August 12, 2008

புதுகைத்தென்றலின் கேள்விக்கு ஒரு கேள்வி!

நான் அஞ்சாப்பு படிக்கும்போது நடந்த கதை இது.
என் வகுப்பு தோழி ஒருத்திக்கு என் வகுப்பு தோழன் ஒருவன் காதல் கடிதம் குடுத்துவிட்டான். அந்த பொண்ணு ஒரே அழுகை. விசயம் ஆசிரியைக்கு தெரிஞ்சதும் அவனைக்கூப்பிட்டு ஏண்டான்னு கேட்டதுமில்லாம அவன் என் கூட தான் ரிக்ஷால வருவாங்கறதால் ..அவங்கப்பாக்கு ஒரு கடிதம் எழுதி இதை குடுத்துடுன்னு என் கிட்ட குடுத்துட்டாங்க.

சாயங்காலம் நானும் குடுத்துட்டேன் வேற வழி. அடுத்தநாள் அவன் பள்ளிக்கு வந்தான். ஆனா சட்டை போடல. அடிச்ச அடியில் சட்டை போடமுடியாம ஆகிடுச்சு. 12 வருடங்களுக்கு பிறகு அதே தோழி வேறு ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டாள். அந்த நண்பன் வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டான் ..

இப்ப புதுகைத்தென்றலோட கேள்விக்கென்ன பதில்? பதிவைப்படித்ததும் எனக்கு அந்த நிகழ்வுதான் மனசுக்குள் வந்தது.

இப்ப நண்பர்கள் தினம் வந்தபோது மகள் நிறைய ப்ரெண்ட்ஷிப் பேண்ட் வாங்கினா. எல்லாம் பெண்கள் அணிவது. ஆண்களுக்கான் ஒன்று கூட இல்லை. இப்போது 5 ம் வகுப்பு . இரண்டுவருடங்களுக்கு முன்புவரை ஆண்கள் பெண்கள் என்ற பிரிவு இல்லாமல் தான் பழகிவந்தார்கள். ஏன் பையன்கள் ஒருவர்கூட நண்பர்கள் இல்லையா என்றால்.. இல்லம்மா எல்லாம் சேட்டை பசங்கதான் . இரண்டு பசங்க நல்ல பசங்க ஆனால் கட்ட முடியாது. எங்கள் வகுப்பில் யாருமே ஆண்களுக்கு கட்டுவதாக இல்லை. நான் எப்படி ?

ஆனால் பிறகு இரண்டு பையன்களுக்கான் பேண்ட் களை வாங்கிக்கொண்டாள்..விசாரித்ததில் ஆண்கள் பெண்கள் என்று வகுப்பில் பிரிவாக இருக்கத்தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது.
எப்போது ஆரம்பித்தது ஏன் என்றால் தெரியவில்லையாம்.என்ன சொல்வது ? குழப்பமாக இருக்கிறது புதுகை எனி ஐடியா?

29 comments:

ஆயில்யன் said...

குட் கொஸ்டீன் :)

ambi said...

கேள்வி இன்னும் கொஞ்சம் தெளிவா இருந்திருக்கலாமோ? வரவர நீங்க கமல் மாதிரி பேச ஆரம்பிச்சீடீங்க. :p

ஒரு உள்ளேன் அக்கா! போட்டுக்கறேன்.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஆயில் அப்ப இதுல கொஸ்ட்டின் புரியுதா? அப்பசரி ஏன்னா அம்பி இன்னும் தெளிவான்னு கேக்கறதால :)
---------------------
அம்பி இன்னும் காலமிருக்கே.. உங்க பையன் வளர்ந்து, பள்ளிக்கூடம் போய் அவன் ப்ரெண்ட்ஸ் பத்தி நீங்க அவனிடம் பேசற காலத்துக்கு..:)

கமல் அளவுக்கா குழப்பறேன்.. பாருங்க ...பதிவெழுதறதே அதனால் தான் குறைச்சிட்டேன்.. :)
கேள்வி பெரிசா இல்ல இப்ப இருக்கற சூழ்நிலைக்கு நாம ப்ரெண்டிலியா இருன்னாலும் அவங்க தனித்தனிய பள்ளிக்கூடத்தில் இருக்காங்களே என்ன செய்யறதுங்கறதுதான்..

