May 1, 2008

கேவிக்கேவி அழுகுது பாப்பா!

உங்களை பத்து வருசம் முன்னாடி கண்ணாடி போடாம பாத்தா எப்படி இருக்கும் .. அப்படி இருந்தா அந்த பொண்ணுன்னு துளசி சொன்னாங்க.. எந்த பொண்ணுங்கன்னா "கண்ணும் கண்ணும்" ல ஒரு பொண்ணு தோழியா வரா அந்த பொண்ணு ன்னு சொன்னாங்க. ஆனாபத்து வருசம் முன்னயும் நான் கண்ணாடி தான் போட்டிருந்தேன்ன்னு சொல்லி சிரிச்சேன். சரி எப்படின்னாலும் அந்த படம் பாக்கத்தான் போறோம் (ப்ரசன்னாவுக்காக) அது யாரு அப்படி நம்மள மாதிரி பாத்துடுவோம்ன்னு பாத்தாச்சு.. அட இந்த பொண்ணா கொஞ்சம் நம்மள மாதிரி தான்னு தோன்றியது.

ரொம்ப அழகான பிண்ணனியில் அந்த வீடு ரொம்ப அழகுங்க. பாசமான குடும்பமும் ரொம்ப ஓவராக இல்லாம அளவோடு செண்டிமெண்ட் தந்தாங்க. அண்ணனா வந்தவர் ரொம்ப யதார்த்தமா இருந்தாப்பல இருந்தது. விஜயக்குமார் கூட ஓவரா நடிக்காம அளவா நடிச்சிட்டார் . நீபா ரொம்ப அழகு . ரொம்ப அழகு குரலும் கூட.. கதையோட அடிப்படையான அந்த கவிதை மட்டும் தான் கொஞ்சம் லாஜிக்கில்லாம இருந்தது.. ஒரேமாதிரி யோசிக்கலாம் ஒரே மாதிரி வரிகள் கூடவா இருக்கும்.. அதை மட்டும் விட்டுட்டா எனக்கு பிடிச்சிருந்தது படம்.

காதல்ன்னு இல்ல கோபம், வெறுப்புன்னு எல்லா மன உணர்ச்சிகளும் கொஞ்சம் ஆறப்போட்டாலோ , இல்லாவிட்டால் வேறு ஒரு உணர்ச்சியின் ஆதிக்கம் அதிகமாகும்போதோ மாறிவிடும் என்பது உண்மைதானே. முடிவு எதிர்பார்த்தது போலதான். ஆனால் அழகாக யதார்த்தமா சொல்றாங்க.

எனக்கு வெறுப்பா இருந்த ஒரு காட்சி தான் இந்த படத்துக்கு விமர்சனம் எழுத வச்சதே.. எத்தனையோ படத்தில் இறந்தவர்களை எல்லாவகையிலும் குளிப்பாட்டி எரியூட்டும் வரை காட்டுவது உண்டு. அப்போதே எரிச்சலாக வரும்.. அதும் ரகுவரனை 'யாரடி நீ மோகினி'யில் காட்டியபோது என்னவோ போல இருந்தது. அது வாவது பெரியவங்க.. .. இந்த படத்தில் ஒரு குட்டி பாப்பாவுக்கு முதல் மொட்டை அடிக்கிற காட்சி .. ஏன் இதெல்லாம் இத்தனை விவரமா காட்டனுமா.. குழந்தை அழ அழ மொட்டை அடிச்சாங்க.. நிஜம்மாவே நடக்கிறது போலவே அத்தனையும் காட்டினாங்க.. அது பூமாலையை பிடிக்காம கழட்ட, இவங்க திரும்பி மாட்ட.... மொட்டை அடிச்சதும் மடியில் காது குத்த முயற்சி செய்யும் போது , எந்திரிக்க முயற்சி செய்யும் குழந்தையை அப்படியே அமுக்கி உட்கார வைப்பது வரை..

அந்த குழந்தை சந்தனம் தடவி விட்ட பின் கேவி கேவி அழுதபடியே இருந்தது.. இது குழந்தை தொழிலாளர் மாதிரி இல்லையா.. இதை யாரும் கேட்க மாட்டாங்களா..? எனக்கு பார்க்க பார்க்க வயிறு கலங்கிப்போனது.. என் பையனை கூப்பிட்டு பக்கத்தில் வச்சிக்கிட்டேன்..

