April 18, 2008

தமிழ் அகராதி, தமிழ் ரீடர்

சில சமயங்களில் உங்கள் கணினியில் சில எழுத்துருக்கள் (font) இல்லாததால் சில தமிழ் தளங்களில் எழுதி இருப்பவை வாசிக்க முடியாமல் போகலாம் ... அப்போது அங்கே இருப்பதை நீங்கள் அப்படியே காப்பி செய்து இந்த சுரதா ரீடரில் ஒட்டி பிறகு டேப் (TAB) என்கிற எழுத்துருவை தேர்ந்துடுத்தால் கீழே கண்ட பெட்டியில் சரியான எழுத்துருவில் தெரியும்.. அல்லது வேறு எழுத்துருவைத்தேர்ந்தெடுத்து பார்க்கலாம்.
--------------------------
உங்களுக்கு எந்த ஒரு தமிழ் வார்த்தையின் சரியான பொருள் தெரியவேண்டுமா இந்த டிஜிட்டல் டிக்ஸனரியில் தட்டுங்கள்.. வந்துவிழும் ..நீங்கள் யுனிக்கோடு ஃபாண்ட் வைத்திருந்தால் தமிழிலேயே கிடைக்கும்... அதற்கு டிஸ்ப்ளே ஆப்சனில் i have a unicode font installed இதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
மயூரேசனின் பின்னூட்டத்திற்கு பிறகு விக்ஷனரியையும் இதில் சேர்க்கிறேன் அங்கிருந்தும் நீங்கள் தமிழ் சொற்களுக்கு பொருள் அறிந்து கொள்ளலாம்..
இவைகளெல்லாம் முன்பே உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.. எனக்கு சில நாட்களுக்கு முன்பு தான் தெரிந்தது.. சுரதா ரீடரை ஜீவ்ஸ் அறிமுகம் செய்தார்..டிஜிட்டல் டிக்ஸனரி கூகிளில் கிடைத்தது.. தேவைப்படுபவர்களுக்காக இதனை இங்கே சிறுமுயற்சியில் தருகிறேன்.. இதே விசயத்தை முதல் முதலாக அவ்வை தமிழ்சங்கப்பதிவில் எழுதி இருக்கும் இடுகையிலும் பதிந்திருக்கிறேன்.

23 comments:

பாச மலர் / Paasa Malar said...

நிறைய நல்ல டிப்ஸ் தருகிறீர்கள்..நன்றி.பாராட்டுகள்

இலவசக்கொத்தனார் said...

எல்லாரும் ஒருங்குறி பாவிக்கத் தொடங்கினால் இது போன்ற பிரச்சனைகள் வராதே. முடிந்த வரை அதனை பாவிக்க நாம் சிபாரிசு செய்ய வேண்டும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி பாசமலர்.. நமக்குத்தெரிந்ததை பகிர்ந்து கொள்வது ஒரு மகிழ்ச்சிதானே...

-----
கொத்ஸ் நீங்க சொல்றது ரொம்ப சரி.. ஆனா முன்பே இணையத்தில் எழுதிவைக்கப்பட்டிருக்கிற சில விசயங்களை, அந்த தளங்கள் இப்போது புதுப்பிக்கப்படுவது நிறுத்தப்பட்டிருந்தாலும், நமக்கு தேவைப்படும் விசயங்கள் அங்கே இருக்கிறது என்றால் .. எடுத்து வாசிக்க இவை உபயோகப்படுகிறதே..
எல்லோரும் ஒருங்குறி (யுனிக்கோடு) க்கு மாறிவருகிறார்கள்.. சமயம் எடுக்கும் போலயே..

மங்கை said...

நான் அப்படியான சந்தர்ப்பங்களில் சுரதாவைதான் எப்பொழுதும் சரணடைவேன்..

Thamiz Priyan said...

நல்ல தகவல்கள். என்னிடம் தமிழில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட எழுத்துருக்கள் இருந்தாலும் சில நேரங்களில் சிக்கல் வந்து விடுகின்றது. தகவலுக்கு நன்றி!
ஆனால் ஒருங்குறிக்கு மாற்றத்தை வழியுறுத்துவதே நன்று.

Enjay said...

ரொம்ப நன்றி.. அந்த டிஜிட்டல் டிக்ஷனரி பற்றி இப்போதுதான் அறிந்து கொண்டேன். போன பத்வில் இட்ட எம்.பி.3. மை.எம்.ப்.3 ரொம்ப உபயோகம் என்று தோன்றுகிறது. தகவிறக்கம் செய்துவிட்டேன் நிறுவியும் செய்துவிட்டேன் ஆனால் ஏதோ ஒரு தொகுப்பு இல்லை என்று சண்டித்தனம் செய்கிறது அதனோடு மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறேன்.. சரியாகிவிடும் பார்க்கலாம்.. நன்றி மீண்டும் வாழ்த்துக்கள்.

கோபிநாத் said...

