June 6, 2008

லட்சியக்கனவு திண்ணை வச்ச வீடு

திண்ணை வச்சு முற்றம் வச்சி .. வீட்டுக்குள்ள ஊஞ்சல் போட்டு வீடுகட்டனும் இதாங்க வாழ்க்கை லட்சியம்.. இது வரை நான் வாழ்ந்த எந்த வீட்டிலும் இது மாதிரி எதுவும் இல்லை.. ஒண்ணாப்பு படிச்சப்ப நாங்க திருவெண்காடு கிராமத்துல இருந்தோம். ஆனா பாருங்க அங்க கூட நாங்க மாடிவீட்டில் தான் இருந்தோம்.. அதுக்கப்பறம் மாயவரத்துல இருந்தது எல்லாமே கால்னி வீடுங்கதான்.. நாலுவீடு வரிசையா சந்துல இருக்கும் பெட்டி பெட்டியா.. . சந்துக்குள்ள கொஞ்ச நாள் .. காலனியிலேயே ரோட்டைப்பார்க்க இருக்கற வீடுன்னு கடைசியில் போனவீடு மாடியிலிருந்து ரோடே தெரியாத ஒரு வீடு.. இப்ப தில்லியிலும் மாடிவீடு .

பாலபாரதி விடுபட்டவைகள் வரிசையில் திண்ணையைப்பற்றி எழுதி தொடர்ந்து பதிவர்களை எழுத கேட்டுக்கொண்டதை அடுத்து முரளிக்கண்னன் அவர்கள் ஆரம்பிக்க இது என்னோட திண்ணைப்பதிவு.

நன்றி : அஸ்வின் ( http://www.flickr.com/photos/ashwin_/2202461327/ )


பேப்பரில் புத்தகத்தில் வருகிற அழகான திண்ணை வச்ச மாடர்ன் முற்றம்வச்ச வீட்டு டிசைன் எல்லாம் கட்டிங் செய்து வச்சிருக்கிறேன் கனவு நனவாகும் நாளுக்காக காத்திருக்கிறேன்.. எங்க ஊரில் நாங்க இருந்த தெருவில் பெரிய திண்ணை வச்ச வீடு கிடையாது. ஆனா வேற தெருக்களில் பாத்துருக்கேன்.. ஆனா திண்ணை வச்சிருக்கறவங்களும் அதில் மரத்துலயோ இரும்புலயோ அழி போட்டு வச்சிருந்தாங்க அப்பவே.. இப்ப திண்ணை வச்சு கட்டற பழக்கமே கிடையாது.. வெளி காம்பவுண்ட் க்கு அப்பறம் கொஞ்ச தூரம் கழிச்சு வீடு ஆரம்பிச்சிருக்கும்..

சரோஜினி டாக்டர் ஆஸ்பத்திரியில் முன்பு ஒரு திண்ணை இருந்தது எப்போதும் காத்திருக்கும் கூட்டத்துக்கு அந்த திண்ணை தான் இடம்..

அய்யனார் கோயில் தெருவில் நான் பாக்க ஒரு பெரிய திண்ணை வச்ச வீடு இருந்தது.. இப்ப அந்த வீடு மாறி இருக்கும்ன்னு நினைக்கிறேன். முதல்ல் ரோட்டை விட உயரமான ஒரு மேடை இருக்கும்.. அதற்கப்பறம் தான் திண்ணை ஆரம்பிக்கும் திண்ணைங்கற இடமே ஒரு பெரிய வீடு அளவு க்கு இருக்கும்.. உயரம் வேறயா , பார்க்க ஒரு அரண்மனை மாதிரி இருக்கும்.. உள்ளே பல குடித்தனங்கள் இருந்தாங்க.. சில தோழிகள் வீட்டுக்கு போயிருக்கும்போது உள்திண்ணை வச்ச வீடுகள் பார்த்திருக்கேன்.. ஆனா அதையும் தடுத்து ஒண்டுகுடித்தனங்களா ஆக்கி இருப்பாங்க.. அடுக்களை மட்டுமே அறை.. வீடு என்பது அந்த திண்ணையாகவே வாழ்ந்துகொண்டிருந்தார்கள்..

