August 29, 2008

ஜென்மாஷ்டமி - குற்ற உணர்ச்சி!


சென்ற வருடத்தில் ஒரு முறை தில்லியில் நடைபெறும் ஜென்மாஷ்டமி விழாவினைப்பற்றி பதிவிட்டிருந்தேன். குழந்தைகள் செங்கல் மண் கொண்டு அமைக்கும் சிறு கோயிலுக்காக செங்கல் மற்றும் மணலை அருகில் எங்காவது கட்டிட வேலை நடக்கும் இடத்திலிருந்து எடுத்துவருவது வழக்கமாம்.

போனவருடம் தான் முதன் முதலில் எங்கள் குழந்தைகளும் செய்யத்தொடங்கினார்கள் என்பதால் செங்கல் மட்டுமே ஒருவீட்டிலிருந்து எடுத்து வந்து உபயோகித்தார்கள். செங்கல் சுற்றிவர கட்டம் கட்ட என்பதால் அதனை அப்படியே திரும்ப கொடுத்துவிடலாம். ஆனால் மணலை தரையோடு சமணப்படுத்தி வேலைகள் செய்துவிடுவதால் மீண்டும் அது கட்டிட வேலைக்கு உபயோகமற்றதாக ஆகிவிடும்.

இந்த முறை எங்கள் வீட்டுக்கு பின்புறம் அரசாங்க உதவியோடு கட்டப்படும் வாக்கிங்க் ஏரியாவுக்கான செங்கல்களை எடுத்துக்கொண்டார்கள் . ஜென்மாஷ்டமி முடிந்து நாட்கள் ஆகியும் இன்னமும் யாரும் அதை திரும்ப வைக்கவும் இல்லை. செங்கற்கள் இப்போது கார்களை நிறுத்துவதால் உடைந்து வருகிறது. எப்படியும் அந்த கற்கள் உடைத்துத்தான் பயன்படுத்தப்படும் என்பதால் இப்போது கிடைத்தாலும் அது லாபமே.

மணல் வேண்டாம் என்று அதற்கு பதில் மரத்தின் இலைகளைக் கொண்டு பார்க் மற்றும் ரங்கோலி நிறங்களால் பாதை மற்றும் நதி செய்து கொண்டாடினோம். மற்ற குழுவினர் எங்கெங்கோ கட்டிட வேலை நடக்கும் இடங்களில் இருந்து கொஞ்சமல்ல 4 அல்லது 5 மூட்டைகளாக கட்டப்பட்ட மணல்களை ( சிலவற்றில் சிமெண்ட் கூட கலந்து வைக்கப்பட்டிருந்தது) அந்த வீட்டினரிடம் கேட்காமலே கொண்டு வந்து பரப்பி வந்தனர். நான் அவர்களிடம் கேட்கவும் செய்தேன். இல்லை ஆண்ட்டி கேட்கவில்லை என்றே பதிலுரைத்தார்கள். அவர்களுக்கு எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லை.

எனக்கு இது மிக வருத்தத்தைத் தந்தது. கற்களை அந்த இடத்துக்கு மாற்ற தங்கள் சேமிப்பிலிருந்து ரிக்ஷா வை வரவழைத்துக் கொண்டு வந்து வைக்க முடிந்த அந்த சிறுவர்களால் அதை மீண்டும் கொண்டுவைக்கத்தோன்றவில்லை. மற்றும் மணலை கேட்காமல் எடுத்துவருவது தவறாகத்தோன்றவில்லை.

இந்த வருத்தத்தை என் தோழி ஒருவரிடம் பகிர்ந்து கொண்டபோது , அவர் சொன்னார்,"" இல்லை லெக்ஷ்மி அவர்கள் நிச்சயம் கேட்டாலும் மறுத்திருக்கப்போவதில்லை... "நீங்கள் யோசிப்பது எதற்காக? நாம் நம் வீட்டில் இந்த தினங்களுக்கு சமீபத்தில் கட்டிடவேலைகளை வைக்காமல் இருந்தால் போயிற்று""என்று.. :(

இருக்கலாம் இது வழக்கமானதாக மாறிவிட்டிருக்கலாம். ஆனால் இது குழந்தைகளுக்கு ஒரு கெட்ட எண்ணத்தை விதைக்காதா? நமக்கு தேவையானவற்றை சாமி காரியம் என்பதால் யாரும் மறுப்பதில்லை என்பதால் எங்கிருந்து வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைப்பது தவறு இல்லையா?

