July 24, 2008

ஏ ஃபார் ய கேம் Z ஃபார் zapak

கொஞ்ச நாளா டேக் யாரும் தரலையே எப்படி பதிவு போடறதுன்னு காத்திருந்தேன் . நட்சத்திரத்தை(இந்தவார தமிழ்மண நட்சத்திரம் சந்தனமுல்லை) தினம் எட்டிப்பார்த்துட்டு வந்திட்டிருந்தேன் அவங்க கூப்பிட்டுட்டாங்க..
இந்தா பிடிங்க சில தளங்களின் முகவரிகள்.. ஏபார் ஆப்பிள் மாதிரி


A----------------------agame என் பெண்ணுக்கு பிடித்த விளையாட்டெல்லாம் இங்கதான் இருக்கு பீட்சா கடை , ஹேர் ட்ரஸர், ச்யூ ஹோட்டல் , கேக் மேக்கரா எல்லாம் அவ அவதாரம் எடுக்கும் போது நாம் பார்த்து வாவ் சொல்லனும்.
B----------------------bbc english ஆங்கிலம் கற்றுக்கொள்ள அப்பப்ப எட்டிப்பார்ப்பது
E---------------------- esnips பாட்டுக்கேட்க
------------------------எப்படி எப்படி?

F---------------------- fisher price குட்டிப்பையன் விளையாட அதுவும் ஏபிசி zoo விளையாட்டுல இன்ஃபேண்ட் க்ளிக் செய்துட்டா எந்த பட்டன் தட்டினாலும் வரிசையா வருமா தானே சரியா செய்ததா நினைச்சு முன்னல்லாம் மகிழ்ச்சியாகிடுவான்..
------------------- இனிய பாடல்கள் எப் எம் வேர்ல்ட் இதுல குறிப்பா இளையராஜா சேனல்

G--------------------- கூகிளாண்டவர் தான் வேறென்ன?
H--------------------- ஹம்மபுள் ஹம்மா hummable humma இப்ப கொஞ்ச நாளாத்தான் தெரியும் இந்த தளத்தை ஆனா இப்ப அடிக்கடி பயன்படுத்தறேன்.. ஹிந்தி யும் தமிழும்.. பாட்டு கேட்க..
I ----------------------இமெம் பாட்டு கேட்க...
M------------------- ம்யூசிக் இண்டியா ஆன்லைன் பாட்டு கேட்க ( பாட்டுக்கேக்காம இருக்க முடியாதே )
O-------------------- ஆர்குட்
P---------------------- pbs kids குட்டிப்பையன் விளையாட
S----------------------- சிஃபி
T------------------------ தமிழ்மணமே தான். www.thamizmanam.com/
U------------------------அப் டு டென் குட்டிப்பையன் விளையாடறதுக்குத்தான்.. அவன் கத்துக்கலாம் விளையாடலாம். "" இப்ப என் டேர்ன் அப்பறம் உன் டேர்ன் வரும் ஓகே அம்மா .. ""
W------------------------ விக்கிபீடியா www.wikipedia.org
Y------------------------யாஹூ குடும்பத்தினர் மெயிலுக்காக
Z------------------------- zapak zuma மாதிரி விளையாட்டு.. நான் விளையாட, பையனுக்கு ரேசிங்கார்ஸ்



நான் அடுத்துக்கூப்பிட விரும்புவது

சளைக்காம பதிவிட்டு தள்ளும் ஆயில்யன்
பிறந்தநாளுக்கு பதிவுகளேபரிசா குவிந்த மைப்ரண்ட் , மைப்ரண்ட்
பதிவே போடாம தப்பிச்சிட்டிருக்கற மங்கை.

வழிநெறி:
தலைப்பு :: ‘ஏ ஃபார் ஆப்பிள்
அன்றாடம் புழங்கும் தளங்களுக்கு முன்னுரிமை கொடுங்க
உங்க பதிவுக்குள் அடிக்கடி போவதால், அதை விட்டுடுங்க
இன்னும் மூணு பேரை பிடிங்க .. எழுத வைங்க..

33 comments:

rapp said...

மீ த பர்ஸ்ட்

rapp said...

நீங்க சொல்லிருக்க லிங்கெல்லாம் எனக்கும் உபயோகப்படரா மாதிரி இருக்குங்க முத்து. நெறைய இசை சம்பந்தமாத்தான் பார்ப்பீங்க போலருக்கு :):):)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராப் ரொம்ப மகிழ்ச்சிப்பா.. இப்பத்தான் ராஜ நடராஜன் அவர்பதிவில் உங்க வாழ்த்துக்கு ஆனந்தக்கூத்தாடுவதை பார்த்துட்டுவ் வந்தேன்.. மீத பர்ஸ்ட் வேறயா ? :))

rapp said...

ஹி ஹி என் கடன் (தமிழ்மண)பணி செய்து கிடப்பதே

ஆயில்யன் said...

ஒரு நாளைக்கு இம்புட்டு விசயங்களா பார்க்குறீங்க!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)) (ஆனந்த கண்ணீர் வருது!)