எல்லார் வீட்டுத்திண்ணைகளிலும் எப்போதும் யாராவது அமர்ந்து கொண்டிருந்த காலம் உண்டு. வயது வித்தியாசம் இருப்பது இல்லை..ஏன் வீட்டுக்கதவே கூட சாத்தி நான் எங்க ஊரில் பார்த்தது இல்லை.. காலையில் வாசல் தெளிக்க திறந்த கதவு தான் பின் தூங்கும் போது தான் அடைக்கப்படும்.. ஆனால் அவைகள் இன்றைக்கெல்லாம் எப்போதும் சாத்தியவீடுகளாகி விட்டது..

வழவழப்பான தூண்களூம் சிவப்பு சிமெண்ட் தரையும் மரவேலைப்பாடுகளுமாய் உள்ள திண்ணையாகட்டும்.. சிறு மூங்கில் கழி வைத்து கூரையைத் தாங்க செய்து சாணி மெழுகிய திண்ணையாகட்டும்.. அதற்கு ஒரு கவர்ச்சி இருந்தது.. சுவற்றில் சின்ன மாடமும் எப்போதும் ஒரு பானைத்தண்ணீரும் வைத்திருக்கும் வீடுகள் கூட உண்டு..


என் கனவு வீட்டில் திண்ணை வேண்டும்.. முற்றம் வேண்டும்.. முற்றத்தில் நடுவில் துளசி வீட்டு அல்லிக்குளம் போல ஒரு செட்டப் வேண்டும்.. முற்றத்தின் மேடையில் ஒரு ஊஞ்சல் வேண்டும்.. கோவையில் வீடு கட்ட இடம் ரெடி. வீடு கட்ட பணம் சேர்ந்த பின் கட்டுவதற்கு யாராவது நல்ல மாடல் செய்து தாருங்கள் பதிவர்களே..
அது பழமையும் புதுமையும் கலந்தவண்ணம் இருக்கனும்..

மதுரை ... பொள்ளாச்சி கோவை இப்படி சில இடங்களில் சின்ன சின்ன திண்ணை பாத்திருக்கேன்.. வீடு ஒரு அறை தான் ஆனா வாசலில் ஒரு பெஞ்ச் அளவு திண்னை இருக்கும் அழகா.. யாருன்னாலும் உக்காரலாம்..

தாத்தா பாட்டிகளுக்கு வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடப்பது பிடிக்காதுங்க.. வீட்டுல இருக்கறவங்க ஓட்டமா ஓடிக்கிட்டிருப்பாங்க.. திண்ணைதான் அவங்க உலகம்.. பாருங்க புளியங்குடியில் ஒரு வீட்டு திண்ணையில் இந்த தோழிகள் இருவரும் உக்காந்து தாயக்கட்டை விளையாண்டுகிட்டுருந்தாங்க.. அவங்க ரெண்டு பேருக்கும் நடுவில் அந்த சின்னத்திண்ணையில் தாயம் வரைஞ்சிருக்கு.. :-)

எப்பவும் நான் கூப்பிடறவங்க மூணுபேரும் பயங்கர பிசியாக்கும்.. அதுக்காக இப்ப கூப்பிடவங்களும் சும்மா இல்ல.. மங்கை எட்டிப்பாக்க நேரமில்லாம ஓடிக்கிட்டுருக்காங்க.. கோபி மாசம் ஒரு பதிவுன்னு பந்தா விடறார்.. சென்ஷி பி.ந. இலக்கியவாதியாக மாறிட்டார்.. ஹ்ம்..

அடுத்ததா முரளிகண்ணண் அவ்ர்கள் பதிவிலேயே துண்டு போட்டு இடம் பிடித்துவிட்ட அதிஷா..
ஒளி-பதிவர் மற்றும் பாவமன்னிப்பு இரண்டாம் பாகம் புகழ்
ஜீவ்ஸ்..