எல்லாரும் செய்வதால் , வழக்கமாகிவிட்டதால் ஒருவிசயம் தவறாக இருந்தாலும் சரியாக ஆகிவிடக்கூடுமா?ஒரு திருடனை ஒருவர் அடித்துக்கொன்றால் குற்றம். கிராமமே சேர்ந்து கொன்றால் குற்றமில்லை என்பது போல தேவையில்லாத எண்ணம் தோன்றுகிறது .

வெளிநாட்டினர்( ஒரு சில )நாட்டை சுத்தமாக வைத்திருக்கிறார்கள்.. அவர்கள் முறையாக வெளியிடங்களில் நடந்து கொள்கிறார்கள் என்கிறோம். அதற்கு அடிப்படையில் சிறுகுழந்தையாக இருக்கிற போதிலிருந்தே அவர்கள் பயிற்சி கொடுக்கப்படுகிறார்கள்.(பெற்றவர்களின் பொருள் என்றாலே இதை பயன்படுத்திக்கொள்கிறேன் என்று கேட்கும் நிலை உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ) இந்தகுழந்தைகளுக்கு தவறை சுட்டிக்காட்டாதது பெற்றோர்கள் குற்றம் இல்லையா?

30 comments:

ஆயில்யன் said...

ஹய்யா நாந்தான் பர்ஸ்ட்டூ! :))

வடுவூர் குமார் said...

தவறை சுட்டிக்காட்டாதது பெற்றோர்கள் குற்றம் இல்லையா?
நிச்சயமாக,சந்தேகமே இல்லாமல்.

ஆயில்யன் said...

//இது வழக்கமானதாக மாறிவிட்டிருக்கலாம். ஆனால் இது குழந்தைகளுக்கு ஒரு கெட்ட எண்ணத்தை விதைக்காதா? நமக்கு தேவையானவற்றை சாமி காரியம் என்பதால் யாரும் மறுப்பதில்லை என்பதால் எங்கிருந்து வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைப்பது தவறு இல்லையா?
//

கண்டிப்பாக இது பெற்றோர்களின் அலட்சியப்போக்கில் விளையும் சம்பவங்கள்தான்!

இது என்ன பெரிய விசய்ம் அது அரசு பணிக்கு வந்த பொருட்கள்தானே என்றும் கூட அலட்சியம் இருக்கலாம்!

தவறான ஒரு செயலினை சுட்டி காட்டி தவற்றினை திருத்த செய்வதில் பெற்றோர்களினை தவிர்த்து வேறு யாரும் மிக எளிதில் செய்துவிட இயலாது!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயில்யன் பர்ஸ்டே தான் :)
\\அது அரசு பணிக்கு வந்த பொருட்கள்தானே என்றும் கூட அலட்சியம் இருக்கலாம்!//
இந்த முறை அரசு செங்கல் திரும்ப வைக்காததற்கு இது காரணம் என்றால்.. ஒவ்வொருமுறையும் வீடுகளிலிருந்து எடுக்கும் போது வைப்பதில்லையே.. மற்றும் இந்த முறையும் மணல் கொண்டுவந்தது வீடுகளில் இருந்து தானே.. ? எப்பொழுதுமே குற்ற உணர்ச்சி இருப்பதில்லை என்கிறேன் நான்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி வடுவூர் குமார். மணலை தவிர்த்துவிட்டேன்.அடுத்த வருடத்திற்கு.. செங்கலும் இல்லாமல் எப்படி செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். ஏனென்றால் குழந்தைகளின் ஆர்வும் ஈடுபாடையும் குலைக்கவும் விருப்பம் இல்லை..

சந்தனமுல்லை said...

பொறுப்புகளை உணர்த்துவது நிச்சயமாக பெற்றோரின் கடமை!
இது ஆட்டிடுயூடையும் பொறுத்தது
இல்லையா?

சந்தனமுல்லை said...

வித்தியாசமா இருக்கு உங்க விளையாட்டு..குழந்தைகளுக்கு ரொம்ப நல்லா பொழுது போகும் இல்லையா?

கோபிநாத் said...

நல்ல பதிவு என்பதை விட இது ஒரு நல்ல பாடம் ;) கத்துக்கிட்டேன்!.

நானும் இப்படி அடுத்தவன் ்வீட்டு பொருள் தானே என அலச்சியமாக இருந்திருக்கிறேன்.

இனி இது போன்ற விஷயங்களில் குழந்தைகளுக்கு தவறு எது சரி எது என்று எடுத்த கூற வேண்டும்.

