June 25, 2008

சாட்ட ...ம்ம்.. சாட்ட.. ம்ம்.. சாட்ட


(மு.கு)இந்தப் படத்தினைப்பற்றிய விவரம் பதிவு இறுதியில்.
குழந்தையா இருந்தபோது நாம் செய்த குறும்புகளை இப்போது நமக்கு சொன்னால் வெக்கமாகவும் சமயத்தில் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.. நாங்கள் பாடம்படிப்பதை டேப் செய்து வைத்திருந்தார்கள் . அழுகையை , பள்ளிப்பாடல்களை , சினிமாப்பாடல்களை....என்று பதிந்து வைத்தவைகளை இப்போது கேட்டாலும் ஆனந்தம் தான் ஒலி நாடாவை சிடி யாக்கி வைக்கவேண்டும்.. இப்போது என்குழந்தைகளை வீடியோ எடுப்பது போல அப்போது ஒலிப்பதிவு.


வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
இடி இடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்
மின்னல் ஒரு நாட்டியம்
மேடை வான மண்டபம்
தூரல் ஒரு தோரணம்
தூய மழை காரணம்
எட்டுத் திசை காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே
தெருவெல்லாம் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே
பார் முழுதும் வீட்டிலே
பறவை கூட கூட்டிலே
தவளை மட்டும் பாடுமே
தண்ணீரிலே ஆடுமே
அகன்ற வெளி வேடிக்கை
ஆண்டு தோறும் வாடிக்கை"

பாடலை ரொம்ப நாளா நியாபகப்படுத்த முயன்று தோற்றுப்போனேன். பி.கே.பி அவர்களின் பதிவில் தற்செயலாகப் பார்த்து நினைவுக்கு வந்தது. இந்த பாடலைப் பற்றி எக்கச்சக்க பேர் எழுதி இருக்கிறார்கள்.
இந்த பாடலை வேகவேகமாக பாடி அதுவும் அந்த வாடிக்கை வரும் போது வாடிக்காய் என்று அடிப்பது போல முடிப்பேன். இப்போது மகன் அப்படித்தான் ஹிந்தி ரைம்ஸ் பாடுகிறான்.. என்னைபோலவோ..

சினிமா பாட்டுன்னா அப்ப பாடி பதிந்தது "மூக்குத்தி பூமேல காத்து " ரொம்ப எல்லாம் இல்லங்க பல்லவி மட்டும் தான்.

ஒரு முறை தம்பி தீபாவளிக்கு சாட்டை கொளுத்தனும்ன்னு கேட்டான். இப்ப இல்ல அப்பறம் ராத்திரிக்கு ன்னு சொல்லி இருப்பாங்களோ என்னவோ.. அவன் ரொம்ப நேரம், சாட்ட ம்ம்ம்ம்.. சாட்ட... ம்ம்.. சாட்ட னு விடாம அழுதுட்டே இருந்தான்.அதை அப்படியே அவனுக்கு தெரியாமல் பதிவு செய்துட்டாங்க. இப்ப கேட்டா ஒரே சிரிப்பு தான்.
இது போல ஆச்சி தாத்தாக்களின் பேச்சுகளையும் எடுத்து வைத்திருக்கிறோம். எங்கே என்று தேடத்தான் வேண்டும்.


இந்த் கொசுவத்திக்கேத்த ஒரு கொசுவத்தி ஓவியம் மேலே இருப்பது. என் அப்பா வரைந்தது... நான் பொருள்களைப் பிடித்து நடக்க ஆரம்பித்த போது வரைந்தது.. பழைய காகிதம் உடைகிறது அதனை ஆவணப்படுத்த(!!!! :) ) வேண்டுமல்லவா..

58 comments:

துளசி கோபால் said...

எனக்கும் இந்த ஒலிநாடாவை சிடி ஆக்கணும்.(எப்படின்னு விளக்கம் சொல்லுங்க)

மகளோட முதல் அழுகை முதல் எல்லாம் இருக்கு.

