October 8, 2008

எங்கள் வீட்டு கொலு -2008ப்ளாக்கர் படத்தை ஏற்ற சோதித்துவிட்டது அதனால் தாமதமாக கொலுபடங்கள்..புத்தக அலமாரியில் இருந்த புத்தகங்களை எல்லாம் படிகளாக்கி கொலுப்படிகள். (புத்தக அலமாரி காலியாக இருப்பதை கவனிக்கவும்.)


இது முதல் படி திருச்செந்தூர் முருகனின் வேலும் சேவல்கொடியும் .. இரண்டு பக்கமும் சாய்ந்து உட்கார்ந்த ஒய்யார பிள்ளையார்.. ஒன்றில் படகில் அமர்ந்திருக்கிறார். வெளிச்சம் போதவில்லை. கிருஷ்ணர் மற்றும் துர்க்கை. நடுவில் கதகளி பொம்மை. ( குருவாயூர்)


இரண்டாம் படியும் மூன்றாம் படியும் முழுக்க முழுக்க விநாயகர் கொலு . வெட்டிவேர் பிள்ளையார் , ப்ளாஸ்டிக் பிள்ளையார் , கண்ணாடி பிள்ளையார் , வெள்ளிப்பிள்ளையார், மண், மெட்டல், சைனா களிமண் எல்லா வகையிலும் .
நான்காம் படி சைனா களிமண் பொம்மைகள், ஒரு நியூயார்க் ஒளிரும் கண்ணாடி
சதுரம், ஒன்றுக்குள் ஒன்று போடும் யானை பொம்மை . (முதல் நாள் 5 யானையாக இருந்தது .. சபரி எல்லாவற்றையும் ஒன்றுக்குள் ஒன்று போட்டு வைத்துவிட்டான் அடுத்த நாள் )

5 படி தக்ஷிண சித்ராவில் வாங்கிய திரிகை , அம்மி, ஆட்டுக்கல், உரல், முறம்.. ஒரு ஜெய்ப்பூர் பித்தளை அடிபம்ப், மரப்பாச்சி , சின்ன ஜெயிண்ட் வீல்
DSC00096
இது அவசர செட்டப்... தில்லியின் ஒரு பகுதியின் மாடல்..
யமுனா ( நீலக்கலர் பேப்பர்) மேல மெட்ரோ போகுது பார்த்துக்குங்க
DSC00093

சபரி'ஸ் ஃ பேஷன்


ஒரு மால்.. குழந்தைகளுக்கு பிடித்த படங்கள் ஓடுகிறது. மை ஃப்ரண்ட் கணேஷா, ஓம் சாந்தி ஓம். செக்யூரிட்டி நிக்கிறார் வாசலில்.
DSC00092

மேக்ஸ் ஹாஸ்பிட்டல்..ஆம்புலன்ஸ்
DSC00095

மலைமந்திர்


கானா கேட்டப்பறம் தான் சுண்டலை விட்டது ஞாபகம் வந்தது ப்ளாக்கர் சொதப்பியதுல இந்த படம் எப்படியோ விட்டுப்போச்சு.. இந்தா வாங்கிக்குங்க எல்லாரும் .. அங்க யாரு அது இந்த பக்கம் ஒரு கை அந்த பக்கம் ஒரு கை நீட்டறது ? :)

68 comments:

சென்ஷி said...

me the first :)


ippo busy appuram vanthu padikkuren :)

சென்ஷி said...

ethukkum oru venduthalukku marukka oru

ME THE SECOND

pottukkaren :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அப்பறம் வந்து படிக்கும் அளவுக்கு இங்கே என்ன இருக்கு படம் கூட பார்க்கமுடியாத அளவு பிசியா.. சார்

rapp said...

me the 4th?

ஆயில்யன் said...