நன்றி அக்கா ;)

Thamiz Priyan said...

சிறு வயதில் இருந்தே தவறு செய்யும் போது, அதை தவறு எனக் கூறி தடுக்க வேண்டும்... பெரியவர்களாகும் போதும் அது அவர்கள் மனதில் இருக்கு. எல்லோரும் செய்கின்றார்கள் நானும் செய்கின்றென் என்ற மனநிலையே தவறுகளுக்கு வழி வகுக்கும்.

Thamiz Priyan said...

கிருஷ்ணஜெயந்தி முன்னிட்டு நடந்த ஒரு பேன்சி டிரஸ் போட்டியில் சின்ன கிருஷ்ணன் செய்த ஒரு குறும்பைக் கேளுங்கள் .3 லிருந்து 5 வயதுக்கான குழுவைச்சேர்ந்த பையன் அவன் மேடையில் ஏறவேண்டுமென்றால் ஃபோனைக் குடு என்று அவன் அம்மாவிடம் வாங்கி வைத்திருந்திருக்கிறான் . மேடை ஏறும்போது "சரி அதைக்குடுத்துவிட்டு புல்லாங்குழலை வாங்கிக்கொள்ளடா" என்றால் "அது வேணாம் போ" என்று மேடையில் மைக்கில் சொல்லிவிட்டு போன் நம்பர்களை அழுத்திக்கொண்டே கொஞ்ச நேரம் மேடையில் நின்று விட்டு வந்து விட்டான்.


ஆமாம் மாடர்ன் கிருஷ்ணன் இல்லையா..இன்னும் எத்தனை நாள் தான் ராதையை புல்லாங்குழல் ஊதி அழைப்பது. இப்போது தான் மொபைல் வந்து விட்டதே...."ஹலோ ராதா ஐ யம் வெயிட்டிங் ஃபார் யூ" ன்னா , "எங்கே இருக்கிறாயென்று " கேட்டு விட்டு அவளும் தேடாமல் கொள்ளாமல் நேராக வந்துவிடப்போகிறாள்...


:))))))

அக்கா உங்க பழைய பதிவில் இருந்து கட் பேஸ்ட் பண்ணியது.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் முத்துலட்சுமி.
குற்ற உணர்வே இல்லாமல் தான் வளர்ந்து பெரியவர்கள் ஆகிறார்கள். அம்மா அப்பா சொல்லவில்லையானால் யார் திருத்துவது அவர்களை. ஏழ்மையினால் திருடுபவர்கள் சில பேர் என்றால் ஆடம்பரத்துக்காக எடுப்பவர்களை,அவர்கள் சிறுவர்களாகவே இருந்தாலும் தட்டிக் கேட்கத்தான் வேண்டும்.

Anonymous said...

என்னை பொறுத்த வரை தப்பு செய்தா அது கடவுளுக்காக இருந்தாலும், ஏன் கடவுளே செய்தாலும் அது தப்பு தான். நாம தான் பசங்களுக்கு சொல்லி புரிய வைக்கணும். நல்லதொரு பதிவு கா.

வருண் said...

****அவர்களுக்கு எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லை.****

இந்த குற்ற உணர்ச்சி, தனிப்பட்ட மனிதருக்குள் உள்ள "மாரல்ஸ்" ஐ பொறுத்ததுங்க!

மேலும் அறியாமையால் அவர்கள் இதை உணர்வதில்லை!

எனக்குத்தெரிய என் சொந்தக்காரர்கள், நண்பர்கள் அனைவரும் திருட்டு வி சி டி (படம் வெளிவந்து 1 வாரத்தில்)பார்க்கிறார்கள்- எந்த வித குற்ற உணர்வும்யும் இல்லாமல்!

நல்ல மாரல்ஸ் உள்ளவங்களும் அறியாமையால் குற்ற உணர்ச்சி இல்லாமல் இருப்பார்கள்னு னு எனக்கு தோன்றுகிறது.

சென்ஷி said...

//ஸ்ரீ said...
என்னை பொறுத்த வரை தப்பு செய்தா அது கடவுளுக்காக இருந்தாலும், ஏன் கடவுளே செய்தாலும் அது தப்பு தான். நாம தான் பசங்களுக்கு சொல்லி புரிய வைக்கணும். நல்லதொரு பதிவு கா.
//

:))

REPEATEAYYYYY

பரிசல்காரன் said...

தங்கச்சி..

கண்ணன் ஜெயந்தியல்லவா?

