March 10, 2008

வண்ணத்தமிழ் வளரப்படி

ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று
இரண்டு முகத்தில் கண் இரண்டு
மூன்று முக்காலிக்குக் கால் மூன்று
நான்கு நாற்காலிக்குக் கால் நான்கு
ஐந்து ஒருகை விரல் ஐந்து
ஆறு ஈயின் கால் ஆறு
ஏழு வாரத்தின் நாள் ஏழு
எட்டு சிலந்தியின் கால் எட்டு
ஒன்பது தானியம் வகை ஒன்பது
பத்து இருகை விரல் பத்து.
இந்த ஒரு பாட்டு தான் நான் படித்து எனக்கு நினைவுக்கு வருவது..

----------------------------------------------------------------------------
ஆத்திச்சூடி - ஔவையார்
அறஞ்செய விரும்பு --------------- Enjoy giving alms
ஆறுவது சினம்------------------------ Anger is to be controlled
இயல்வது கரவேல்------------------Never stop learning
ஈவது விலக்கேல்--------------------Dont prevent charity
உடையது விளம்பேல்------------Don't proclaim what you possess
ஊக்கமது கைவிடேல்-------------Dont give up persevering
எண்ணெழுத்து இகழேல்---------Dont despise learning
ஏற்பது இகழ்ச்சி-----------------------Accepting alms is despicable
ஐயமிட்டு உண்------------------------Eat after donating
ஒப்புர வொழுகு-----------------------Act virtousuly
ஓதுவது ஒழியேல்------------------Dont give up prayers
ஔவியம் பேசேல்-----------------Dont carry tales
வாய்ப்பாடு ஒப்பிப்பது போல இதனை ஒப்பித்த நியாபகம் கொஞ்சம் வருது.:)

-----------------------------------------------------
தாய் மொழி

----------------
தாயின் மொழி
தமிழைப் படி
யாரும் இதை
அறியப்படி
இன்பத்தமிழ்
இதனைப்படி
வண்ணத்தமிழ்
வளரப்படி.. - கவிஞர் செல்வகணபதி
இந்த பாடல் என் மகளுக்கு அவங்க ஆச்சி வாங்கிவந்த புத்தகத்தில் இருந்தது .

------------------------------------------------------------
இப்ப என்பையன் ஹிந்தியில் பாடறான்

"மச்சிலி ஜல் கி ராணி ஹை
ஜீவன் உஸ்கா பாணி ஹை
ஹாத் லகாவோ டர் ஜாயேஹி
பாஹர் நிக்காலோ மர் ஜாயேஹி"
அதாவது

மீனு தண்ணிக்கு ராணி
அதுக்கு உயிரு தண்ணி
கைவச்சா பயந்துபோகும்
வெளியே எடுத்தா செத்துப்போகும்.
நடிப்போட கண்ணவிரிச்சு பாடினா அழகு தான் இல்ல..
கீழே பையன் பாடினதை போட்டிருக்கேன்.. கொஞ்சம் க்ளிக் செய்து கேட்டுப்பாருங்க பயந்துடாதீங்க ..-----------------------------------------
யாரைக்கூப்பிடறது...
1.அருட்பெருங்கோ( ஜனனிகிட்ட கேட்டு போட்டுருப்பா தெரியலன்னா)
2.வின்சென்ட் ( எதாச்சும் இயற்கை பத்தின பாட்டு தானே போடுவீங்க)
3.கோபி (மார்ச் பதிவு போட்டாச்சா )
ரூல்ஸ் கண்மணி டீச்சர் என்ன சொல்றாங்கன்னா நீங்க சின்னப்பிள்ளையா இருக்கும் போது படிச்ச பாட்டு கொஞ்சம் நியாபகம் செய்து அதைப் பதிவு போடனும் அவ்வளவு தான்..

23 comments:

பாச மலர் said...

நல்ல நல்ல விஷயம் சொல்லிருக்கீங்க..தாய் மொழிப் பாட்டு எனக்குப் புதியது..

தமிழ் பிரியன் said...

நல்ல தொடர் விளையாட்டு! நல்ல பாடல்கள் கிடைக்கின்றன. மொழி பெயர்ப்பு கவிதைகள் உட்பட :)

சென்ஷி said...

:))))

கோபிநாத் said...