தமிழ் (ஒன்னாப்பு புத்தகம்)சொல்லிக் கொடுத்தப்ப படம் பார்த்து மடமடன்னு அணில்,ஆடு தொடங்கி
ஹாரம் வரை சொல்வாள்:-)))

ஆயில்யன் said...

nalla irukku

naanum ithu mathri aluthathundu saataikum & pushvanthirkum

:)))

(naanum appapa officela velai pakurennnu ஆவணப்படுத்த vendi intha taminglish comment )

கயல்விழி முத்துலெட்சுமி said...

http://nirmal-kabir.blogspot.com/2007/10/blog-post_26.html
துளசி இதுல ஒலி நாடாவிலிருந்து எப்படி குறுவட்டுக்கு மாத்தறதுன்னு இருக்கு..இந்த பதிவுக்கு நான் கதம்ப மாலையில் ஒரு லிங்க் குடுத்தேன்.. பாருங்க.. என் பொண்ணோட முதல் ஆங்க்கூ ஊங்க்கு பாசையும் வச்சிருக்கேன்.. ஏபார் ஆப்பிள். ஒரு ஊரில் ஒரு காக்கா இந்துச்சாம் ..ம்ம். வரைக்கும் .. எத்தனை வேலை இருக்கு அத விட்டுட்டு சும்மா வெட்டியா இருக்கேன்..

கயல்விழி முத்துலெட்சுமி said...

ஆயில்யன் ஓ அப்படி ஒரு ஆவணப்படுத்தலா இந்த ஆங்கில தட்டச்சு.. ஒவ்வொரு விசயத்துக்கும் பின்னால எத்தனை விசயம் இருக்கு...ம்..

கயல்விழி முத்துலெட்சுமி said...

இதே போல ஒலிநாடாவை சிடியாக்கும் ஆசை இருப்பவர்களுக்காக கபீரன்பனின் பதிவின் லிங்கை பதிவிலும் சேர்த்திருக்கேன்..
ஒரு விளம்பரம் வரும் தெரியுமா..
அம்மா வெடிப்பு காலில்.. இந்தாம்மா மருந்து.. எங்கே காட்டு.. இங்கே இல்லை அங்கன்னு.. அம்மாக்கு எல்லாம் தெரியும்.. அதேமாதிரி எனக்கு எப்படி செய்யனுங்கற பதிவெல்லாம் தெரியும் ஆனா இன்னும் செய்து பாக்கல.. யாரச்ச்சும் செய்து பாத்தவங்க சொல்லிட்டு போங்க எளிதா இருந்ததான்னு...:)

ambi said...

நல்ல வேளை நியாபகபடுத்தீனீங்க. தங்கமணிய செஞ்சு பாக்க சொல்றேன். நாங்க எல்லாம் மேனேஜர் வேலை தான் பாப்போம். நேரடியா களத்துல இறங்க மாட்டோம்ல. :p

//சினிமா பாட்டுன்னா அப்ப பாடி பதிந்தது "மூக்குத்தி பூமேல காத்து //

அப்ப உங்க வயசு என்ன?னு கணக்கு போட்டு பாக்கறேன். :p

கயல்விழி முத்துலெட்சுமி said...

ஆயில்யனின் கமெண்ட்டின் தாக்கத்திலிருந்து வெளியே வராததால்.. நீங்களும்.. வீட்டில் தங்கமணி மேனேஜர் இல்லை .. நீங்கள் தான்மேனேஜர்ன்னு ( இல்லாததையோ அல்லது உண்மையையோ) ஆவணப்படுத்த முயற்சிக்கறீங்களோன்னு தோணுது

வயசை கணிப்பது பற்றி ப்ரச்சனை இல்லை .. போன பதிவுக்கான கமெண்டில் உங்க வயசைப்பற்றீ ஒரு சந்தேகம் எழுந்திருக்கிறது பார்க்கவும்.

ராமலக்ஷ்மி said...

நானும் என் மகன் 3 வயதில் பாடிய 'ஊ(ர்)வசி ஊ(ர்)வசி.., [நீட்டி முழக்கி] ஓடக்கார மாரிமுத்து..,ஒருவ(ன்) ஒருவ(ன்) மொதலாளி..,வீரவா(பா)ண்டிக் கோட்டையில" பாடல்களை கேஸட்டிலிருந்து mp3 ஆக்கி (லிங்க் மறந்து போச்சு) ipod-ல் ஸ்டோர் பண்ணிட்டேங்க.