மற்றும் கொசுவத்திப்புகழ் செண்டிமெண்ட் புகழ் ஆயில்யன் இவர்களை
அழைக்கவிரும்புகிறேன்..

43 comments:

ஆயில்யன் said...

//திண்ணை வச்ச மாடர்ன் முற்றம்வச்ச வீட்டு டிசைன் எல்லாம் கட்டிங் செய்து வச்சிருக்கிறேன் கனவு நனவாகும் நாளுக்காக காத்திருக்கிறேன்.. //


வாழ்த்துக்கள் அக்கா!

இரண்டாம் சொக்கன்...! said...

கணவு மெய்ப்பட வாழ்த்துகள்....

லக்ஷ்மி said...

//என் கனவு வீட்டில் திண்ணை வேண்டும்.. முற்றம் வேண்டும்.. முற்றத்தில் நடுவில் துளசி வீட்டு அல்லிக்குளம் போல ஒரு செட்டப் வேண்டும்.. முற்றத்தின் மேடையில் ஒரு ஊஞ்சல் வேண்டும்.. // யக்கா முத்துலெட்சுமி... இதே இதே இதேதான் என்னோட கனவும். இப்ப இருக்கற வீடு ரெடிமேடா கட்டி வச்சிருந்ததுன்றதால இது எதையுமே நிறைவேத்திக்க முடியாம போச்சு. ஊர்ல ஒரு வீடு கட்டறதா ஒரு அபிப்ராயம் இருக்கு. அப்பவாவது முடியுதான்னு பாக்கணும்.. இங்க சென்னைல கிழக்கு கடற்கரைச் சாலையிலிருக்கும் தக்ஷிண் சித்ரா-வுல எல்லா மாடல் வீடுகளும் கட்டி வச்சிருப்பாங்க. அதுல செட்டி நாடு வீடு உட்பட தமிழ்நாட்டு பாணியிலான எல்லா வீடுகளிலும் திண்ணை உண்டு. அருமையான அமைப்பு. இன்னும் பாக்கலைன்னா, அடுத்த முறை சென்னை வரும்போது ஒரு முறை போய்வாங்க.

இராம்/Raam said...

ஆஹா.. சூப்பரு... எங்க ஊருலே இன்னும் திண்ணை வைச்ச வீடு இருக்கு.... :)


போன வருடம் காரைக்குடிக்கு போனாப்ப கானாடுகாத்தான் அரண்மனைக்கு போயிருந்தோம்.... அங்க இருந்த திண்ணையே ஒரு வீடு அளவு இருந்துச்சு...

அந்த திண்ணையே நிறைய படங்களிலே நீங்க பார்த்துருக்கலாம்....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ஆயில்யன் ... வழக்கம்போல அசத்தலா ஒரு நம்ம ஊர்ப்பக்க கொசுவத்தி பதிவை எதிர்பார்க்கிறேன்..
-------

நன்றி இரண்டாம் சொக்கன்... ரொம்ப நாள் அப்பறம் எட்டிபாத்திருக்கீங்க..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

லக்ஷ்மி நான் தான் அடிக்கடி சொல்வேனே நாம ஒரே மாதிரி யோசிக்கறோம்ன்னு.. முன்னாடிஒரு பதிவில் கூட நாம ரெண்டுபேரும் பின்னுட்டத்தில் திண்ணை வீட்டைப்பத்தி பேசி இருக்கோம்.. உங்க கனவும் நனவாகட்டும்... ஆமாம்ப்பா அந்த வீடுகள் மாடல் இடம் கண்டிப்பா பாக்கனும் ஆனா சென்னை இன்னமும் லேண்டிங் செய்யமட்டுமே பயன்படற இடமா இருக்கு.. அங்க சுத்திப்பாக்க நேரமே இருப்பதில்லை..

என் மனசு said...

