வாசல் தெருவில் கோடு கிழித்து பிள்ளைகளோட பிள்ளைகளாய் விளையாண்டு கொண்டிருந்த சுமதி அவ்வப்போது அம்மாவிடம் "அப்பாருஎப்ப வருவாரு?" என்று விசாரித்தபடியே இருந்தாள்..
"வந்தா உன்னையத்தாண்டிதானே வரனும் சும்மா நொய்நொய்ய்ன்னுகிட்டு" என்று அம்மா அதட்டிய அதட்டலில் கொஞ்சம் அடங்கி பத்துநிமிசமாக கேட்பதையும் விட்டிருந்தாள்.
வரும்போதே சிவாஜி எதோ கோபத்தில் ஒரு கால் செருப்பு வாசலிலும் ஒரு கால் செருப்பு வீட்டுக்குள்ளுமாக விழ அடித்தபடி உள்ளே போனான். குதித்து ஓடி அப்பா என்றவளுக்கு "தொம்" என்று விழுந்தது ஒன்று.. "சே மனுசன் வரங்காட்டியும் ஆரம்பிச்சிடுவியா நீயு போடி " கத்தியவனாய் உண்டியலை உடைத்து காசுக்களை பொறுக்கிக்கொண்டிருந்தான்.
"அப்பா நேத்தைக்கே கேட்டேன்ல வரும்போது சிலேபி வாங்கிவரேன்னியேப்பா" அடிவாங்கியதால் வந்த கேவலோடே சொல்லிக்கொண்டிருந்தாள் சுமதி . அவனவன் ரிக்ஷா இழுத்தும் தினப்படிக்கான காசுவரலையேன்னு இருக்கையிலே சிலேபியாம்ல சிலேபி ... அடியே இவளை இழுத்துட்டுப் போ இல்லாட்டி அடிவாங்கி சாவப்போறா" என்று மனைவியிடம் சொல்லிக்கொண்டே விருட்டென்று வெளியேறி நேராக சாராயக்கடைக்கு சென்றான்.
வலி போக நிறைய குடித்தவன் வரும்வழியில் நண்பன் செய்த தகராறுக்கு துணை போனதாக குற்றம்சாட்டப்பட்டு பதினைந்து நாள் சிறையில் போடப்பட்டான். மறுநாள் தலைவர் பிறந்தநாள் என்று எல்லாருக்கும் சிலேபி வழங்கப்பட்டது. கையில் வாங்கியவன் சாப்பிடாமல் தேம்பி அழுததை பார்த்து உடனிருந்தவர்கள் குழம்பி நின்றனர்.
சிவாஜி வாயில் சிலேபியை போடவில்லை..
-----------------------------
சிவாஜி
வாயில்
ஜிலேபிக்காக எழுதிய கதை.. என்னை அழைத்த ராமலக்ஷ்மிக்காக எப்படியோ எழுதியாச்சு... இதுல வேற இன்னும் என்ன எல்லாம் எழுத முடியும்ன்னு தெரியல.. கவிதை கட்டுரை கதை நல்ல கருத்துன்னு ஆளாளுக்கு ஒன்னு எழுதிட்டாங்க.. இன்னும் யாரைக்கூப்பிடுவதுன்னு தெரியல.. அதனால் குறிப்பிடவில்லை விருப்பம் இருக்கறவங்க எழுதுங்கப்பா....
37 comments:
ooooo ஈபட் எல்லாம் கதை எழுதலாமா ? நன்று நன்று - சிந்தனை - கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டால் கதா தானாக வருகிறது. கடைசியில் சிவாசி வாயில் போடாமல் மகளை நினைத்தது .... ம்ம்ம் - நச்சுன்னு ஒண்ணச் சொல்லி கண்ணுலே தண்ணி வர வைச்சிட்டீங்க !
நல்வாழ்த்துகள்
//சிவாஜி வாயில் சிலேபியை போடவில்லை..//
சின்னக் கதைதான். முடிவில மனதைத் தொட்டு விட்டது கயல்விழி.
அழைப்பை ஏற்று அர்த்தமுள்ள கதையையும் படைத்து என்னை ஆனந்தத்துக்குள்ளாக்கி விட்டீர்கள். நன்றி, நன்றி.
//யாரைக்கூப்பிடுவதுன்னு தெரியல.. அதனால் குறிப்பிடவில்லை விருப்பம் இருக்கறவங்க எழுதுங்கப்பா....//
இதுவும் எனக்குப் பிடிச்சிருக்குப்பா..!
வித்தியாசமான சென்டிமென்ட் ஜிலேபி கொடுத்திட்டீங்கக்கா.... :)
நன்றி சீனா சார்.. நானும் ராமலக்ஷ்மி கூப்பிட்ட நாளிலிருந்து யோசிச்சு யோசிச்சு பாத்துட்டேன் வேர ஒன்னுமே தோணலை...