சந்தனமுல்லை said...

ஹாய் முத்துலெஷ்மி...இங்கயும் என் உடன் பணிபுரியும் தோழியின் பிள்ளைகளுக்கு அதே வயது..அம்மாக்களுக்கும் அதே பிரச்சினை.ஆனா, கிட்ஸ்-லாம் தெளிவா ஒரே முடிவில இருக்காங்க..நான் பொண்ணுங்ககிட்டே/பசங்ககிட்டே பேசமாட்டேன்னு!! :-))

இவன் said...

நல்லா ஆரம்பிச்சு தெளிவா குழப்பி இருக்கீங்க.... வேற வழி இல்ல அம்பி ஸ்டைல்ல உள்ளேன் ஐயாதான்

இவன் said...

நான் இன்னும் ரொம்ப சின்னப்பையன் எங்கிறதால புரியாம இருக்கலாம்

ராமலக்ஷ்மி said...

இங்கே பெங்களூரில்தான் இப்படி என நினைத்தால் அங்கே டெல்லியிலும் அப்படித்தானா:)? நாலு ஐந்தாவது வகுப்பில் இப்படித்தான் பிரிஞ்சிடுவாங்க. ரொம்ப போட்டியிருக்கும். பசங்க கொஞ்சம் மிதப்பா பொண்ணுங்கள ஒருபடி கீழ வச்சு பாக்குறது. சொல்லிச் சொல்லி சரி பண்ணணும், ஏன்னா எனக்குப் பையன்:)!அப்புறம் 9,10 வருகையில் தானாக நார்மல் ஆயிடுவாங்க. இப்ப 12-ல். கல்லூரிக்குள் நுழைகையில் இன்னும் இதன் புரிதல்கள் தானாகவே நிகழும் என்பது என் எதிர்பார்ப்பு அபிப்பிராயம். ஆனால் தடுமாற நேர்கையில் தாங்கி நிறுத்த தயார் நிலையில் எப்போதும் இருக்கணும் தாயாரும் தந்தையும்.

ஆமாம் அம்பி, உள்ளேன் மட்டும் போட்டுட்டு போயிட்டே இருக்கலாம் நீங்க இப்போதைக்கு நிம்மதியா..:))!

புதுகைத் தென்றல் said...

இங்கே அந்த பிரச்சனை இல்லை கயல்விழி. ப்ரண்ட்சிப் பாண்ட் வாங்கி இருவரும் போட்டார்கள். அதெல்லாம் பிரச்சனை இல்லை.

இங்கே இருவரும் சகஜமாக பேசிக்கொள்கிறார்கள்.

கோபிநாத் said...

நானும் அம்பி அண்ணாவுக்கு ஒரு ரீப்பிட்டே போட்டுகிறேன் ;)

ஆயில்யன் said...

//கமல் அளவுக்கா குழப்பறேன்.. பாருங்க ...பதிவெழுதறதே அதனால் தான் குறைச்சிட்டேன்.. :)//


ஆஹா:)))

புதுகைத் தென்றல் said...

அப்புறம் 9,10 வருகையில் தானாக நார்மல் ஆயிடுவாங்க.//

அப்பதாங்க போட்டி இன்னும் ஜாஸ்தியா இருக்கும். பசங்க எப்பவும் போல விளையாட்டுத்தனமா இருப்பாங்க மார்க் குறையும், பெண்பிள்ளைகள் மார்க் அதிகம் வாங்குவாங்க.