(பரவாயில்ல கொஞ்சம் நேரம் பசங்களுக்கும் விட்டுக்கொடுக்கறீங்க போலிருக்கு!)

:))

ராமலக்ஷ்மி said...

பயனுள்ள பல தளங்களுக்கு வழி சொல்லியிருக்கிறீர்கள் கயல்விழி.

இவன் said...

இதில e for இவன் என்னு போட்டிருக்கலாமே ஹி ஹி ஹி

சந்தனமுல்லை said...

நன்றி முத்துலெட்சுமி!!ம்ம்..நிறைய கேம்ஸ்-ஆ இருக்கே..பிற்காலத்தில் உபயோகமாகும் பப்புவுக்கு!!

கோவை விஜய் said...

மிகவும் பயனுள்ள பல தளங்களுக்கு சுலபமான வழி சொல்லியதற்கு நன்றி .

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

மங்களூர் சிவா said...

நன்றி முத்துலெட்சுமி அக்கா!!ம்ம்..நிறைய கேம்ஸ்-ஆ இருக்கே..பிற்காலத்தில் உபயோகமாகும்

Thamiz Priyan said...

கயல்வி.. முத்துலட்சுமி அக்கா... பெயரை மாத்தினா ஒரு அட்வெர்டைஸ் மெண்ட் பதிவு போடுங்க....நிறைய பாட்டு கேக்குறீங்க போல இருக்கு.... பசங்களும் நிறைய விளையாடுறாங்க கேம்ஸில்....:))

Thamiz Priyan said...

நீ பார்க்கும் பதிவுகளைச் சொல்! நீ யாரென்று நான் சொல்கிறேன்! என்ற புதிய மொழி வரும் போல இருக்கு... :)

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...
நீ பார்க்கும் பதிவுகளைச் சொல்! நீ யாரென்று நான் சொல்கிறேன்! என்ற புதிய மொழி வரும் போல இருக்கு... :)
//

அப்ப என்னைய கண்டுபிடிக்கப்போறீங்களா தமிழ்! ஆஹா மீ த எஸ்கேப்பு ஆகிடறலாம்போல...???

மங்கை said...

ஆஹா...ஆரம்பிச்சுட்டாங்கப்பா... நிஜமாவே போட்டாச்சா??

நானே கண்ண கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கேன்...ஏன்பா என்னை மாட்டி விடறீங்க...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயில்யன் என்ன செய்வதுப்பா.. புடுங்கிக்கறாங்க கணினிய அம்மா நீ தானே சொன்னே பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் தரேன்னு .. சரியா கேக்கறான் குடுக்காம இருக்க முடியுமா?
----------------------------
ராமலக்ஷ்மி பயனுள்ளதா இருந்ததா நன்றிப்பா.

--------------------
இவன் உங்க கையில் ஆட்டம் வரும்போது போட்டிருங்க சரியா ? ஏன்னா எனக்கு தெரியல முன்னாடி :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சந்தனமுல்லை இன்னும் நிறைய லிங்க் குழந்தைங்களுக்குன்னு என் பதிவுல இருக்குப்பா... குழந்தைகள் என்ற வகையில் பாருங்க ..நன்றி.:)

---------------------
விஜய் நன்றி
-------------------
மங்களூர் சிவா நன்றி எல்லாரும் பிற்காலத்துக்குன்னு சேர்த்து வைக்கிறீங்களா பரவாயில்லை நல்லவிசயம் .
-------------------------
--------------------------

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ்ப்பிரியன் புதுமொழி நல்லா இருக்கு..
:)
-------------
ஆயில்யன் பயப்பாடம எழுதுங்க இதுல இருக்கற எப் எம் வேர்ல்ட் ம்யூசிக் சைட் நீங்க எனக்கு அறிமுகம் செய்தது தானே.. இதுல ஹம்மா ஜீவ்ஸ் அறிமுகம் செய்தது.. எல்லாம் நட்புகளுக்குள் பகிர்தல் தானே..
-----------
மங்கை இதை விட்டா ஈஸியான வேற டேக் வராது போல அதான் உங்களை எப்படியாவது படிகக் வைக்கனுன்னு...:)) மாட்டிவிட்டுட்டேன்.ப்ளீஸ் பேரக்காப்பாத்துங்கப்பா...

ராஜ நடராஜன் said...

பெரும்பாலும் பாட்டுக்கச்சேரியா? எனக்கு பி.பி.சி மட்டும்தான் தேறும் போல.முன்பெல்லாம் டிம் செபாஸ்டின் ஹார்டாக்,ஞாயிற்றுக்கிழமை டாக்குமெண்டரி நமது ஸ்பெசல்.டிம் செபாஸ்டின் இப்ப குசும்பு மாதிரி கும்மிகளை மாத்தனுமின்னு துபாய் புரோகிராமுக்குப் போய்விட்டார்:)

யட்சன்... said...

இப்படி ஒரு சரடு...ஓடீட்டு இருக்கா!