\\சுரதா ரீடரில் \\

மிக்க நன்றி நிறைய பயன் தரும் ;))

நன்றி

அப்படியே இதையும் கொஞ்சம் பாருங்கள்..இது ஆங்கில வார்த்தைக்கு தமிழில் பொருள் தரும்.

http://dictionary.sarma.co.in/Default.aspx

;)

Enjay said...

கோபிநாத் அந்த சுட்டி ரொம்ப நல்லா இருக்கு மிகவும் விளக்கமாக பொருள் கிட்டுகிறது. மிக்க நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மங்கை மறுமொழி அழகா எழுதி இருக்கீங்கப்பா..

------
நன்றி தமிழ்பிரியன்..இதுவும் எல்லாவற்றிற்கும் மாற்றா என்று எனக்கு தெரியாது .. நான் உபயோகித்தவரை வேலைசெய்கிறது.
------
உங்கள் வாழ்த்துக்கு நன்றி கிருத்திகா..
-----

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தம்பி இதெல்லாம் பதிவா போடற மேட்டருப்பா.. இப்படி இருந்தா எப்படி அதான் மாசத்துக்கு ஒரு பதிவு போடறாப்பல ...:)

அப்பறம் கிருத்திகா சொல்றதை வழிமொழிகிறேன்..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நன்றிங்க!
மின்னிலக்க அகராதி நன்றாக, தமிழர்களுக்குப் பயனுள்ளதாய் இருக்கிறது.
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

அன்புடன்,
ஜோதிபாரதி.

கோபிநாத் said...

\\கயல்விழி முத்துலெட்சுமி said...
தம்பி இதெல்லாம் பதிவா போடற மேட்டருப்பா.. இப்படி இருந்தா எப்படி அதான் மாசத்துக்கு ஒரு பதிவு போடறாப்பல ...:)

அப்பறம் கிருத்திகா சொல்றதை வழிமொழிகிறேன்..
\\

இதுல இருந்தே தெரியல தம்பி ஒரு அப்பாவின்னு..;(

@ கிருத்திகா'

நன்றிங்க ;)

ரசிகன் said...

பயனுள்ள விபரங்கள்: நன்றிகள் அக்கா.

நிஜமா நல்லவன் said...

பயனுள்ள தகவல். நன்றி.

Sanjai Gandhi said...

உபயோகமான பதிவு...

சத்யா said...

:) ty!

மலைநாடான் said...

முத்துலெட்சுமி!

எந்தவித ஆர்ப்பாட்டமுமில்லாமல், இணையத்தில் தமிழ் குறித்து சுரதா நிறையவே செய்து வருகிறார். பிரபலமான ஊடகங்கள் பலவும் அவரைப் பேட்டிகாண முனைத்தபோது மறுத்துவிட்ட பிரபலம் விரும்பாதவர்.

அருள் said...

ந‌ன்றி க‌ய‌ல்விழி,
இத‌ற்க்கு முன்பு நிறைய‌ப் ப‌க்க‌ங்க‌ளை இந்த‌ இழுத்துருப் பிர‌ச்ச‌ணையால் ப‌டிக்க‌ம‌ல் விட்டுருக்கின்றேன்.......இனி அப்ப‌டி இருக்காது என்று நினைக்கின்றேன்.....
என்னை போன்ற‌ ப‌ல‌ருக்கு இது ப‌ய‌னுள்ளதாக‌ இருக்கும் என்ப‌தில் ஐய‌மில்லை....
த‌க‌வ‌லுக்கு மிக்க‌ ந‌ன்றி!!!

Jay said...

எனக்கென்னவோ இந்த அகராதியை விட விக்ஷன்றி சிறந்த்து என்றே படுகின்றது... இங்கே இருப்பதை விட அதிகமான சொற்கள் அங்கோ உண்டு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஜோதிபாரதி, ரசிகன், நிஜம்மா நல்லவன்,
சஞ்சய் , சத்யா எல்லாருக்கும் நன்றி.. இன்னும் நல்ல இணைப்புகள், பின்னூட்டத்தில் சொல்பவர்களுடையதும் பிறகு சேர்த்துவிடுகிறேன்.. அதனையும் பார்த்துக்கொள்ளூங்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உண்மைதான் மலைநாடன் சிலர் அப்படி புகழுக்கு ஆசைப்படாமல் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆற்றும் சேவை பலரைச் சென்றடைய வேண்டுமே அதற்கு நம்மைப்போலவர் சொல்லிக்கொண்டிருப்பொம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி அருள்..முயற்சித்துப்பாருங்கள்..
----------------
மயூரேசன் நான் தேடி கிடைத்த தளங்களை பகிர்ந்து கொண்டேன் .. விக்ஷனரியை உபயோகித்திருக்கவில்லை இதுவரை .. அதனையும் இங்கே இணைக்கிறேன்.. நன்றீ உங்கள் கருத்துக்கு..

Anonymous said...

த‌க‌வ‌லுக்கு மிக்க‌ ந‌ன்றி!!!

ANBUDAN
KRP
http://visitmiletus.blogspot.com/