மீ த மூணு இல்லல்லா நாலு :)))
// முத்துலெட்சுமி-கயல்விழி said...
ஆமாம் ஆமாம் நீந்தான் சரியான கும்மி வாலு ஆச்சே)

ஹய்யா நானே ரிப்ளையும் போட்டுட்டேனே

அக்கா நவராத்ரி வாழ்த்துக்கள் :)))
/

ஆயில்யன் said...

நல்லா இருக்கு சிம்பிளா!

சபரி வெளையாண்டுருக்காரு போல :)))

rapp said...

// படம் கூட பார்க்கமுடியாத அளவு பிசியா.. சார்//

அதான?

கானா பிரபா said...

கொலு கலக்கல், பிரசாதம் எங்கே?

ஆயில்யன் said...

அந்த பெரிய போட்டோவும் ஒரு போட்டோ எடுத்து போடுங்க அக்கா நல்லா அழகா இருக்கு

(கிருஷ்ணன் படம்)

ஆயில்யன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
அப்பறம் வந்து படிக்கும் அளவுக்கு இங்கே என்ன இருக்கு படம் கூட பார்க்கமுடியாத அளவு பிசியா.. சார்
///

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!

ஆயில்யன் said...

ஹய்ய்ய் நாந்தான் பத்து போட்டிருக்கேன் :)))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

கானா கேட்டப்பறம் தான் சுண்டலை விட்டது ஞாபகம் வந்தது ப்ளாக்கர் சொதப்பியதுல இந்த படம் எப்படியோ விட்டுப்போச்சு.. இந்தா வாங்கிக்குங்க எல்லாரும் .. அங்க யாரு அது இந்த பக்கம் ஒரு கை அந்த பக்கம் ஒரு கை நீட்டறது ? :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ராப் நீதான் 4 த்.. சென்ஷி பிசி யோ பிசி சேட்டிங்காம்.. :)

--------------------

ஆயில்யன் ரிப்ளைக்கும் நன்றி..

rapp said...

மொதோ வரிசை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு(கதகளி பொம்மை எல்லாம் இருக்கே). பிள்ளையார் படி போட்டோவில் தெளிவா தெரியலை. ஐந்தாம் படியும் சூப்பர்:):):)

அவசரமா செஞ்சதில் எனக்கு மலைமந்திர் தெரியும். அது நல்லா செஞ்சிருக்கீங்க.

rapp said...

இவ்ளூண்டு சுண்டல் செஞ்சி வெச்சிருக்கீங்க, என்னை மாதிரி ஒரு ஆள் வந்தாலே தாங்காதே:):):)

பரிசல்காரன் said...

தங்கச்சி..

நவராத்திரி வாழ்த்துக்கள்.

பின்னூட்டத்துல (தமிழ்மணம் மூலமா ஓப்பன் பண்ணினா

//சென்ஷி said...

me the first :)


ippo busy appuram vanthu padikkuren :)
10/08/2008 4:05 PM // இப்படி வந்துதா, பேஜாராய்ட்டேன். எட்டாவது மாசமே கொலு வெச்சுட்டீங்களோன்னு!


அப்புறம்..

உங்களுக்கு சரியான க்ரியேட்டிவிட்டி!

மிகவும் ரசித்தேன்...

வாழ்த்துக்கள்!!!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஆயில்யன் அந்த படம் கோவர்த்தன் போயிருந்தப்ப வாங்கினோம்..இன்னொரு படம் இருக்கு அதையும் சேர்த்து படம் எடுத்து போடறேன்.. ஓகேயா..?

ஆயில்யன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
கானா கேட்டப்பறம் தான் சுண்டலை விட்டது ஞாபகம் வந்தது ப்ளாக்கர் சொதப்பியதுல இந்த படம் எப்படியோ விட்டுப்போச்சு.. இந்தா வாங்கிக்குங்க எல்லாரும் .. அங்க யாரு அது இந்த பக்கம் ஒரு கை அந்த பக்கம் ஒரு கை நீட்டறது ? :)
//


உங்களுக்கு சரியான க்ரியேட்டிவிட்டி!