அந்த காட்சியை வேற மாதிரி எடுத்திருந்தால் அந்த முக்கியமான காட்சிக்கு அழுத்தம் வராமல் போயிருக்கலாம்..ஆனாலும்.....என்னமோ எனக்குத்தான் மனசே ஆறலை..பாருங்க பதிவு பக்கமே எட்டிப்பாக்கத நானே இதை எழுதியே ஆகனும்ன்னு எழுதி இருக்கேன்.

18 comments:

சென்ஷி said...

படத்துல ஹீரோயின் ரொம்ப பேசுவாங்களா அக்கா :))

சென்ஷி said...

இந்த கமெண்ட் இன்னும் 5 நிமிடத்தில் பப்ளிஷ் ஆகாவிட்டால் இங்கு கும்மி அடிக்கப்படும் என கண்டனம் எதிர்ப்பார்க்கப்படுகிறது
:))

ஆயில்யன் said...

//கேவி கேவி அழுதபடியே இருந்தது//

:((


இந்த கேவி கேவி அழுதல் அல்லது நினைத்து நினைத்து அழுதல் என்பது அயலகங்களில் வாழும் எங்களுக்கும் சொந்தம் என்பதால் அதற்கும் ஒரு

:(((((

முத்துலெட்சுமி/muthuletchumi said...

2 நிமிடத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது பாத்து முடிவு செய்யுங்க சென்ஷி சார் :)

படத்து ஹீரோயின் இல்ல தோழி தான் துளசி சொன்ன பொண்ணு .. ஹீரோயின் நிறையபேசற பொண்ணு தான் நல்லா நடிச்சது அந்த பொண்ணும்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயில்யன் எல்லார் கதையும் அதேதான்.. ஊருல இருந்தா சரியான வேலையோ காசோ இல்லன்னு அழுவோம்.. இங்க வந்தா.. ஊரை நினைச்சு அழுவோம்.. ஒன்னும் பண்ரதுக்கில்ல..

சென்ஷி said...

அதெல்லாம் முடியாது

கும்மி அடிச்சே தீருவேன் :))

சென்ஷி said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
ஆயில்யன் எல்லார் கதையும் அதேதான்.. ஊருல இருந்தா சரியான வேலையோ காசோ இல்லன்னு அழுவோம்.. இங்க வந்தா.. ஊரை நினைச்சு அழுவோம்.. ஒன்னும் பண்ரதுக்கில்ல..//

அவ்வ்வ்வ்வ்வ்.. இப்ப எனக்கு நெசமாவே அழுகாச்சி வருதுங்க

:((

இப்படி ஒரு தத்துவமா..

யாராச்சும் எண்ணி வச்சிருக்கீங்களா :)

தத்துவ முத்தை :)

நிஜமா நல்லவன் said...

///கதையோட அடிப்படையான அந்த கவிதை மட்டும் தான் கொஞ்சம் லாஜிக்கில்லாம இருந்தது.. ///


ஐயோ அக்கா நீங்க இன்னும் லாஜிக் எல்லாம் பார்க்குறீங்களா?

Thamiz Priyan said...

சினிமா விமர்சனம் முழுமையாவே கொடுக்கலாமே அக்கா!
(படம் பாத்துட்டு மீதியை சொல்றேன்... :) )

நிஜமா நல்லவன் said...

///பாருங்க பதிவு பக்கமே எட்டிப்பாக்கத நானே இதை எழுதியே ஆகனும்ன்னு எழுதி இருக்கேன்.///


பதிவு பக்கம் எட்டிபார்க்கிற மாதிரி நல்ல நிகழ்வுகள் நடந்திட வாழ்த்துக்கள்:)

நிஜமா நல்லவன் said...

முத்தக்கா கிட்ட எனக்கு கொஞ்சம் பயம் நான் வரலைன்னு சொன்னேன். கடைசில வர வச்சிட்டு காணாம போயிட்டாங்களே. இதுக்கு தான் மண் குதிரையை நம்பி ஆத்துல ஏறங்காதடா சொல்லுறாய்ங்களோ?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நிஜம்மா நல்லவன்.. கொஞ்சமே கொஞ்சம் லாஜிக் பார்ப்பேன்.. அதுகூட பாக்கலாம்ன்னு இருக்கர சில படத்துல தான்.. எல்லாமே சொதப்பல்ன்னா பாக்க அவசியம் இல்ல..

---------------
தமிழ்ப்பிரியன் பாவம் படம் பாக்கறவங்களுக்கு கஷ்டம்ன்னு நான் முழுசா எழுதறது இல்ல..

