June 3, 2008

பேஸ்டு ஆன் ஒன் ஹெல் ஆஃப் ய ட்ரூ ஸ்டோரி

பலநேரம் சேனல்களை கடந்து போகும் போது சில நிமிட நேரப்பார்வையிலேயே.. .. அந்த காட்சிகள்
இது நல்ல படம் என்று சொல்லிவிடும்.. ஆரம்பத்தை இன்னொரு நாள் பார்த்துக்கொள்வோம் என்று மனதை சமாதானப்படுத்திவிட்டு பார்க்கத்தொடங்கிவிடுவது வழக்கம்.. அப்படித்தான் அன்று சேனல்களை பின்னுக்கு தள்ளியபடி ரிமோட் போய்க்கொண்டிருக்கும் போது இந்த படம் சிக்கியது..


ஒரு தாத்தா சிறுவன் ஒருவனிடம் உரையாடிக்கொண்டிருந்தார். அவர் ஒரு மோட்டார் பைக் ரேஸ்க்காரர் .. தன் அந்த வயதிலும் போட்டிஒன்றில் கலந்து கொள்வது பற்றியே கனவு கண்டுஇருக்கிறார். 25 வருடக்கனவு என்று சொல்லிக்கொள்ளும் அவர்.. தன் மோட்டார்சைக்கிளை பேக் செய்தபடி நியூஸிலாந்திலிருந்து கப்பலில் அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் நடைபெறும் போட்டிக்கு கிளம்புகிறார். அவருடைய இண்டியன் மோட்டார்சைக்கிள் என்னும் வண்டி உலகத்திலேயே அதிக பட்ச வேகமான வண்டி என்பது அவருடைய வாதம்.


அனைவரும் அவரை நம்பாத போதும் அந்த சிறுவன் அவரை நீங்கள் ரெக்கார்ட் செய்வீர்கள் நம்புகிறேன் என்று சொல்லி வழியனுப்புகிறான். அமெரிக்காவில் வந்து சேரும் அந்த வயதானவரின் அனுபவங்கள் தான் படத்தின் கதை.
இமிக்க்ரேஷன் பகுதியில் வரிசையில் கவுண்ட்டருக்கு அருகில் செல்ல முயற்சிப்பவரை மஞ்சள் கோட்டுக்கப்பறம் நிக்க சொல்லி மிரட்டுவதில் ஆரம்பிக்கறது அவர் அனுபவம்.. நீங்கள் அமெரிக்க விசா எடுத்தவர் என்றால் புரிந்து கொள்வீர்கள்... வாடகைக்கு டேக்ஸியில் ஏறியவர் வாடகையை கேட்டு நான் காரை விலை பேசவில்லையே என்று பதறுகிறார். :-)

ஹாரன் அடிக்கும் ஒரு காரின் மீது, முன்னால் இருக்கும் கார் வேண்டுமென்றே இடிப்பதைப் பார்த்து பதறும் அவரிடம்.. இப்படிப்பட்ட க்ரேஸி மக்கள் நிறைந்த ஊர் அய்யா நீங்கள் அமைதியா இருங்கள் என்னும் டேக்ஸி ட்ரைவரை விநோதமாக பார்த்தபடி நம்ம ஊர் கிராமத்தான் பட்டணம் வந்ததும் நடிகர்களை பார்க்க விழைவதைப்போல அவரும் ஹாலிவுட்டில் இறங்குகிறார்.

தங்குமிடத்தில் வரவேற்பில் வேலைசெய்யும் ஒரு திருநங்கையின் நட்பின் வழிகாட்டலில் ஒரு காரை பழய விலைக்கு வாங்கிக்கொள்கிறார். அந்த கார்கடைக்காரரிடம் உதவி கேட்டு இரவு நேரத்தில் வெல்டிங் வேலைகள் செய்து தன் மோட்டர் சைக்கிளை காரின் பின் இணைக்க வழி செய்துகொண்டு வரவேற்பாளினியின் உதவியுடன் மோட்டார் சைக்கிளை கப்பலிலிருந்து பெற்றுக் கொண்டு போட்டி நடக்கும் ஊருக்கு கிளம்புகிறார்..கார்கடைக்காரர் அவரின் திறமையைக்கண்டு அங்கே யே எப்போது வந்தாலும் வேலை தருவதாகவும் அழைக்கிறார். ஆனால் அவர் மறுக்கிறார்.

வழியில் மோட்டார்சைக்கிளை இழுத்து வரும் சக்கரங்களில் ஒன்று வீணாகப்போனதும் வழியில் ஒரு செவ்விந்தியரின் நட்பு.. வயதான அவர்களின் ப்ரச்சனைகளை பேசி நட்பாகி விடுகிறார்.
பிறகு ஒரு வயதான பெண்ணின் நட்பு ..
வழியில் ஒரு ஆர்மிக்கார இளைஞனின் நட்பு...