ஆயில்யன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
ஆயில்யன் அந்த படம் கோவர்த்தன் போயிருந்தப்ப வாங்கினோம்..இன்னொரு படம் இருக்கு அதையும் சேர்த்து படம் எடுத்து போடறேன்.. ஓகேயா..?
//

ஒ.கேய்ய்ய்!

wokey!

கே!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ராப் நன்றி நன்றி..மலைமந்திர்ல பாரு ஒரு மயில் வேற உக்காந்திருக்கு மண்டபத்து மேல ஆனா கொஞ்சம் சாய்ந்திருச்சு மண்டபம்.. மெட்ரோ ட்ரெய்ன் போகுது யமுனை மேல அத பதிவுல சொல்ல விட்டு போச்சே..

முத்துலெட்சுமி-கயல்விழி said...

பரிசல் அண்ணா நன்றி.
அது என்னவோ டிபால்ட் டேட் செட்டிங்காமே .. நான் எதுவும் செய்யல ...:)

சோம்பேறித்தனம் அண்ட் இந்த ப்ளாக்கரானது எல்லாம் சேர்ந்து இன்னும் நிறைய செய்ய விட்டுப்போச்சு அடுத்த முறை இன்னும் நல்லா பார்க் செய்யனும்..

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ராப் அது ஒரு அட்சயபாத்திரம் அதை பார்த்து கொஞ்சம்ன்னு நினைக்காதே.. அள்ள அள்ள க்குறையாது.நீ உன் இஷ்டத்துக்கு சாப்பிடலாம்..

மலைநாடான் said...

சுண்டல் ரொம்ப நல்லாருந்திஞ்சுங்க. கொலுவும் தான். புது டில்லி மாடல் ஜோரு.
பின்னிட்டீங்க போங்க :)

Jeeves said...

seedai murukku sundal innum pala patsanam illama koluvukkellam kalandhukka mudiyathu saari

Jeeves said...

// rapp said...
இவ்ளூண்டு சுண்டல் செஞ்சி வெச்சிருக்கீங்க, என்னை மாதிரி ஒரு ஆள் வந்தாலே தாங்காதே:):):)//
repeatteey

தாமிரா said...

மலைமந்திர் மற்றும் மால் அருமை. எல்லாத்தையும் விட கடைசி படத்தில் இருப்பதை ரொம்ப மிஸ் பண்றேன்.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நன்றி மலைநாடன்.. இன்னும் பச்சை பஸ் ரெட் பஸ் புதுசா வ்ந்திருக்கே அதை விடலியேன்னு இருக்கு..

சந்தனமுல்லை said...

ரொம்ப க்ரியேட்டிவ் கொலு!! பசங்களை நல்லா வேலை வாங்குன மாதிரி தெரியுதே?? ம்ம்..நல்லா இருக்கு முத்துலெட்சுமி..:-)

rapp said...

//10/08/2008 4:05 PM//

இது மாதம், தேதி, வருடம்னு வருது. நம்ம இந்திய முறையில் நாள், மாதம், வருடம்னு வரும். அதனால் குழம்பத் தேவையில்லை:):):)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஜீவ்ஸ் .... எங்க வீட்டுல சீடை முறுக்கு செய்யற வழக்கம் இல்லப்பா.. ஒன்லி சுண்டல் தான்..
சுண்டல் தான் அட்சய பாத்திரம்னு சொல்லிட்டேனே..

முத்துலெட்சுமி-கயல்விழி said...

என்ன தாமிரா என் பையனோட துணிக்கடை நல்லா இல்லையா.. ஏசிக்கடைங்க.. :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

சந்தனமுல்லை .. என் பொண்ணு பெயிண்டிக்ங் எல்லாம் அடிச்சுத்தந்தா.. பையன் கம் பாட்டில் எடுன்னா எடுத்துதருவான்.. கத்திரிக்கோலை எடுன்னா எடுத்து தருவான்.. எல்லாருமா சேர்ந்து தான் புத்தக அலமாரியைக் காலி செய்து படி கட்டினோம்.. :)

துர்கா said...