அழகாய் இருக்கிறது.. தின்னைகளெல்லாம் வெறும் கனவுகளாகி விட்டன.... இப்போ எல்லாம் திண்ணை கட்டும் இடத்தில் பார்கிங் ஏரியா செய்து விடுகிறார்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராம் நீங்க எடுத்த அந்த செட்டிநாட்டு வீட்டு போட்டோ ஃபிளிக்கரில் பார்த்திருக்கேனே..
பளபள தூணும் மரப்படிக்கட்டுகளும்.. பிரதிபலிக்கும் தரையும்.. ஹ்ம்.. வாழ்ந்திருக்காங்க..

முரளிகண்ணன் said...

\\வழவழப்பான தூண்களூம் சிவப்பு சிமெண்ட் தரையும் மரவேலைப்பாடுகளுமாய் உள்ள திண்ணையாகட்டும்\\

அப்படியே நான் சிறுவயதில் பார்த்த திண்ணைகள். பதிவும் அதற்கான புகைப்படங்களும் அருமை.

g said...

கயல்விழி முத்துலட்சுமி அவர்களே. தங்கள் கண்டிப்பாக அடுத்தமுறை திண்ணை வைத்த வீட்டில் தான் வசிப்பீர்கள். நான் சொன்னா கண்டிப்பா நடக்கும். ஆனால் நான் ஜோசியக்காரன் அல்ல.

Thamiz Priyan said...

//திண்ணை வச்ச மாடர்ன் முற்றம்வச்ச வீட்டு டிசைன் எல்லாம் கட்டிங் செய்து வச்சிருக்கிறேன் கனவு நனவாகும் நாளுக்காக காத்திருக்கிறேன்.. //
கனவு நனவாக வாழ்த்துக்கள்... :)

Thamiz Priyan said...

எனக்கு வீடு கட்டும் கனவு இருக்கு. ஆனால் திண்ணை வைத்தெல்லாம் முடியாத காரியம்.... :)

கிரி said...

திண்ணையும் பாட்டிகளும் கலக்கல்ஸ் :-)

மங்கை said...

இந்த ஆசை பல பேருக்கு இருக்கு... எங்க பாட்டி வீடு இப்படி வெளியே திண்ணையும், தேக்கு ஊஞ்சலும், வீட்டின் நடுவுல தொட்டிக்கட்டுனு சொல்லுவாங்க....நடுவுல ஒரு திறந்த வெளி..சதுரமா..மேல கம்பி மட்டும் இருக்கும்...முற்றத்துல உட்கார்ந்துட்டே வீட்டுக்குள்ள மழைவர்ரத ரசிக்கலாம்... அது எல்லாம் ஒரு காலம்...ஹ்ம்ம்ம்
சீக்கிறம் கட்டுங்க..நாங்களும் வர்ரோம்..

- யெஸ்.பாலபாரதி said...

முத்துலெட்சுமியக்கோவ்..,

பதிவு போட்டமைக்கு நன்றி! என்னால் வீடு கட்டமுடியுமா.. என்பதெல்லாம் தெரியாது... ஆனால்.. வெறும் திண்ணையாவது கட்டிட்டுட்டுதான் மறுவேலை! :)

உங்கள் பதிவை இங்கே சேமிச்சு வச்சிருக்கேன்.

http://blog.balabharathi.net/திண்ணை/

சென்ஷி said...

//திண்ணை வச்சு முற்றம் வச்சி .. வீட்டுக்குள்ள ஊஞ்சல் போட்டு வீடுகட்டனும் இதாங்க வாழ்க்கை லட்சியம்.. //

லட்சியம் வெகு சீக்கிரம் நிறைவேற தம்பியின் வாழ்த்துக்கள் :)

நம்ம ஊர் மாதிரி வருமான்னு சொல்லிக்கற மாதிரியான விஷயங்கள்ல திண்ணை ரொம்ப முக்கியமான இடம் பிடிச்சிருக்குது இல்ல...

சென்ஷி said...