இப்ப 12-ல். கல்லூரிக்குள் நுழைகையில் இன்னும் இதன் புரிதல்கள் தானாகவே நிகழும் என்பது என் எதிர்பார்ப்பு அபிப்பிராயம்.

சான்ஸே இல்ல. ப்ரபசனல் கோர்ஸ் படிக்கிறவங்க தவிர மத்தவங்க ஒன்லி லேடிஸ் காலேஜோ/ இல்லை ஒன்லி பாய்ஸ் காலேஜோதான்.//ஆனால் தடுமாற நேர்கையில் தாங்கி நிறுத்த தயார் நிலையில் எப்போதும் இருக்கணும் தாயாரும் தந்தையும்.//

அதுவரைக்கும் ஏன் வெயிட்டணும்?
அதுக்கு முன்னரே புரிய வைத்தால் தடுமாற மாட்டார்களே?

NewBee said...

ஓகே! நான் இன்னும் இந்த ஸ்டேஜ் வரல. மகன் இன்னும் குட்டிதான்.

ஆனால் இங்கே முதல் பாகுபாடு வந்துவிட்டது. நோ பின்க்,ஒன்லி ப்ளூ. :). இது, இங்கு உள்ள கலாச்சாரம். அதை மாற்ற முடியாது.குழந்தையிலிருந்து தாத்தா பாட்டிகள் வரை, கிண்டல் செய்வார்கள்.

அந்தந்த சமூகத்தில் இருக்கும் (பின்னூட்டங்கள் வந்த டில்லி,பங்களூர்,UK,புதுகை தென்றல் ஊர்) பழக்கங்களே இந்தப் பிரிவின் அடித்தளம்.

வயதின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இது வெவ்வேறு வடிவங்களில் வந்து கொண்டுதான் இருக்கும். சற்று, சிரமாக இருந்தாலும், இவை நடக்கும் போது, பெற்றோராகிய நாம் இதைக் கூலாக ஹாண்டுல் செய்ய வேண்டும்.

நாமும் இது சிரீயஸ், இது இப்படி, அது அப்படி, இப்படி இருந்திருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமான தகவல் தரமால்,

தினமும் பள்ளியில் நடப்பவற்றைப் பற்றிப் பேசுவது போல் ஒரு cool tone-ல் ,

1.குழப்பாமல். அளவான தகவல் கொடுக்க முடிந்தால் கொடுக்கலாம்.

2.தெரியவில்லை என்றால், ம்ம்ம்ம்...'தப்புத்தான்...ஆனா நடந்துடுச்சு, depends...lets see..' என்று தெரியாது என்றே சொல்லலாம்.

3.அல்லது, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு personality இருக்கும்.அந்தக் குழந்தையின் இயல்பு, ஒரு விளையாட்டுப் பொருள் கிடைக்கவைல்லை என்றால் எப்படி சாமாளிப்பான்/பாள், பிடிக்காத சாப்பாட்டை எப்படி சாப்பிடுவான்/வாள், புரியாத ஒரு குழந்தகள் படத்தைப் பார்த்துவிட்டு என்ன கண்ணோட்டம் கொடுப்பான்/பாள் என்பது போல்.

அது தாய், தந்தைக்குத் தெரியும்.அதற்கு ஏற்றார் போல் தேவையான அளவு சொல்லிவிட்டு, மிச்சதை விட்டுவிடலாம். ரெண்டு நாளில் பிராஜக்ட் ஒர்க், ஸ்போர்ட்ஸ் டே என்று அவர்கள் priority மாறும்.

4.அல்லது தாய்,தந்தைக்கு தன் குழந்தைக்கு எது சரி எனப்படுகிறதோ அது.

இதுதான் வழி என்று சொல்லவில்லை, இது புத்தகத்தில் இருப்பதும் இல்லை.எனக்குத் தோன்றியவை இவை. அவ்வளவு தான் :). Basically, explaining things depends on the kids personality and the parents.That much info. is enough.

// புதுகைத் தென்றல் said...