நிஜமா நல்லவன் said...

எது எப்படியோ பெரிய அளவுல ஒண்ணும் நடக்கல. தப்பிச்சோம் பிழைச்சோம்னு ஓட வேண்டியது தான். ஜூட்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நிஜ்ஜம்மா நீங்க நல்லவரு இல்லையாப்பா அதனால இங்க கும்மி அடித்து எப்பவாவது போடும் பதிவை உடனே கீழே தள்ளாம நல்லவ்ரா ரெண்டு கமெண்ட் போட்டுட்டு போவீங்களாம்..:)

Anonymous said...

ஆமாம்! நான் கூட காலையிலே உங்க கிட்டே கேட்டேன் தெரியுமா, நீங்க எப்பத்திலே இருந்து கண்ணாடி போட்டீங்கன்னு, அது ஏன் தெரியுமா இதுக்குத்தான். பாருங்க துளசி டீச்சரும் கேட்டுட்டாங்க, அது போல 3 மாசம் முன்ன கலைஞர் டிவியிலே சப்தஸ்வரங்கள் போல ஒரு நிகழ்ச்சியிலே கண்னாடி போட்டுகிட்டு ஒரு பொண்ணு அப்படியே உங்களை போல இருந்துச்சு!

இப்படிக்கு
அபிஅப்பா

Anonymous said...

///கயல்விழி முத்துலெட்சுமி said...

நிஜ்ஜம்மா நீங்க நல்லவரு இல்லையாப்பா அதனால இங்க கும்மி அடித்து எப்பவாவது போடும் பதிவை உடனே கீழே தள்ளாம நல்லவ்ரா ரெண்டு கமெண்ட் போட்டுட்டு போவீங்களாம்..:) ///
சாரி முத்தக்கா இனிமேல் இப்படி எல்லாம் கும்மி அடிக்க மாட்டேன்

துளசி கோபால் said...

தாய்மாமன் முக்கியமா வேணுங்கற சடங்குன்னுதான் இந்த மொட்டையடிக்கிறதைக் கொஞ்சம் விலாவரியாக் காட்டிட்டாங்க.

என் பொண்ணுக்கு அஞ்சாவது மாசம் மொட்டை அடிச்சுக் காது குத்துனோம். அப்ப அதை விழாவாக் கொண்டாடி வீடியோ எடுத்தோமுன்னு வையுங்க.

ரொம்ப நாளுக்குப் பிறகு ஒரு முறை (அதாவது என் மனசு வேற மாதிரிப் பக்குவப்பட்டுகிட்டு இருந்த சமயம்) அதைப் பார்த்துக்கிட்டு இருந்தப்பக் குழந்தைக்குக் காது குத்தும் சமயம் அதை அசையவிடாமப் புடிச்சுக்கிட்டு இருக்கார் தாய்மாமன். வலியில் அது ரெண்டு உள்ளங்கையையும் கசக்கிக்கிட்டு
ஹெல்ப்லெஸ்ஸா வேதனையில் துடிக்குது.

எனக்கு அதைப் பார்த்துட்டு மனசு வெம்பி ஒரே அழுகை. அப்புரம் மகள் கிட்டே சொன்னேன், 'உன் பிள்ளைக்கு இந்தச் சடங்கெல்லாம் வேணவே வேணாம். அதுக்கு எப்பக் காதணி போட ஆசை வருதோ அப்ப டாக்டரிடம் போய் குத்திக்க விட்டுரு'

இதுலே என்ன சோகமுன்னா..... காது குத்துமுன்பு காது மரத்துப்போகன்னு ஒரு க்ரீம் வாங்கி வந்துருந்தோம். மெடிகல் ஷாப்லே இருந்து. அதைப் பூசிட்டுத்தான் காது குத்துனது. விழா நடந்து ரெண்டாம் நாள் அந்தக் க்ரீமை எடுத்து உள்ளே ட்ராவிலே வைக்கறப்பத்தான் பார்க்கிறேன், தேவைப்படும் சமயத்துக்கு 45 நிமிஷம் முன்னாலே தடவி விடணுமாம்.

இப்படி ஒரு மடத்தனமான தாய் நான்(-:


படம் முழுசும் பேக் ட்ராப்பா குற்றாலம் அருவி மனசை அள்ளுதே. அதைக் கோடி காமிக்கலையா?

கோபிநாத் said...

உங்க விமர்சனத்தை படிக்கும் போது படத்தை ஒருமுறை பார்க்கலாம் போல! ;))