//மங்கை எட்டிப்பாக்க நேரமில்லாம ஓடிக்கிட்டுருக்காங்க.. கோபி மாசம் ஒரு பதிவுன்னு பந்தா விடறார்.. சென்ஷி பி.ந. இலக்கியவாதியாக மாறிட்டார்.. ஹ்ம்..//

மொதோ ரெண்டு பேரு சரி.. அதென்ன மூணாவதா என்னை நம்ம அகராதியில இல்லாத வார்த்தைய சொல்லி திட்டியிருக்கீங்க :))

என்னத்த எழுதுனாலும் மொக்கை போடற டேஸ்டே தனிதாங்க்கா :))

அதுக்குத்தான் கூட்டம் கொஞ்சமாச்சும் வருது :)

கோபிநாத் said...

அருமை....அப்படியே திண்ணையில உட்கார்ந்து கதை கேட்ட மாதிரியே இருக்கு ;))

நிஜமா நல்லவன் said...

கயல் அக்கா உங்கள் கனவு விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்.

நிஜமா நல்லவன் said...

//சரோஜினி டாக்டர் ஆஸ்பத்திரியில் முன்பு ஒரு திண்ணை இருந்தது எப்போதும் காத்திருக்கும் கூட்டத்துக்கு அந்த திண்ணை தான் இடம்..//


திருவாரூர் ல இருக்காங்களே அவங்களா?

நிஜமா நல்லவன் said...

//கோபிநாத் said...
அருமை....அப்படியே திண்ணையில உட்கார்ந்து கதை கேட்ட மாதிரியே இருக்கு ;))///



அதே பீலிங் ல ஒரு பதிவும் போட்டுடு கோபி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என் மனசு.. சரியாச்சொன்னீங்க.. நமக்கும் பார்க்கிங் ப்ளேஸ் வேணும் ஆனா அதை சைடுல வச்சிடலாம்.. வீடுக்கு சைடுல கேரேஜ் கட்டற மாடல் பழசானாலும் நல்ல ஐடியா..
---------
நன்றீ தமிழ்ப்பிரியன்.. ஒன்னுமில்லன்னாலும் ஒரு பெஞ்ச் அளவு திண்ணை போட்டுவைங்க அந்த சுகமே தனி தானே.. இல்லாட்டி மாடி வீடா ..பால்கனியில் கட்டிருங்க..

--------
நன்றி முரளிகண்ணன்.. இன்னும் சில படங்கள் கட்டிங் இருக்கு அதெல்லாம் வலையேத்த நேரமில்லை..
----------

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கிரி ..அந்த பாட்டியோட க்ளோஸப் என்னோட கேமிரா கவிதைகள் ப்ளாக்கில் இருக்கு.. எங்கள ஆசையா கூப்பிட்டு இப்படி நட்டுக்கவே நிக்கறியளே.. உக்கார்ரதுன்னு சொல்லி திண்ணையில் இடம் குடுத்து பேசிக்கிட்டிருந்தாங்க..
----------------

ஜிம்ஷா.. ஜோஸியக்காரனா இல்லாட்டி என்ன நல்லது நாலு பேரு நினைச்சா அந்த எண்ணத்தின் வலிமையில் நடக்கவேண்டியது தானே..
---------
அதே தான் மங்கை .. மழை பெய்யறத வீட்டுல இருந்து பாக்கனும்.. ஊஞ்சலாடிக்கிட்டே.. ஒரு நாவலை படுத்த படி படிக்கனும்.. ஹ்ம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்ன பாலபாரதி நீங்க எதையுமே கட்டமாட்டீங்கன்னா.. எப்படி.. :))

எப்படியோ திண்ணை கட்டறேன்னு சொல்லிட்டீங்க. கட்டுங்க கண்டிப்பா..
------------------
கோபி திண்ணைகட்டி அதில ஒரு தடவை பதிவர் சந்திப்பு நடத்திடலாம்..
---------------
நன்றி சென்ஷி.. ஆமாம்பா மொக்கையா (நகைச்சுவையா) பதிவு போடுவதில் உன்னை மிஞ்ச ஆளில்லை.. அதே மாதிரி உள்ள தூங்கிகிட்டிருக்க ஒரு பி.ந.புலி யை அடிக்கடி முழிப்பு காட்டி பதிவு போட்டு மிரட்டுற அதனால் தான் அப்படி பட்டம்..
----------
நன்றி நிஜம்மா நல்லவன் அவங்க எங்க மாயவரத்து டவுன்ல இருக்கற சரோஜினி டாக்டர் ஒருவேளை அங்க யும் வருவாங்களோ என்னவோ.. தெரியாது..