அதுவரைக்கும் ஏன் வெயிட்டணும்?
அதுக்கு முன்னரே புரிய வைத்தால் தடுமாற மாட்டார்களே?
//

புதுகைத் தென்றல்!

உங்கள் பிள்ளைகளின் வயது எனக்குத் தெரியவில்லை. (இங்கே, நீங்கள்,கயலக்கா,ராமலக்ஷ்மி,நான் எல்லாருமே, நம் குழந்தகளின் வயதைப் பொருத்தும் கண்ணோட்டம் அளிக்கிறோம்)

அதனால், என் கண்ணோட்டம் வேறாக இருக்கலாம்.

//அதுக்கு முன்னரே புரிய வைத்தால் தடுமாற மாட்டார்களே?
//

எததெற்கு முன்னரே, எதை, எதை என்று சொல்வீர்கள்.இந்த உலகத்தில் பிரச்சனைகளுக்கா பஞ்சம்?. எல்லாவற்றையும் முன்னமே சொல்லிவிட முடியுமா? இந்தப் ஆண்/பெண் பேதம் பற்றி மட்டும் முழுவதுமாக சொல்லித் தெளியலாம் என்று நினைத்தால், பிள்ளை அதிர் நோக்கும் மற்ற எல்லாவற்றையும் இதே முறையில் தெளியவைத்துக் கொண்டேதானே இருக்க வேண்டும். இதற்கு மட்டும் தான் நான் புரியவைப்பேன், மற்றவை என்னால் முடியாது என்று நாம் ஒதுங்க முடியுமா?

எல்லாவற்றையும் முன்னமே இது இப்படி, நீ இப்படி இருந்து கொள் எனறால், வளரும் பிள்ளை தனாய் உணரும், சிந்திக்கும் சுயத்தை இழந்துவிடமாட்டானா/ளா. உலடத்தில் எல்லாம் pre-defined, அம்மா/அப்பா எழுதிய வழிகளில் சென்றால் வாழ்க்கை இனிமை என்பது சரியா?

ஒரு அளவிற்கு பொதுவாக அட்வைஸ் செய்துவிட்டு, அத்கமாக முன்னமே ஓதாமல், தடுமாற நேர்கையில் தாங்கி நிறுத்த தயார் நிலையில் எப்போதும் நாம் இருக்கலாமே

வாழ்க்கையில் பல பல பிரச்சனைகளை பிள்ளைகள் சந்திக்காமலே போகலாம். அதற்கு முன் ஏன் குழப்பவேண்டும்.

ஸ்ஸ்ஸ்ஸ்...பதிவு பெருசாயுடுச்சு :))

NewBee said...

கயலக்கா,

நான் முன்பு இட்ட பின்னூட்டம் நிறைய பரிதாகிவிட்டது என நினைக்கிறேன். அதைப் பதிவாகவே இட்டுவிட்டேன்.

http://naanpudhuvandu.blogspot.com/2008/08/blog-post_12.html.

இந்த உரலா, என் பின்னூட்டாமா எதை பப்ளீஷ் செய்ய எனும் குழப்பத்திற்கு........ நீங்களே ஜட்ஜ் :P :D :))))

புதுகை தென்றல், உங்கள் கேள்விகளின் தொடர்ச்சியாயும், ராமலக்ஷ்மியின் கருத்தின் பிரதிபலிப்பாயும் இந்தப் பதிவு :)))))

ராமலக்ஷ்மி said...

//சான்ஸே இல்ல. ப்ரபசனல் கோர்ஸ் படிக்கிறவங்க தவிர மத்தவங்க ஒன்லி லேடிஸ் காலேஜோ/ இல்லை ஒன்லி பாய்ஸ் காலேஜோதான்.//

சரி தென்றல், என் மகன் ப்ரொஃபஷனல் காலேஜ்தான் செல்லவிருப்பதால் அந்த நோக்கில் என் எதிர்பார்ப்பைச் சொன்னேன். பிள்ளைகள் வளருமிடமும் சூழலும் மாறுபடுவதையும் கருத்தில் கொள்ளத்தான் வேண்டும் மாற்றுக் கருத்து எனக்குமில்லை.

