June 22, 2008

பாடல்வரிப் புதிர்

றேடியோஸ்பதியில் அடிக்கடி புதிர் வச்சு என்பதிவில் புதிர் வைக்கும் ஆசையைக் கிளப்பிட்டார் கானாப்ரபா..
நம்மை ஒருவர் மண்டை குழம்பச் செய்தால் நாம் நாலு பேரை குழம்பச் செய்ய வேண்டாமா..
பார்த்துவிட்டு இந்த வரிகள் வந்த பாடல் என்ன படம் என்ன சொல்லுங்கள் பார்க்கலாம். ..

1..கடலுக்கு மேல் ஒரு மழைதுளி வந்து விழுந்ததே உப்பென மாறுமா இல்லை முத்தென மாறுமா

2... வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான்....

3.நிழலை விட்டுச் சென்றாயே
நினைவை விட்டுச்சென்றாயே

4.. கோயிலை பாத்தாத் தானா கைகள்
உனக்காகத்தான் கும்பிடுதே

42 comments:

G3 said...

1. சரியா இது தவறா - கல்லூரி

2. காதல் மழையே - ஜே.ஜே.

3. உனக்குள் நானே - பச்சைக்கிளி முத்துச்சரம்

4. நெஞ்சம் எனும் ஊரினிலே - ஆறு

:)))))

சென்ஷி said...

மீ த ஃபர்ஸ்ட்டா இல்லையா.... :)

ஆயில்யன் said...

நாலாவது பாட்டுத்தான் கரெக்ட்டா கண்டுபிடிக்க முடியல :(

ஆயில்யன் said...

1.சரியா இது தவறா சரியா இது தவறா
சரியா இது தவறா இந்த உணர்வினை வில்லக்கிட மனதுக்கு தெரியல இது சரியா??

2. தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
தேடிப் பார்ப்பதென்று மெய் தேடல் தொடங்கியதே

3.உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்ல வா
மருகும் மனதின் ரகசிய அறையில் ஒத்திகை பார்த்திட வா

(2 வது பாட்டு என்க்கு ரொம்ப பிடிச்ச பாட்டு !)

Thamiz Priyan said...

1.படம்: கல்லூரி பாடல் : சரியா தவறா
2. படம் : ஜே ஜே பாடல் : காதல் மழையே
3. படம் : பச்சைக் கிளி முத்துச்சரம் பாடல் :உனக்குள் நானே
4.

ஆயில்யன் said...

பட் இது மாதிரி ரொம்ப சிம்பிளான போட்டியெல்லாம் வைக்காதீங்க அக்கா!

நல்ல பெரிய போட்டியா வையுங்க

அடுத்த போட்டியில மீட் பண்றேன் வரேன் :))

சென்ஷி said...

//நம்மை ஒருவர் மண்டை குழம்பச் செய்தால் நாம் நாலு பேரை குழம்பச் செய்ய வேண்டாமா...//

சரிக்கா... நானும் குழப்ப ஆரம்பிக்க டிரை பண்றேன்.

சென்ஷி said...

யாராச்சும் கரெக்டா ஆன்சர் பண்ணா அதுக்கு மட்டும் ரிப்பீட்டே :))

ers said...

மண்டை கொடச்சலாத்தான் இருக்கு வாழ்ந்த... என்று துவங்கும் பாடல் விஜய் நடித்த படத்தில் இடம் பெற்றதாக ஞாபகம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இப்போதைக்கு நீதாம்பா முதல்.. ஏன்னா பதில் வந்த முதல் கமெண்ட்டை பப்ளிஷ் அப்பறம் செய்யறேனே..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயில்யன் ஒன்னாவது கண்டுபிடிக்க முடியலயே அப்பாடா இப்பத்தான் நிம்மதி.ஏன்னா புதுப்பாட்டுன்னா தெரியும்ன்னு கானாப்ரபா புதிர்ல பாத்துட்டு நீதானப்பா சொன்ன அதான் புதுப்பாட்டு.. சரி பாவம் ஈஸிய்யா கொடுப்பேமேன்னு ...அதுலயும் ஒன்னு அவுட்டா.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஜி3 மாயமா வந்து குதிச்சு ஏன் இப்படி எல்லாம் இத்தனை ஈஸியான்னு கேட்டுட்டு எல்லாம் சரியா சொல்லிட்டாங்க..தமிழ்பிரியன் 3 சரி

சென்ஷி said...