----------------
ராமலக்ஷ்மி உங்கள் மகிழ்ச்சி எனக்கும் மகிழ்ச்சி.. நன்றி நன்றி :)
நன்றி தமிழ்ப்பிரியன்.. செண்டிமெண்ட் சிலேபி நல்லாருக்கே இது ...
நல்ல கருத்து. கொஞ்சம் அவசரத்தில் எழுதிய மாதிரி ஒரு உணர்வு.
ரொம்ப சரியா சொன்னீங்க கொத்ஸ்.. 2நிமிசத்தில் எழுதி போட்டாச்சு ..ராமலக்ஷ்மி கூப்பிட்டு ரொம்ப நாளாச்சு.. வீட்டுல பையனுக்கு உடம்பு சரியில்லை.. யோசிச்சாலும் இப்பல்லாம் ஒன்னும் எழுதவரதில்ல..
திண்ணைக்கு நான் ஜீவ்ஸ்க்கு அழைப்பு அனுப்பிட்டு இன்னும் எழுதலையான்னு தொணதொணத்துட்டு இருந்தேன்.. ஆனா ராமலக்ஷ்மி என்ன கேக்காவே இல்லை எனக்குத்தான் ஒரு மாதிரி இருந்தது..
பாராட்டுகள் அக்கா...2 நிமிஷத்துல கலக்கல் கதை..;))
(ம்ஹூம் இங்கே ஒருமாசம் உட்கார்ந்து யோசிச்சாலும் ஒருவரி கூட வரல)
ஆஹா சூப்பரப்பூ..
ஒரே ஃபீலிங்ஸ் ஃபிலிங்க்ஸா...
ரெண்டு நிமிஷக் கதைன்னாலும் மனசைத் தொட்டு விட்டது. வாழ்த்துக்கள் கயல்விழி!
நல்லா இருக்கே கதை!!! பாவம் அந்த குட்டி பொண்ணு:-((
ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.
"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"
http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html
அன்புடன்,
விஜய்
கோவை
//கோபிநாத் said...
பாராட்டுகள் அக்கா...2 நிமிஷத்துல கலக்கல் கதை..;))
(ம்ஹூம் இங்கே ஒருமாசம் உட்கார்ந்து யோசிச்சாலும் ஒருவரி கூட வரல)//
ரிப்பீட்டே :))
/
கையில் வாங்கியவன் சாப்பிடாமல் தேம்பி அழுததை பார்த்து உடனிருந்தவர்கள் குழம்பி நின்றனர்.
சிவாஜி வாயில் சிலேபியை போடவில்லை..
/
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:))))))))
அட! டில்லி ஜிலேபி நல்லாத்தான் இருக்கு. கொஞ்சம்கூடப் புளிக்கலை:-))))
மாசம் ஒன்னு போட்டாலும் அந்த பதிவின் நீளம் உண்மைத்தமிழன் பதிவாட்டம் இல்ல போடுறிங்க... :)
--------------
மங்கை ஒரு நகைச்சுவை கதை எழுத வரல பாத்தீங்களா ??
-----------
நன்றி கவிநயா.. நான் நல்லாவே இல்லைன்னு சொல்லப்போறாங்கன்னு நினைச்சேனாக்கும் எழுதிட்டு.. :)
அபி அப்பா.. ரொம்ப நாளைக்கப்பறம் சின்ன கதைங்கறதால படிச்சிட்டு பின்னூட்டம் போட்டிருக்கீங்க போல.. நன்றி..
---------------
விஜய் நல்ல விளம்பர யுத்திங்க .. ஆனா எல்லாருக்கும்காப்பி பேஸ்ட் செய்திட்டீங்களே.. நான் ஐயா வா.. சரி உங்க பதிவு பத்தி அங்க பின்னூட்டம் போட்டாச்சு..
வாப்பா சென்ஷி.. ரிப்பீட்டே போட வசதியா நண்பன் கமெண்ட் போட்டிராப்ப்ல...:)
-----------
மங்களூர் சிவா.. அழாதீங்க...ன்னு சொல்லலாம்ன்னா சிரிப்பானும் போட்டுட்டீங்க.. கதைதானேன்னு அடுத்த நிமிசம் தேறுதல் அடைஞ்சுட்டீங்க போல.. :)
துளசி ,சொல்லுவாங்கள்ள கொஞ்சமா செய்தா ந்ல்லா இருக்குன்னு தீந்துடும்.. நிறைய செய்தா நாந்தின்னு நீதின்னுன்னு கிடக்கும்ன்னு அதுமாதிரி புளிச்சிடுமோன்னு கொஞ்சமா செய்தேன்.. நன்றி நன்றி..
