February 1, 2008

தனிமையிலே இனிமை காணமுடியுமா?

படம் ஆரம்பித்து ரொம்ப நேரத்துக்கு நாம் எதும் கல்யாண சிடி பாத்துக்கிட்டு இருக்கமோ என்கிற யோசனை தவிர்க்க முடியாதது தான்.. ஆனா எந்த கல்யாண சிடியில் பொண்ணு பாக்கறதெல்லாம் வரும்.. சரி சரி இது படம் தான் . பிரிவோம் சந்திப்போம் விமர்சனம் எழுதிய எல்லாருமே அது என்ன இத்தனை நாளா இல்லாத தனிமை சினேகாவிற்குன்னு கேட்டிருக்காங்க.. நல்லா அழுத்தமா சொல்லி இருக்காங்க படத்துல...

முதல் காட்சியே, பத்து பெண்கள் ஒரே வீட்டில் . ஒரு அம்மா எந்திரிங்கடி எந்திரிங்கடின்னு பத்து பேரை எழுப்பி காபி குடுத்தா அய்யோ அம்மா என்ன இது இத்தனை பேரு ஒரு வீட்டிலான்னு பார்க்கிறேன். ஒரு ஒரு செருப்பா கொறைஞ்சு காலியாகும் வாசலே சொல்லுது கவிதையாக சினேகாவின் நட்பு வட்டத்தை.

கல்யாணம் செய்யப்போறவர் கூப்பிட்டாலும் கூட தோழிப்படையோடு இறங்குகிறார். எங்கே போனாலும் பத்து பேரத்திரட்டிக்கிட்டு தான் போவியான்னு ஆச்சரியப்படும் தோழிகள்.கூட்டுகுடும்ப ஆசையில் மனம் முழுக்க கனவுகளோடு வரும் சினேகா அழகோ அழகு.

ம் . சேரன் என்ன தான் செய்வார் பாவம் . அந்தகாலம் மாதிரியா இரவில் படுக்கையறையில்(சில சமயம் அங்கயும் ரெண்டு குட்டீஸ்) மட்டுமே பேசமுடியும்ன்னு சொன்னா இந்த காலத்துப்பையன் ( கதையிலங்க) என்ன செய்வார். ஆனா அட்டகட்டியில் தனிக்குடித்தனம் என்பது வாழ்க்கையே ஹனிமூன் போல கொண்டாட்டம் ன்னு நினைக்கிற சொந்த பந்தம் எல்லாம் ( ஏன் அப்பா அம்மா வந்து பாக்கவில்லைன்னு கூட எல்லாருக்கும் ஒரு கேள்வி )புதுமணத்தம்பதியை தொந்திரவு செய்ய வேணாம்ன்னு இருப்பது எங்க போய் விட்டுருது தெரியுமா? அதான் கதை.

கருப்பு நான் சாக்லெட் ப்ரவுனு ன்னு சொல்றது நாம் இருவரும் ஒரே வேலை செய்யரோம்ன்னு ஆரம்பிச்சு ஜெயராமை கலாய்ப்பதும் நல்ல காமெடி..

கேசட்டுகளை கலெக்ட் செய்யும் சினேகா வித்தியாசமான அணுகுமுறை தமிழ் சினிமாவில் இப்படி உணர்வுகளை முக்கியமான கதைக்கருவா எடுத்துக்கிட்டு படங்கள் என்பது அதிசயம் தான்.. யாருக்கு பிடிக்குதோ இல்லையோ எனக்கு பிடிக்குது. நான் கூட இதே போன்று போர் அடிப்பதாக நினைத்திருக்கிறேன். குழந்தைகளும் மற்ற என் பொழுதுபோக்குகளும் என்னை திசை திருப்பி இருக்கின்றன. இப்படி அடிதடி இல்லாமல் வில்லன் ,குடும்ப சண்டை இல்லாமல் எடுத்தற்காகவே படத்தைப் பாராட்டத்தோன்றுகிறது.

--------------------------------------------------------------
நேர் எதிர்மாறான படம் வாழ்த்துக்கள். அன்பு இல்லம்ன்னா அன்பா இருக்காங்களாம். ஆனா சிறுபொறி வ்ந்ததும் கேவலமா அடிச்சிக்கறாங்க.. அன்பானவங்க எப்படி இப்படி மாறினாங்கன்னு தெரியல. அடிப்படையில் அன்பிருந்தா இப்படி ஆக வாய்பிருக்கா. அன்புன்னா தன் குடும்பம் பிறர் குடும்பம்ன்னு பார்க்காம அன்பா இருக்கனும் .

காதலிச்சு கல்யாணம் செய்யும் குடும்பத்து பத்திரிக்கையை தன் கையால் வாங்காமல் போகும் அளவுக்கு அடுத்தவருக்கு மரியாதை தராமல் போகும் குடும்பத் தலைவன் .