இருக்கா. கோபியையும், மைபிரண்டையும் அனுப்பி வைக்கறேன். நம்ம ரேஞ்சுக்கு ஏதும் போட்டி வைக்க மாட்டேங்குறாங்க :(

சென்ஷி said...

ஹய்யா.. அப்ப நான் போடற மொக்க கமெண்ட் மாத்திரம் தான் ரிலிஸ் ஆகுமா. அக்கா. ஆனாலும் இது போங்கு ஆட்டம் :)).

பாவம் மக்கள். காத்திட்டு இருப்ப்பாங்க. பதில் சொன்னதுக்கப்புறம் வெளியிடாம இருக்கறது தப்பு :(

சிநேகிதன்.. said...

1.கல்லூரி- சரியா? இது தவறா?

2.ஜே!ஜே!- காதல்மழையே!

3.பச்சைக்கிளி முத்துச்சரம்- உனக்குள் நானே உருகும் இரவில்!

4.ஆறு-நெஞ்சம் எனும் ஊரினிலே

சென்ஷி said...

எங்கே எனது பின்னூட்டம் :(.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சிநேகிதன் எல்லாமே சரி ..

---
சென்ஷி அப்பறம் எப்படி மத்தவங்களை குழப்பறதாம்..பின்னூட்டம் கொஞ்சம் நேரம் கழிச்சு போடுவேன்.. அதான் சரி தப்புன்னு சொல்லிடறேன்ல..

MyFriend said...

1- சரியா இது தவறா
இந்த உறவினை விளக்கிட மனதுக்கு தெரியல.. சரியா காதல் தவறா (கல்லூரி)

2- காதல் மழையே காதல் மழையே எங்கே நீ விழுந்தாய்.. கண்ணில் உன்னை காணும் முன்னே மண்ணில் விழுந்தாயோ (ஜேஜே)

3- உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்லவா (பச்சைக்கிளி முத்துச்சரம்)

4- நெஞ்சம் என்னும் ஊரினிலே, காதல் எனும் தெருவினிலே, கனவு எனும் வாசலிலே, என்னை கட்டிக்கொள்ள வந்தாளே (6)

MyFriend said...

//சென்ஷி said...

இருக்கா. கோபியையும், மைபிரண்டையும் அனுப்பி வைக்கறேன். நம்ம ரேஞ்சுக்கு ஏதும் போட்டி வைக்க மாட்டேங்குறாங்க :(//

வந்துட்டேண்ணே. :-)

கானா பிரபா said...

1. சரியா இது தவறா - கல்லூரி

2. காதல் மழையே - ஜேஜே

3. உனக்குள் நானே - பச்சைக்கிளி முத்துச் சரம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மை ப்ரண்ட் எல்லாமே சரி ஆனா கடைசி பாட்டுக்கு நீ க்ளூ வாங்கிகிட்ட..
-----
தமிழ்சினிமா ரொம்ப மகிழ்ச்சிங்க குழப்பமா இருக்குன்னு சொன்னதுக்கு.. பதிவு போட்ட காரணம் நிரைவேறிடுச்சு... நீங்க சொன்ன பாட்டு இல்ல..

கானா பிரபா said...

4 வது நெஞ்சம் என்னும் - ஆறு

க்ளூ கொடுத்து உதவிய உடன்பிறப்பு மைபிரண்டுக்கு நன்றி ;-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கானா உங்க நேர்மையைப்பாராட்டறேன்
மைப்ரண்டுக்கே நான் தான் க்ளூ குடுத்தேன்..