//அதுவரைக்கும் ஏன் வெயிட்டணும்?
அதுக்கு முன்னரே புரிய வைத்தால் தடுமாற மாட்டார்களே?//

இதற்கு பதில்...
http://naanpudhuvandu.blogspot.com/2008/08/blog-post_12.html
இங்க வாங்க ந்யூ பியின் பதிவில் தொடருவோம்..!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

உண்மைதான் சந்தனமுல்லை பேசுவதை விட பேசாமல் இருக்கும்போது தான் ப்ரச்சனை வருமோன்னு எனக்கு குழப்பம்.. அதான் கேள்வியா போட்டுவச்சேன் புதுகைத்தென்றலிடம்... :)
------------------------
இவனே நீங்க சின்னப்பையனா ஓகே.. ஆனா உள்ளேன் ஐய்யால்லாம் போடுவீங்களா என் பதிவுக்கு அப்படி ஒரு ரெகுலர் விசிட்டரா நீங்க ஓகே ஒகே :)

-----------
ராமலக்ஷ்மி ஆமாப்பா.. இதுல கைதட்டி பாட்டு விளையாடுவாங்கள்ள அதுலகூட ஆக்டிவ் கேர்ல்ஸ் லேஸி பாய்ஸ் ன்னு தான் அவங்கள டீஸ் செய்துபாட்டுவச்சிருப்பாங்க..

முத்துலெட்சுமி-கயல்விழி said...

புதுகைத்தென்றல் இவர்கள் சாதாரணமாவும் பேசிக்கொள்வது உண்டு தான்.... சண்டைக்காரங்க ரேஞ்சுக்கு ஆண் பெண் குரூப் பிரிஞ்சு இருக்காங்க..நான் சின்ன ஊருல இருந்தேன் .. 6 வகுப்பிலிருந்து ஒன்லி கேர்ள்ஸ் படிப்புதான்.. எனக்கும் இவளுடைய சூழ்நிலைக்கும் ரொம்ப ரொம்ப வேறுபாடு ... நான் இப்படித்தான் இருக்கனும்ன்னு எதுவுமே சொல்லறதில்லை அவளை.. ஓ அப்படியா ன்னு கேட்டுப்பேன்.. பார்த்துக்கோ உனக்கே தெரியும்ங்கற ரேஞ்சுலயே தான் இருக்கேன்..:)

-----------
கோபி சொல்லனுமாப்பா உனக்கு ரிப்பீட்டேவுக்கு வ்சதியா அம்பி போட்டதும்போதுமே !எப்படியும் அம்பியைவிட காலம் இருக்கே!
--------------------

முத்துலெட்சுமி-கயல்விழி said...

புதுவண்டு.. ஆகாகா.. நானே புதுகைத்தென்றலோட பதிவில் போட்ட பின்னூட்டம் பதிவாகற அளவு பெரிதாகிட்டதேன்னு தானே இங்க பின்னூட்டபதிவுன்னு வகைப்படுத்தினேன்.. என்ன ஒண்ணு நான் கேள்வியா போட்டிருக்கேன்..நீங்க பதிலாட்டம் போட்டிருக்கீங்க . பின்னூட்டமும் இருக்கட்டும் உங்க லிங்க்கும் இருக்கட்டும் ..காசாபணமா நம்ம ப்ளாக்கர் தானே!
----------------
ராமலக்ஷ்மி ஆக மொத்தம் எல்லாம் குழம்பி தெளிவோம் வாங்க போவோம் புதுவண்டோட பதிவுக்கு :)

ராமலக்ஷ்மி said...

புதுவண்டின் பதிவிலே போட்டாச்சு சுபம்:))!

Thekkikattan|தெகா said...