இது என்ன வம்பா போச்சு...சரி முயற்சிகிறேன் ;))

கயல்விழி முத்துலெட்சுமி said...

நன்றி பாசமலர்.. தாய்மொழி பாட்டு நல்லா இருக்குல்ல..அம்மா என் பொண்ணுக்கு வாங்கி குடுத்தாங்க ஒரு புத்தகம்..அதுல இருந்தது..இன்னும் சில பாட்டும் இருந்தது அதை அப்பறம்போடறேன்..

கயல்விழி முத்துலெட்சுமி said...

நன்றி தமிழ்பிரியன்.. மொழிபெயர்த்ததும் கவிதமாதிரியே இருக்கா பரவாயில்லையே..

-------------
சென்ஷி என்ன சிரிப்பு..
----------------
கோபி வேண்ணா அக்காப்பொண்ணுக்கு ஃபோனைப்போட்டு செல்லம் மாமாக்கு ஒரு பாட்டு சொல்லிக்குடுன்னு கேட்டு வாங்கிடவேண்டியது தான்..ஆனா வயசாகிடுச்சு மறந்து போச்சுன்னு ஒரு வரி சேர்த்துடுங்க பதிவில்.

காட்டாறு said...

இப்பிடி காப்பி அடிச்சிப் போடலாமா? இது தெரியாம நானும் மூளைய கசக்குனதுல.. அது நசுங்கி வழிஞ்சிப் போச்சே. இனி உபயோகப்படுமான்னு தெரியல. :)

சென்ஷி said...

//காட்டாறு said...
இப்பிடி காப்பி அடிச்சிப் போடலாமா? இது தெரியாம நானும் மூளைய கசக்குனதுல.. அது நசுங்கி வழிஞ்சிப் போச்சே. இனி உபயோகப்படுமான்னு தெரியல. :)//

:))

ரசிகன் said...

//நல்ல தொடர் விளையாட்டு! நல்ல பாடல்கள் கிடைக்கின்றன. மொழி பெயர்ப்பு கவிதைகள் உட்பட :)//

ரிப்பீட்டேய்ய்ய்ய்...

நிஜமா நல்லவன் said...

நல்ல பாடல்கள் தான். ஒரு சின்ன சந்தேகம் எல்லோரும் ஆத்திசூடிய போடுறப்போ 'உயிர் வருக்கம்' தாண்டி போகமாட்டேங்கிறாங்க ஏன்?

கயல்விழி முத்துலெட்சுமி said...

காட்டாறு ... என்னமோ சின்னப்புள்ளைங்களுக்காக தொகுக்கறேன்னு சொன்னாங்களேன்னு நல்லதா நாலு செலக்ட்செய்து சொல்லிட்டேன்.. அதான் மங்கை ஒரு ஐடியா கொடுத்தாங்கன்னு உங்க பதிவுல பின்னூட்டம் போட்டேனே.. நியாபகம் வரலன்னா குட்டிபையன் பாட்டை போடுங்கன்னாங்க.. அதான்..

-------------
சென்ஷி .. எங்க மறதி உனக்கு சிரிப்பா இருக்கா..

கயல்விழி முத்துலெட்சுமி said...

நன்றி ரசிகன்.
----
நிஜம்மாநல்லவன் நிஜம்மா நல்லா கேட்டீங்க.. இதுக்கே நாங்க தகின்ன னத்தோம்.. இதுல உயிர்மெய் ..ககர..தகரக்கெல்லாம் என்ன செய்யறது.. இது தாங்க ஈஸி நினைவு வச்சிக்க.. அதுவும் இப்ப எங்க பக்கத்து தமிழ்சங்கத்துல நாடகம் போடன்னு நினைவுக்கு கொண்டுவந்ததால தான் இதுவே போட முடிந்தது..

sury said...

இது நிஜ‌ம் ந‌ல்லான் அவ‌ர்க‌ளுக்காக‌.

//ஒரு சின்ன சந்தேகம் எல்லோரும் ஆத்திசூடிய போடுறப்போ 'உயிர் வருக்கம்' தாண்டி போகமாட்டேங்கிறாங்க ஏன்?//

உங்க‌ளுக்காக‌ ஆத்திசூடியின் ம‌ற்ற வ‌ரிக‌ள்.