கோபிநாத் said...

\\சென்ஷி said...
யாராச்சும் கரெக்டா ஆன்சர் பண்ணா அதுக்கு மட்டும் ரிப்பீட்டே :))
\\

ரீப்பிட்டே ;))

ராமலக்ஷ்மி said...

எல்லாரும் வந்து எல்லாப் புதிரையும் அவிழ்த்த பின் இதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.எனது மார்க்,ஹி,ஹி..25/100. இரண்டாவது எனக்கு மிகவும் பிடித்த பாடலென்பதால் அது மட்டும் உடனே கண்டு பிடிக்க முடிந்தது.

ராமலக்ஷ்மி said...

சென்ஷி said...
//மீ த ஃபர்ஸ்ட்டா இல்லையா.... :)//

இப்படிக் கேட்டுவிட்டு ஒரு அட்டம்ப்ட் கூட பண்ண முயற்சிக்கவில்லையே என, அப்படியே கீழே வர...

சென்ஷி said...
//யாராச்சும் கரெக்டா ஆன்சர் பண்ணா அதுக்கு மட்டும் ரிப்பீட்டே :))//

:)))))))! நல்லாத்தான் கலந்துக்கிறார் ஆட்டத்திலே!

சென்ஷி said...

ஒத்துக்க மாட்டேன். இது போங்கு ஆட்டம். எல்லோரும் ஆன்லைன் சாட்டிங்க்ல இருந்தும் யாரும் எனக்கு ஒரு க்ளூ கூட கொடுக்கல. :(

நான் இந்த ஆட்டத்த விட்டு போறேன். இனிமே அடுத்த பதிவுல தான் எட்டிப்பார்ப்பேன்

சென்ஷி said...

//கோபிநாத் said...
\\சென்ஷி said...
யாராச்சும் கரெக்டா ஆன்சர் பண்ணா அதுக்கு மட்டும் ரிப்பீட்டே :))
\\

ரீப்பிட்டே ;))
//

ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரொம்ப முக்கியம் :)))

கரெக்டா எல்லாம் முடிஞ்சப்புறம் எப்படிடா தமிழ் சினிமா போலிஸ் மாதிரியே எட்டிப்பார்க்குற :(

rapp said...

கயல்விழி மேடம்,
புதுப் பதிவு போட்டிருக்கேன், நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்க

சென்ஷி said...

// ராமலக்ஷ்மி said...
சென்ஷி said...
//மீ த ஃபர்ஸ்ட்டா இல்லையா.... :)//

இப்படிக் கேட்டுவிட்டு ஒரு அட்டம்ப்ட் கூட பண்ண முயற்சிக்கவில்லையே என, அப்படியே கீழே வர...

சென்ஷி said...
//யாராச்சும் கரெக்டா ஆன்சர் பண்ணா அதுக்கு மட்டும் ரிப்பீட்டே :))//

:)))))))! நல்லாத்தான் கலந்துக்கிறார் ஆட்டத்திலே!
//

ஹி...ஹி.. ஆனாலும் நீங்க என்னை ர்ர்ரொம்ப பொகளூறீங்க :))

ambi said...

சுண்டல் குடுக்கற நேரத்துல வந்து இருக்கேன் போலிருக்கு. :p

2வது பாட்டு மட்டும் தான் எனக்கு தெரிஞ்சதுனு உண்மைய ஒத்துக்கறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபி இது தான் புதிருக்கு பதில் அளிக்கும் முறையா.. இதுல சென்ஷி வேற பாசமா கூப்பிட்டு விட்டு வந்திருகீங்களாக்கும்..

-----------
ராமலக்ஷ்மி சென்ஷி யின் புகழை அறியாதவர் நீங்கள்.. இப்படி விதம்விதமா பின்னூட்டி விளையாடுவார்.. நீங்க 25 மார்க் வாங்கியதை சொல்லி நேர்மையாளர் பட்டியலில் இடம்பிடிக்கிறீங்க..
------
அம்பி நீங்களும் அந்த பட்டியலில் .. :) சுண்டல் என்ன செய்து சூடு ஆறுமுன்னயே.. விற்று தீர்ந்துவிட்டது ஒருமணிநேரம் தான் பதிவு தாங்கியது...