அவனது குறும்பில் கொஞ்சமாவது குழந்தைகள் காட்டட்டும் என்று அவனே விளையாடியிருப்பான்!

என்னாங்கறீங்க?

ச.பிரேம்குமார் said...

கண்டிப்பா பெற்றவர்கள் குற்றம் தான் அக்கா. இப்போவே இத திருத்தலேன்னா அப்புறம் எல்லாத்துலயும் TAKEN FOR GRANTED மனோபாவம் வந்துரும் :(

ambi said...

//மற்றும் மணலை கேட்காமல் எடுத்துவருவது தவறாகத்தோன்றவில்லை.
//

யக்கா,
மணல் திருட்டை பதிவிட்டு கேட்டதால் இன்று முதல் நீங்கள் 'வின்செண்ட் பூவராகி' என அழைக்கப்படுவீர்கள். :))

சரி, சரி, நற நறன்னு பல்லை கடிக்க வேணாம்.

பேரண்ட்ஸ் கிளப் பிளாக்கில் மெம்மரா சேருங்க, இத மாதிரி நல்ல விஷயங்களை அங்க பகிர்ந்துக்கலாமே! (அல்லது ஏற்கனவே நீங்க மெம்பரா? கொல்லன் பட்டறையில் நாந்தான் ஊசி விக்கறேனா?) :D

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சந்தனமுல்லை, குழந்தைங்க முதல் நாளிலிருந்தே இதற்காக என்ன என்ன பொருள் கொண்டுபோகவேண்டும் எப்படி செய்யவேண்டுமென்று காகிதத்தில் குறித்துக்கொண்டு செயல்படுவதும் உற்சாகமாகவும் இருப்பார்கள்..
நீங்கள் சொல்வது போல ஆட்டிட்டியூடு தான் இங்கே நான் சொல்லவருவதும் சரியா சொல்லிட்டீங்க..
------------------
கோபி ரொம்ப நல்லது .... நீங்களும் யோசிச்சுப்பார்த்திருக்கீங்க..நானும் குழம்பித்தானே தெளிந்திருக்கிறேன்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ்பிரியன் சொல்லிக்கொடுக்கும் போதே ஒரு குழப்பம்..வாழ்க்கையில் நாளை இதுபோன்ற மற்றவர்களுக்கு நடுவில் குழந்தைகள் சிரமப்படுவார்களோ என்று....எல்லோரும் ஒருமாதிரி சிந்திக்க இவர்கள் வேறமாதிர் சிந்திக்க ப்ரச்சனை வருமோ?
--------------------
வல்லி இதே ஒரு ஏழைச்சிறுவன் எங்க ஏரியாவில் சும்மா நடந்து போனால் கூட என்ன ஏது என்று மிரட்டி அனுப்பிவிடுவார்களாக்கும்..
இவர்கள் படித்தவர்கள் பணக்காரர்கள்.. மேனர்ஸ் பழகியவர்கள்.. என்ன சொல்வது?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ஸ்ரீ...

--------------
ஆகா வருண் எனக்கு இருக்கும் இன்னொரு குற்றவுணர்ச்சிய சொல்லிட்டீங்களே.. காசு கொடுத்து பார்க்க தியேட்டரில் இங்க வந்தா தியேட்டரிலியே பார்க்கறது தான்.. தில்லி யில் எல்லா படமும் வருவதில்லை எனவே நானும் விசிடியில் பார்க்கத்தான் செய்கிறேன்.. :(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சென்ஷி :)
-------------

பரிசல் அண்ணா நீங்க போட்ட பின்னூட்டம் பார்த்தா திருடித்தின்ன கண்ணனைப்போலவே குட்டீஸும் திருவிளையாடல் செய்யறாங்கங்கறீங்களோ ? நான் தான் அதை பெரிய அரசியலாக்கிட்டோனோ ? :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ப்ரேம்குமார் நன்றி..
அம்மாவா இருப்பது என்னமோ , எப்பப்பாரு இதிலிருந்து இவங்களுக்கு என்ன சொல்லிக்கொடுக்கலாம்..? இதிலிருந்து இவங்க மெண்ட்டாலிட்டி எப்படி மாறும் ?
அது நல்லதா கெட்டதா?
இப்படியே யோசிகக்வைக்குது.. :) அதன் வினையே இந்த பதிவு.
-----------
அம்பி மணல் செங்கல் திருட்டுன்னு தலைப்பு வைக்கலாமான்னு தான் யோசிச்சேன்ப்பா..;)
பேரண்ட்ஸ் கிளப் ஆளுங்க எல்லாம் பக்காவா இருந்துட்டு அட்வைஸ் பண்ராங்க.. நான் பார்த்தீங்கள்ள குழம்பி தெளியறேன் நான் போய் அங்க சொல்வதா..? அங்க நான் வாசகி.. கற்பவள்.. :)

யட்சன்... said...