எங்கள் சிறுபிரயாத்தில் புகைப்படங்கள் அதிகம் எடுத்தார்கள். ஆனால் ஒலி நாடாவில் பதியவில்லை. ஆனாலும் என்ன மன நாடாவிலிருந்து இயக்கி அடிக்கடி சொல்லிச் சிரிப்போம். "சாட்ட..ம்ம்" மாதிரி என் தம்பி நிறைய தூக்கத்தில் பேசுவான். அந்த டாபிக் வந்து விட்டால் யார் யார் தூக்கத்தில் என்னன்ன உளறிக் கொட்டினோம் என்பதை நினைவு கூர்ந்து ஒருவரை ஒருவர் உற்சாகமாய் வாரி விட்டு மகிழ்வோம்.

அப்பா தன் கையால் வரைந்த படம்..
பொக்கிஷமாச்சே!

பிரேம்குமார் said...

அருமையான கொசுவர்த்தி :) நன்றி ஹை ;)

எங்க வீட்டிலேயும் அது போல சில ஒலிநாடாக்கள் இருந்தன. அம்மாவை தேடியெடுக்க சொல்லனும்

ஆகாய நதி said...

ம்ம்ம்ம்....... ரொம்ப நல்லா இருக்கு..:) எங்க அப்பா கூட நான் குழந்தையா இருந்தப்ப என்னோட அழுவாச்சி காவியம், சிரிக்காச்சி காவியம், சொற்பொழிவு, எங்க அம்மாச்சியோட தாலாட்டு எல்லாமே பதிவு பண்ணி வெச்சிருக்காங்க :) எனக்கு கூட அத மாதிரி என் குழந்தைக்கு பண்ணனும்னு ஆசை :)

Jeeves said...

என்னோட அண்ணா பசங்களுக்கு இது மாதிரி நிறைய செஞ்சு வச்சேன். இப்ப அதெல்லாம் எங்க இருக்குன்னே தெரியல.


என் மக நடக்க ஆரம்பிச்சப்போ சில வீடியோ எடுத்து வச்சேன். அது ஒரு வேளை தேடினா கிடைக்கலாம். அதுவாவது கிடைக்கனும்.

கபீரன்பன் said...

தங்கள் தந்தையாருக்கு இயல்பாகவே ஓவிய திறமை இருப்பது கோடுகளின் ஓட்டத்தில் நன்கு தெரிகிறது.

ஒலிநாடாவை மாற்றுவதற்கு Audacity மென்பொருள் பயன்படுத்துங்கள். சுலபமானது.
நீங்கள் உங்கள் பதிலை பச்சை வர்ணத்திற்கு எப்படி மாற்றுகிறீர்கள் ? அதற்கான பதிவு எதுவும் உண்டா ? :))
ரகசியம் இல்லையென்றால் பகிரங்கப் படுத்துங்களேன்.

கயல்விழி முத்துலெட்சுமி said...

ராமலக்ஷ்மி நீங்க எல்லாவிசயமும் தெரிஞ்சு வச்சிக்கிறதுமட்டுமில்லாம செய்துட்டும் வரீங்க..திறமைசாலியா இருக்கீங்க..

அப்பாவரைஞ்சது பொக்கிஷம் தாங்க இனி அழியாது இல்லையா போட்டோவா எடுத்துட்டோமே..
---------------
ப்ரேம்குமார் தேடி எடுங்க ... கேட்டு மகிழுங்க :)

கயல்விழி முத்துலெட்சுமி said...

ஆகாயநதி கருவாச்சி காவியம்மாதிரி அழுகாச்சி சிரிப்பாச்சி காவியங்களா.. ம். நீங்களும் சேகரிங்க அவங்களுக்கே நாளைக்கு பரிசளியுங்கள்..
-----------------
ஜீவ்ஸ்.. நீங்க தான் குழந்தையோட ரேபிட் பல்லுலேர்ந்து படம் எடுத்துத்தள்ளறீங்களே. :)

கயல்விழி முத்துலெட்சுமி said...

வாங்க கபீரன்பன்.. ஏற்கனவே பதிவிலேயே உங்கள் அடாசிட்டி பற்றிய பதிவுக்கான லிங்க் தான் குடுத்திருக்கேன்..பார்த்தீங்களா.. நன்றி.. அப்பாக்கு நிஜம்மாவே நல்ல ஓவியத்திறமை தான்..