12. ஒள‌விய‌ம் பேசேல்.
13. அ:க‌ம் சுருக்கேல்.
14. க‌ண்டு ஒன்று சொல்லேல்.
15. ங‌ப்போல் வ‌ளை.
16. ச‌னி நீராடு.
17. ஞ‌ய‌ம்ப‌ட‌ உரை.
18. (இ)ட‌ம்ப‌ட‌ வீடு எடேல்.
19. (இ) ண‌க்க‌ம் அறி ந்து இண‌ங்கு.
20. த‌ ந்தை தாய்ப் பேண்.
21. ந‌ன்றி ம‌ற‌வேல்.
22. ப‌ருவ‌த்தே ப‌யிர்செய்.
23. ம‌ன்றுப‌றித்து உண்ணேல்.
24. (இ)ய‌ல்பு அலாத‌ன் செயேல்.
25. (அ) ர‌வ‌ம் ஆட்டேல்.
26. (இ)ல‌வ‌ம்ப‌ஞ்சில் துயில்.
27. வ‌ஞ்ச‌க‌ம் பேசேல்.
28. அழ‌கு அலாத‌ன் செயேல்.
29. இள‌மையில் க‌ல்.
30. அற‌னை ம‌ற‌வேல்.
31. அன‌ ந்த‌ல் ஆடேல்.
32. க‌டிவ‌து ம‌ற‌.
33. காப்ப‌து விர‌த‌ம்.
34. கிழ‌மைப்ப‌ட‌ வாழ்.
35. கீழ்மை அக‌ற்று.
36. குண‌ம‌து கைவிடேல்.
37. கூடிப்பிரியேல்.
38. கெடுப்ப‌து ஒழி.
39. கேள்வி முய‌ல்.
40. கைவினை க‌ர‌வேல்.
41.கொள்ளை விரும்பேல்.
42. கோது ஆட்டு ஒழி.
43. ச‌க்க‌ர‌ நெறி நில்.
44. சான்றோர் இன‌த்து இரு.
45. சித்திர‌ம் பேசேல்.
46. சீர்மை ம‌ற‌வேல்.
47. சுளிக்க‌ச் சொல்லேல்.
48. சூது விரும்பேல்.
49. செய்வ‌ன‌ திரு ந்த‌ச்செய்.
50. சேரிட‌ம் அறி ந்து சேர்.
51. சைஎன‌த் திரியேல்.
52. சொல்சோர்வு ப‌டேல்.
53. சோம்பித் திரியேல்.
54. த‌க்கோன் என‌த்திரி.
55. தான‌ம‌து விரும்பு.
56. திருமாலுக்கு அடிமைசெய்.
57. தீவீனை அக‌ற்று.
58. துன்ப‌த்திற்கு இட‌ம்கொடேல்.
59. தூக்கி வினைசெய்.
60. தெய்வ‌ம் இக‌ழேல்.
61. தேச‌த்தோடு ஒத்துவாழ்.
62. தைய‌ல்சொல் கேளேல்.
63. தொன்மை ம‌ற‌வேல். 64. தோற்ப‌ன‌ தொட‌ரேல். 65. ந‌ன்மை க‌டைப்பிடி.
66. நாடு ஒப்ப‌ன் செய். 67. நிலையிற் பிரியேல். 68. நீர்விளை யாடேல்.
69. நுண்மை நுக‌ரேல். 70. நூல்ப‌ல‌ க‌ல். 71. நெற்ப‌யிர் விளை. 72. நேர்ப‌ட‌ ஒழுகு.
73. தைவினை ந‌ணுகேல். 74. நொய்ய‌ உரையேல். 75. நோய்க்கு இட‌ம்கொடேல்.
76.ப‌ழிப்ப‌ன் ப‌க‌ரேல். 77.பாம்பொடு ப‌ழ‌கேல். 78. பிழைப‌ட‌ச் சொல்லேல். 79. பீடுப‌ற‌ நில். 80. புக‌ழ் ந்தாரைப் போற்றிவாழ். 81. பூமி திருத்தி உண். 82. பெரியாரைத் துணை கொள். 83. பேதைமை அக‌ற்று. 84. பைய‌லோடு இண‌ங்கேல். 85. பொருள்த‌னைப் போற்றி வாழ். 87. ம‌ன‌ம் த‌டுமாறேல். 88. மாற்றானுக்கு இட‌ம்கொடேல். 89. மிகைப‌ட‌ச் சொல்லேல். 90. மீதூண் விரும்பேல். 91. முனைமுக‌த்து நில்லேல்.92. மூர்க்க‌ரோடு இண‌ங்கேல். 93. மெல்லின‌ல்லாள் தோள்சேர். 94. மேன்ம‌க்க‌ள் சொற்கேள். 95. மைவிழியார் ம‌னைய‌க‌ல். 96. மொழிவ‌து அற‌ வ‌ழி. 97. மோக‌த்தை முனி. 98. வ‌ல்ல‌மை பேசேல். 99. வாது முன்கூறேல். 100. வித்தை விரும்பு. 101. வீடு பெற‌ நில். 102. உத்த‌ம‌னாய் இரு.
103. ஊருட‌ன் கூடிவாழ். 104. வெட்டு என‌ப் பேசேல். 105.வேண்டி வினைசெயேல்.
106. வைக‌றைத் துயிலெழு. 107. ஒன்னாரைத் தேறேல். 108. ஓர‌ம் சொல்லேல்.