வெறும் சுண்டல் படத்தை மட்டும் போட்டு ஏமாத்த பார்க்குறீங்களே :(
எனக்கு வடை பாயசத்தோடு விருந்து வேண்டும் :P

தமிழ் பிரியன் said...

அக்கா, படங்களெல்லாம் சூப்பர்.... செட்டிங்ஸ் கலக்கல்... வேறு எங்கும் கொலுவில் இது போன்ற செட்டிங்ஸ் பார்த்ததில்லை... நல்லா இருக்கு!

தமிழ் பிரியன் said...

மறந்துட்டேன்... சுண்டல் பார்சலேய்ய்ய்ய்..:))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

என்ன துர்கா சுண்டல் படம் போட்டு ஏமாத்தாதீங்க வடைபாயாசம் படம் போட்டு விருந்து கொடுக்கறமாதிரி ஏமாத்துங்கங்கறீயா..? தில்லிக்கு வா விருந்த் வச்சிரலாம்.. பாவம் பிள்ளை எத்தன கண்டத்தை தாண்டி வந்திருக்குன்னு... :)
கண்டம்ன்னா ஆசியா ஆப்பிரிக்கா கண்டம்ன்னு நினைச்சுக்கப்போறாங்க..இது வேற கண்டம்.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

தமிழ்பிரியன் நீங்க பார்த்த கொலுவில் ன்னு சொல்லுங்க..இதெல்லாம் ஒன்னுமில்ல ஒவ்வொருத்தர் என்னவெல்லாம் செய்வாங்க..ஒவ்வொருத்தர் ஏன் எங்கப்பா இன்னமும் ஊரில் நிஜம்மாவே ஒரு அருவி ஓடற மலை.. செட் செய்வாங்களே..

Thooya said...

நல்லாயிருக்கு :)

துர்கா said...

//கண்டம்ன்னா ஆசியா ஆப்பிரிக்கா கண்டம்ன்னு நினைச்சுக்கப்போறாங்க..இது வேற கண்டம்//

ஹிஹி....பயணங்கள் முடிவதில்லை :)
கண்டங்களையும் சேர்த்துதான் :)

Little bud said...

ரொம்ப நல்லாயிருக்கு முத்துலெட்சுமி. Mallலும், கோயிலும் அழகா பண்ணியிருக்கீங்க.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நன்றி தூயா :) ....
-------------------
துர்கா said...
ஹிஹி....பயணங்கள் முடிவதில்லை :)
கண்டங்களையும் சேர்த்துதான் :) //

வாவ் துர்கா சூப்பர்...:) ஆனா பாவம் வேண்டாம் தொடராமல் இருக்கட்டும்

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நன்றி லிட்டில் பட்.. அந்த மால் ல ஒட்டி இருக்கற பெரிய பெண் மேல வெஸ்ட்சைடு ன்னு போடனும் ன்னு தேடினோம்.. பேப்பரில் கிடைக்கல... நல்ல நல்ல புக் கட் பண்ணி ஒட்டக்கூடிய தெல்லாம் வச்சு தான் கொலு செய்துட்டமே :(

தமிழ் பிரியன் said...

////முத்துலெட்சுமி-கயல்விழி said...

தமிழ்பிரியன் நீங்க பார்த்த கொலுவில் ன்னு சொல்லுங்க..இதெல்லாம் ஒன்னுமில்ல ஒவ்வொருத்தர் என்னவெல்லாம் செய்வாங்க..ஒவ்வொருத்தர் ஏன் எங்கப்பா இன்னமும் ஊரில் நிஜம்மாவே ஒரு அருவி ஓடற மலை.. செட் செய்வாங்களே..///

இருக்கலாம்... நம்மை கொலு பார்க்க எல்லாம் ‘உள்ளே’ விட மாட்டாங்க... :( வெளியே நின்னு பொரி, கடலை, சுண்டல் வாங்கிட்டு வந்துடுவோம்... :)

சென்ஷி said...