பச்சை வண்ண எழுத்து ரகசியம் எல்லாம் இல்லைங்க.. நானே நாலு பேரிடம் கேட்டுத்தான் இதெல்லாம் செய்துட்டுவரேன்..
தீபா தான் உதவினாங்க..
இந்த லிங்க்கில் ஆங்கிலத்தில் இருக்கு செய்துபாருங்க..
http://hackosphere.blogspot.com/2006/10/author-comment-highlighting-and.html

மங்களூர் சிவா said...

உங்க அப்பா நல்ல ஒவியருங்க உங்களையே அழகா வரைஞ்சிருக்காரே!!

:)))))))))))))

ஜோக்கு கோவிச்சிக்கப்பிடாது!

நல்ல பதிவு.

NewBee said...

அப்பா வரைந்த படம் அருமை, அருமை கயலக்கா!

அதுவும், பதிவாப்போட்டு, இணையத்துக் கல்வெட்டில், அழுத்தமாப் பதிஞ்சுட்டீங்க!

கொசு நல்லா... ஸ்ஸ்ஸ்ஸ்...கொசுவத்தி நல்லா இருந்தது :)))))

பி.கு.:நான் கூட, கட்ட வண்டி, கட்ட வண்டி பாடியிருக்கேன்.ஒலிநாடா எங்க அப்பா/அம்மா கிட்ட இருக்கணும்!!!!

தமிழ் பிரியன் said...

அக்கா! ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! பாடாதது தான் குறை. நல்ல கொசுவர்த்தி (நல்லவேளை தொடர் விளையாட்டு இருக்குமோன்னு பயந்துட்டேன்).... ;))))

தமிழ் பிரியன் said...

நானும் எனது மகனின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தேதி வாரியாக வரிசைப்படுத்தி வருகிறேன்... :))

கோபிநாத் said...

ம்ம்ம்...நோட் பண்ணிக்கிட்டேன் ;)

கப்பி பய said...

:)

கயல்விழி முத்துலெட்சுமி said...

புது வண்டு .. இணையம்கல்வெட்டு ,,ஆமாமா அதுக்குத்தானே பதிஞ்சது.. கடவண்டியா கட்டவண்டியா.. அது நான் நாலாப்போ அஞ்சாப்போ படிக்கும் போது வந்திச்சுன்னுநினைக்கிறேன்.. :)
--------------

தமிழ்ப்பிரியன் இது ஏற்கனவே ஒரு விளையாட்டின் தொடர் தான் ன்னு கூட சொல்லலாம்.. கண்மணி கேட்டாங்க இல்ல குழந்தையாஇருந்தப்போ படிச்ச பாட்டு.. :)) இது பாகம் இரண்டு வண்ணத்தமிழ் வளரப்படி பாக ம் ஒன்று அதுக்கும் லிங்க் இந்த பதிவில் இருக்கு..

கயல்விழி முத்துலெட்சுமி said...

கோபி நோட் செய்துக்கிட்டாச்சா.. நல்ல பையன்..
--------------
கப்பி நீங்க மூத்த பதிவர் போலயே.. ( வெறும் ஸ்மைலி போட்டா அப்படின்னு குசும்பன் ரிப்போர்ட் சொல்லுது)

rapp said...

எங்க வீட்ல கூட எங்கப்பா இந்த மாதிரி ரெக்கார்ட் செஞ்சு வெச்சிருக்கார். கேட்டா செமக் காமடியா இருக்கும். சின்ன வயசுல நான் எங்கப்பா செல்லம், எங்கம்மா வித விதமா ட்யுஷன் அனுப்பினதால ஒரே கடுப்பா இருக்கும். அந்த ட்யுஷன் போகாம இருக்க வித விதமா நான் நடத்த ட்ரை பண்ண நாடகம், அமர்க்களம் எல்லாத்தையும் ரெக்கார்ட் பண்ணி வெச்சிருக்கார். அதுப் போலவே அப்போ வந்த எல்லா சினிமா பாட்டையும் இஷ்டத்துக்கு வார்த்தைங்கள போட்டு ரெண்டு வயசு, மூணு வயசுல நான் பாடுனது, அத ஒம்போது பத்து வயசான எங்கக்கா நக்கல் பண்றது, ஒடனே நான் அவங்களோட சண்டை போட்டதுன்னு ஒரு மினி மலரும் நினைவுகள் இருக்கும்.