Anonymous said...

என் அம்மா வழிப்பாட்டி வீட்டுல இந்தமாதிரி தொட்டிக்கட்டு வீடுதான். திண்ணைக்கனவுகள் மெய்ப்பட வாழ்த்துக்கள். எல்லார் கனவையும் கிளறின பாலபாரதிக்கு நன்றி

கானா பிரபா said...

அருமையான பதிவு, ஆயில்ஸ் காட்டித் தான் தெரிஞ்சுது, இன்னொரு முறை மீண்டும் திரும்ப வாசிக்கணும்.

Anonymous said...

ennudaya amma&appa vasithha veetil
erandu pakkam periay thinnai irunthathu
thinniyileya 10 to 15 aal padukka mudiyum.
ippo antha veedu engalidam illai
and appa & ammavum illai

anbudan
babu

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சின்ன அம்மிணி... தொட்டிக்கட்டிரவேண்டியது தான் :)
----=---
கானா இந்த பதிவு விசயமாய் நேற்று உங்களைத்தொடர்பு கொண்டேன்...பிடிக்க முடியல.. இணையம் பிரச்சனை போல...:)
-------------
பாபு மறுமொழிக்கு நன்றி..
ம்.. வேலை .. மற்றூம் பல காரணங்களால் ஊரை விட்டு வெளியேறுவதும் சொந்த வீடுகளை விட்டு போவதும் மனசுக்கு சங்கடமான விசயம் தான்..

ஆயில்யன் said...

//கானா இந்த பதிவு விசயமாய் நேற்று உங்களைத்தொடர்பு கொண்டேன்...பிடிக்க முடியல.. இணையம் பிரச்சனை போல...:)
///

நான் புடிச்சுட்டேன்ல :))))))))

இணையம் பிரச்சனை இல்ல அண்ணே அவ்ளோ பிசி நேத்து பாவனா பொறந்த நாள் வேறயா...!!!

துளசி கோபால் said...

தினம் தினம் புதுத் திண்ணை வேணுமுனா எப்படி? அதான் ஏறக்கொறைய ரெண்டரை வருசம் முந்தியே திண்ணைக்கு பறந்துருக்கேனே........

அப்ப இருந்த எண்ணத்தை மாத்திக்கும் எண்ணம் இல்லாததால் இதோ அந்தப் பதிவின் சுட்டி.

என் திண்ணை

அம்புலிமாமா வாங்குவதே அந்தத் திண்ணைவச்ச வீடுகளின் படத்துக்காக!

Athisha said...

எல்லோருக்குமே இதைப்போல ஒரு கனவு எப்போதும் உண்டு

அந்த காலசுழற்சியில் அதை மறந்துவிட்ட பலருக்கும் உங்கள் பதிவு நினைவூட்டும்

உங்கள் கனவு நிச்சயம் பலிக்கணும்

உங்கள பார்த்து அது மாதிரி நாலு பேரு வீடு கட்டணும்

ராமலக்ஷ்மி said...

//திண்ணை வச்சு முற்றம் வச்சி .. வீட்டுக்குள்ள ஊஞ்சல் போட்டு..//

இவை எல்லாமே நாங்கள் பிறந்து வளர்ந்த வீட்டில் உண்டு.
அந்த வீட்டைப் பற்றிய நினவுகள் மங்காமல் மாறாமல் இருந்தாலும், தங்கள் வர்ணனைகளும் ஏக்கங்களும் அவற்றின் அருமையை மென்மேலும் உணர வைத்தன. தங்கள் (மற்றும் பாலபாரதியின்) அழைப்பை ஏற்று திண்ணையை கூடிய சீக்கிரம் வலையேற்றி தங்களையும் இளைப்பாற அழைக்கிறேன். வருவீர்கள்தானே?