அக்கா கொலு போட்டோஸ் எல்லாமே சூப்பர் :)

//(புத்தக அலமாரி காலியாக இருப்பதை கவனிக்கவும்.)//

கவனிச்சுட்டேன் :)

சென்ஷி said...

வீட்ல எல்லோருக்கும் என்னோட நவராத்திரி வாழ்த்துக்கள் :)

சென்ஷி said...

எனக்கு எல்லா படமும் பிடிச்சுருக்குன்னாலும் சபரி'ஸ் ஃபேசன்ஸ்ல கலக்கல் கிரியேட்டிவிட்டி!

சூப்பரா இருக்குது.. ஆனா பசங்க போட்டுக்கற டிரஸ் எதுவுமே இல்லையே :(

அதே போல அந்த சாப்பிங்க் மால், மலை மந்திர் கலக்கல்.. :))

சாப்பிடாமலே சொல்ல முடியுது சுண்டலும் நல்லாயிருந்திருக்குமுன்னு :)

சென்ஷி said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
அப்பறம் வந்து படிக்கும் அளவுக்கு இங்கே என்ன இருக்கு படம் கூட பார்க்கமுடியாத அளவு பிசியா.. சார்
//

எனக்கு இங்க படம் ஓப்பன் ஆக லேட் ஆகும் அக்கா :(
பொறுமையா பார்க்கணுமேன்னு தான் மீ த ஃபர்ஸ்ட்டு போட்டுட்டு ஓடிட்டேன்:)

சென்ஷி said...

//rapp said...
// படம் கூட பார்க்கமுடியாத அளவு பிசியா.. சார்//

அதான?
//

வேணாம். அப்புறம் எதுனா சிவாஜி டைலாக்க டிஆர் வாய்ஸ்ல எடுத்து விட்டுடுவேன் :))

சென்ஷி said...

யமுனா மேல மெட்ரோ போகுறதுக்கு ரொம்ப பக்கத்துல மேக்ஸ் ஹாஸ்பிட்டலா அப்ப என்னோட கணிப்புபடி, மெட்ரோ இப்ப நொய்டாவுக்கே வந்துடுச்சு, மலைமந்திர் சரிதா விகார்லதானே இருக்குது. அந்த ஷாப்பிங்க் மால் கூட செக்டர் 18 ல இருக்குது :)) சரியா !?

யமுனா டெல்லியில நீலக்கலர்ல ஓடுதா.. என்ன கொடுமை அக்கா இது :)

துளசி கோபால் said...

சூப்பர் கொலு. அதுவும் ரெண்டாவது & மூணாவது படிகள் ஹைய்யா ஹைய்யா.

ஆமாம் . அது என்ன ஒன்னுக்குள்ளே ஒன்னு யானை? ரஷ்யன் டால் மாதிரியா? நல்லா இருக்கே. க்ளோஸ் அப் வேணும்.....


மெட்ரோ, மால் எல்லாம் பிரமாதம். அடுத்தமுறை சபரி ஃபேஷன்ஸ்லேதான் துணி எடுத்துக்கணும். என் சைஸ் கிடைக்குமா? :-))))

ஆமாம். அஞ்சாவது படியில்...அது என்ன முறமா?

மலை மந்திர் ஜோரா இருக்கு.

மாதினிக்கும் சபரிக்கும் பாராட்டுகள்.

கோபிநாத் said...

எல்லாமே சூப்பரு ;)

எனக்கு இந்த "இது அவசர செட்டப்... " ரொம்ப பிடிச்சிருக்கு ;)

கோபிநாத் said...