வழியில் கார் இல்லீகலாக பார்க் செய்திருக்கிறதே என்று பார்க்கவரும் போலிஸிடம் ஒன்றுமில்லை எனக்கு சின்னதா ஹார்ட் அட்டாக் வந்தது வண்டியில் தூங்கிவிட்டேன் என்று சாதாரணமாக சொல்கிறார்.

போட்டி நடக்கும் இடத்திற்கு வந்தபின் தான் அதற்கு ஒரு மாதம் முன்பே பதிவு செய்திருக்க வேண்டுமென்பதும் அவருக்கு தெரியவருகிறது... அவருக்காக சிலர் பேசிப்பார்த்தும் அவருடைய பழைய மோட்டார்சைக்கிளும் அதன் சேப்டி பற்றாக்குறையும் அவருடைய வயதும் என்று மறுப்புக்கு பல காரணங்களை அடுக்குகிறார்கள்..

பாதுகாப்பு அதிகாரிகளை மீறி அவர்

தன் வண்டியின் வேகத்தையும் தன்னுடைய திறமையையும் அவர் ஒரு முறை செய்து காட்டியபின் போட்டியில் அவரை சேர்த்துக்கொள்ளமுடிவெடுக்கிறார்கள்..
அதிக வேகம் செல்லும் போது வண்டி ஆடுவதும்... கால் வைக்கும் பகுதியில் ஏற்படும் அதிக சூடு அவர்காலை பதம் பார்ப்பதும் என்று அவருக்கே தெரியும் சில தவறுகளை சரி செய்ய அவர் முயற்சிகளை மேற்கொண்டாலும் சரிவராததால் முயற்சிகளை கைவிட்டு விட்டு முன்பு போலவே போட்டியில் கலந்து கொள்கிறார்.


அவருக்கு ஒரு மாத்திரையும் வண்டிக்கு ஒரு மாத்திரை குடுத்துவிட்டு வண்டியை ஓட்டும்
கடைசி காட்சிகளும் அவர் ரெக்கார்ட் ப்ரேக் செய்வதும் நமக்கும் உற்சாகமளிப்பதாக இருக்கிறது.. தொடர்ந்து முயன்றால் எல்லார் கனவும் ஒரு நாள் பலிக்கும் .

இது ஒரு உண்மையான மனிதனின் கதையாம்.. உண்மையான பர்ட் முன்ரோ 178.971 MPH வேகத்தில் ரெக்கார்ட் செய்திருக்கிறார்

"தி வேர்ல்ஸ்ட் ஃபாஸ்டஸ் இண்டியன்".. இது தான் படத்தின் பெயர். பர்ட்டாக நடித்தவர் அசாத்தியமான நடிப்பு ..ஆண்டனி காப்கின்ஸ். உறைந்த அந்த ஏரியின் மேல் நிகழும் அந்த போட்டியும் அதனைச்சார்ந்த அவருடைய ஏமாற்றமும் வெற்றியுமான நடிப்பும் அருமையானது..

33 comments:

g said...

///வழியில் மோட்டார்சைக்கிளை இழுத்து வரும் சக்கரங்களில் ஒன்று வீணாகப்போனதும் வழியில் ஒரு செவ்விந்தியரின் நட்பு.. வயதான அவர்களின் ப்ரச்சனைகளை பேசி நட்பாகி விடுகிறார்.
பிறகு ஒரு வயதான பெண்ணின் நட்பு ..
வழியில் ஒரு ஆர்மிக்கார இளைஞனின் நட்பு... ///


இதெல்லாம் இல்லாம படத்தை காட்டினால் யார் பார்ப்பார்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இதே கமெண்டை இன்னொரு மொழியில் வேறு போட்டுருக்கீங்களா?/

இதெல்லாம் இல்லாம எடுத்தாலும் நாங்க சிலர் பார்ப்போம்...

Athisha said...

anthony hopkins ன் நடிப்பும் அருமையாக இருக்கும் , அவரு நம்ம ஊரு சிவாஜி மாதிரி

Iyappan Krishnan said...

சி.டி. இல்ல டி.வி.டி கிடைக்குதான்னு பாக்கறேன்.

ராமலக்ஷ்மி said...

//தொடர்ந்து முயன்றால் எல்லார் கனவும் ஒரு நாள் பலிக்கும்.//

"யு ஹவ் செட் நைஸ்லி த ஒன் லைன் மெஸேஜ் ஆஃப் த ஸ்டோரி!"

Anonymous said...

