான் தான் பொங்கலுக்கு வரலையே...(அப்பாடா தப்பிச்சாச்சு)//

பொங்கலுக்கு வேணாம்
மதியம் சாப்பாடுதான் அங்க சூப்பரா இருக்கும்!!!??

நாகை சிவா said...

பிசாக்கால பின்னுறீங்க போல..

அது போகட்டும் கற்பனை காவியம்னு சொல்லுறாங்க.. நீங்க என்னமோ பிறந்த இடம் எல்லாம் சொல்லுறீங்க...

??????

Deepa said...

சூப்பர் இன்பர்மேஷண்... இப்போ சும்மா லெக்ட்சர் அட்டெண்ட் பண்ணிட்டு போறேன்.. அப்புறமா நோட்ஸ் எடுக்கறேன்.. எல்லருக்கும் சொல்லணுமில்லே..!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயில்யன் ஒன்னும் சொல்றதுக்கில்லை இன்னைக்கு யாரும் கிடைக்கலயாக்கும்..
மாயவரத்துல இப்போதைக்கு அபிராமி ஹோட்டல் தான் கூட்டமா இருக்கு.. முன்னல்லாம் ஹோட்டலான்னு கேப்போம் இப்பத்தான் பழக்கமா இருக்கு..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நாகை சிவா அதான் சொல்லிக்கராங்க சொல்லிக்கராங்கன்னு எழுதி இருக்கேனே சேஃபர் சைடு.. உண்மையோ பொய்யோ சுத்திப்பார்க்க போறவங்க போலாமே அதுக்குத்தான் இந்த இன்பார்மேஷன்.. நான் எப்போதும் எதைப்பத்தியும் எழுதும் முன் ஒரு தடவை கூகிள் பண்ணுவேன் அந்த விசயத்தையாராவது ஏற்கனவே தமிழில் எழுதி இருக்காங்களான்னு இளாவைத்தவிர அமிர்தசரஸ்பத்தி எழுதிய பதிவுகள் அதிகம் காணோம்.. எதோ என்னாலனது.. நம்புவர்க்கு கடவுள்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கண்டிப்பா தீபா இப்படி இடங்களைத்தேடிப்போவதே எனக்கு பிடித்தமான விசயம்.. அந்த இன்பர்மேசன் மத்தவங்களுக்கு உபயோகப்படுமானால் சந்தோசம் ..ரெட்டிப்பு இல்லையா..

மெளலி (மதுரையம்பதி) said...

பலமுறை டில்லி வந்தும் அங்கிருந்து அம்ருதசரஸ் போனதில்லை. பாக்கலாம் எப்போ சந்தர்ப்பம் கிடைக்குதுன்னு.

துளசி கோபால் said...

அப்ப அமிர்த்சரஸ் வந்தால் தங்கமே தங்கமுன்னு பொற்(குவிய)கோயில்களாத் தரிசிக்கலாம்.

இப்பத் தங்கம் விற்கும் விலையில் தரிசனம் மட்டுமேதான் முடியும்;-))))

வல்லிசிம்ஹன் said...

எனக்குகூட வைஷ்ணோ தேவி கோவில் போக ஆசை.
போட்டோக்கள் நன்றாக இருக்கின்றன லட்சுமி.

நம்ம பக்கம் சில சாமிகளுக்குக் கோவில். அவங்க பக்கம் நிறைய பெண்தெய்வங்கள். வித விதமம பெயர்கள்.எல்லாவற்றிற்கும் கதைகள்.
நிறைய எழுதுங்க. படிக்கலாம்.

Unknown said...

இப்பவே கோயில் கோயிலா சுத்த ஆரம்பிச்சாச்சா? :-)

ரசிக்கிற மாதிரியான இடங்கள படமாக் கொடுத்ததுக்கு நன்றீ. நேர்ல போயா பாக்கப் போறோம்? இங்க இருந்தே பாத்துக்கறேன்.

அபி அப்பா said...

நல்லா சுத்துனீங்க கோவில் கோவிலா! அடுத்த கோவில் எங்க? துலசி டீச்சர் 500 பதிவு போட்ட பின்ன கோவில் சுத்துனாங்க! இதையும் ஞாபகம் வச்சுகோங்கப்பா:-))

Unknown said...

Hi,

I am Arasu living in Janakpuri with my family. I came across your blog and saw your last post trip to Amritsar. I am assuming I can reach you by this mail id and I am hpoing also. I was planning to go during winter school holidays. Just want to know did you make the trip using some travel agent or on your own? If you can, please provide me the some details that would help me to plan my travel accordingly. Also please note that I have very little knowledge of Hindi.


thanks
Arasu

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அரசு வாஹா பற்றி எழுதி இருந்தது மற்ற பாகங்கள் படித்து விட்டீர்களா? அமிர்தசரஸ் முழு தொடரும் நான் இன்னும் முடிக்கவில்லை பொற்கோயில் பற்றீ இனி தான் எழுத வேண்டும்.. நாங்கள் ஷானே பஞ்சாப் ரயிலில் சென்றோம்.. ட்ராவல் ஏஜண்ட் எல்லாமில்லை... அங்கே இறங்கியதும் வாஹா சென்றோம் பின்னர் பொற்கோயிலில் ரூமுக்கு கேட்டோம் அன்று விசேசமாகியதால் நிறைந்துவிட்டது .முயற்சி செய்து பாருங்கள் நாங்க்கள் வெளியே ஹோட்டலில் தங்கினோம்..ஹிந்தி கொஞ்சம் தெரிந்தால் போதும்.. ஆட்டோவில் எல்லா இடமும் பேரம் பேசி சுற்றிக்கொள்ளலாம்.. உங்கள் மெயில் ஐடியை அனுப்புங்கள் வேண்டுமானால் ..