கேள்வி பெரிசா இல்ல இப்ப இருக்கற சூழ்நிலைக்கு நாம ப்ரெண்டிலியா இருன்னாலும் அவங்க தனித்தனிய பள்ளிக்கூடத்தில் இருக்காங்களே என்ன செய்யறதுங்கறதுதான்..//

உங்க பதிவை படிக்கும் பொழுது கேள்வி சரியா எதை நோக்கின்னு பிடிபடல, பின்பு பின்னூட்டத்தில் வைச்சிப் பிடிச்சிட்டேன்.

பிரச்சினை எல்லாம் ஒழிஞ்சுடும் அந்தந்த பருவம் வரும் பொழுது, சின்ன பசங்க ஒரு வயசில சொல்லுவாய்ங்க எனக்கு கேர்ள் ஃப்ரெண்ட்ஸே வேணாம், உவ்வேன்னு ஒரு 6ல் இருந்து 10க்குள்ள அப்படின்னு நினைக்கிறேன்.

சும்மா இயல்பா இருக்க விடுங்க, எல்லாம் சரியா வந்துடும் :-).

தமிழ் பிரியன் said...

கேள்விக்கு பதிலெல்லாம் தெரியலை... பசங்களுக்கு மெச்சூரிட்டி வரும் போது தானாக அனைத்தையும் உணர்ந்து கொள்வார்கள் என்றே தோன்றுகின்றது... என் மகனுக்கு 2 வயது கூட ஆகலை. இன்னும் 7,8 வருடம் கழித்தே யோசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.. :)

மங்களூர் சிவா said...

இயல்பா இருக்க விடுங்க, எல்லாம் சரியா வந்துடும் :-).

மங்கை said...

அமிட்டியில எந்த வகுப்பானாலும் ரெண்டு பேரும் சேர்ந்துதான்பா உட்கார்ந்துட்டு இருக்காங்க..எனக்கு அது அதிசியமா இருந்துச்சு..அவங்க இஷடத்துக்கு உட்கார்ந்துக்குறாங்க.. நான் எல்லா பள்ளியிலும் அப்படித்தான்னு நினச்சேன்.

பத்து வயது வரை சேர்ந்து விளையாடி, குழந்தைகளுக்கே உரித்தான வெள்ளை மனதுடன்தான் இருக்காங்க.. ஆனா அதுக்கு அப்புறம் ரெண்டு பேரோட விருப்பு வெறுப்பு கூட மாறுதே. அவங்க விளையாடுற வீடியோ கேம்ஸ் இருந்து வெளியே விளையாடும் விளையாட்டு வரை எல்லாமே மாறுதே... இல்லையா?

வெளிய பொண்ணுக ஸ்கிப்பிங்க், இல்லன்னா ஓடி விளையாடறது.. மிஞ்சிப்போனா பாட்மிட்டன்...பசங்க கிரிக்கெட்..ஃபுட் பால்...

ஆனா இது கூட ஒரு வயது வரைக்கும் தான்.. அதுக்கு அப்புறம் அவங்களுக்கு எல்லாம் புரியத்தொடங்கும்... அந்த சமயத்துல நாம சரியான வழிகாட்டியா இருந்தா போதும்.... எதுவுமே ஏதேச்சையா நடக்கனும்... நாம பெருசா முயற்சி எடுக்க வேண்டியது இல்லை... படிப்பில் கவனமும், முயற்சியும், பொறுப்பும் இருக்குதான்னு நாம பார்த்துட்டா போதும் லட்சுமி..

யப்பா முச்சு வாங்குது..ரொம்ப பெருசா போயிடுச்சு...

ராஜ நடராஜன் said...