நல்லா அருமையா இருக்கு படமும் விமர்சனமும். ஆனா உக்காந்து பார்க்கும் போது கொஞ்சம் சலிப்பாக இருக்குமோன்னு நெனைக்கிறேன்! ஆமாவா?

அபிஅப்பா

Thamiz Priyan said...

பெயரே 'இந்தியன்' என்று வருகின்றதே? தாத்தாவும் இந்தியன் தாத்தா போலத்தான் இருக்கிறார்...
அக்கா ரெகமண்ட் வேற?...
பதிவிறக்கி பாத்துடலாம். :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

@ அதிஷா..
ஓ அப்படியா.. அந்த ஊரு சிவாஜியா அவரு.. நான் ஒரு படம் பாத்தா அப்பறமா அதோட விமர்சனத்தை படிச்சு பார்ப்பேன் இணையத்தில.. இந்த படத்துக்கு எல்லாரும் நல்ல மார்க் குடுத்துருக்காங்க வேற.. மறுமொழிக்கு நன்றி அதிஷா
-----------
@ ஜீவ்ஸ்
கண்டிப்பா பாருங்க.. ஜீவ்ஸ்..
சில சமயம் சில படங்கள் இங்கே ஆன்லைனில் கிடைக்குது ..இணையத்திலும் தேடிப்பாருங்க ..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராமலஷ்மி.. நன்றிப்பா..
படம் பார்த்தப்ப அதான் தோன்றியது... வயசும் எப்பவும் எதுக்கும் தடையில்ல புரியாத ஊரு புரியாத பாஷை எதுவுமே தடையில்லைனு நிரூபிச்சிருக்காரே..
--------------
அபி அப்பா இப்படி சொன்னா எப்படி ?
நான் , என் பெண்ணோட உக்காந்து இந்த படம் பார்த்தேன்.. நல்லாதான் இருக்கு.. நாலு பைட் .. ஒரு அறீமுக சாங்க்ன்னு இரண்டு படம் பார்த்தா இந்தமாதிரி படமும் நடுவில் பாருங்களேன்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ்பிரியன் .. கொஞ்சம் இந்தியன் தாத்தா கமல் மாதிரி தான் இருக்கார் நீங்க சொன்னதுக்கப்பரம் யோசிச்சா..
படத்துல கூட நம்ம கமலைப்போல டபால்ன்னு இந்த வயசிலும் கேர்ள் ப்ரண்ட் பிடிக்கறாரே..:)

ஆயில்யன் said...

//தொடர்ந்து முயன்றால் எல்லார் கனவும் ஒரு நாள் பலிக்கும் .///

விமர்சனத்தோடு + இதுவும் நல்லாவே இருக்கு :))


ஆனா ஏன் நீங்க டைட்டில ரகசிய பாஷையில் வைச்சீங்கன்னு மட்டும் எனக்கு புரியல????

:)))))))))))))))))

manjoorraja said...

பதிவிற்கு தமிழில் தலைப்பு வைத்திருக்கலாமே....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயில்யன் அந்த கோட் வேர்டு என்னன்னா நம்ம ஊரில் எல்லாம் படம் பேருக்குகீழே ஒரு லைன் போடுவாங்கள்ள.. அந்த ட்ரெண்டு..

கடைசி யா இருக்க படத்துல பாருங்க.. இண்டியன் என்கிற எழுத்துக்கு கீழே இந்த வரிதான் இருக்க்கும்.. என்ன தலைப்பு வைக்கன்னு யோசிக்க நேரமில்ல.. படம் பேருக்கு பதிலா அதை போட்டுட்டேன்.. :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மஞ்சூர் ராசா..இப்பத்தான் ஆயில்யனுக்கு பதில போட்டுட்டுபாக்கரேன்.. எப்படியும் படம் பேரை அப்படியே போட்டாலும் அது ஆங்கிலமாத்தான் இருக்கப்போது.. அதான் சும்மா இந்த லைனைபோடலாமேன்னு.. மத்தபடி யோசிக்க நேரமில்லாதது தான் காரணம் இந்த தலைப்புக்கு.. மன்னிக்கனும்..

manjoorraja said...

அப்பட்டமான ஒரு உண்மைக்கதையிலிருந்து ...

சின்னப் பையன் said...

ஓ. இந்த படம் எங்க நூலகத்தில் இருக்கு. உடனே வாங்கி பாத்துடவேண்டியதுதான்...

இராம்/Raam said...

நல்ல விமர்சனம்.... :)

வல்லிசிம்ஹன் said...

நன்றி, முத்துலக்ஷ்மி. இங்கே கிடைத்தால் கண்டிப்பாப் பார்க்கிறேன்.
ஆண்டனி ஹாப்கின்ஸ் ரொம்பப் பிடிக்கும்.