உங்கள் கனவு நனவாக என் பிரார்த்தனைகள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயில்யன்.. பாவம் அவர் வேலையா இருந்தாக்கூட பாவனா காரணம்ன்னா எப்படி.. போட்டும் கிடைக்கவேண்டியது கிடைக்காம போகாது அதான் நீங்க பிடிச்சாச்சே உங்க திண்ணைக்கு ..

-----------

துளசி அந்த திண்ணையும் படிச்சாச்சு.. பின்னூட்டமும் அங்க போட்டாச்சு..
நீங்க எழுதாத விசயத்தை எழுத நாங்க எங்க போறது.. :)
--------
ராமலக்ஷ்மி எழுதுங்க்ப்பா உங்க திண்ணையை நாங்க அங்க வந்து கொஞ்சம் இளைப்பாறுகிறோம்.. :)அப்படியோ கொஞ்சம் மோர் ரெடி பண்ணி வச்சிக்குங்க எல்லாருக்குமா சேர்த்து..

sury siva said...

எண்ணை வெண்ணை எதானாலும்
திண்ணையிலே இறக்கி வச்சு
கண்ணுமுன்னே அளவு பாத்த ‌
காலமெல்லாம் மாறிப் போச்சே !

பொட்டு பொட்டு புள்ளியெல்லாம்
பால் தயிர் கணக்கெல்லாம்
திண்ணை சுவத்தினிலே
எண்ணிப்பாத்த வாபாரங்க ..

சாக்குபீசு குச்சி வச்சு
நாலு கட்டம் பாண்டி போட்டு
ஆளுக்காளு சத்தம் போட்டு
தண்டை சல சலக்க‌
துள்ளித் துள்ளிக் குதிக்குமே
கன்னிப்பொண்ணுக ! அத‌
தாங்குறது திண்ணைதாங்க..


ஆத்தாடி ! இன்னா வெய்யில் !
காத்தாடி கொண்டான்னுட்டு
நீர் மோரு கிழவி அவ
உள்ளெ போய் வருமுன்னே
உர்.உர்னு குறட்டை விட்டு
தூங்கிப்போவா திண்ணைலேங்க.

வீதிலே வானரங்க
பம்பரங்க விளையாட
ஒக்கார்ந்து பாத்ததெல்லாம்
வாசப்படி திண்ணைங்க ..

வெளி ஊரு போனவரு
என்ன கொண்டு வருவாரு ?
எந்நேரம் வருவாரு ?
கண் இமை கொட்டாமலே
கால்கடுக்க காத்திருப்பா ‌
ஒத்தாசை செய்ய ஒரு
வாசலிலே திண்ணைங்க ..

கொட்டு கொட்டுன்னு முழிச்சிருக்கும்
எட்டு பத்து கிழவி அவ‌
எப்பதான் தூங்குவாளோ ?
ஏங்கிக்கினே இளவட்டம்
அஞ்சியஞ்சிப் பேசுரதும்
அந்த வீட்டுத் திண்ணைலேங்க.

என்னா விளைச்சலுடா !!
பொன்னா கொட்டுதடா !!
எம்புட்டு காசு பணம்டா !!
ஊரு சனம் எல்லாத்துக்கும்
வாரி வாரி தந்த‌தெல்லாம்
வாசப்படி திண்ணைதாங்க ..

நல்லவரு வல்லவரு
சொன்னவரு செய்தவரு
போனவரு புகழ் பாடும்
ஊரு சனம் திண்ணைலேங்க ..

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://vazhvuneri.blogspot.com

பரிசல்காரன் said...