\\அங்க யாரு அது இந்த பக்கம் ஒரு கை அந்த பக்கம் ஒரு கை நீட்டறது ? :)
\\

வேற யாரு நாங்க தான் (சென்ஷி & கோபி ) ;-))

சந்தனமுல்லை said...

வாவ்!!

//என் பொண்ணு பெயிண்டிக்ங் எல்லாம் அடிச்சுத்தந்தா.. பையன் கம் பாட்டில் எடுன்னா எடுத்துதருவான்.. கத்திரிக்கோலை எடுன்னா எடுத்து தருவான்..//

என்ன ஒரு அம்மா..என்ன சமத்துக் குழந்தைகள்!! ரொம்ப ஜாலியா டைம் போயிருக்கும் இல்லையா? :-)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

தமிழிப்ரியன் ..ஓ அப்படியா விசயம்... ஊரிலும் சரி இங்கயும் சரி அந்த பாகுபாடெல்லாம் கிடையாது .. நம்ம வீட்டுக்கொலுவிற்கு வாங்க உள்ளே.. :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

சென்ஷி, அதென்னமோ இந்த முறை கொஞ்சம் யமுனாவில் தண்ணீர் ஓடுதுப்பா... மெட்ரோ கடைசி கட்ட வேலைகள் ஓடுது அதனால் எல்லா இடமும் வந்தாச்சு பாலம்.. ட்ரெய்ன் தான் வரனும்.. மலைமந்திர் இருப்பது ஆர்கேபுரம்...இருந்தாலும் நாம் எல்லாத்தையும் ஒரு இடத்துல சேர்த்துடுவோம் ல..செக்டர் 18 கரெக்ட்..

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஆமா துளசி அந்த முறை 5 ரூபாய்ன்னு தக்ஷிண சித்ராவில் வாங்கியது தான். மினியேச்சர்ன்னாலே அழகுதானே..
ரஷ்யன் டால் சிஸ்டம் தான்.. யானையும்.. அதுங்களை வரிசையா வச்சு போட்டோ எடுத்திருக்கேன் இன்னொரு பதிவா போட்டுட்டறேன்..

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஓ கோபி அது நீங்க ரெண்டுபேரும் தானா? சரி சரி ..:) அப்ப சுண்டல சாப்பிடாம நல்லா இருக்குமோ இல்லையோன்னு சந்தேகப்பட்ட சென்ஷி இரண்டு கையிலும் வாங்கி சாப்பிட்டாராமா.. :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

முல்லை.. ஆமாப்பா நல்லா பொழுது போச்சு..லிட்டில் பட் தீக்ஷூ மாதிரியே அப்பப்ப நானும் கட் செய்வேன்னு சொல்லி சபரியும் கேட்டான் வேண்டாத பேப்பரை கொடுத்து கொஞ்சம் வெட்ட சொல்லிட்டோம்.அப்பப்ப ரோட்டிலிருந்த காரெல்லாம் காணாப்போயிடும் அப்பறம் திரும்ப வரும்.. என்னடான்னா நான் ஓட்டிட்டுவச்சிடறேன்னுவான்..:)

மங்களூர் சிவா said...

/
அங்க யாரு அது இந்த பக்கம் ஒரு கை அந்த பக்கம் ஒரு கை நீட்டறது ? :)
/

அட நானும் எங்கவீட்டம்மணியுமுங்க!!
:))

கொலு சூப்பர்

முத்துலெட்சுமி-கயல்விழி said...

வாங்க மங்களூர் சிவா.. அப்ப உங்க மனைவி ஜாடிக்கேத்த மூடி தான் போல.. என்ன வீட்டுல சமைக்காம சுண்டல் சாப்பிட்டே ஒப்பேத்திறீங்க..? வேற எதாவது டப்பா படத்துக்கு கூட்டிட்டு போய் வாங்கி கட்டிக்கிட்டீங்களா என்ன ? :)

மங்களூர் சிவா said...