// சான்ஸே இல்ல. ப்ரபசனல் கோர்ஸ் படிக்கிறவங்க தவிர மத்தவங்க ஒன்லி லேடிஸ் காலேஜோ/ இல்லை ஒன்லி பாய்ஸ் காலேஜோதான்.//

அப்படியும் இருக்குதா?நானெல்லாம் பசங்களும் அம்மிணிகளும் படிச்சதுதான்.ஆனா வகுப்பு மட்டும் தனித்தனி:)வ்குப்பு வெளியே அம்மிணிகளை நாமலும் திரும்பி பார்க்கிறதில்ல.அதுகளும் பேருக்குன்னு கூட திரும்பப் பார்த்ததில்லை:)

சென்ஷி said...

இந்த பதிவு மூலமா நீங்க அஞ்சாவது படிச்சுருக்கீங்கன்னு நாங்க தெரிஞ்சுக்கிட்டோம். :).

நான் அஞ்சாவது படிச்சப்ப எங்களோட படுபயங்கர எதிரியாத்தான் வேற வகுப்பு பெண்களை நாங்க பார்த்துட்டு வந்திருக்கோம். எங்க கிளாஸ்ல படிச்ச பொண்ணுங்ககிட்ட வம்பு செய்யறதில்லை. நாங்க அப்ப செஞ்ச சேட்டையெல்லாம் அடுத்த கிளாஸ் பொண்ணுங்ககிட்டதான். அவங்க நொண்டி விளையாடற கோட்டை அழிக்கறது, கோலம் போட்டா அதுமேல அழகா தண்ணிய ஊத்திட்டு ஓடுறதுன்னு படுபயங்கர தீவிரவாத செயல்லாம் செஞ்சுருக்கோம். அதுவுமில்லாம பொண்ணுங்ககிட்ட பேசுறத பார்த்தாலே ஏண்டா பொண்ணுங்ககிட்ட பேசுற அளவுக்கு பெரிய மனுசனாகிட்டியாங்கற கேள்விய வேற கேட்டுத் தொலைக்கணும்.

அப்புறம் கொஞ்சம் பெரிய மனுசத்தனம் வந்ததும் (அப்ப ஆறாவது படிக்கறோம்) பேசக்கூட முடியாத அளவுக்கு அவங்களை தனி செக்ஷன் போட்டு பிரிச்சு வச்சுட்டதால நாங்கல்லாம் ஏதோ அவங்களை ஏலியன்ஸ் கணக்காத்தான் நெனைச்சுட்டு வந்திருக்கோம்.

பசங்க பொண்ணு பேசறத பார்த்தாலே கரெக்ட் பண்ணிட்டான் போலன்னு நினைக்கற கெராமத்துல வேற வழியே கிடையாது. கீப் டிஸ்டர்ன்ஸ்.. கீப் ஆன் டிஸ்டர்ன்ஸ் மட்டும்தான்.. :)

புதுகைத்தென்றல் அவங்க பதிவுல கேட்ட கேள்விக்கு பதில், பெரியவங்க பசங்ககிட்ட இல்ல அவங்க முன்னாடி செய்திகளை பரிமாறிக்கற விசயத்துல இருக்கவேண்டிய கவனம் ரொம்ப முக்கியம்.

உங்க பையனுக்கு இல்ல பொண்ணுக்கு எல்லா உலக விஷயமும் தெரிஞ்சு வைக்கணுங்கற ஞானம் அவசியம் தான்.ஆனா அதுக்காக அவங்க முன்னாடி எதை பேசலாம் எதை மறுக்கலாம்ன்னும் நாம யோசிக்கணும். பசங்களுக்கும் பொண்ணுக்கும் வித்தியாசங்கறது பழகறதுல கிடையாது. நாம அவங்களுக்கு எதிர்பாலை பத்தி கத்துக்கொடுக்கறதுலதான் இருக்குது. ரொம்ப முன்னாடி பசங்க அப்பாகிட்ட பேச கூச்சப்படுறதும், அப்பா பசங்ககிட்ட மரியாதைய எதிர்ப்பார்க்குறதும் இருந்தது. ஆனா இப்ப அது டோட்டலா மாறிடுச்சு. உங்களுக்கே கூச்சமா இருந்தா பசங்க அவங்க பிரண்ட்ஸ்கிட்டதான் விஷயத்தை பகிர்ந்துக்க முடியும். அது 90 சதவீதம் பாதகமா முடியற வாய்ப்புகள் அதிகம். என்னை மாதிரி ஒரு மோசமான நண்பன் இருந்தான்னா போதும். அது 100 சதவீதம் பாதகம்தான். :)