தமிழிலேயே பேசனும்ன்னு நினைச்சு படத்துல வசனத்தையே குறைச்சுட்டாங்களோங்கற எண்ணம் தோன்றுது வார்த்தைகளுக்கு இடையே இடைவெளி அதிகம். இயல்பா இருக்கனும்ன்னு நினைச்சு போட்ட புதுமுகங்கள் யாருக்கும் நடிக்கவே தெரியவில்லை.எல்லாருக்கும் தமிழில் பெயர் வச்சிருக்காங்க அது ஒரு புது முயற்சி.. ஆனால் எல்லா இயக்குனர்களும் என்ன ஆச்சுன்னு தெரியல முக்கியமான கதாப்பாத்திரத்துக்கு இப்பல்லாம் என் பெயரே வைக்கிறாங்க.. (கயல்விழி) .

அந்த தாத்தா கூட்டுக்குடும்பமா இருக்காராம் அதைப்பார்த்து மாதவன் ஆசைப்படறாராம் . இவர் எங்க இருப்பார் கல்யாணம் ஆனதும். பொண்ணு வீட்டுலயா ? அப்ப அவங்க அம்மா அப்பா.. ? இதுல அந்த தாத்தா வேற கதாநாயகியோட அப்பாவை வீட்டோட மாப்பிள்ளையா வச்சிருக்காரு.. முடிவுல யாரெல்லாம் அன்பா கூட்டா இருக்கப்போறாங்கன்னு காட்டாம விட்டுடாங்கன்னு எனக்கொரு குறை. :-)


ஒரு நல்லப்படம் பார்த்தா நல்லா இல்லாத படம் ஒன்னு பாக்கிறதுன்னு வேண்டுதல். அதுக்கு இது.

19 comments:

செல்வம் said...

பிரிவோம் சந்திப்போம் விமர்சனம் அருமை.நிறைய காட்சிகளைக் கவித்துவமாக எடுத்துள்ளார் கரு.பழனியப்பன்.நல்ல படந்தான்...

காட்டாறு said...

புரியுற மாதிரி இருக்குது. ஆனா புரியல. :-(

ரசிகன் said...

//ஒரு நல்லப்படம் பார்த்தா நல்லா இல்லாத படம் ஒன்னு பாக்கிறதுன்னு வேண்டுதல். அதுக்கு இது.//

ஹிஹி.. முதல் படம் பாத்துட்டேன்.. ரெண்டாவது படம் பாக்கலாம்ன்னு தரவிறக்கம் செஞ்சிருந்தேன்.. காப்பாத்திட்டிங்க,... நன்றிகள்..:))

கோபிநாத் said...

பிரிவோம் சந்திப்போம் - இன்னிக்கு போயி இந்த படத்தை தான் பார்க்கானும்..;))

வாழ்த்துக்கள் - எல்லோரும் சரியில்லைன்னு தான் சொல்லறாங்க...ஆனாலும் கிடைச்ச இதையும் பார்த்துடுவோம்ல ;)

கோபிநாத் said...

விமர்சனம் வழக்கம் போல நேரடியாக பேசுவது மாதிரி நல்லாயிருக்கு..;))

\\என்ன ஆச்சுன்னு தெரியல முக்கியமான கதாப்பாத்திரத்துக்கு இப்பல்லாம் என் பெயரே வைக்கிறாங்க.. (கயல்விழி) .\\\

ஆமாம்..அந்த கதாப்பாத்திரங்களுக்கு தான் நிறைய வசனம் இருக்கும் போல அதான் உங்க பெயரே வைக்கிறாங்க ;)))

அபி அப்பா said...

//ஆமாம்..அந்த கதாப்பாத்திரங்களுக்கு தான் நிறைய வசனம் இருக்கும் போல அதான் உங்க பெயரே வைக்கிறாங்க ;)))//

repeateeeeeeeyyyyyyyyyyyyyyy!!!

அபி அப்பா said...

unga peer kayal vizhiyaa??? :-)))

அபி அப்பா said...

nalla vimarsanam, vadiveel comody super illa??

அபி அப்பா said...

ivvalavu seekkiramaa inthiralookaththil azakappan vimarsanamaa?? super:-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி செல்வம் .. ஆமா கரு. பழனியப்பனை பாராட்டனும். இதுமாதிரி நிறைய வரட்டும் தமிழில்..

-----------

@ காட்டாறு என்னப்பா புரியல ... ??

-----------

@ ரசிகன். ... ஏன் உங்களுக்கு இல்லயா வேண்டுதல்.. அதுக்காக பாக்காம தப்பிச்சா எப்படி.. :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபி பாருங்க பாருங்க..
:)
எங்க பேசறேன் இப்பல்லாம் நான் டைப் தான் அடிக்கறென்..
---------

முழுசா படிச்சிட்டு என்பேரைப்பத்தி கமெண்ட் போட்டுட்டு அப்பறம் பதிவை படிக்காத மாதிரி வடிவேலு பத்தி கமெண்ட் போட்டிருக்கீங்க அபி அப்பா.. இந்த விளையாட்டில்
அவுட் அவுட் .கண்டுபிடிச்சிட்டேன் நீங்க பதிவை படிச்சிட்டீங்க..

pudugaithendral said...

அப்பாடி உங்களுக்கும் பிடிச்சிருக்கா இந்தப் படம்.