//
முத்துலெட்சுமி-கயல்விழி said...

வாங்க மங்களூர் சிவா.. அப்ப உங்க மனைவி ஜாடிக்கேத்த மூடி தான் போல..
//
:)))))))))))

//
என்ன வீட்டுல சமைக்காம சுண்டல் சாப்பிட்டே ஒப்பேத்திறீங்க..? வேற எதாவது டப்பா படத்துக்கு கூட்டிட்டு போய் வாங்கி கட்டிக்கிட்டீங்களா என்ன ? :)
//

இன்னும் அந்த அளவுக்கு 'சிறப்பான' படம் எதும் வரலைல்ல :))

கயல்விழி said...

கொலு அழகா இருக்கு. :)
Beautiful small scale models, very creative.
நாங்கல்லாம் இப்படி பார்க்கிறதோடு சரி(இதுக்கெல்லாம் டேலண்ட் வேணுமே, என்னிடம் கிடையாது :()

AMIRDHAVARSHINI AMMA said...

நான் வர்ரதுக்குள்ள சுண்டல் காலியாயிடுச்சி.

மறுபடியும் எப்ப தருவீங்க.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

மங்களூர் சிவா .. அது அத்தனை சிறந்த படமா..:)
-------------------
கயல்விழி நன்றிப்பா..டேலண்ட் இல்லாம இல்ல..முயற்சி செய்யலன்னு சொல்லுங்க..

------------------
அமிர்தவர்ஷிணி அம்மா.. அதான் அட்சய பாத்திரமாச்சே இன்னும் இருக்கு பாருங்க எடுத்துக்குங்க..இல்லாட்டி நேரா டில்லிக்கு கிளம்பி வந்துடுங்க..

ராமலக்ஷ்மி said...

லேட்டுதான் ஆனால் என்ன? யமுனாவில் கால் நனைத்து, மலை மந்திரில் தரிசனம் முடித்து, சபரி ஃபேஷன்ஸில் தீபாவளிக்கு ட்ரஸ் எடுத்துட்டு, இரண்டாம் முறையாக ஓம் சாந்தி ஓம் பார்த்த பின்னர், ஆஸ்பத்திரியைத் தாண்டிக் குதித்து, அட்சய பாத்திரத்திலிருந்து சுண்டலை அள்ளிக் கொண்டு எஸ்கேப்ப்ப்ப்ப்:)!

மாதினிக்கும் சபரிக்கும் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்!

புதுகை.அப்துல்லா said...

கொலுவைவிட சுண்டல்தான் நல்லா இருக்குக்கா
:))))))

கயல்விழி said...

//கயல்விழி நன்றிப்பா..டேலண்ட் இல்லாம இல்ல..முயற்சி செய்யலன்னு சொல்லுங்க..
//

என்னங்க இது? உண்மையை எல்லாம் இப்படி பப்ளிக்கா போட்டு உடைக்கலாமா? :) ;)

நானானி said...

//லேட்டுதான் ஆனால் என்ன? யமுனாவில் கால் நனைத்து, மலை மந்திரில் தரிசனம் முடித்து, சபரி ஃபேஷன்ஸில் தீபாவளிக்கு ட்ரஸ் எடுத்துட்டு, இரண்டாம் முறையாக ஓம் சாந்தி ஓம் பார்த்த பின்னர், ஆஸ்பத்திரியைத் தாண்டிக் குதித்து, அட்சய பாத்திரத்திலிருந்து சுண்டலை அள்ளிக் கொண்டு எஸ்கேப்ப்ப்ப்ப்:)!//

ராமலஷ்மி சொன்னதே நானும் ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்!
சித்துசிருக்குன்னு அழகாயிருக்கு. நல்ல 'சிறுமுயற்சி'
தட்ஷண்சித்ரா போய் மினியேச்சர் சாமானெல்லாம் வாங்கணும்.