சுப்புர‌த்தின‌ம்
த‌ஞ்சை.
http://vazhvuneri.blogspot.com
http://arthamullavalaipathivugal.blogspot.com

நிஜமா நல்லவன் said...

ரொம்ப நன்றி sury.

ஜீவா (Jeeva Venkataraman) said...

நம்ம முயற்சியும் பாருங்க!

தென்றல்sankar said...

நல்லமுயற்சி தொடருங்கள்

SP.VR. SUBBIAH said...

///உடையது விளம்பேல்------------Avoid injurious words////

உடையது = சொந்தமானது, உரியது என்னும் சொல் உருபுச் சொல்.

உடையது விளம்பேல் என்றால் உன்னிடம் உள்ள் செல்வம்,நல்லது, கெட்டது இவற்றைப் பிறரிடம் கூறாதே!

எனக்குத் தெரிந்ததைச் சுட்டிக் காடியுள்ளேன் அமமணி!:-))))

Avoid injurious words?

கயல்விழி முத்துலெட்சுமி said...

சுப்பையா சார் சின்னப்பிள்ளைங்களுக்கு இப்பல்லாம் ஆங்கிலத்தில் அர்த்தம் சொல்லவேண்டி இருக்கேன்னு இணையத்தில் தேடி அப்படியே காப்பிப்பேஸ்ட் செய்துட்டேன் .. தவறு தான். மாற்றிவிடுகிறேன்.. இப்ப போட்டிருக்கறது சரியா ?

கயல்விழி முத்துலெட்சுமி said...

சூரி சார், தென்றல் சங்கர்,ஜீவா நன்றி.

SP.VR. SUBBIAH said...

////சுப்பையா சார் சின்னப்பிள்ளைங்களுக்கு இப்பல்லாம் ஆங்கிலத்தில் அர்த்தம் சொல்லவேண்டி இருக்கேன்னு இணையத்தில் தேடி அப்படியே காப்பிப்பேஸ்ட் செய்துட்டேன் .. தவறு தான். மாற்றிவிடுகிறேன்.. இப்ப போட்டிருக்கறது (உடையது விளம்பேல்------------Dont proclaim your wealth) சரியா ? ////

Dont proclaim your wealth

பரவாயில்லை!

Don't proclaim what you possess!

இப்படியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்!

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் சகோதரி?

கயல்விழி முத்துலெட்சுமி said...

அப்படியே மாத்திட்டேன் சுப்பையா சார்! நன்றி.

ரமேஷ் வைத்யா said...

நீரின் ராணி மீனாகும்
நீர்தான் அதற்கு உயிராகம்
கையில் தொடுங்கள் பயமாகும்
வெளியில் எடுத்தால் உயிர்போகும்.
நம்ம டிரான்ஸ்லேஷன்.

கயல்விழி முத்துலெட்சுமி said...

உங்கள் தமிழாக்கம் ரொம்ப அருமையா இருக்கு ரமேஷ் வைத்யா.. இந்த பேரில் ஒரு இசை சகோதரர்கள் இருந்தாங்களே..