நல்லாத்தான் இருக்கு...!

எனக்கென்னவோ Y for YATCHAN...இதான் நல்லாருக்கு.

ஹி..ஹி..ம்ம்ம்ம்

கோபிநாத் said...

சில லிங்கெல்லாம் இப்பதான் பார்க்கிறேன்..ரொம்ப நன்றிக்கா ;)

NewBee said...

/
F---------------------- fisher price// நன்றி

//எந்த பட்டன் தட்டினாலும் வரிசையா வருமா தானே சரியா செய்ததா நினைச்சு முன்னல்லாம் மகிழ்ச்சியாகிடுவான்..
//

:-))

hummable humm - நன்றி. :)

சென்ஷி said...

பதிவு நல்ல உபயோகமான தகவல்கள் உள்ளடக்கியுள்ளது. நீங்கள் ஒரு நுட்ப பதிவர் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்

MyFriend said...

போட்டாச்சுக்கா ;-)

http://engineer2207.blogspot.com/2008/07/lkg.html

தமிழன்-கறுப்பி... said...

சென்ஷி said...
\\\
பதிவு நல்ல உபயோகமான தகவல்கள் உள்ளடக்கியுள்ளது. நீங்கள் ஒரு நுட்ப பதிவர் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்
///

ரிப்பீட்டு...:)

தமிழன்-கறுப்பி... said...

பாட்டு நிறைய இருக்கு...!

Thekkikattan|தெகா said...

பணம் பண்ண ஒரு ஐடியா... ஆ முதல் ஃ வரை உபயோகமான தளங்களின் முகவரியும் அதன் பிரத்யோக பயன்களையும் விவரிச்சு எல்லோ பேஜஸ் மாதிரி ரெடி பண்ணி ஒரு பப்ளிசரை பிடிச்சு போட்டுடுங்க... :-).

Anonymous said...

nalla muyarchi.

sury siva said...

ஆடி மாதம் ஆரம்பம்.
ஆடி வெள்ளம் ஓடி வரும்.
காட்டு வழியாக வரும்.
காட்டாறெனப் பெயர் கொள்ளும்.

வாடி இருக்கும் பயி்ரனையும்
நாடும் நல் நீர் நல்கும்
பாடும் பறவையினம் பலவும்
ஓடி வந்து கரை அமரும்.

காட்டாறு வருவாரென
கண் துஞ்சா நெஞ்சங்களும்
காவிரியாறு பெருகுமென
காத்திருப்போர் கவலைகளும்
ஒன்றே !

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://ceebrospark.blogspot.com
http://arthamullavalaipathivugal.blogspot.com

sury siva said...

அது எப்படி நான்
http://kaattaaru.blogspot.com
க்கு போட்ட மறுமொழி இங்கு வந்திருக்கிறது ?

ஒண்ணும் புரியவில்லையே !!
நான் போட்ட மறுமொழி இதுவே !!

a ...to .... z
ல் விட்டுப்போன சில எழுத்த்துக்களுக்கு சில பதிவுகள் இங்கே:

c for http://ceebrospark.blogspot.com
i for ilakkiya-inbam.blogspot.com
j for jeevagv.blogspot.com
k for kavinaya.blogspot.com
k also for kaattaaru.blogspot.com
v for venbaaeluthalaamvangam.blogspot.com
v also for vazhvuneri.blogspot.com

சுப்பு தாத்தா.
தஞ்சை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராஜ நடராஜன் இசையின்றி அமையாது என் உலகு :)

--------
யட்சன் .. ஆமா கொஞ்ச நாள்தானே ஒய் அப்பறம் வேற லெட்டர் சொல்லுவீங்க..
:)
-------------
கோபி , புதுவண்டு நன்றி நன்றி..
--------------
சென்ஷி.. அப்பப்ப நிரூபிச்சிட்டே இருக்கனும் இல்லன்னா எப்படின்னு தான் :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி மை ப்ரண்ட் ..நன்றி தமிழன்..

--------------
நன்றி தெக்கிக்காட்டான்.. சொல்லிட்டீங்க இல்ல..அடுத்த மாசம் கடைகளில் புத்தகம் வந்துடும்.. என்னுதுல்ல வேற யாருதாச்சும் ...:) நானெல்லாம் என்னைக்கு இப்படி எல்லாம் உருப்படியா செய்திருக்கேன்..
----------------
நன்றி ஓம்சதீஷ்
நன்றி விக்னேச்வரன்
------...
நன்றி சூரி சார்... இது ப்ளாக் ஸ்பாட் தவிர்த்து என்பதால் தான்.. இலல்ன்னா தான் இருக்காங்களே எல்லா எழுத்திலும் நம்ம பதிவர்கள்.. :))

ISR Selvakumar said...

இதே போல நீங்கள் அ முதல் ஃ வரை முயற்சிக்கலாம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழிலா... செல்வக்குமார்..
இன்னும் யாரும் அந்த தொடர் விளையாட்டுக்கு கூப்பிடலயே..? :)