கிரி said...

சூப்பர்ங்க ..முதல்ல எங்க பாட்டி புகைப்படம் எடுத்தால் ஆயுசு குறைந்து!!! விடும்னு என்னை குழந்தையா இருக்கும் போது புகைப்படம் எடுக்க மற்றவங்களை அனுமதிக்கலை.. இன்று வரை அது குறையாவே இருக்கு இன்னும் எனக்கு..

குட்டில கழுதை கூட அழாக இருக்குன்னு சொல்லுவாங்க....இப்ப தான் ஒண்ணும் செட் ஆகல சரி அந்த படத்தையாவது பார்த்து சந்தோஷ பாடலாம்னு பார்த்தா அதுவும் ஒன்னோ இரண்டோ தான் இருக்கு ..:-(((((

நீங்க இந்த மாதிரி தவறை செய்யாம இருப்பது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.. இதை எல்லாம் அவங்க பெரியவங்க ஆனதும் பார்க்கும் போது கிடைக்கும் சந்தோசத்துக்கு அளவே இருக்காது ..

கவிநயா said...

பொக்கிஷ ஓவியம் அருமை. பதிவும், மழைப் பாட்டும் இனிமை. கூடவே டிப்ஸ்லாமும் குடுத்ததுக்கு நன்றிகள், கயல்விழி.

மங்கை said...

வாவ் சூப்பர்...பத்திரமா வச்சுக்குங்கப்பா இந்தப் படத்தை....

அருமையான கொசுவத்தி...
நமக்கு இருக்கும் ஒரே கொசுவத்தி.. க்குவா, க்குவா..க்குவா...இது சொன்னா நாங்க பயங்கர கோவமா இருக்கோம்னு அர்த்தம்...:-)))

கயல்விழி முத்துலெட்சுமி said...

ராப் உங்க மலரும் நினைவுகளை கிளறிவிட்டேனா.. நினைத்துப்பார்த்து மகிழுங்கள்.. :) அப்பவே அமர்க்களம் செய்து இருக்கீங்க...
-------------
கிரி சரியா சொன்னீங்க.. இப்ப குடும்பமா படம் எடுக்கப்போனா எப்படியாவது யாராவது சரியில்லாம போயிடறாங்க.. 3 அல்லது 5 வயசுக்குள்ள தான் அழகெல்லாம். 7 எட்டு படிக்கும்போது இருக்கு படங்களையெல்லாம் ஒளிச்சு தான் வைக்கனும்..

கயல்விழி முத்துலெட்சுமி said...

கவிநயா நன்றிங்க..
டிப்ஸ் தானே அடுத்தவங்களு நல்லாவே குடுப்பேன்.
-------------------
வாங்க மங்கை.. அது என்ன கோபமோ சரி போன் செய்து கேட்டுக்கறேன்.. :)

வல்லிசிம்ஹன் said...

எங்களுக்கு அந்த வசதியெல்லாம் அப்போ இல்லை. வளர்ந்தப்புறம் பதிவு செய்ததுண்டு. இப்போ பேரன் பேத்திகள் பிறந்ததிலிருந்து ஒரே ஒளி ஒலி தான்:)
நன்றி கயல்.அருமையான வத்தி
ஏத்தியிருக்கீங்க.

சென்ஷி said...

அழகான பதிவு அக்கா.. எங்கள் வீட்டில் இருந்த டேப் ரிக்கார்டரில் இந்த மாதிரி விசயங்களை யாருக்கும் தெரியாமல் பதிவு செய்து வைப்பது என் தங்கையின் பொழுதுபோக்கு. இப்போது அவள் ஞாபகம் தான் வருகிறது.

இதே போல் ஒரு நாள், என் அண்ணன் அவனது நண்பனை கலாய்க்க அவன் பேசிய பேச்சுக்களை செல்போனில் பதிவு செய்து அவனை துரத்தியடித்தது இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.

பழசை அசை போட வைத்ததுக்கு நன்றிகள் :)))

சென்ஷி said...

//மங்கை said...
வாவ் சூப்பர்...பத்திரமா வச்சுக்குங்கப்பா இந்தப் படத்தை....