ம்ம்ம்ம்ம்....

ராமலக்ஷ்மி said...

//அதற்கு அடிப்படையில் சிறுகுழந்தையாக இருக்கிற போதிலிருந்தே அவர்கள் பயிற்சி கொடுக்கப்படுகிறார்கள்.//

அங்கு பயிற்சி கொடுப்பவர்களும் சரியாக இருந்து வருகிறார்கள்.

//இந்தகுழந்தைகளுக்கு தவறை சுட்டிக்காட்டாதது பெற்றோர்கள் குற்றம் இல்லையா?//

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

//பேரண்ட்ஸ் கிளப் ஆளுங்க எல்லாம் பக்காவா இருந்துட்டு அட்வைஸ் பண்ராங்க.. நான் பார்த்தீங்கள்ள குழம்பி தெளியறேன் நான் போய் அங்க சொல்வதா..? //

நாம குழம்புத் தெளிந்ததை மற்றவர்கள் தெளிய தெரிய தரலாமே முத்துலெட்சுமி. நானும் மெம்பர் இல்லைதான். ஆனால் புதுகைத் தென்றலின் அழைப்பின் பெயரில்தான் "விழிப்புணர்வு" பதிவைக் கொடுத்தேன். மெம்மராக இல்லாமலும் செய்யலாமே. இங்கே பதிவிட்டாலும் இதையே அங்கும் கொடுத்து வைத்தால், பேரண்ட்ஸ் க்ளப்புக்கென்றே வருகிற வாசகர் வட்டத்தை [குறிப்பாக அவர்கள் பெற்றோர்களாகவே இருப்பதால்] சென்று அடையுமல்லவா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

@யட்சன் ..ம்..
--------------------
ராமலக்ஷ்மி முயற்சி செய்கிறேன்ப்பா.. வேறு எதாவது தோன்றும் போது அங்கேயும் அதை இடுகிறேன்...

துளசி கோபால் said...

அடுத்தமுறை சுற்றுச் சுவருக்குச் செம்மண்ணால் ரெண்டு பக்கமும் பட்டையாச் சுவர்ன்னு சொல்லி அடிச்சு நடுவில் கோலக்குழலினால் பட்டையான கோலம் போட்டு இது கற்பனைச்சுவர்ன்னு சொல்லுங்க.

செய்யரது தப்புன்னு உணர்ந்தால்தானே குற்ற உணர்ச்சி வரும்????

Anonymous said...

Let's unite on http://www.tamiljunction.com and create a lively online Tamil community and find new Tamil friends worldwide.

http://www.tamiljunction.com is an effort to show the mightiness of Tamil people.

வருண் said...

****ஆகா வருண் எனக்கு இருக்கும் இன்னொரு குற்றவுணர்ச்சிய சொல்லிட்டீங்களே.. தில்லி யில் எல்லா படமும் வருவதில்லை எனவே நானும் விசிடியில் பார்க்கத்தான் செய்கிறேன். :( ****

படமே திரையிடவில்லைனா என்னங்க செய்வீங்க? அந்த குற்ற உணர்வு இருப்பதே போதும்ங்க.

நான் சொல்ல வந்தது, தமிழ்நாடில் இருந்துகொண்டே பார்ப்பவர்களைத் தான்.அவங்களுக்கு அந்த மாதிரி குற்ற உணர்ச்சியெல்லம் இல்லைங்க!

நல்லா சிந்திக்கிறீங்க, நீங்கள். வாழ்த்துக்கள்!

கவிதா | Kavitha said...

சென்னையிலாப்பா இருக்கீங்க.. நான் 2 முறை சென்று வந்தேன்... எனக்கு சென்னையில் மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று ....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

துளசி நல்ல ஐடியா அடுத்த முறை கட்டம் கட்டிருவோம்.. :)

--------------
கவிதா ,நான் தில்லியில் இருக்கேன்ப்பா.. நீங்க தக்ஷிண சித்ரா பதிவில் போட வேண்டிய பின்னூட்டத்தை இங்க போட்டுட்டீங்கன்னு நினைக்கிறேன் சரிதானே.. :)