கோபிநாத் said...

சூப்பர் விமர்சனம் அக்கா..!! ;)

படத்தை இங்கே ஒரு கடையில பார்த்த ஞாபகம்...விரைவில் பார்த்துவிடுகிறேன் ;))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ராம்.. இன்னும் நிறைய காட்சி இந்த படத்துல் பிடிச்சது.. இப்படியே எல்லாம் எழுதிட்டா அது கதையோட ஸ்கிரிப்ட் மாதிரி ஆகிடும்ன்னு விட்டுட்டேன்.. :)
----------
ஓ சின்னப்பையன் மறுமொழிக்கு நன்றி.. குடுத்துவச்சவங்க நூலகத்திலிருந்தே பார்க்க முடியுது உங்களுக்கு..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கண்டிப்பா கிடைக்கும் வல்லி..

ஓ நீங்கதான் ஆங்கிலப்பட ரசிகையாச்சே.. உங்களுக்கு பிடித்தவங்க லிஸ்டில் இவருமா..? :)அப்ப கண்டிப்பா பாருங்க.
----------------

ஆமா கோபி படம் வந்தது 2005 ன்னு போட்டிருக்கு.. அதனால் புதுப்படம் வரிசையில் வச்சிருந்திருப்பாங்க.. கிழவர் படத்தைப்பார்த்துட்டு வாங்காம வந்துருப்பீங்க :P

மே. இசக்கிமுத்து said...

ஒரு படம் பார்த்த அனுபவம்!!!

உமா said...

நல்ல விமர்சனம்

ஜி said...

Enung'kka Epdi irukkeenga??

Intha padam directaa paathukuren.. so unga pathiva naan paathilaiye stop pannitten :))

Paathuttu vanthu thirumba padichu comment poduren :)))

Sorry for Tanglish typing.... in office... all blocked... :(((

மங்களூர் சிவா said...

ஆர்வத்தை தூண்டும் விமர்சனம்.

சென்ஷி said...

கோபி சிடி வாங்கியதும் நானும் பார்த்துவிடுவேன் :))

நிஜமா நல்லவன் said...

ஆனந்த விகடனில் செழியன் உலக சினிமா பகுதியில் எழுதி இருந்தாதாக நினைவு. அப்போது படம் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். எப்படியோ மறந்து விட்டேன். உங்கள் பதிவு மீண்டும் ஆர்வத்தை தூண்டிவிட்டது. டிவிடி கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மறுமொழிக்கு நன்றி இசக்கிமுத்து..

-----
மறுமொழிக்கு நன்றி மின்னல்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஜி.. நல்லா இருக்கேன்.. படம் எழுதினா டான்னு வந்துடறீங்களே..
மெதுவா படிங்க.. நான் கூட கவிதாயினி விமர்சனத்தை படம் பாத்துட்டு வந்து தான் ரசித்து சிரிப்பேன்..

------------

மங்களூர் சிவா நன்றி..

----
சென்ஷி கோபி வாங்கினதும் சேந்தே பாருங்க..
----
நிஜம்மா நல்லவன் ..செழியன் எழுதியிருந்தாரா.. படிக்கல..விக்டன் வாங்கரேன் ஆனா சில சமயம் படிக்க நேரமில்ல.. ஏன்னா தமிழ்மணமே கதின்னு இருந்தா.. :)

முரளிகண்ணன் said...

நல்ல விமர்சனம்.

பதிவர் அதிஷா உங்களுக்கு அடுத்து திண்ணை நினைவுகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்

அவரின் பின்னூட்டம்

\\அந்தக்காவுக்கு அடுத்து நான்தான் இத தொடருவேன் சொல்லிபுட்டேன்\\

நன்றி

ஆளவந்தான் said...

//ஆரம்பத்தை இன்னொரு நாள் பார்த்துக்கொள்வோம் என்று மனதை சமாதானப்படுத்திவிட்டு பார்க்கத்தொடங்கிவிடுவது வழக்கம்
//

you didnt miss much in this movie.. It is really a nice, I would recommand everybody to watch this movie. Thanks for your review.

you can get more info about him th' http://en.wikipedia.org/wiki/Burt_Munro

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மறுமொழிக்கு நன்றி ஆளவந்தான்..நானும் படம் பார்த்து பிடிச்சிருச்சுன்னா உடனே கூகிளில் தேடிப்பார்த்துடுவேன்.. இந்த படங்களெல்லாம் அப்படி தேடி போட்டது தானே ! :)

butterfly Surya said...

பார்த்தாச்சு. நல்ல படம். "The Lemon Tree" நல்ல நகைச்சுவை..

வாழ்த்துக்கள்