அருமையான கொசுவத்தி...
நமக்கு இருக்கும் ஒரே கொசுவத்தி.. க்குவா, க்குவா..க்குவா...இது சொன்னா நாங்க பயங்கர கோவமா இருக்கோம்னு அர்த்தம்...:-)))
//

:)))

சென்ஷி said...

ஆயில்யன் கமெண்டு சும்மா நச்சுன்னு இருக்கு :))

சென்ஷி said...

//கோபிநாத் said...
ம்ம்ம்...நோட் பண்ணிக்கிட்டேன் ;)
//

இதுல இருக்கற உள்ளர்த்தத்த யாருமே புரிஞ்சுக்கலையே.. நாராயணா.. நாராயணா.. :))

சென்ஷி said...

//கப்பி நீங்க மூத்த பதிவர் போலயே.. ( வெறும் ஸ்மைலி போட்டா அப்படின்னு குசும்பன் ரிப்போர்ட் சொல்லுது)//

அக்கா. அவரு ஸ்மைலியே போடாம போனாலும் அவரு மூத்த பதிவர் தான் :))

ஆயில்யன் said...

//சென்ஷி said...
ஆயில்யன் கமெண்டு சும்மா நச்சுன்னு இருக்கு :))
//

குருவே சரணம் :) (இப்படித்தானே சொல்லணும் குருவணக்கம்!)_


எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கு -உனக்கே!

நீ நதிபோல பின்னூட்டமிட்டுக்கொண்டிரு!

நானும் உன்னை பின் தொடர்வேன் :)))

இரண்டாம் சொக்கன் said...

நமக்கும் இப்படி ஒரு கதை இருக்கு...இன்னிக்கும் மானத்தை வாங்கீட்டு இருக்காங்க.....

சமீபத்துல(!) எனக்கு அஞ்சு வயசா இருந்தப்ப சாமிபாட்டு சொல்லிக் குடுக்கனும்னு...”பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்”...னு சொல்லிக்குடுத்திருக்காங்க...

நாமதான் புத்திசாலியாச்சே(?)..எதையோ மறந்துட்டாய்ங்களேன்னு...ரொம்ப கவனமா ஒவ்வொரு தடவையும் பாடும் போதும்...'பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்..முட்டையும் இவை நாலுங்கலந்துணக்கு'ன்னு பாடுவேனாம்.

இன்னிக்கு வரைக்கும் மானம் போகுது!

இராம்/Raam said...

:))

Anonymous said...

என் அண்ணன் பையன் பேசறது பண்ணறது எல்லாம் என்ன மாதிரியே இருக்குன்னு வீட்டில கொசுவத்தி சுத்தறாங்க. அவன் பொட்டுக்கடலை விரும்பி சாப்பிடறது கூட (???) என்ன மாதிரியே இருக்காம்.

அப்பா வரைஞ்ச படத்தை ஏதாவது ப்ளாஸ்டிக் கவர்ல நீட்டா பத்திரமா வையுங்க

துளசி கோபால் said...

சின்ன அம்மிணியின் 'பொட்டுக்கடலை' ரகசியம் இப்பப் புரிஞ்சுருச்சு:-))))

கயல்விழி முத்துலெட்சுமி said...

வல்லி உங்களுக்கெல்லாம் நியாபகசக்தி அதிகம்.. எங்களுக்கு மறதி அதிகம்..அதனால் இப்படி பதிவு செய்துகிட்டாதான் உண்டு...:)
-----
சென்ஷி பிசியா இருந்தாலும் நாலு கமெண்ட்டா.. நன்றி நன்றி..
கோபிக்கு கல்யாணம்ன்னு புரளியா..
கப்பி எழுத ஆரம்பிச்சப்பவே இப்படித்தான் மூத்தபதிவராவே ஆரம்பிச்சாராம்..
-----------
ஆயில்யன் நீங்க சென்ஷியோட சிஷ்யனா சொல்லவே இல்லையே ஓ... நல்ல குரு தான் ..

கயல்விழி முத்துலெட்சுமி said...