போட்டோக்கள் அத்தனையும் மிக அருமை! ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டியதை அந்த புகைப்படங்கள் சொல்கின்றன!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சூரி சார்.. நல்ல கவிதை இதை உங்கள் பக்கத்திலும் போட்டிருக்கிறீர்களா..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி பரிசல்காரரே.. ஆனா கடைசி படம் மட்டும் தான் நான் எடுத்தது.. :)

போட்டோக்களுக்கு நடுவில் சில நூறுவார்த்தைகள் நான் எழுதி இருக்கேன்.. :(

Unknown said...

சீக்கிரமே திண்ணை வச்ச வீடு கட்டிக் குடியேற வாழ்த்துக்கள் :)

மங்களூர் சிவா said...

//திண்ணை வச்ச மாடர்ன் முற்றம்வச்ச வீட்டு டிசைன் எல்லாம் கட்டிங் செய்து வச்சிருக்கிறேன் கனவு நனவாகும் நாளுக்காக காத்திருக்கிறேன்.. //

விரைவில் கனவு நனவாக ஆண்டவன் துணை நில்லட்டும்.

Iyappan Krishnan said...

திண்ணைங்கறது தனிக் குடும்ப உபயோகம் தவிர்த்து பல சமுதாய நலக் காரணிகளைக் கொண்டு இருந்தக் காலம் அவை. இப்போ அதற்கான தேவைகள் இருக்கிறதா என்பதே பெரியக் கேள்வி. அப்படியே இருந்தாலும் திண்ணை வைத்து மக்கள் கட்டுவார்களா என்பது அடுத்தக் கேள்வி. அப்படியே மக்கள் கட்டினாலும் அதை சமுதாயக் காரணிகளுக்காக உபயோகிப்பார்களா ? கஸ்டம் தான்.

உங்கள் கனவு நினைவாகட்டும்.


என்னுடையத் திண்ணைக் கட்டுரை பல நினவுகளால் கிளைத்து மனதினுள் ஆழமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதை எந்த அளவிற்கு அப்படியே கொண்டு வர முடியும் தெரியவில்லை. முடிந்த அளவுக்கு முயற்சிக்கிறேன்.

விரைவில் என் பதிவில் அது வரும்.


அழைப்புக்கு நன்றி.

Iyappan Krishnan said...

http://kaladi.blogspot.com/2008/06/blog-post_13.html

கொஞ்சம் நேரமானாலும் வாக்கக் காப்பாத்திட்டேன்

ராமலக்ஷ்மி said...

//ராமலக்ஷ்மி எழுதுங்க்ப்பா உங்க திண்ணையை நாங்க அங்க வந்து கொஞ்சம் இளைப்பாறுகிறோம்.. :)அப்படியோ கொஞ்சம் மோர் ரெடி பண்ணி வச்சிக்குங்க எல்லாருக்குமா சேர்த்து..//

கயல்விழி, 'அட ஒரு குவளை மோர் தயார் செய்ய இவ்வளவு தாமதமா?'ன்னுல்லாம் கேட்காம என் திண்ணைக்கு வந்தால் நல்லாருக்கும். முதல் அழைப்பு உங்களுக்குதான். ஏன்னு கேட்டால்...அது வந்து வந்து...வந்துதான் பாருங்களேன்.
http://tamilamudam.blogspot.com/2008/07/blog-post.html

சரண் said...

அட்டகாசமான பதிவு...

அழகான கனவுங்க.. உங்க திண்ணை வீடு புண்ணியாச்சனைக்கு கண்டிப்பா, சீக்கிரம் வரணும்னு கடவுள்ட்ட ஒரு மனுவ போட்டு வெக்கிறேன்..

நாங்களும் கோவைல எடம் வாங்கி வெச்சுருக்கோம்.. எங்களுக்கும் வித்தியாசமா பழய முறைல வீடு கட்டணும்தான் ஆசை.. ஆனாப் பாருங்க, சுத்தியிருக்கற மாளிகைகளையும், வீடு கட்டறதுக்கு ஆகுர செலவையும் பாத்த.. பாலபாரதி சொன்ன மாதிரி.. வெறும் திண்ணைதான் கட்ட முடியும்ன்னு நெனக்கிறேன்!!