என்னை மிகவும் பாதித்த படம் இது.

குசும்பன் said...

நன்றாக இருக்கு உங்க விமர்சனம்

TBCD said...

நல்ல படம் தான்...பாட்டுக் கூட இயல்பா வந்திருந்து..

ரொம்ப சைக்கோ லெவல்ல எடுத்துட்டுப் போயிடுவார்ன்னு நினைச்சு பயந்துக்கிட்டேப் பார்த்தேன்.

சுவாரசியமாகவே எடுத்துட்டுப் போயிருந்தார்.

வித்தியாசமான படங்களை ஆதரிக்கனும். விமர்சனம்...காரைக்குடிக்காரவுகளே ஒரிஜினல் மாதிரி இருக்குன்னு சொல்லிட்டா, டையரடக்கருக்கு, ஒரு பெரிய பாரட்டுத் தான். (காரைக்குடி, தேவக்கோட்டை பக்கம் தானே நீங்க.....? )

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி புதுகைத்தென்றல்..
மெதுவாப்போனாலும் படம் நல்லப்படம். அடிதடி லாஜிக்க் இல்லாத படம் எல்லாம் பாத்து நொந்தவங்களுக்கு வரம்.
-----------

நன்றி குசும்பன்.. நீங்கல்லாம் தான் கட்டாயம் பாக்கனும்.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பரவாயில்லையே சுவாரசியம் சொல்லிட்டீங்களே டிபிசிடி..
ஆனா நான் காரைக்குடி இல்லைங்க.. இருந்தாலும் அவங்க கல்யாணம் எப்படி இருக்கும்ன்னு சும்மா ஒரு ஐடியா இருக்கு.. விழுந்து விழுந்து கும்பிடறது வரைக்கு அவங்க கல்யாண ஆல்பத்தை கூட பார்த்த உணர்வை குடுத்துட்டாங்களே...

Sanjai Gandhi said...

என்னக்கா இது.. நீங்க சொல்றதா பார்த்தா பி.ச ஒரே ஃபிலிங்க்ஸ் ஆஃப் கோயம்புத்தூரா இருக்கும் போல இருக்கு. டிவி சீரியல் எஃபக்ட் தெரியுது. ஆள விடுங்க சாமி.

//ஒரு நல்லப்படம் பார்த்தா நல்லா இல்லாத படம் ஒன்னு பாக்கிறதுன்னு வேண்டுதல். அதுக்கு இது.//

இனிப்பு சாப்டுட்டு சுவையை மாற்ற காரம் சாப்பிடுவது போல். :)

//ஹிஹி.. முதல் படம் பாத்துட்டேன்.. ரெண்டாவது படம் பாக்கலாம்ன்னு தரவிறக்கம் செஞ்சிருந்தேன்.. காப்பாத்திட்டிங்க,... நன்றிகள்..:))//

திருந்துங்கய்யா.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சஞ்சய் டிவிசீரியலிலேயே எல்லா சீரியலும் ஒரே மாதிரி கிடையாது... சொந்தம் பந்தம் ஒரு மாதிரி.. பாலசந்தரோடது ஒரு மாதிரி .. பாலுமகேந்திராவோடது ஒரு மாதிரி ...சுகாஸினி எடுத்தாங்களே அது வேற மாதிரி.. ஓகேயா அதுனால எதயும் ஒதுக்கிடக்கூடாது ... இது ரசிக்கும் படியான சீரியலென்று வைத்துக்கோங்களேன்.... சினேகாவின் பதவிசான நடிப்புக்காகவே பாக்கலாமே...

Sanjai Gandhi said...

என்னை பொறுத்தவரையில் திரைப்படம் என்பது முழுக்க முழுக்க பொழுது போக்கு சார்ந்த விஷயம். அங்கு போய் எதயும் கற்றுக் கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை. மேலும் காதல், நட்பு, சொந்த பந்தங்கள் பற்றியது, குடும்ப உறவுகள் எல்லாம் நாம் அன்றாடம் நேரில் பார்க்கும் விஷயங்கள். இதை எதற்கு திரையிலும் பார்க்க வேண்டும்.?

சீரிலலோ சினிமாவோ.. இது கற்பனை சார்ந்தது. ஒன்று பொலுது போக்காக இருக்க வேண்டும் அல்லது அறிவியல் சார்ந்த கற்பனைகளாக இருந்து எதிர் கால கண்டுபிடிப்புகளுக்கு விதை போடுபவையாக( சில ஆங்கில படங்களை போன்று ) இருக்க வேண்டும்.

சேரன், தங்கர்பச்சான், பாலாஜி சக்திவேல், விசு, பாலசந்தர் போன்றவர்களின் சினிமாக்களும் குடும்ப உறவுகளை அடிப்படியாக கொண்டு உறுவாக்கபடும் சீரியல்களும் பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
நகைச்சுவை, அறிவியல் சார்ந்த கற்பனைகள், திறமைகளை வெளிகொணரும் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் தான் எனக்கு விருப்பம்.

உங்கள் அளவு மனபக்குவம் வரும் போது என் விருப்பங்களும் மாறக் கூடும் அக்கா.