இரண்டாம் சொக்கரே.. இன்னும் பேர் மாறலையா நீங்க.. சரி ..சரி..
கொசுவத்தி பதிவுக்கெல்லாம் இன்னொரு நன்மை போட்டுவாங்குவது.. இப்படி சின்ன வயதிலெயே நீங்க புத்திசாலியா இருந்திருக்கீங்களா.. :))
-------------
இராம் சின்னத்தல நீங்க மூத்தபதிவர் தான் ஒத்துக்கிற்றேன்..
--------------
சின்ன அம்மிணி நன்றிங்க.. கண்டிப்பா நீங்க சொன்ன மாதிரி செய்யறேன்..
--------------
துளசி சின்ன அம்மிணி உங்கவீட்டுக்கு வரும்போது பொட்டுக்கடலை கொறிச்சுக்கிட்டே வந்தாங்களா..

கானா பிரபா said...

ஒலிப்பதிவெல்லாம் கிடையாது, நோட்புக்கில், சுவற்றில் நான் கிறுக்கியதையெல்லாம் என் பெற்றோர் வச்சிருக்கிறார்கள், இப்பவும் இருக்கான்னு தெரியல

பரிசல்காரன் said...

//ஓவியம் மேலே இருப்பது. என் அப்பா வரைந்தது... நான் பொருள்களைப் பிடித்து நடக்க ஆரம்பித்த போது வரைந்தது.. பழைய காகிதம் உடைகிறது //

காகிதம்தான் உடையும்.. இந்த ஓவியம் உடையாது! (ஐ!)

கயல்விழி முத்துலெட்சுமி said...

மங்களூர் சிவா.. கிரி கூட சொன்னாருல்ல கழுதை கூட குட்டியா இருக்கும்போது அழகான்னு அப்படித்தான் நானும் சின்னதுல அழகா இருந்திருப்பேனா இருக்கும்.. எப்படியோ அந்த படத்துல அழகா இருக்கேன்ல :))
--------------
கானா ஆமாம் என் பையன் கூட ஒரு நாள் ஒரு சர்க்கிள் முகம் இரண்டு சின்ன சர்க்கிள் கண் ஒரு சர்க்கிள் மூக்கு ..ஒரு கோடு வாயின்னு வரைஞ்சான் யாருன்னா அப்பான்னான்..என்னை வரையலயான்னேன்.. சரி இந்தான்னு எல்லாமே வரைஞ்சான் மூக்கு தவிர அப்பறம் லாஸ்டா மூக்கு சரிக்கிளா இல்லாம ஓவலா நீட்டமா வரைஞ்சுட்டு அம்மா மூக்கு நீளம்ங்கறான்.. என்ன ஒரு ஆர்டிஸ்ட் பாருங்க..

---------------
பரிசல்காரன்.. நல்லா சொன்னீங்க ..உடையக்கூடாதுன்னு தான் இணையத்துல இணைச்சாச்சு.

sury said...

// வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
இடி இடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்//

என்ன ஆச்சரியம் ! இது உங்க ஊரு பாட்டா !
எங்க கிராமத்திலேயும் கிட்டத்தட்ட இதோ போல பாட்டுதானே
பாடுவாங்க
எங்க ஊரு திருவிழாவிலே
ஆனா இத்தனை சுத்தமா தமிழ் வார்த்தைகள் இருக்காது.
எங்க கிராமத்திலே பாடுறது இது போல இருக்கும்
தம்பட்டம், நையாண்டி மேளம் எல்லாம் வச்சிக்கினு
பாடும்போது ஒரு கிராமீய பண்பாடு அதில் எதிரொலிக்கும்.

பாட்டைக் கேட்க இங்கே செல்லுங்கள்.
http://www.youtube.com/watch?v=A8Lm58bjKa8

பாடியது நன்றாக இருந்ததெனின், நாலு பேரிடம் சொல்லுங்கள்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
PS: I have quoted and rendered your song in anticipation of your permission. In case, you do not permit me, please do not hesitate to inform, when i shall delete the same.

sury said...

ஒலி நாடாவை ஸி டி ஆக்குவதிலும் கபீரன்பன் எக்ஸ்பர்ட்டா ?
ஒன்று எனவும் ஒன்றே எனவும் சொல்லும் கபீரின்
ஸீடன் என்று தானே நினைத்துக் கொண்டிருந்தேன்.

கபீரின் இன்னொரு வலையை இன்றைக்கு
கபார் என்று பிடித்துக்கொண்டேன்.
( how to change tape to CD ? )
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://menakasury.blogspot.com
http://arthamullavalaipathivugal.blogspot.com

ஸ்ரீ said...