எல்லோரும் நினைக்குறா மாதிரி பசங்க போகப்போக தெரிஞ்சுப்பாங்க.. இல்ல தெளிஞ்சுடுவாங்கன்னு நினைச்சா அது எல்லோருக்கும் கஷ்டம்தான். என்னடா சின்னப்பய ஓவரா கருத்து சொல்றானேன்னு யாரும் தப்பா நினைக்கப்படாது. நீங்க உங்க பசங்களைப்பத்திதான் கருத்து சொல்ல முடியும். நான் என்னைப்பத்தியே சொல்லிக்கறேன். அவ்வளவுதான். இன்னும் நிறைய்ய சொல்ல முடியும். பின்னூட்டம் பெருசாகறதால நான் டைம் கிடைச்சா பதிவு போடறேன்.

மொத்தத்துல பின்னூட்டத்துல நியுபீ சொல்லியிருக்கற கருத்துக்கு நான் படுபயங்கரமா ஆமோதிக்கறேன்.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

தெக்கிக்காட்டான்...10 வது வரை இது தொடருமா.. சரி சரி..

---------------
தமிழ்ப்பிரியன் ஓகே வெயிட்டீஸ்..
-------------
மங்களூர் சிவா.. நான் மகளிடம் சும்மா கதை கேட்பதோட சரி ..எதுவும் சொல்லறதுக்கில்ல ..

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அம்மணி என்ன இத்தனைபெரிய பின்னூட்டம்.. சரிதான் நீங்க சொல்றது 10 வயசுக்கு மேல இந்த விருப்புவெறுப்புகளாலேயே இவங்க பிரியாறாங்கன்னு இப்ப புரியுது..
இவங்க பள்ளியில் டீச்சர் தான் உக்கார வைக்கிறாங்க இப்பவரை..சிலர் பெண்கள் பெண்கள் ஆண்கள் ஆண்கள்ன்னா பேசுவாங்க நிறையன்னு பெண் ஆண் ன்னு உக்காரவைக்கிறாங்க.. சிலர் அமைதியான ஆளு ஒருத்தரு சேட்டையாளு ஒருத்தர்ன்னு .. இஷ்டத்துக்கு.இன்னும் தானா இடம்
தேர்வு செய்யும் அளவுக்கு டீச்சர்கள் விடல..

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ராஜ நடராஜன் .. நம்பறோம் நம்பறோம்..
:)
------------------
சென்ஷி பின்னூட்டபதிவுக்கு ஏற்கனவே நியூபி ஒரு பின்னூட்டபதிவு போட்டிருக்காப்ல ..இப்ப சென்ஷி டர்ன்னா ஓகே ..

சென்ஷியின் கருத்து .. பெற்றோர் எதிர்பாலரைப்பற்றி பேசனும் பிள்ளைங்ககிட்ட ..புதுகைத்தென்றலின் பதிவின் கருத்தேதான் ,.. சரிதானே..

இசக்கிமுத்து said...

நடுநிலை பள்ளிகளில் பிரிந்தாலும், கல்லூரிகளில் அந்த பாகுபாடு வருவதில்லை.

கயல்விழி said...

சொல்றத்துக்கு ஒன்னுமில்லை, ஆனால் இந்த கால குழந்தைகள் ரொம்ப மாறிவிடவில்லை என்று புரிந்துக்கொண்டேன். நாங்களும் அந்த சமயத்தில் ஆண் குழந்தைகளை வெறுத்தோம்.