//ராமலக்ஷ்மி கூப்பிட்டு ரொம்ப நாளாச்சு..//
லேட்டாக வந்தாலும் ஹாட்டான ஜிலேபி. கடைசி வரியிலே ஒரு சுத்து சுத்தீட்டிங்களே (கலக்கு கலக்கீட்டிங்களே). சீனா சார் சொன்ன மாதிரி கலங்கவும் வச்சிட்டீங்க.
//ஆனா ராமலக்ஷ்மி என்ன கேக்காவே இல்லை எனக்குத்தான் ஒரு மாதிரி இருந்தது..//
எனக்கும் ஒரு மாதிரித்தாங்க இருந்தது, ஏது உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விட்டேனோ என்று.
(பையன் உடம்பைப் பாத்துக்குங்க. சீக்கிரமே நலமடைய வேண்டிக்கிறேன்.)
//இலவசக்கொத்தனார் said...
நல்ல கருத்து. கொஞ்சம் அவசரத்தில் எழுதிய மாதிரி ஒரு உணர்வு.//
கொத்தனாரே ஒண்ணு கவனிச்சீங்களா? இப்பல்லாம் குமுதம், விகடன் கூட ஒரு பக்கக் கதையிலுமிருந்து அரை பக்கக் கதைக்குத் தாவி நாளாச்சு. யாருக்கும் நீண்ட கதைகளை எத்தனை நன்றாக இருந்தாலும், இந்த அவசர யுகத்தில் வாசிக்கிற பொறுமை இருக்கிற மாதிரித் தெரியவில்லை.
சட்டுன்னு நெஞ்சைத் தொடுற கதை. நல்லாருக்கு.
//இலவசக்கொத்தனார் said...
நல்ல கருத்து. கொஞ்சம் அவசரத்தில் எழுதிய மாதிரி ஒரு உணர்வு.//
வழிமொழிகிறேன்.
////கயல்விழி முத்துலெட்சுமி said...
welcome .. already ellarum sollitanga.. colour than bayamuruthuthu.. please ..//
colour changed as desired by sister kayalvizhi muththulakashami.
-vijay
kovai
http://pugaippezhai.blogspot.com
June 19, 2008 2:30 PM
அவசரத்தில் செய்த சாப்பாடு ரொம்ப நல்லாருக்கும் அது போல் ரெண்டு நிமிடக் கதைன்னாலும் நல்ல்ல்ல்ல்ல்ல்லா பிழிஞ்சிட்டீங்க ஜிலேபியையும் மனசையும்.
சூப்பரப்பு!!!!
அப்படியே என்னோட ஜிலேபியையும்
கொஞ்சம் வாயில் போட்டுத்தான் பாருங்களேன்.
ராமலக்ஷ்மி ... வீட்டுல எல்லாம் நல்லா இருந்தா யோசிக்க கஷ்டமிருக்காது .. மத்தபடி நீங்க நினைக்கிறமாதிரி இல்ல..பதிவு போட விசயம் தர்ரது எப்படி தப்பாகும்.. :)
--------------
ஜீவ்ஸ் இதெல்லாம் உங்க வேலை தானே.. எப்படியோ சுத்திட்டேன் ஜிலேபி ..
நிஜம்மா நல்லவரே நிஜம்மாவே அவசரமா எழுதனுது தாங்க..கரெக்டா கண்டுபிடிச்சதுக்கு ஜிலேபி பரிசாதரேன்.. :)
---------------
விஜய் போனமுறை ஐயான்னீங்க இந்த முறை சரியா சிஸ்டர்ன்னு கண்டுபிடிச்சிட்ட்டீங்க் போல.... கலரை மாத்தி மஞ்சளா போட்டிருந்திங்க பார்த்தேன்.. இன்னும் கூட லைட்டாக்கலாம்.. :)
------
நானானி உங்களுது படிச்சதா நியாபகம்.. ஜிலேபி யார் வாயிலே தானே ..அன்னைக்கு பின்ன்னூட்ட முடியாம கணவரின் லேப்டாப்பிலிருந்து படிச்சேன்னு நினைக்கிறேன்.. :)
நிஜமாகவே மனதைத் தொடும் பதிவு. நெம்ப நெம்ப நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்இனிமேல் கண்டிப்பாக அடிக்கடி உங்கள் பதிவுக்கு வருகிறேன். தாமதமாகப் பின்னூட்டமிட்டதிற்கு மன்னிக்க வேண்டும்.
தமிழ் வலைப் பதிவுலக
சான்றோர்களுக்கும்,
பெரியோர்களுக்கும்,
அறிஞர்களுக்கும்,
சகோதரர்களுக்கும்,
சகோதரிகளுக்கும்,
நண்பர்களுக்கும்,
தோழர்களுக்கு,
தோழியர்களுக்கும்
என் பணிவு கல்ந்த வணக்கங்கள்.