அருமையான கொசுவர்த்தி :) நன்றி ஹை ;)

You reminded me my childhood ka. Dankku

கயல்விழி முத்துலெட்சுமி said...

நன்றி சூரி சார்.. அது எங்க ஊரு பாட்டு இல்ல.. நான் 3 வது படிக்கும்போது வந்த பாட்டா இருக்கும்ன்னு நினைக்கிறேன்..
-----
ஸ்ரீ நன்றி.. கொசுவத்தியின் பயனே அது தானே... நாமும் மகிழ்ந்து மற்றவரையும் பின்னோக்கி சென்று மகிழ வைப்பது.. :)

கயல்விழி முத்துலெட்சுமி said...

சூரி சார் அந்த பாட்டு பார்த்தேன்.. சைடு எபெக்ட்ல சத்தமெல்லாம் குடுத்து ஜமாய்ச்சிருக்கீங்க போலயே.. அம்மணி ரொம்ப மெதுவா ஆடினாலும் கிராமத்து எபக்ட் கொண்டுவர முயன்று இருக்கீங்க..நன்றீ..

அதிஷா said...

யக்கா உங்களுக்காக என் வலைப்பூ டெம்பிளேட்ட மாத்திட்டேன் இனிமே
கண் வலிக்காதுனு நினைக்கிறேன் , அடிக்கடி வந்துட்டு போங்க

;-)))

அகரம்.அமுதா said...

சின்ன வயதில் பாடிய வானத்திலே திருவிழா! பாடலை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

கயல்விழி முத்துலெட்சுமி said...

அதிஷா.. கண் உறுத்தாத டெம்ப்ளேட் தான் நல்லது.. அடர் நிறங்கள் கண்களுக்கு தொந்திரவு என்பதால் மீண்டும் அந்த பதிவுக்கு தலைப்பு ஈர்த்தாலும் ..தொடர்ந்து படிக்க முடியாமல் போவது வழக்கம்..டெம்ப்ளேட் மாற்றியதற்கு நன்றி.(ஒருகாலத்தில் இதே போல் நானும் செய்து தல பாலபாரதி சொல்லி பிறகு மாற்றினேன்.)
---------
நன்றி அகரம் அமுதா.. பலரும் இந்த பாடலை நினைவுகளில் வைத்திருக்கும் அளவு இது ஒரு எளிமையான இனிமையான பாடல் இல்லையா..? :)

நெல்லை சிவா said...

அட என்னாங்க..நீங்களும், ராமலஷ்மி மேடமும் சரியான படிப்பாளியா இருப்பீங்க போல...

அதாங்க..ப்ளாக்குல எல்லாத்தையும் படிச்சுட்டு பின்னூட்டம் போட்டு கலக்குறாங்க அவங்க..

நீங்க என்னடான்னா, ப்ளாக்கப் படிச்சுட்டு, நல்ல விசயங்கள லிங்க்'கா போட்டுத்தாக்குறீங்க..

லஷ்மியக் கும்பிட்டா, காசு வரும்னு சொல்லுவாங்க..இங்க வந்தா 'சரஸ்வதியா' மாறி நிறைய அறிவூப்பூர்வமான தகவலும் படிக்க முடியுது.. கலக்குங்க..

கயல்விழி முத்துலெட்சுமி said...

நெல்லை சிவா ரொம்ப புகழாதீங்க..தட்டுத்தடுமாறி நான் இங்க கத்துக்கிட்ட, கத்துக்க நினைக்கிற விசயங்களை மற்றங்களுக்கும் பகிர்ந்துக்கறேன் அவ்வளவு தான்..

கயல்விழி said...

சின்ன வயதில் கேட்ட பாடலை மீண்டும் படிப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி திருமதி. கயல்விழி முத்துலட்சுமி. :)

sudarmani said...

Vanakkam,

This is the first comment from me.

nice article. I am also crrrry like that for ice....

முத்துலெட்சுமி-கயல்விழி said...

மறுமொழிக்கு நன்றி சுடர்மணி... ஆமா ஒவ்வொருவரும் எதுக்காச்சும் அழுதுருக்கோம்.. ஆனா நினைவு வச்சிக்கிட்டு அத யாராச்சும் சொல்லும்போது வேடிக்கையா இருக்கும்.