மே. இசக்கிமுத்து said...

நல்ல பாடல்களை நினைவுக்கு கொண்டு வரும் புதிய முயற்சி. தொடரட்டும். வாழ்த்துக்கள்!!

நானானி said...

சுண்டல் கொடுக்கும் நேரத்தில் கூட
இல்லை.....கடை மூடும் நேரம்
பாதிமூடிய கதவின் வழியே குனிந்துதான்
நுழைய முடிந்தது. வந்து பாத்தா...!
ஆத்தா!!எல்லோரும் ஆட்டையை முடிச்சிட்டாங்க...இனி நான் சொல்ல
என்னயிருக்கு..? ஆனாலும் ரெண்டாவது
மட்டும்தான் எனககுத் தெரியும். ஹி.ஹி.!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இசக்கிமுத்து ரொம்ப நன்றிங்க. .. நல்ல பாடல்வரிகளை நினைவுப்படுத்தறது ஹ்ம்..அப்படியும் சொல்லலாம் :)
----------
நானானி.. எங்கங்க.. செய்த அடுத்த அரைமணியில் கடைகட்ட வச்சிட்டாங்க.. பிள்ளைங்க என்னம்மா ரசிக்குதுங்க பாட்டுகளை.. :)

கருணாகார்த்திகேயன் said...

மொத்தமும் படித்தேன்..
சிறு முயற்சிதான் என்றாலும் ...
பெரிய மகிழ்ச்சி..
நல்ல இருந்தது...

என்றும் அன்புடன்
கருணா கார்த்திகேயன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மிக்க நன்றி கார்த்திகேயன் கருணாநிதி.. மொத்தமும் என்றால் பதிவின் மற்ற இடுகைகளையும் பார்வை இட்டீர்களோ?

Anonymous said...

கலக்கிடீங்க போங்க, செம ஜாலி பதிவு. எனக்கு தெரிஞ்சது ரெண்டே பாட்டுதேன். எல்லாம் பின்னி பெடல் எடுக்கறாங்க. இனிமே சீக்கிறம் வந்துறணும்லே. சுண்டல் குடுத்து கடைய மூடி பூட்டு போட்டு சீலும் வச்ச பின்னால என்னை மாதிரி வந்தா அப்புறம் படிகட்டுலதான் படுத்து கிடக்கணும் மறுநா(மறு பதிவு?) கடை திறக்கிற வரைக்கும்.

பாபு said...

pudhiya paadalhalin lyrics rasikkumpadi illai enru solpavarkalukku nalla padhiladi!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இல்லீங்க் விஜய் புதிர் எல்லாம் எப்பவாவது தான் போடலாம் போல.. உடனுக்குடன் வர பதில்களை பப்ளிஷ் செய்யாமல் வச்சிக்கிட்டு சரி தவறு சொல்வது எல்லாம் பெரிய வேலைங்க.. இருந்தாலும் நீங்க இரண்டு பாட்டு கண்டுபிடிக்கலன்னு சொன்னது ரொம்ப மகிழ்ச்சி..
------------------
பாபு நன்றி.. எந்த காலத்திலும் நல்ல பாட்டு வருது.. இந்த காலத்தில் சில சமயம் நல்ல வரிகளை கேக்கவிடாம இசையால் அமுக்கிவிடுவதும் உண்டு..

SurveySan said...

2nd mattum dhaan therinjudhu :(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சர்வேசன் இரண்டு மட்டும்தான் தெரிந்ததுன்னா உங்களுக்கு வயசாகிடுச்சு புதுப்பாட்டு கேக்கறதே இல்ல.. :) ஆனா அம்பியும் இதே பதில் சொல்லி இருக்காரு..:)