புகைப்பேழையில் படம் பிடித்த புகைப்டங்களை பதிந்து வந்த என்னை செய்தியுடன் பதிவு செய்ய அறிவுறுத்திய
டோண்டு ராகவன் ஐயா அவர்களுக்கு என் முதல் நன்றி.
எனது அன்பு அழைப்பை ஏற்று
வருகை புரிந்து
வாழ்த்துரை வழங்கியும்,
மேம்படுத்த ஆலோசனகள் தந்தும்
பேருதவி புரிந்திட்ட
அன்புகளுமிய அன்பர்கள்
திருநெல்வேலி கார்த்திக்
அதிஷா
VSK
dondu(#11168674346665545885)
லக்கிலுக்
ajay
துளசி கோபால்
உண்மைத் தமிழன்(15270788164745573644
VIKNESHWARAN
சின்ன அம்மிணி
VIKNESHWARAN
ஜமாலன்
உறையூர்காரன்
மதுரையம்பதி
கிரி
ambi
ஜீவி
வடுவூர் குமார்
செந்தில்
SP.VR. SUBBIAH
தமிழரசன்
cheena (சீனா)
சிறில் அலெக்ஸ்
வால்பையன்
வெட்டிப்பயல்
பினாத்தல் சுரேஷ்
இலவசக்கொத்தனார்
அகரம்.அமுதா
குசும்பன்
கயல்விழி முத்துலெட்சுமி
சென்ஷி
தருமி
தமிழன்
செந்தில்
மனதின் ஓசை
கானா பிரபா
Kailashi
மாதங்கி
முகவை மைந்தன்
அனைவருக்கும்
நெஞ்சுநிறை
நன்றிகள்
கோடான கோடி
என்றும் உங்கள்
விஜய்
கோவை.
http://pugaippezhai.blogspot.com
2 min Noodles மாதிரி இது 2min கதையா.... சிருசா இருந்தாலும் நச்சுன்னு இருக்கு
கயலக்கா,
வணக்கம் நான் புதுவண்டு.:))))....(கொஞ்ச நாளா) நான் புதுசு :D :D
கதை 'நச்'. நிஜமா , உங்களுக்கு கற்பனை வளம் அதிகம்.சூப்பர் கதை.:)
பி.கு.:உங்கள நிறைய பேர் 'கயலக்கா'ன்னு தானே கூப்பிடுறாங்க.நானும் கூப்பிடவா? பேர் அழகா இருக்கு.:))
//இன்னும் யாரைக்கூப்பிடுவதுன்னு தெரியல.. அதனால் குறிப்பிடவில்லை விருப்பம் இருக்கறவங்க எழுதுங்கப்பா....//
என்னா மேட்டரு? புர்யலயே? சொன்ன நாங்களும் சொக்கட்டானோட வருவொம்ல?
rapp .. என்னங்க பேரு இது ? நீங்க ரொம்ப நல்லவங்கன்னு கிரி பதிவுல்பின்னூட்டத்தில் படிச்சேன்.. ஆனா ரொம்ப நல்லவங்களா இருக்கீங்க.. மெதுவா பின்னூட்டம் போட்டா என்னா ..போட்டதே பெரிசு..:)
----------------
விஜய் கோடானுகோடியா..உங்க பணிவுக்கு அளவே இல்லையாங்க..
---------
2 மினிட்ஸ் நூடுல்ஸ்மாதிரி இருந்தாத்தானே தீபா இப்பல்லாம் எல்லாருக்கும் பிடிக்குது..
புதுவண்டே..கற்பனை வளம் கொஞ்சமா இருப்பதால் தான் சின்ன கதை நீங்க வேற...
கயலக்கா முத்துக்கா.. லெட்சுமியக்கா.. எப்படின்னாலும் கூப்பிடுங்க.. நன்றி
------------------
ஓ மன்னிக்கனும் பரிசல்காரரே உங்களை யாராவது கூப்பிட்ருப்பாங்கன்னு நினைச்சேனே.. அதாவது சிவாஜி வாயில் ஜிலேபிங்கற தலைப்பில் எதாச்சும் எழுதனும்..
தசாவதார அலையில் இது கொஞ்சம் அமுங்கிபோனாலும்.. ஓயல..
அடிக்கடி இப்படி எதாவது தலைப்பில் ஒருத்தர் எழுதிட்டு அதை மூணு நாலு பேருக்க்கு கை மாத்திவிடனும் ரிலே ரேஸ் மாதிரி.. நீங்க எழுதுங்க அப்ப.. இந்த தலைப்பில் எழுதிட்டு எழுதாதவங்க இருந்தா கூப்பிட்டு அழைப்பு அனுப்புங்க.. நன்றி
எழுதீட்டாப் போச்சு! (இதுக்குத்தானே காத்திருந்தேன்!!)
நன்றீ பரிசல்காரன் தொடருங்கள்..
Post a Comment